1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,651
    Likes Received:
    1,763
    Trophy Points:
    325
    Gender:
    Female
    Vani Jayaram`s voice is too good to the expressive words. Ofcourse Gangai Amaran and Ilayaraja did justice.
    Good nostalgia!
     
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    எல்லோருக்கும் Hi சொல்வதற்காக இன்று கிறுக்க தோன்றிய எண்ணங்களுக்காக இங்கு எட்டி பார்க்கிறேன்.

    சின்ன வயதில் பார்த்து பார்த்து கொண்டாடிய தீபாவளியை இந்த வருடம் தாயகத்தில் கொண்டாடி அகம் முழுதும் மகிழ்ந்தேன். பல கடைகளுக்கு சென்று குடும்பத்து நபர்கள் அனைவருக்கும் புத்தாடைகள் வாங்கி கொடுத்து ஹோட்டலில் சாப்பிட்டு அதிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து பூஜை அறையில் சில நிமிடங்கள் செலவழித்து பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி பாட்டாசு வெடித்து பலகாரங்கள் சாப்பிட்டு மாலையில் கோவிலுக்கு சென்று அமோகமாக கொண்டாடினேன்.

    இந்த மாதிரி நான் செய்தது இதுதான் முதல் முறை - அதுவும் தீபாவளி அன்று: எனக்கு மிகவும் மிகவும் பிடித்த எனது ஊரில் பெயர் போன ஒரு இனிப்பு கடையில் வாங்கிய ஒரு assorted sweet box பிரித்தேன். சுத்தமான நெய்யில் செய்யப்பட்ட 15 வகையான இனிப்புகள் இருந்தது. ஒன்று கூட விடாமல் ஒவ்வொரு இனிப்பில் இருந்து ஒரு கால் பகுதி வெட்டி ரசித்து ருசித்து கேப் விடாமல் சாப்பிட்டேன். இதை நேரில் பார்த்த ஒரு குடும்பத்து நபர் சொன்னது: உனக்கு இப்போ சுகர் டெஸ்ட் எடுத்தால் தலையில் இருந்து கால் வரை சுகர் இருக்குனு டெஸ்ட் ரிசல்ட் பார்த்து டாக்டர் ஆடி போயிடுவார். நான் சொன்ன பதில்: ஸ்வீட்டா இருந்தால் சுகர் வராது. அதான் எனக்கு சுகர் இதுவரைக்கும் இல்லை. :grinning::grinning:

    ஒரு நாள் காலையில் தொடங்கி இரவு வரை சுமார் பத்து கடைகளுக்கு சென்று ஷாப்பிங் சுனாமி. சந்தோசத்தை அளவிட ஏதாவது கருவி இருக்கிறதா? இருந்தால் அன்றைய எனது சந்தோசத்தை அளந்தால் அந்த கருவி உடைந்து போயிருக்கும்.

    நிறைய நபர்கள் நேருக்கு நேர் உரையாடல்கள் நிறைய நிறைய பேசினேன். சந்தோசமாக இருந்தேன். சுற்றி இருப்போர்களை சந்தோசமாகவும் வைத்து இருந்தேன். தாயகத்தில் இருந்த ஒவ்வொரு நாளும் இந்த ஏழு கழுதை வயதிலும் எனக்கு இரவு தோறும் திருஷ்டி சுத்தி போடப் பட்டது.

    அடுத்த வருடம் எப்போ தீபாவளி வருது என்று தேதி பார்த்தேன். அடுத்த ட்ரிப் பிளான் போடுவதற்கு. நான் தேதி பார்த்தது தெரியாமல் எனது குடும்பத்தில் எனக்கு மிகப்பிரியமான ஒரு நபரும் அடுத்த வருட தேதியை பார்த்து குறித்து கொண்டார். நான் விடை பெறும்போது என்னிடம் அவர் கேட்டது : அடுத்த தீபாவளிக்கு இன்னும் 11 மாதங்கள் தான் இருக்கிறது. கண்டிப்பா தீபாவளிக்கு வந்து விடுவாயா? பிரியும் வருத்தம் அவரது பேச்சிலும் முகத்திலும் அப்பட்டமாக தெரிந்தது. அந்த நபரின் அளவிடமுடியாத கண்ணு மண்ணு தெரியாத பாசம் என்னை எப்பவுமே கட்டிப்போடும். இந்த முறை இன்னும் அதிகமாக.

    தீபாவளி இனிப்பு சுவை நாவில் இருந்து போவதற்குள் அந்நிய தேசத்து வாசம். இரண்டு வாரங்கள் கடந்தும் நினைவுகள் தாயகத்தை விட்டு நகர மறுக்கிறது. ஊர் சுத்தின சுத்திற்கு கொரோனா என்னை சுத்தி வளைக்காமல் விட்டதிற்கு கடவுளுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. கடந்த 15 நாட்களாக என்னை முழு வீச்சில் வைத்து இருக்கும் எனது அலுவலக வேலைக்கு இன்னொரு ஸ்பெஷல் நன்றி.

    நிறைய போஸ்ட்க்கு நான் இன்னும் பதில் தரவில்லை. பதிவிட்டவர்களுக்கு நன்றி. அடுத்த போஸ்ட் ல பதில்களுடனும் பாடல்களுடன் சந்திக்கிறேன்.
     
    sweetsmiley and rgsrinivasan like this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi RGS,

    The One Minute Manager புத்தகம் பற்றிய குறிப்பிற்கு மிக்க நன்றி. வலைத்தளத்தில் தேடி படித்தேன். அந்த புத்தகத்தில் படித்த விஷயங்கள் பல எனது அனுபவத்தில் நடைமுறையில் பார்த்து இருக்கிறேன். செயலாக்கமும் தான். எல்லா இடங்களிலும் கடைப்பிடிக்க நான் நினைப்பது: praise in public and criticize in private.

    புத்தகத்தில் படித்தபோது இந்த ஒரு வரி புன்னகையை என்னுள் வரவழைத்தது:

    "If you don’t blow your own horn, someone else will use it as a spittoon"

    Q# 21) இந்த வரியை பற்றிய தங்களது சொந்த கருத்தை பதிவிடுங்கள்.

    Q# 22) உள்முகச் சிந்தனையாளன் ஆக இருந்ததால் நீங்கள் (பயன்)பெற்றது எது இழந்தது எது?

    குறிப்பு: உங்களது சில பதில்களை படிக்கும்போது எனது எண்ணத்தை அப்படியே பிரதிபலித்தது போன்று இருந்தது. அசந்து நின்றேன். நன்றி.
     
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi Maalti,

    Welcome to the thread. மியூசிக் சம்பந்தப்பட்ட ragging கேள்விகள் உங்களை கேட்கலாமா?
     
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi T,

    எப்படி இருக்கீங்க? நல்ல கவிதை பகிர்ந்ததிற்கு நன்றி. கடைசி வரிகள் அருமையிலும் அருமை.

     
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi V,

    எப்படி இருக்கீங்க? தங்களது பதிவிற்கு நன்றி. தேர்ந்து எடுத்து பாடல்களை பட்டிமன்றத்தில் பாடியதற்கு பாராட்டுக்கள். குறிப்பாக காதல் ஓவியம் பாடலுக்கும், கொடியிலே மல்லிகை பூ பாடலுக்கும், காதலின் தீபம் பாடலுக்கும்.

    Feb 2022 - உங்களுக்கு ஒரு special assignment குடுக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்க தயார் என்றால் சொல்லுங்கள் நான் கேள்விகள் தயாரித்து விடுகிறேன்.


    அருமையாக பேசி இருந்தீங்க. :clap2::clap2: உங்களது பேச்சு கேட்டபோது நீங்க சொல்வதெல்லாம் ஒத்துக்கொள்ளலாம் என்று தான் இருந்தது. ஆனால் ஏதோ ஒன்று என்னை தடுத்தது. ஆளும் கட்சியில் இருந்து எதிர் கட்சிக்கு வந்து விட்டேன்.

    1) நேற்றைய நினைவுகள் எனக்கு மகிழ்ச்சியை அதிகம் தருவதால் தான் இந்த poetic thread எனக்கு பொக்கிஷம்.

    2) நாளைய கனவுகளுக்காக அந்நிய தேசத்தில் கால் பதிந்து காலங்கள் எவ்ளோவோ கடந்தாலும் வருடம் ஒரு முறை செல்லும் அந்த தாயகத்து நிகழ்வுகள் நினைவுகளாகி தரும் மகிழ்ச்சிக்கு ஈடு இருக்கிறதா?

    3) வாழ்க்கையின் கடைசி பகுதியில் இருக்கும்போது அதிகம் மகிழ்ச்சியை தரக்கூடியது சாதித்த கனவுகளை பற்றிய நினைவுகள் அல்லவா?

    4) சில நேரங்களில் கனவுகளை விட நிகழ்வுகள் சுவையானது . நிகழ்வுகளை விட நினைவுகள் சுவையானது. :wink::wink:
     
    vidhyalakshmid likes this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    போன வார இறுதியில் பார்த்த ஒரு புத்தம் புதுப்படத்தில் இருந்து ஒரு பாடல்.

    இந்த நடிகர் நடித்த படம் ஒருத்தருக்கு சுத்தமாக பிடிக்காது. இன்னொருத்தருக்கு சுமாராக பிடிக்கும். வேற வழி இல்லாமல் இந்த படம் பார்க்க முடிவு எடுக்கப்பட்டது.

    இருவருக்குமே படம் பார்த்த உணர்வு பட்டாசாக இருந்தது. Time loop - தமிழ் படத்தில் கொஞ்சம் புதுமையாக இருந்தது. ஹீரோக்கும் வில்லனுக்கும் cat and mouse game அடடா ரகம். கதை புரிந்தும் புரியாமலும் ஆரம்பத்தில் இருந்தது. தக்க விளக்கம் குடுத்து புரிய வைத்தவர் இருந்ததால் படம் புரிந்தது. கண்டிப்பாக இரண்டு முறை பார்க்க வேண்டிய படம்.

    படத்தில் ரொமான்ஸ் கிடையாது. அதுவா முக்கியம் ? அருகே அமர்ந்து தோள் சாய்ந்து படம் பார்க்கும்போது. :wink::wink:

    YT - Meherezylaa - Maanaadu
     
    vidhyalakshmid likes this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Summer vacation முடிந்து, உடன் படித்த நபர்கள்/ நண்பர்கள், கற்றுக் கொடுக்கும் குருக்கள், புதிதாக படிக்க போகும் பாடங்கள் நினைத்து பழமான ஒரு பள்ளி மாணவி படித்த பள்ளியில் ஆவலுடன் காலடி எடுத்து வைக்கும் மன நிலை தான் எனக்கு இருந்தது 21 மாதங்கள் கழித்து அலுவலகத்தில் காலடி எடுத்து வைத்த போது. ஸ்கூல் க்கு ஒரு பிரத்யேக வாசனை இருப்பது போல அலுவலகத்துக்கும் ஒரு தனி வாசனை உண்டு என்று நான் நம்புகிறேன்.

    பாஸ் அவரது பாஸ் டீம் மெம்பெர்ஸ் மற்றும் அறிந்த சில முகங்களை நீண்ட இடைவேளைக்கு பிறகு நேரில் பார்த்தபோது இனம் புரியாத ஒரு உணர்வு. ஆள் அரவமற்ற தனிக்காட்டில் இருந்து தப்பித்து எல்லோரும் உலவும் தோட்டத்திற்கு வந்த ஒரு மன நிறைவு.

    ஒரு புது ப்ரொஜெக்ட் பற்றி பக்கத்து சீட்டில் இருந்து நண்பர்கள் விவாதித்து கொண்டிருக்கும்போது விவாதத்தில் கலந்து கொண்டு புதுசாக ஏதோ ஒன்று கற்றுக்கொள்ளும் போது ஒரு ஆனந்தம்.

    Whiteboard ல எல்லா விஷயங்களையும் கிறுக்கி சந்தேகங்களை மார்க் பண்ணிட்டு பாஸ் கிட்ட காண்பித்த உடனே கேட்காமல் கேட்ட கேள்விகளை புரிந்து கொண்டு பாஸ் விளக்கம் கொடுக்கும்போது கிடைப்பது சந்தோஷம்.

    அலுவலக நேரம் முடிந்தவுடன் மாலையில் சின்ன டீம் கூடி Web 3.0/Metaverse பற்றி பேசி தெரியாததை தெரிந்து கொண்ட போது பரவசம்.

    Investment பற்றி பாஸிடம் பேசி retirement க்கு பிறகும் stock market ல கொஞ்சம் பணம் சம்பாதிக்கும் ஒரு புதிய யுத்தியை தெரிந்து கொண்டபோது மகிழ்ச்சி. பாஸ் புதுசாக வாங்கி இருக்கும் உச்சியில் இருந்து பாதாளத்தில் விழுந்து கிடக்கும் ஒரு stock பற்றி தெரிந்து கொண்டு அதே stock வாங்குவது த்ரில்.

    தற்போதைய எனது மன நிலைக்கு ஏற்ற பாடல் வரிகள்..

    YT - மடை திறந்து தாவும் நதி அலை நான் - நிழல்கள் - IR/SPB

    நேற்றின் அரங்கிலே நிழல்களின் நாடகம்
    இன்றின் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
    வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்களம்
     

Share This Page