1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கொல்லும் கோவிட்19ம் கொலுவும்

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Oct 6, 2021.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,643
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello: கொல்லும் கோவிட்19ம் கொலுவும் :hello:
    அவசர நவராத்திரி விதிமுறைகள் (அரசு) அறிவிப்பு:
    1. கொலுவில் பொம்மைகளுக்கிடையே இடைவெளி இருக்க வேண்டும்.
    2. ஒரு படிக்கு பத்து பொம்மைகளுக்கு மேல் அனுமதியில்லை.
    3. ஏழு படிகளுக்குமேல் அனுமதி இல்லை.

    4. சிறப்பு அனுமதியாக தசாவதாரம் செட்டுக்கு தனிப்படி(!) அனுமதி உண்டு. பத்து பேரும் ஒருவரே என்பதால் சமூக இடைவெளி தேவையில்லை.
    5. பள்ளிகள், கல்லூரிகள் திறக்க அனுமதி அளித்திருப்பதால் கீதோபதேசம் செட் வைக்க அனுமதி வழங்கப்படுகிறது. உபதேசம் செய்பவர், பெறுபவர் ஆகிய இருவரும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். கீதோபதேசக் காட்சி தமிழில் இருக்கவேண்டும்.

    6. மொத்த பொம்மைகள் அதிக பட்சம் ஐம்பது மட்டுமே இருக்கலாம்.
    7. சுண்டல் வழங்கப்படலாம். ஆனால் அவை சானிடைசரால் அலம்பப்பட்டிருக்க வேண்டும்.
    8. பீச் பார்க் ஆகியவை கட்டலாம். அவை காலியாக இருக்கவேண்டியது அவசியம்.

    9. அனைத்து விதிகளும் சரிவர பின்பற்றப்படுகிறதா என்று கண்காணிக்க ஒவ்வொரு படியிலும் உங்கள் செலவில் இரண்டு போலீஸ் பொம்மைகள் வைக்கப்பட வேண்டும். போலீஸ் பொம்மைகள் மேலே சொன்ன ஐம்பது பொம்மைகள் கணக்கில் சேர்க்கப்படமாட்டாது.

    அனைவருக்கும் இனிய பொம்மைத்திருநாள் வாழ்த்துகள்

    மேலே சொன்ன விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றது
    .
     
    Loading...

  2. vidukarth

    vidukarth Platinum IL'ite

    Messages:
    2,444
    Likes Received:
    1,091
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Awesome ... loved it
     

Share This Page