1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இன்று நான் போஸ்ட் பண்ண நினைத்த MV பாடல்களில் ஒன்று இது. பாடலை போலவே உங்களது வர்ணனையும் இனிமை. மௌன ராகம் படத்தை பார்த்த பெண்களில் கார்த்திக் பிடிக்காத பெண்கள் மிக மிக குறைவாக தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். கண்களுக்கு குளிர்ச்சி.
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    எப்பவும் பெண்கள் பற்றிய புகழ் பாடி கொண்டே இருக்கணுமா? சமமாக பாவிக்க வேண்டும் அல்லவா? இன்றைய பாடல்கள் ஆண்களுக்காக.

    மனசு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது தானே. மணமான ஆண்களும் ஒரு விதத்தில் பாவம் தான். அவங்களும் மாட்டிகிட்டு முழிக்க தான் செய்கிறார்கள். ராசாத்தி ரோசாப்பூ செண்டு மல்லி குண்டு மல்லி பூவ முடிஞ்சு வந்த புது பெண்ணே னு பூக்களால் அர்ச்சித்து பூவையை கொண்டாடிவிட்டு கடைசியில் மூணு முடிச்சாலே முட்டாளானேன் னு புலம்பும் நிலை. :wink::wink:

    MV songs Playlist 64

    ஏ ராசாத்தி ரோசாப்பூ - என் உயிர் தோழன்
    மல்லி மல்லி செண்டு மல்லி - இரவு பூக்கள்
    கூடலூரு குண்டு மல்லி - கும்பக்கரை தங்கய்யா
    சீவி சிணுக்கெடுத்து பூவ முடிஞ்சி வந்த புது பெண்ணே - வெற்றி விழா
    ஒரு மூணு முடிச்சாலே முட்டாளானேன் - அம்மன் கோவில் கிழக்காலே
     
    Thyagarajan and maalti like this.
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    19] இப்போதும் என் மிகப் பிடித்த புத்தகங்கள் பட்டியலில் இருக்கும் அந்தப் புத்தகம் One Minute Manager தான். மிகச் சிறிய புத்தகம் - ஒரு மணி நேரத்துக்குள் படித்து முடித்திடலாம். இதன் எளிமையும், கருத்தை சுருங்கச் சொன்ன விதமும், எவ்வாறு நம் கருத்தைத் தொகுத்துக் கொண்டு சாரத்தை ஒரே நிமிடத்தில் சொல்ல முடியும் என்று விளக்கியதும் நச்சென்று மனதில் பதிந்தன.

    நான் நிறைய ஆங்கிலப் புத்தகங்களை வாசிக்கத் தொடங்கியது 11ஆம் வகுப்புக்குப் பிறகு தான். முதல் புனைவு நூலைப் படிக்க ஒரு மாதமாகியது. அப்போது, பக்கத்தில் அகராதியுடன் தான் படிக்க அமர்ந்தேன். சற்று பயிற்சி அடைந்த பின்னர், புரியாத வார்த்தைகளை புரிந்து கொண்டு, அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என அறிந்தேன். நானும் என் சொந்த வாக்கியங்களை, அந்த வார்த்தைகளைக் கொண்டு எழுதிப் பார்ப்பேன். The Hindu வில் வரும் Know Your English பகுதியைத் தவறாமல் படித்ததுண்டு.இப்போதெல்லாம், புரியாத வார்த்தைகள் வந்தால் அந்த சொற்றொடருக்கு முன்னும், பின்னும் படித்து, அதன் சாரத்தை உணர்வதின் மூலமாக, இந்த வார்த்தைக்கு இவ்வாறு தான் பொருள் இருக்கக் கூடும் என்று ஊகித்து, பின்னர் சரி பார்ப்பதுண்டு. சிந்தனை ஓட்டம் இதனால் தடைபடுவதில்லை. மேலும் செறிவு கூடுகிறது.

    20] முதலில் எழுதியது நட்பைக் குறித்த எளிமையான ஆங்கிலக் கவிதை தான். நான் கொஞ்சம் உள்முகச் சிந்தனையாளன் [introvert] ஆகையால் எளிதில் பிறருடன் பேசாதிருந்தேன். பின்னர், அதிலிருந்து மீள, எளிமையான வார்த்தைகளைக் கொண்டு கவி அமைத்து அதை, காலை வணக்கத்துடன், என் தளத்தில் இருந்த அனைத்து நண்பர்களுக்கும் மின்னஞ்சல் செய்தேன் - சுமார் ஒரு வருட காலம் என்று நினைவு. பிறகு தான் நிறைய படித்து, பின் சுருங்கச் சொல்லும் கலையை சற்றேனும் கற்றேன். தமிழில் என் முதல் கவிதை "வாழ்க்கை" என்று நினைவு. இந்தத் தளத்தில் அதைத் தேட முடியவில்லை. மன்னிக்கவும். -rgs
     
    singapalsmile, Thyagarajan and maalti like this.
  4. maalti

    maalti Gold IL'ite

    Messages:
    310
    Likes Received:
    499
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Thank you. Music is my breath. Swasam in Tamil. Thank you for bringing back old memories
     
  5. maalti

    maalti Gold IL'ite

    Messages:
    310
    Likes Received:
    499
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Very true. Completely agree
     
    singapalsmile likes this.
  6. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,643
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    singapalsmile and vidhyalakshmid like this.
  7. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,643
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
  8. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,641
    Likes Received:
    1,751
    Trophy Points:
    325
    Gender:
    Female
    singapalsmile and Thyagarajan like this.
  9. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,641
    Likes Received:
    1,751
    Trophy Points:
    325
    Gender:
    Female
    Thyagarajan likes this.
  10. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    சில நாட்களாக இந்தப் பாட்டைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறேன்! இளையராஜாவின் அபாரமான இசையில் வாணி ஜெயராமின் பிசிறில்லாத குரலில், கங்கை அமரனின் வரிகள் மிகப் பொருத்தமாக, கதைக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. ஒரு பெண்ணின் ஏமாற்றம், அதன் காரணமாக அவள் தேர்ந்தெடுக்கும் வழி, அதில் ஏற்படும் சஞ்சலம், குழப்பம், தவிப்பு இவை அனைத்தையும் இந்தப் பாடல் உணர்த்தி விடுகிறது. தீபாவின் நடிப்பு, இந்தப் பாடலுக்கு ஏற்ற வகையில் அமைந்திருந்தது. எனினும், இந்தப் பாடல் கேட்கத் தான் பாந்தமாய் இருக்கிறது. அதிலும் அந்தக் குழல்! ஐயோ! அது நம்மைக் கொல்கிறது. ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் இருந்து இந்தப் பாடல்!
     
    vidhyalakshmid likes this.

Share This Page