1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi T,

    எப்படி இருக்கீங்க?
    இந்த வயதிலும் என்னமா யோசிக்கறீங்க? உங்களை பாராட்ட எனக்கு வார்த்தை தெரியவில்லை. :clap2::clap2:

    நடிப்பதில் அந்த நாயகன் உலகநாயகன். இந்த நாயகிக்கு நடிக்கவே தெரியாது. எல்லா பெண்களுமே ஒரு விதத்தில் நாயகிகள் தான். அப்படி இல்லை என்றால் காமெடி பீஸாக்கி டம்மி ஆக்கி விடும் இந்த உலகம்.
     
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi RGS,

    உங்களது விளக்கமும் உதாரணமும் அருமை. என்னவோ இந்த பாடல் எனது நினைவிற்கு வந்தது. இந்த பாடலில் ஒரு பூவையின் சிலை வடிக்கப்பட்டிருக்கும். வடித்த சிலைக்கு உயிர் கொடுத்தாற்போல ஒரு பூவை தோன்றுவாள். பாடல் வரிகள் சிலையை/பூவையை குறிக்கும். சிலையையும் பூவையையும் ஒன்றாக நிற்க வைத்து ஒரு போட்டோ எடுத்தால் ஓவியம் கிடைக்கும். ஆறு வித்யாசங்கள் தேட சொல்லலாம். :grinning::grinning:

    பூவை (பெண்) / பூ (மலர்) - இரண்டிற்கும் தனித்துவமான மணம் இருக்கிறது. இரண்டையும் கலை நுட்பத்தோடு ஓவியனும் சிற்பியும் வடிவமைக்கலாம். ஆனால் மணத்தை உணர வைக்க முடியாது. தக்க வார்த்தைகளில் அந்த தனித்துவமான மணத்தை கவிஞனால் மட்டுமே வெளிக்கொணர முடியும் என்று வைத்து கொள்வோம்.

    கேள்வி #13: மேலே சொன்ன மணத்தை (வாசனை) பிடித்தவர்/கவிதை இயற்றியவர் ஆண் மற்றும் பெண் கவிஞர்களாக இருக்கலாம். கவிதைக்கு ஆண் வாசம் பெண் வாசம் என்ற பாகுபாடு இருக்கா? ஒரு கவிதையை பார்த்து இதை ஆண் எழுதி இருப்பாரா? பெண் எழுதி இருப்பாரா என்று அனுமானிக்க முடியுமா?

    நேர்த்தியான பதில். பதில் அளிக்க செலவிடும் உங்களது நேரத்திற்கு நன்றி.

    கேள்வி #14:
    கலைநயத்தோடு ஒரு சிற்பி ஒரு பெண் சிலையை பார்த்து பார்த்து செதுக்குகிறார். அந்த பெண் சிலையின் உதட்டின் மேலே ஒரு மச்சம் இருக்கிறது.

    இந்த சிலையை ஆராதித்த ஒருத்தர் அந்த மச்சத்தை கவனித்து அதனால் கவரப்பட்டு இப்படி நினைத்து கொள்கிறார்: அழகாக இருக்கிறோமே பிறர் கண்பட்டு விடுமே என்று நினைத்து திருஷ்டி பொட்டு/கண்மை இட்டு இருக்கிறாள்.

    இது அந்த ஒருத்தரின் ரசனையை குறிக்கிறதா? கற்பனையை குறிக்கிறதா? இரண்டையும் கலந்து குறிக்கிறதா? ரசனைக்கும் கற்பனைக்கும் தொடர்பு இருக்கிறதா?
     
    rgsrinivasan and Thyagarajan like this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Netflix la Navarasa (web series) பார்த்து கொண்டிருக்கிறேன்.

    ரொமான்ஸ் ல இருந்து ஆரம்பிப்போம் என்று நினைத்து நான் முதல் முதலில் பார்த்தது GM's கிடார் கம்பி மேலே நின்று. பார்க்கும்போது அப்படி ஒரு பரவசம். :wink::wink: சூர்யா பத்தி சொல்லவே வேணாம். கொல்றார்!! மியூசிக் பிரியர்கள் முதல் சந்திப்பில் பார்த்தவுடனே காதல் பைக் ல ஊர் சுத்தறது சேர்ந்து பாடல்கள் கேட்பது கடலை போட்டுட்டே இருப்பது னு கதை போகும்.

    கல்லூரி நாட்களில் எனக்கு சாக்லேட் பைத்தியம் இருந்து இருக்கிறது. சாக்லேட், சாக்லேட் கேக் /ஐஸ் க்ரீம் /பிஸ்கட்/wafer னு லிஸ்ட் போகும். எவ்ளோவோ /எத்தனை வகையா சாப்பிட்டாலும் சாக்லேட் சலிப்பு வந்ததே இல்லை. அதுபோல ரொமான்ஸ் அடிப்படையா வைத்து ரிப்பீட் மோட் ல GM எந்த காட்சி வைத்தாலும் பார்க்க எனக்கு சலிக்கவே இல்லை.

    இது எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. முடியலடா சாமி என்று தான் சொல்வார்கள். GM's ரொமான்ஸ் ஸ்டைல் பைத்தியமா பிடித்தவர்களுக்கு பிடிக்கும்.

    இப்போ என்னை கிறுக்காக்கும் ஒரு பாடல். :wink::wink:

    தூரிகா - கிடார் கம்பி மேலே நின்று
     
    Thyagarajan likes this.
  4. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    குடும்பம்ன்னு ஆயிட்டா யோசனை செய்வதை கணவன் நிறுத்திட்டா பேராபத்துத்தான் அம்மா!
    பாராட்டாமாப்பாராட்டிட்டீங்க! தெம்பா இருக்க்ககு. மிக்க நன்றி.
    அது சரி. உலகமே நாடக மேடை அதில் எப்பவும் இரு பாலரும் எப்பும் நட்சத்திரங்கள்தான்.

    The beauty of VV’s response is that every alternate sentence exudes opposites.
    “No word for praise yet applause. I’m ignorant of acting. Yet all nayakis are actors”.
     
    singapalsmile likes this.
  5. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    #7503 தூரிகா - இசை அருமை. Xylaphone இடைஇடையே வாசிப்பதும் போல் உள்ளது பாடலின் துள்ளலுக்கு வலு சேர்க்கிறது.
    நன்றி.
     
    singapalsmile likes this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi T,

    அப்படிங்களா ? ஏதோ புதுசா நான் கேக்கறேன்/கேள்விப்படறேன்.

    குடும்ப நலத்துக்காக அதிகமா யோசிப்பது மனைவியா? கணவனா? என்று ஒரு குட்டி பட்டிமன்றம் நடத்தி விடலாம். எந்த வித சந்தேகமும் இல்லாமல் நான் ஆஜர் ஆவது மனைவிக்கு தான். :grinning::grinning:

    குறிப்பு: முதலில் கணவர் யோசிக்கட்டும் அதற்கு அப்புறமா அந்த யோசனை ப்ரகாஷமானதா பியூஸ் போனதா னு தீர்மானிக்கலாம் என்று அனுபவஸ்தர்கள் (அடியேன் உட்பட) சொல்வார்களோ? :wink::wink: பட்டி மன்றம் நடத்தணுமா என்ன? தெரிந்த முடிவு தானே. :grinning::grinning:

    You seem to be an expert in reading between the lines. Thanks for the feedback, much appreciated.
     
    Thyagarajan likes this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இன்று எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடகியின் இன்னிசை பாடல்களோடு வருகிறேன்.

    இந்த பாடகி இசைஞானியின் இசையில் தான் பெரும்பாலான பாடல்களை பாடி இருக்கிறார். இரட்டிப்பு சந்தோசம் செவிகளுக்கு! இவர் குறுகிய காலம் தான் தமிழ் திரை உலகில் இருந்து இருக்கிறார். இவரது விலகல் திரை துறைக்கு இழப்பு என்பேன்.

    தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் என தொடங்கும் பாடலை பாடி இருக்கிறார். அதுவே அவரது இனிமையான குரல் வளத்தை பறை சாற்றும். நான் பெரும்பாலும் டூயட் சாங்ஸ் தான் பெரிதும் விரும்பி கேட்பேன். இவரது தனித்துவமான தனி குரலில் பாடல்கள் கேட்ட பிறகு சோலோ சாங்ஸ் அவ்வப்போது கேட்டு ரசிக்க பழகி கொண்டேன்.

    விரல் விட்டு என்ன கூடிய அளவில் தான் இவரது பாடல்களில் குறிப்பாக என் மனதை ஆழமாக தொட்டதை இங்கு பதிவிடுகிறேன். நீங்களும் பாடல்கள் கேட்டு மகிழுங்கள்.

    Jency songs Playlist 60

    தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் - உல்லாசப்பறவைகள்
    என் வானிலே ஒரே வெண்ணிலா - ஜானி
    அடிப்பெண்ணே - முள்ளும் மலரும்
    மீன்கொடி தேரில் மன்மத ராஜன் - கரும்பு வில்
    தம்தனம் - புதிய வார்ப்புகள்
     
    Thyagarajan likes this.
  8. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    #7505 - ஒலிக்கும் இசை வருவது ஸன்தூர் என்ற இசைக்கருவி
    #7506 - அப்படின்னா பட்டி மன்ற நடுவர் நான் தான் . தங்கள் விருப்பப்படியே “கணவன்
    தான்” போட்டியாளரை முதலில்பேச அழைக்கிறேன்.
    #7507 - ஜென்ஸி குரல் - வளரும் பிராயம்- என்றெண்ணுகிறேன். முதலில் குறிப்பிட்டுள்ள பாடல் இப்பத்தான் UT ல கேட்டேன். நன்றி.
    பாடல் ஒலிக்கையில் கண்ணை மூடயவாறு ரசித்தேன். நீல வானத்தலிருன்து பூச்சற்றித்தொங்கும் ஊஞ்சலில் நின்றபடி நிதானமாக ஆடிக்கொண்டு பூங்காற்று உரச பாடுவதாக கற்பனை செய்த வண்ணம்.
     
    singapalsmile likes this.
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    பூவை (பெண்) / பூ (மலர்) - இரண்டிற்கும் தனித்துவமான மணம் இருக்கிறது. இரண்டையும் கலை நுட்பத்தோடு ஓவியனும் சிற்பியும் வடிவமைக்கலாம். ஆனால் மணத்தை உணர வைக்க முடியாது. தக்க வார்த்தைகளில் அந்த தனித்துவமான மணத்தை கவிஞனால் மட்டுமே வெளிக்கொணர முடியும் என்று வைத்து கொள்வோம்.
    [rgs]
    அப்படி என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை வேதவல்லி! ஒரு சிற்பத்திலோ, ஓவியத்திலோ, மணத்தை வெளிப்படுத்தும் நுட்பம் நாம் அறியாததாக இருக்கலாம் இல்லையா? [rgs]

    13] ஒரு கவிதையைப் படித்து அதன் மூலம் அதை எழுதியது ஆணா அல்லது பெண்ணா என்று அறுதியிட்டுச் சொல்வது கடினம் தான். கவிதை என்றில்லை; எழுத்துக்கே பாகுபாடு காண முடிவதில்லை, அன்றும், இன்றும். ஒளவையின் பாடல்களே சிறந்த உதாரணம்.

    14] ரசனை, ஒரு உணர்வின் மேல் ஏற்றப்பட்ட செறிவான கற்பனையே என்று படுகிறது. இயற்றுபவரின் எண்ணத்தை, காண்பவர் கூர்ந்து, தன் அனுபவத்தின் / கற்பனையின் மூலம் சற்று மேம்படுத்திக் கொள்வதும் உண்டு. இந்த உதாரணத்தில், முழுமை கொண்ட ஒன்றென்பது மானுடருக்கு அருளப்படவில்லை. ஆகையால் தான் அந்த மச்சம் அங்கு இருக்கிறது, கண்ணனின் கால் கால் நகத்தில் ஒன்று குறைப்பட்டதைப் போல, கர்ணனின் தொடையில் வண்டு துளைத்த வடு போல, என்று கருதுவது இரசனை ஆகிறது.
     
    singapalsmile likes this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi RGS,

    தொடரும் தங்களது சிந்தனை மிக்க பதில்களுக்கு நன்றி.

    கண்டிப்பாக. அந்த நுட்பம் நாம் அறியாததாக இருக்கலாம். அதனால் தான் அப்படி வைத்து கொள்வோம் என்று எழுதி வைத்தேன். :grinning::grinning:

    உங்களது கருத்தை ஏற்று கொள்கிறேன். அதே நேரத்தில் இன்னொரு கோணத்திலும் யோசிக்கிறேன்.

    சில கருப்பொருட்கள் ஆண் பாலிற்கும் மற்றும் சில பெண் பாலிற்கும் மட்டுமே பொருத்தமாக இருப்பின் அவரவர் எழுதும்போது அந்த பால் இனத்தின் வாசனை கூடுதல் ஆக இருக்கலாம் என்று நான் எண்ணுகிறேன். பசங்க படத்தில் வரும் கவிஞர் தாமரை எழுதிய இந்த பாடலை கேட்டு பாருங்கள். ஆணின் மனதிற்குள்ளும்பெண்மை இருக்கிறதே -- > இந்த வரியை ஆண் கவிஞர் சட்டுனு எழுத முடியுமா? Male ego தடுக்காதா?

    Q# 15: Men are from Mars, Women are from Venus - இது கவிதைக்கு பொருந்துமா? பொருந்தாதா?

    ரசனையும் கற்பனையும் அழகாக இணைத்து இருக்கீங்க.

    Q# 16: நாம் எழுதும் கவிதைக்கு நாம் தானே முதல் ரசிகன்/ரசிகை என்று ஒரு பதிலில் குறிப்பிட்டு இருந்தீர்கள். அப்படி என்றால் நாமே கவிதை எழுதி நாமே படித்து ரசித்து நாமே வைத்துக்கொள்ளாமல் பகிர்ந்து கொள்ள எதற்கு ஆசைப்படுகிறோம்? இன்னொரு ரசிகை/ரசிகன் கவிதையை ரசிப்பதற்கு தானே? உங்களை பொறுத்தவரை உங்கள் ஆத்ம ரசிகன்/ரசிகை எப்படி உங்களது கவிதையை ரசித்து இருக்க வேண்டும் என்று நீங்கள் விருப்பப்படுவீர்கள்? (ரசிப்பது அவரவர் உரிமை/கற்பனை. அதில் தலையிட சொல்லவில்லை. உங்களது விருப்பத்தை தான் கேட்கிறேன். :grinning::grinning:)

    • படித்து விட்டு நன்றாக இருக்கிறது என்று எழுதுவது. ஒற்றை க்ளிக் 'like'
    • தங்களது கவிதையில் ரொம்ப பிடித்த ஒற்றை சொல்/வரி மேற்கோள் காட்டுவது
    • நீங்கள் சொல்லாததையும் கற்பனை செய்து சொந்த கருத்துக்களை கவிதையாக பின்னூட்டம் கொடுப்பது
     
    rgsrinivasan likes this.

Share This Page