1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    கொஞ்சம் சீரியஸ் ஆக இன்று எழுதி விட்டேன். மேலே சொன்ன தனிப்பட்ட கருத்தை படித்து மறந்து விட்டு ஜாலியாக இருக்கலாம்.

    இந்த thread ஆரம்பித்து 11 வருடங்கள் வெற்றிகரமாக கடந்து விட்டது. எனக்கு ட்ரீட் தரும் நண்பர்கள் காணாமல் போய் விட்டார்கள். வழக்கம் போல நானே ட்ரீட் தரேன்.

    இசைஞானி இளையராஜாவின் பரம ரசிகை நான். நேற்றும் இன்றும் என்றும். IR இசை இல்லை என்றால் இந்த IL thread எனக்கில்லை. இந்த பாடல்கள் எனது அனைத்து IL நண்பர்களுக்கும் டெடிகேட் பண்றேன். WA la இதை எனக்கு அனுப்பிய இந்த thread க்கு நெருங்கிய தொடர்பு உள்ள ஒரு இனிய IL நண்பருக்கு/IR இசை விசிறிக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

    YT - IR - Mash-up
     
    suryakala and vidhyalakshmid like this.
  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    இரண்டு நல்ல கேள்விகள் கேட்டீர்கள் வேதவல்லி! என் கருத்தைப் பகிர்கிறேன். பிறர் பார்வை மாறுபடலாம் எனும் முன் அறிவிப்போடு!
    [9] தர்க்கமோ / கற்பனையோ எல்லா இடங்களிலும் செல்லாது என நீங்கள் அறிவீர்கள் தானே? கற்பனையின் பாய்ச்சல் நிகழும் இடங்கள் தர்க்கத்துக்குப் புதிதாக இருக்கலாம். ஏனெனில், தர்க்கத்துக்கு எல்லை உண்டு. அந்த எல்லை விரியலாம். எல்லா புதிய படைப்பிற்கும் / கண்டுபிடிப்புக்கும் கற்பனையே முதல் புள்ளி. அந்த கற்பனையை செயலாக்கும் முயற்சிகளுக்கு தர்க்கத்தின் துணை தேவைப்படலாம். கதை, கவிதை, காவியம் போன்ற துறைகளுக்கு கற்பனை மூலமெனில் தர்க்கம் அதை நிகழ்த்தத் தேவையான ஒரு கருவி. வானூர்தியும், படகும் , ஏன்? கூர்மை படுத்தப்பட்ட கல்லும் எங்கோ சிலரின் கற்பனையில் தோன்றிய போது, தர்க்கம் என்ன சொல்லி இருக்கும்? அறிதலில் சீரிய முனைப்புடன் இருப்பவர் கற்பனையை உண்மை ஆக்குகிறார். அவ்வளவே! தர்க்கம் கற்பனை கொண்டவருக்கு ஒரு துணையே!

    [10] ஒரு கேள்வியில் பல கேள்விகள்! :) கரு அமைந்த பின் வார்த்தைகள் தானாக வரலாம்; நாமும் முனையலாம், அது அவரவர் தேர்வு. மொழியில் நல்ல பயிற்சி இருப்பின், இரண்டும் சேரலாம். என் குறுகிய எல்லையில், வார்த்தைகள் சரசரவென வந்ததும் உண்டு, ஒவ்வொரு சொற்றொடராக கூழாங்கற்கள் போல தேடி அடுக்கியதும் உண்டு. இறுதியில் நன்கு கோர்த்த ஒரு மாலையென அது அமைய வேண்டுமென்று விரும்புவேன். மொழிப் புலமை இருக்க வேண்டும் தான். அப்போது உங்கள் தேடலின் நேரம் குறையும். எனினும் அடிப்படை இரசனையே முதல் தூண்டுகோல் என்று படுகிறது. நல்ல இரசனை ஒருவரை மென்மேலும் தேடச் சொல்லும். புரிந்து கொள்ளத் தூண்டும். அவரது மொழி அறிவு மேம்படும். அவரால் சிறந்ததை உடனே அடையாளம் கண்டு அதனை ரசிக்கவும், பகிரவும் முடியும். கவிதைக்கு அழகு, கவிஞரின் ரசனையும் அது வெளிப்படும் புதுமொழியும் தான்!

    கேள்விகளை நீங்கள் தொடரலாம். நான் அறிந்த வரை பதில் சொல்கிறேன். ஏதோ ஒன்று கற்றுக் கொண்டேன் என்று சொன்னதற்கு நன்றி. நானும் என் கருத்தை கோர்வையாகச் சொல்வதில், பயிற்சி பெறுகிறேன். நன்றி.
    -rgs
     
    Thyagarajan and singapalsmile like this.
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    இளையராஜாவின் மற்றுமொரு அபாரமான பாடல்: S ஜானகியும், சசிரேகாவும் இணைந்து பாடியது. பஞ்சு அருணாச்சலம் எழுதிய சிறந்த பாடல்களில் ஒன்று இது! இரண்டு தோழிகள் பாடுவதாக [இலதா, மஞ்சுளா] அமைந்தது. எளிய, இனிய வார்த்தைகள், நெகிழ வைக்கும் இசை, மறைபொருளாக, தொடர்ந்து வரும் ஒரு சோகத் தொனி, அவர்களின் மீண்டும் இனி வராத அந்த களங்கமற்ற பருவம், என அற்புதமாக ஒளிரும். தனித்திருக்கும் இரவுகளில் இதைக் கேட்டு கண்ணீர் விட்டதுண்டு. Nostalgic!
     
    Thyagarajan and singapalsmile like this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi V,

    உங்களது வீடியோ பார்த்தேன். நடுவர் கொடுத்த உங்களது அறிமுகம் அருமை. உங்களது பேச்சு கூர்மையாக இருந்தது. வள்ளுவர் முதன் முதலில் குறளில் ட்வீட் செய்தது கேட்பதற்கு புதுமை/இனிமை. காமராஜர் பள்ளிகள் திறப்பு, அவ்வையார் தூது/அரசியல், மேடம் க்யூரி நோபல் பரிசு, ஸ்வாதி மோகன் ரோவர் என்று மேற்கோள்கள் காட்டி உரையாற்றியது சிறப்பு.

    எனக்கு சீரியஸ் ஆக எழுதுவது பிடிக்காது. அது என்னோட பெர்சோனாலிட்டிக்கு பொருந்தாதது. அதனால் ஜாலியாக எனது உரையை முடித்து கொள்கிறேன்:

    வள்ளுவரது மனைவி வாசுகி அவர்களின் பதிபக்தி பத்தி எவ்ளோ சிறப்பாக சொல்லப்பட்டு இருக்கிறது. ஏன் எதற்கு என்ற கேள்வி கேக்காமல் கணவன் சொல்லே மந்திரம் என்று எண்ணி கணவன் சாப்பிடும்போது கிண்ணத்தில் தண்ணியும் டூத்பிக் தவறாது தினமும் எடுத்து வைத்தவர். வாசுகி அவர்களை ம்யூசியும் ல வைக்கணும். இப்படி ஒரு மனைவி கிடைக்க வள்ளுவர் கொடுத்து வைத்தவர். குடும்ப தொல்லை இல்லை. :wink::wink: அதனால் தான் நிம்மதியாக 1330 திருக்குறள் எழுதி தள்ள முடிந்தது. அவர் சாதித்தார். ஆணோ பெண்ணோ குடும்பம் ஜால்ராவா இருந்தால் தங்களுக்கு பிடித்த துறையில் முன்னேறலாம். :grinning::grinning:

    குடும்பத்தை எதிர்த்து ஒரு பாயிண்ட் சொல்லவா?

    தாறுமாறா கொஞ்சம் யோசிங்க. அவ்வையார்க்கு கல்யாணம் ஆகல. இவர் ரொம்பவே கொடுத்து வைத்தவர். குடும்பம் இல்லை. தொல்லையும் இல்லை. :wink::wink:இப்படி கிடைத்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி சமூகத்திற்காக நல்ல கருத்துக்கள் கொண்ட இலக்கியங்கள் எழுதி சாதித்தார்.

    பட்டிமன்றத்தில் இந்த தலைப்பிற்கு என்ன தீர்ப்பு அளித்தார்கள்?
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female


    Hi RGS,

    தங்களது அத்தனை வரிகளும் வார்த்தைகளும் முத்துக்களாக ஜொலிக்கின்றது. :clap2::clap2:
    படிக்கும்போது intellectual kick கொடுத்தது. மிக்க நன்றி. இப்போது poetic thread அதற்கான பாதையில் பயணிக்கிறது.

    பல கேள்விகள் /புள்ளிகள் இருந்தாலும் அத்தனை கேள்விகள்/புள்ளிகளையும் இணைத்து தாங்கள் அளித்தது ஒரு அதி அற்புதமான விளக்கம். உங்களுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள்.

    முதல் முறையாக அந்த பாடலை கேட்டேன் --> தோழிகளின் நட்பை பாராட்டி பாடும் பாடல் கேட்பதற்கு இதம். உங்களது பாடல் தேர்வுகளும் திரும்ப திரும்ப கேட்க தூண்டும் ரகம். தொடர்ந்து பாடல்களை இங்கு பதிவு செய்யுங்கள். நன்றி.

    இன்றைய கேள்விகள்:

    11) சிற்பியின் கற்பனைக்கு உயிர் கொடுத்தால் சிலை. ஓவியன் - ஓவியம். கவிஞன் - கவிதை. இந்த மூன்று கலைஞர்களில் யாருக்கு கற்பனை வளம் அதிகமாக இருக்க வேண்டும். யாருக்கு லாஜிக் குறைவாக இருக்கலாம்? ஏன் என்பதற்கான விளக்கமும் தரவும்.

    12) ரசனை என்பது அடிக்கடி இந்த poetic thread la பயன்படுத்தப்பட்ட வார்த்தை. ரசனை இருக்கிறது என்பது பெருமிதமாக குறிப்பிடப்படுகிறது. தங்களது பார்வையில், ரசனை என்றால் என்ன ? பாமரனுக்கு புரியும்படியான விளக்கம் தேவை. உதாரணமும் தேவை.

    குறிப்பு: அலுவலகத்தில் ப்ரெசென்ட் பண்ணாலும் கேள்வி கேட்கும் ஈமெயில் க்கு பதில் ஈமெயில் அனுப்பும்போதும் நான் உதாரணமும் விளக்கமும் தருவேன். உதாரணத்தை புரிந்து கொண்டால் விளக்கம் படிக்கும் அவசியம் இருக்காது. உதாரணமும் விளக்கமும் சேர்ந்து படித்தால் புரிதல் ஊர்ஜிதமாகிவிடும்.
     
    rgsrinivasan and Thyagarajan like this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    PBS songs Playlist 59

    PBS அவர்களின் பாடல்கள் பதிவை இன்று முடித்து கொள்கிறேன். இவரது பாடல்களில் இருந்து ஒரே ஒரு பாடலை மட்டும் நான் எனது ஆயுள் முழுவதும் எடுத்து செல்ல நினைப்பது இன்றைய கடைசி க்ளாஸிக் கிக் பாடல். :wink::wink:

    பழைய பாடல்களில் ஏடாகூடமா வரிகள் வருமா? :wink::wink:அப்படியாப்பட்ட பாடல்கள் கேட்டு இருக்கீங்களா? இன்று கேக்க போறீங்க.

    இன்றைய பாடல்கள் பதிவு A1 Club members க்கு மட்டும். APK members பாடல் கேட்காமல் இருந்து விடுங்கள். அப்படியே பாடல்கள் கேட்டாலும் என்னை திட்டாதீங்க. பாடல் வரிகள் எழுதியர்களை பாடியவர்களை இசை அமைத்தவர்களை பாடல்களில் நடித்தவர்களை படங்களை டைரக்ட் பண்ணியவர்களை தயாரித்தவர்களை ஒளிப்பதிவாளர்களை நடன ஆசிரியர்களை நல்லா திட்டுங்கள். இவங்களை எல்லாம் நிறுத்த சொல்லுங்கள். நான் நிறுத்தறேன். :grinning::grinning:

    சித்திரமே சொல்லடி - வெண்ணிற ஆடை
    சந்திப்போமா இன்று சந்திப்போமா - சித்தி
    உன் அழகை கண்டுகொண்டால் - பூவும் பொட்டும்
    கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம் - அனுபவம் புதுமை
    அனுபவம் புதுமை - காதலிக்க நேரமில்லை (க்ளாஸிக் கிக்)
     
    suryakala and Thyagarajan like this.
  7. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,641
    Likes Received:
    1,751
    Trophy Points:
    325
    Gender:
    Female
    Dear S,
    மிக்க நன்றி(முழு வீடியோவும் பார்த்ததற்கு )
    வீடியோவை பகிர்ந்தால் நிறைய பேர், நண்பர்களும்
    கூட முழுவதும் பார்ப்பதில்லை. நல்ல ரசனை உங்களுக்கு!
    பாராட்டுகளுக்கும் நன்றிகள் கோடி.
    வாசுகியின் டூத்பிக் நல்ல கற்பனையும் கூட!:clap2:
    அவ்வையார் சூப்பர் பாயிண்ட்! தீர்ப்பு சமூகமே என்று தான்!
    நான் எப்போதும் தீர்ப்பை எண்ணி பேசுவதில்லை,
    என் கருத்துக்களை எப்படி ஈர்க்கும் விதமாக பேசுவது
    என்பதிலேயே கவனம் இருக்கும். தமிழில் பெரும்பாலான
    பேச்சாளர்கள் இதே எண்ணமே கொண்டு உள்ளதாகவே நான்
    கருதுகிறேன்.
     
    singapalsmile and Thyagarajan like this.
  8. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,643
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    அங்கே நாயகன்.
    இங்கே நாயகியா?
     
    singapalsmile likes this.
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    11) இந்தக் கேள்வி என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. மூன்று துறைகளும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை. உணர்த்த வரும் பொருளின் சாரத்தைக் கொண்டே நாம் சற்று மதிப்பிட இயலலாம். ஆனால் இதைச் செய்வதற்கு மூன்று துறைகளிலும் தேர்ச்சி முக்கியம். சிலையோ, ஓவியமோ, கவிதையோ, அவற்றின் நுட்பங்களும், மறைபொருளும் படைத்தவரின் கற்பனை வீச்சை நாம் சற்று அறிய உதவலாம். உதாரணமாக, ஒரு பாவை விளக்கை சிற்பமாகக் கண்டால், நன்கு வெளிப்படும் பெண்ணுருவைத் தாண்டி, அவள் அணிகள், நகம், விரல்கள் குவிந்த பாங்கு, அந்த முகத்தின் பாவம், ஒட்டுமொத்தத் தோற்றம் முதலியன சிற்பத்திலும், ஓவியத்திலும் துலங்கலாம். அவளை கற்பனை கொண்டு வடித்த கவிஞர், இவற்றை அழகுற விளக்கி, நம்மை அவள் எப்படி இருப்பாள் என்று எண்ணச் செய்யலாம். ஒன்று மற்றொன்றிற்கு வித்திடலாம். அவ்வளவே! மற்றபடி, தர்க்கம் மூன்றுக்கும் ஒன்றே! ஓவியமோ, சிற்பமோ, அனைத்தையும் கண் முன் வைப்பதனால், அவற்றில் பிற எதுவும் இருக்க வாய்ப்பில்லை என்று நம்மில் சிலர் நினைக்கலாம். அது தவறு என்று எனக்குப் படுகிறது.

    12) இரசனையை விவரிப்பது சற்று கடினம் தான். என்னால் இயன்ற வரை முயல்கிறேன். ஒரு பொருளில் கூர்ந்த கவனிப்பும், அதில் கண்டு வியக்கின்ற, நுட்பமும், இரசனை என்று கருதுகிறேன். இரசனை ஒத்திருக்கலாம், அல்லது வேறுபடலாம். ரசனையே ஒருவரது தேடலை தீர்மானிக்கிறது.
    ஒருவரால் அதை விவரிக்க முடியாது போகலாம், நெய்யின் சுவை போல. இதில் படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர் என்ற பேதம் இல்லை. மனிதருக்கு மட்டும் அமைந்த சற்றே மேம்பட்ட ஒரு உணர்ச்சி [மற்ற உயிரினங்களுக்கு உணவின் வாசனை, சுவை, அரிதாக இசை முதலான உணர்வுகள் இருக்கலாம்]. மனிதனுக்கு இவற்றுடன், ஒரு நல்ல ஓவியம், சிற்பம், இசை, உடை, நிறம், முத்திரை, இயற்கை, தோற்றப் பொலிவு என இது விரிந்து கொண்டே போகலாம். அவற்றின் நேர்பொருளோடு, அவன் தன் உணர்ச்சியைச் சேர்த்து, அதை நினைவில் நெடுநாள் வைத்துக் கொள்கிறான். நல்ல இரசனை அவனுக்கு ஒரு ஆறுதலைத் தந்து ஊக்கமும் அளிக்கிறது. இன்னும் நிறைய எழுதலாம். படிப்பவருக்கு சலிப்பு தட்டும். எனவே...
     
    singapalsmile and Thyagarajan like this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi V,

    S for Singam, S for Success னு சொல்றது கெத்தா இருந்தாலும் எனக்கு எனது பெற்றோர்கள் வைத்த பெயர் மீது தான் காதல். நீங்கள் என்னை வேதா என்றே அழைக்கலாம். :grinning::grinning:

    தங்களது பதிவிற்கு நன்றி. நீங்கள் சொல்வதை நானும் ஆமோதிக்கிறேன். தீர்ப்பு முக்கியமில்லை. சொல்ல வரும் கருத்து தான் முக்கியம். நான் டென்த் படிக்கும்போது ஒரு பேச்சு போட்டியிலும் ஒரு எழுத்து போட்டியிலும் கலந்து இருக்கிறேன். பேச்சு போட்டியின் தலைப்பு திருக்குறளை பற்றி பேசுவது. நான் திருக்குறளில் சிலவற்றை தேர்ந்து எடுத்து நான் இருந்த கால கட்டத்துக்கு எதற்கு பொருந்தாது என்று பேசினேன். கொஞ்சம் கலாய்த்துவிட்டேன். கமலி from நடுக்காவேரி படத்தில் கதாநாயகி, பிரதாப் போத்தனின் வீட்டு வாசலில் இருக்கும் போர்டில் எழுதிய கருத்துக்களை மாற்றி எழுதுவதை போல. :grinning::grinning:

    பேச்சு போட்டியில் எனக்கு கிடைத்த கைத்தட்டலுக்கு குறைவில்லை. ஆனால் பரிசு எனக்கு கொடுக்கப்படவில்லை. திருக்குறளை பற்றி மேன்மையாக பேசியர்களுக்கு தான் பரிசு வழங்கப்பட்டது. பரிசுகள் வாங்கிய மாணவனும் மாணவியும் என்னிடம் வந்து சொன்னது: பரிசு கிடைக்கவில்லை என்று வருத்தப்படாதீர்கள். உங்களை மாதிரி பேசுவதற்கு செம தில் வேணும். பேசியது சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. போட்டியில் பரிசு கிடைக்கவில்லை என்றாலும் அந்த பாராட்டு எனக்கு பரிசாக பட்டது.

    எழுத்து போட்டி பெண்ணியத்தை பற்றிய தலைப்பு. மனசுக்கு பட்டதை கிறுக்கி விட்டேன். இரண்டாம் பரிசு கிடைத்தது.

    நான் நானாக இருந்து மனதிற்கு பட்டதை பேசி தோற்றாலும் பரவாயில்லை. வெற்றிக்காக என்னால் மாத்தி பேச முடியவே முடியாது.
     

Share This Page