1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    S ஜானகியின் மற்றுமொரு அற்புதமான பாடல்: தாலாட்டும் பூங்காற்று நானல்லவா?
    வாலியின் தேன் சொட்டும் வரிகளில், ராஜாவின் அபாரமான மெட்டில், கார்த்திக், பானுப்ரியாவின் நடிப்பில் இந்தப் பாடல் இரவினில் கேட்க, உள்ளே பொங்கும் உணர்ச்சிகளை ஏக்கம், விரகம், தாபம், உருகும் இன்பம் என அடுக்கலாம்.
    P C ஸ்ரீராமின் அபாரமான ஒளிப்பதிவு, ஜனகராஜின் கையில் இருந்து சுழன்று சுழன்று கார்த்திக் கையில் சேரும் அந்த ஒலிநாடாப் பெட்டியும், அப்போது கேட்கும் அபாரமான அந்த ஒலித்துணுக்கும், பானுப்ரியா அனைத்தும் தன்னிச்சையாக கார்த்திக்கின் கண்ணில் வழியும் கண்ணீரும் நினைவில் பதிந்து விட்டது. அந்த அபாரமான புல்லாங்குழலும்.
     
    suryakala likes this.
  2. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,641
    Likes Received:
    1,751
    Trophy Points:
    325
    Gender:
    Female
    உலக மகளிர் தினத்தன்று பேசிய தலைப்பு சமீபத்தில்
    பிடித்த தலைப்பு . மகளிர் முன்னேற்றத்திற்கு பெரிதும்
    காரணம் குடும்பமா? சமூகமா?
    சமூகமே என்ற என் கருத்துகளில் சில-
    1. தாய் முதல் ஆசிரியர் ஆனாலும் பள்ளிகள் கொடுக்கும்
    கல்வி தான் முன்னேற்றத்தின் முக்கிய காரணம்.
    2. குடும்பம் சிறிய வட்டம், சமூகம் பரந்த வெளி.
    3. இன்றைய சமூக ஊடகங்களின் மூலம் தொழிலில் முன்னேற்றம்
    அடைந்த பெண்கள் ஏராளம்.


    என் காணொளியை நம் குட்டி பட்டிமன்றத்தின் இறுதியில்
    பகிர்கிறேன்.:)
     
    singapalsmile likes this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi RGS,

    தாங்கள் உவமையுடன் எழுதுவது படிப்பதற்கு நன்றாக இருந்தது. உங்களது சிந்தனையை தக்க வார்த்தைகள் கொண்டு விளக்கமாக எழுதறீங்க. படிப்பதற்கு நன்று. கேள்விகள் தொடர்கிறது.

    7) மேடை பேச்சில் பேசுபவர்கள் கை தட்டலுக்காக என்ன வேண்டும் ஆனாலும் பேசலாம். அவர்களது பேச்சுக்கும் அன்றாட செயல்பாட்டிற்கும் சம்பந்தமே இல்லாமல் போகலாம். என்னை பொறுத்தவரை பேசும் பேச்சுக்கும் எழுதும் வார்த்தைகளுக்கும் நடைமுறை செயலுக்கும் ஒரே அலைவரிசையில் அனைத்தும் அமைந்த உண்மை இருத்தல் வேண்டும். முரண்பாடு இருத்தல் கூடவே கூடாது. உங்களது பார்வையில் கவிஞர் என்றால் எந்த தலைப்பிலும் எழுத முடிந்து இருக்க வேண்டுமா? தனக்கு உண்மையாக பட்டது தான் நம்புவது தான் கடைப்பிடிப்பது மட்டுமே எழுத வேண்டுமா?

    8) பாடல்களில், படித்த கவிதைகளில், உங்களை சுற்றி இருக்கும் மனிதர்களை/ பொருட்களை/ இயற்கை சூழல்களை உன்னிப்பாக கவனித்து கவிதை எழுதுகிறீர்கள். கண்களில் தென்பட்ட ஒரு காட்சிக்கு உடனே கவிதை எழுத வேண்டும் என்று உந்துதல் இருக்குமா? ஆறிப்போட்டு நேரம் கிடைக்கும் போது அசைப்போட்டு எழுத தோணுமா? எழுதியதை உடனே யாரிடமோ பகிர்ந்துக்கொள்ளும் வேகம் இருக்குமா?

    ****************************

    நீங்க போஸ்ட் பண்ற SJ சாங்ஸ் வைத்து ஒரு special collection போட்டு விடலாம்.
    Thread la நான் கொஞ்சம் டிராக் மாறி இருந்தாலும் உங்களது பாடல்கள் டிராக் ல தான் இருக்கு. :grinning::grinning:
     
    rgsrinivasan and Thyagarajan like this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi V,

    ஒரு பொருத்தமான தலைப்பு தேர்ந்து எடுத்ததிற்கு பாராட்டுக்கள். :clap2::clap2:குட்டி பட்டிமன்றத்தில் பங்கு பெற்றதிற்கு நன்றி. நான் குடும்பம் பக்கம் சாய்ந்து உங்களது கருத்துக்கு எதிராக ஆரம்பிக்கிறேன்.


    1) பெண்களுக்கான படிப்பு செலவை முகம் சுழிக்காமல் ஏற்று பள்ளிக்கும் கல்லூரிக்கும் குடும்பம் அனுமதித்தால் மட்டுமே பெண்ணுக்கு கல்வி கிடைக்கும். படிப்பதற்கு குடும்பம் அனுசரணையான சூழல் தராவிட்டால் படிப்பு மண்டையில் எப்படி ஏறும்? பொருளாதாரத்திலும் படிப்பதற்கு ஏற்ற சுமூகமான சூழலும் படிப்பிற்கு ஊக்கமும் உற்சாகமும் ஆதரவு கரம் குடும்பம் நீட்டினால் தான் கல்வி பயில முடியும்.

    2) சிறகை விரிப்பதற்கு முன்னரே குடும்பத்து நபர்கள் பெண்களின் சிறகை வெட்டி விட்டால் பரந்த வெளியாக இருந்தாலும் பறக்க இயலாது

    3) திருமணத்திற்கு பிறகு பெண்கள் தொழிலில்/வேலையில் உயரமான இடத்தில் முன்னேற வேண்டுமானால் புகுந்த வீட்டு குடும்பம் ஆதரவு பெரிதும் தேவை. பிறந்த வீட்டில் சிறகை வளர விட்டாலும் புகுந்த வீட்டில் சிறகை வெட்டி விடாமல் இருக்கணும். மேலும் பறக்க இந்த குடும்பமும் உறுதுணையாக இருக்கணும்.

    வீட்ல இருந்து முன்னேற்றம்/மாற்றம் அரம்பிக்கனும் என்பது தான் எனது ஆணித்தரமான கருத்து.

    உங்களது விவாதத்தை நீங்கள் தொடரலாம்.
     
    Thyagarajan and vidhyalakshmid like this.
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    7) என் கருத்தும் அது தான். எழுதுபவர் தனக்கென ஒரு பார்வை கொண்டிருக்க வேண்டும். முடிந்த வரை, தன் நிலைப்பாட்டில் உறுதியும் தெளிவும், நேர்மையும் வேண்டும். தெரிந்ததை எழுதலாம். தெரியாததை தெரிந்து கொள்ளும் ஆர்வமும், தெரிந்ததை தெளிவாய் உரைக்கும் தன்மையும் வேண்டும் என்பது என் எண்ணம். தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் தயங்கக் கூடாது. தன் அறிவை வளர்த்துக் கொள்வதன் தன எல்லையை விரித்துக் கொள்கிறார். அவர் எழுதுபவர் எனில், அதைப் படிப்பவரின் எல்லையும் விரியும். எல்லாம் தெரிந்த மனிதர் எவருமிலர்.

    8) கண்களில் தென்பட்ட காட்சிக்கு உடனே எழுதும் உந்துதல் மிக அரிதாகத் தான் வந்திருக்கிறது. எழுத அமரும் போது ஒரு கரு மட்டும் தான் இருக்கும். அதைச் சுற்றி சம்பவங்களும் சேர, ஒரு வடிவ முழுமை வந்திருக்கிறதா என்று பார்ப்பேன். அவ்வளவு தான். நான் சற்று தனிமை விரும்பி, எனவே உடனே பகிரும் எண்ணம் எல்லாம் இருந்ததில்லை. என் ஆங்கிலக் கவிதைகளை உற்ற நண்பன் ஒருவனுடன் சில நாட்கள் பகிர்ந்ததுண்டு. அவன் விமர்சனத்தால் துவண்டதும் உண்டு, எழுச்சி கொண்டதும் உண்டு. சில தமிழ்க் கவிதைகளை நான் ஐஎல் தளத்தில் சேரக் காரணமாக இருந்தவருக்கு தனிப்பட அனுப்பியதுண்டு.
     
    Thyagarajan and singapalsmile like this.
  6. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    S ஜானகியின் மற்றுமொரு மகத்தான தனிப்பாடல் - செந்தூர பூவே!
    ஒரு பருவப் பெண்ணின் மகிழ்ச்சி, துள்ளல், பெருமையாக உணர்தல், ஒரு பூ மலர்வதைக் காணும் போது தோன்றும் அந்த இனம் புரியாத இன்பம், சற்றே குழைந்து தன்னில் கரையும் அந்த நெகிழ்வு என அனைத்தையும் உணர முடியும். அபாரமான மெட்டும், வாத்திய இசையும் குரலும், ஸ்ரீதேவியின் அந்த கட்டற்ற தன்மையும் இந்தப் பாடலை எங்கோ கொண்டு செல்லும். அந்தப் புல்லாங்குழல் இசை - அம்மம்மா!
     
    Thyagarajan and singapalsmile like this.
  7. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,641
    Likes Received:
    1,751
    Trophy Points:
    325
    Gender:
    Female
    1. குடும்பம் ஆறுதல் தரும், ஆனால் சமுதாயமே தீர்வு தரும்.
    பள்ளி மற்றும் கல்வி கூடங்கள் தான் கட்டுப்பாட்டை கற்று தரும்.

    2. குடும்பத்தால் கைவிடப்பட்டோரும் பல சமுதாய நல
    திட்டங்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

    3. ஆலோசனை சொல்லும் உதவும் நண்பர்களும், நம்முடைய
    தேடல்களுக்கு உதவும் இணைய தளமும் சமுதாயத்தின்
    கொடையே அன்றி வேறில்லை.

    பெண்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணை குடும்பமா? சமூகமா? - YouTube
     
    Thyagarajan and singapalsmile like this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi RGS,

    செந்தூரப்பூவே பாடலுக்கு நன்றி. SJ அவர்களுக்கு தேசிய விருது வாங்கி கொடுத்த பாடல். பாடி இருக்கும் விதம் எங்கெங்கோ அழைத்து சென்று மனதை அலைபாய வைக்கின்றது. பாடல்
    கேட்ட நிமிடங்கள் என்னை மறந்த கணங்கள் என்பேன். பாடல் பற்றிய தங்களது பதிவு பாடலை போலவே அருமை.

    தங்களது பதிலுக்கு நன்றி. படித்தபோது ஏதோ ஒன்று புதிதாக கற்றுக்கொண்டேன். கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க ஆசை --> பதில்கள் படிப்பதற்கே.

    9) Logic will get you from A to B. Imagination will take you everywhere.
    ~ Albert Einstein

    கற்பனை உலகத்திற்கு நான் செல்வது லாஜிக் மறக்க தான். கற்பனை சிறகடித்து பறக்கும்போது கவிதை எழுதும்போது லாஜிக் கற்பனைக்கு தடையா? தொடர்ச்சியா?

    10) கரு அமைந்து சம்பவங்கள் கோர்த்தப்பிறகு கவிதை எழுதும்போதே வார்த்தைகள் தானாக வந்து விழணுமா? வார்த்தைகளை விழுந்து விழுந்து தேடி பார்க்கணுமா? மொழி புலமை இருந்தால் தான் கவிதை எழுத முடியுமா? ரசனை இருந்து மொழி திறன் இல்லாமல் போனால் கவிதையின் அழகு குறைந்து விடுமா? கவிதைக்கு கூடுதல் அழகு சேர்ப்பது ரசனையா? மொழி திறனா?

    குறிப்பு: எனது கேள்விகள் போர் அடிக்க ஆரம்பித்தால் சொல்லிவிடுங்கள். இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
     
    Thyagarajan and rgsrinivasan like this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female

    Hi V,

    இரண்டாவது சுற்றில் பங்கேற்று தங்களது கருத்துக்களை பகிர்ந்ததிற்கு நன்றி. எனக்கு காபி பிடிக்காது. காப்பி அடிப்பதும் பிடிக்கவே பிடிக்காது. உங்களது வீடியோ பார்த்து அதனால் எனக்கு வேறு கருத்து தோன்றி இங்கு பதிவிட்டால் என்னை பொறுத்தவரை அது நேர்மை இல்லை. உங்களது இரண்டாவது சுற்றுக்கு என்னுடைய கருத்துக்களை பதிவிட்டு குட்டி பட்டிமன்றத்தை நிறைவு செய்கிறேன். உங்களது வீடியோ பிறகு பார்த்து விட்டு எனது கருத்தை இன்னொரு நாளில் எழுதறேன்.

    1. கல்வி பெண்கள் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுகின்றது என்பதில் எள்ளவும் எனக்கு சந்தேகமில்லை. பெண் தானே? நீ படித்து என்ன சாதிக்க போறே? என்ற எண்ணத்தை பெண் மனதில் பிஞ்சு பருவத்தில் வீட்டு நபர்கள் விதைத்து விட கூடாது. சாப்பாடு ஊட்டும்போதே நீ படித்து சாதிக்க பிறந்தவள் என்ற எண்ணத்தையும் சேர்த்து ஊட்ட வேண்டும். வீட்டு basement strong என்றால் மாடிகள் கட்டி சமூகத்தில் முன்னேறலாம்.

    2. பீனிக்ஸ் பறவை படத்தை IL la வைத்து கொண்டு சிறகை வெட்டுவதை பற்றி எதுக்கு எழுதறீங்கனு என்னை எதிர் கேள்வி கேட்பீங்கனு நினைத்தேன். என்னுடைய பதில்: விதிவிலக்குகள் உதாரணங்கள் ஆகாது. குடும்பத்தால் கைவிடப்பட்ட பலரில் ஒரு சிலரை இந்த சமுதாய நல திட்டங்கள் காப்பாற்றி இருக்கலாம். மறுக்கவில்லை. குடும்பம் என்ற கூட்டை விட்டு பெண் வெளியேறினால்/வெளியேற்றப்பட்டால் இந்த சமுதாயம் அந்த பெண்ணை பார்க்கும் பார்வையே வேறு. தினம் தினம் தனது பெண்மை பாதுகாப்பு பற்றிய எண்ணம் தான் மேலோங்கும். முன்னேற்றம் இரண்டாம் பட்சமாகிவிடும். இது தான் நிதர்சனம். சமுதாயத்தின் அவல நிலை.

    3. நண்பர்கள் என்ற பெயரில் கயவர்கள் பெண்களிடம் Facebook ல நட்பு கொண்ட பொள்ளாச்சி சம்பவம் படித்து இருக்கீங்களா? பாதிக்கப்பட்ட அந்த பெண்கள் பிரச்சனையில் முடங்கி விடாமல் மீண்டு எழுந்து அடுத்த கட்ட முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டுமானால் குடும்பத்து துணை அதிகம் வேண்டுமா? சமுதாயத்தின் துணை வேண்டுமா? சமூகம் வேல் பாய்ச்சினால் குத்தி கிழித்தால் குடும்பம் துணையாக பக்க பலமாக நின்றால் சமுதாயத்தை ஒரு கை பார்த்துவிட்டு அந்த பெண்களின் கால்கள் முன்னேற்ற பாதை நோக்கி பயணிக்கலாம்.
     
    vidhyalakshmid and Thyagarajan like this.

Share This Page