1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,653
    Likes Received:
    1,764
    Trophy Points:
    325
    Gender:
    Female
    நன்றிகள்! ஏனோ சிறு வயதிலேயே என்னை கவர்ந்த
    பாடல்கள் - அல்லா அல்லா மற்றும் சம்போ
     
    Thyagarajan likes this.
  2. vidhyalakshmid

    vidhyalakshmid IL Hall of Fame

    Messages:
    2,653
    Likes Received:
    1,764
    Trophy Points:
    325
    Gender:
    Female
    நன்றிகள்! சொல்லத்தான் நினைக்கிறேன் - அருமையான
    கருத்துள்ள பாடல் . எனக்கு ஒதுக்கப்பட்ட 8 நிமிடங்களில்
    அதிக பாடல்களை எடுத்து பேச இயலவில்லை.
     
    Thyagarajan likes this.
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    4) நீங்கள் குறிப்பிட்டவை அனைத்தும் எனக்கு கவிதை எழுத உந்துசக்தியாக இருந்தவை தான். எனினும் கூடுதலாக இவற்றைக் குறிப்பிட வேண்டும் - பக்திக் கதைகள், இறை உருவங்கள், மற்றும் மகத்தான சம்பவங்கள் மற்றும் மனிதர்கள்.
    ஒரு சமயம் ஒரு இரவலரின் கையில் கண்ட பெரும் வெள்ளைச் சங்கு கூட கருப்பொருளாகி இருக்கிறது. இயற்கைப் பொருட்கள் பற்றி எழுதி இருப்பினும், ஒரு புதிய கற்பனையாவது அதில் இருக்கும் படி எழுதியதுண்டு [உதாரணம் - கொடும்நிலவு என நிலவைக் குறித்ததுண்டு, அது வளைந்திருப்பதால்]. இவையெல்லாம் போக, தன்னம்பிக்கையை மையமாகக் கொண்டும் எழுதியதுண்டு. இன்னும் நிறைய எழுதலாம். ஆனால் இப்போது என் வருகையும், எழுத்தும் வெகுவாகக் குறைந்து விட்டது.

    5) மனதில் தோன்றும் வரிகளுக்கும், செய்யும் செயல்களுக்கும் பெரிதாக ஒற்றுமை இருந்ததில்லை. சோகம், சுகம், மற்ற உணர்ச்சிகள் எல்லாம் அவ்வப்போது தோன்றுபவையே! எழுதுவது இயல்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். ஒரு கனமான பொருளைக் கட்டி இழுப்பதாகத் தோன்றக் கூடாது. எழுதும் கணத்தில் என்ன தோன்றுமோ, அதை எழுதிவிட வேண்டியது தான். தன்னை மீறிய ஒன்று அதில் வந்தால் மகிழ்ச்சியே. உள்ளே எங்கோ, என்றோ தோன்றிய ஒன்றே தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது என்று சில நாள் தோன்றும். பிறர் கவிதைகள் படித்து, அவற்றின் தாக்கத்தாலும் எழுதியதுண்டு. சோகம் எழுதுவது சற்று எளிது தான். ஆனால் சவால் என்னவென்றால் அதை எப்படி சில வரிகளில், புது உவமைகள் கொண்டு உணர்த்த முடியும் என்பது தான்.

    இவை தவிர, ஆங்கிலத்தில் கவிதைகள், குறுங்கதைகள், தொடர்கதைகள், வாழ்க்கை நிகழ்வுகள் எனப் பல வடிவங்களில் இங்கே எழுதி இருக்கிறேன். சில, பலரால் விரும்பிப் படிக்கப்பட்டதுண்டு.
     
    Last edited: Jul 17, 2021
    singapalsmile and Thyagarajan like this.
  4. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    ஊரு சனம் - ஒரு அரிதான பாடல் - ஒரு ஊசலின் [pendulum] ஆட்டத்தைப் போல வடிவமைக்கப்பட்டு இருக்கும் அது. ஊசல் அதன் ஒரு எல்லைக்குப் போய், பின்னர் மறு எல்லை நோக்கிச் செல்வதைப் போல, டென்னிஸ் விளையாட்டில் ஒரு ராலி போல அபாரமாக இருக்கும்.

    இராசாவே உன்னை நம்பி - இளையராஜா சொன்ன வார்த்தைகள் - "ஒரு பாடத் தெரியாத பெண் பாட முயன்றால் எப்படி இருக்குமோ அப்படிப் பாட வேண்டுமென"!. ஜானகியின் குரலைக் கேட்டால் அப்படியா தோன்றுகிறது?

    நாதம் என் ஜீவனே - ஒரு அற்புதமான பாடல். காதல் ஓவியம் படத்தில் அத்தனை பாடல்களும் அற்புதமானவை தான்!
     
    singapalsmile and Thyagarajan like this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi V,

    முதன் முதலாக இங்கு தமிழில் நீங்கள் எழுதியதை படிப்பதற்கு நன்றாக இருந்தது. எழுத்து ஆர்வத்தையும் சேர்த்து வளர்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த பாடல்களையும் கருத்துக்களையும் இங்கு தமிழில் எழுதி எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். உங்களிடமும் ஒரு கேள்வி கேட்காமல் விட்டு விடுவேனா? :grinning::grinning:

    ஒரு குட்டி பட்டிமன்றம் நடத்தி விடுவோம். இதுவரை நீங்கள் கலந்துக்க கொண்ட பட்டிமன்றத்தில் உங்களை வெகுவாக கவர்ந்த தலைப்பு எது? அந்த தலைப்பிற்கு நீங்கள் பேசிய முத்தான மூன்று பாயிண்டுகள் எடுத்து விடுங்கள். நான் அதற்கு சார்பாகவோ எதிர்த்தோ என்னுடைய கருத்துக்களை பதிவு செய்கிறேன்.
     
    vidhyalakshmid and Thyagarajan like this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi RGS,

    உங்களது பதில்கள்/ விளக்கங்கள் கவிதைகளை போலவே இனிக்கிறது/இருக்கிறது.

    அடுத்த கேள்விகள்:

    6) இனிப்பை சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் அதன் சுவை நாவில் இருப்பது போல ஒரு கவிதையை/கருத்தை படித்த பிறகு அது பற்றிய சிந்தனை சில மணி நேரங்கள் மூளையை ஆக்கிரமித்து இருக்கலாம். உங்களுக்கு இதை போன்ற அனுபவம் இருக்கிறதா? ஒரு கவிதையை எழுதி/ (சு)வாசித்து விட்டு உடனே உங்களை அந்த எண்ணங்களில் இருந்து விடுவித்து கொள்வீர்களா?

    7) கவிதை எழுதும் தருணங்களில் (உங்களை சுற்றி நடப்பதை மறந்து விட்டு) உங்களுக்கு என்று ஒரு தனி கற்பனை உலகம் உள்ளதா?

    எனது பாடல்களுக்கு தங்களது விமர்சனம் அருமை. ஒரு ஊசலின் ஆட்டம் என்று ரசனையோடு குறிப்பிட்டு இருந்தீங்க. படித்து ரசித்தேன்/ மகிழ்ந்தேன். நன்றி. நான் அந்த கோணத்தில் அந்த பாடலை இதற்கு முன்னர் பார்த்தது இல்லை. இனிமேல் அந்த பாடல் கேட்டால் ஊசலின் நினைவும் சேர்ந்து வரும். இது போலவே நீங்கள் ரசித்த பாடல்களையும் அது பற்றிய தங்களது ரசனையான ரசமான பார்வையையும் இங்கு பதிவிடுங்கள். எழுதும் இன்பம் உங்களுக்கு. படிக்கும் இன்பம் எங்களுக்கு. :grinning::grinning:
     
    rgsrinivasan and Thyagarajan like this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    1) எனது நெருங்கிய நண்பரும் நானும் சில மாதங்களுக்கு முன்பு பேசிக்கொண்டிருந்தோம் --> தாயகத்தில் குடும்பத்து நபர்கள் இழப்பு ஏற்பட்டால் பயணம் மேற்கொள்வதை பற்றி. இருவருமே ஒரே மாதிரி சிந்தித்தோம். என்ன ஆனாலும் பயணம் மேற்கொள்ள வேண்டும். கடைசி காரியத்தில் நாம் இருப்பது நம் கடமை என்று. Vaccine போட்டுக்க விருப்பம் இல்லை என்றாலும் பயணம் செய்ய தடையாக இருக்க கூடாது என்பதற்காக எனது நெருங்கிய நண்பி போட்டு கொண்டார். இது என்னை சிந்திக்க வைத்தது.

    2) எனது நண்பி மற்றும் நலம் விரும்பிக்கும் எனக்கும் vaccine போடுவதை பற்றிய ஒரு விவாதம் நடந்தது. அவரது பாயிண்ட்ஸ் பலமாகவும் என்னுடையது பலகீனமாகவும் எனக்கு தோன்றியது. இது என்னை சிந்திக்க வைத்தது.

    3) WAல ஒரு மெஸேஜ் வந்தது. கொரோனா முதல் அலை இரண்டாம் அலை என்று சொல்வதை விட்டுவிட்டு அலைகள் ஓய்வதில்லை என்று சொல்லலாம் என்று. எப்போ முடிவிற்கு வரும் என்பது முடிவில்லாத கேள்வியாக இப்போது இருக்கிறது. அதற்காக நிலைமை சீராக காத்திருந்து நம் ஊருக்கு போகாமல் இருக்கலாமா? குடும்பத்து நபர்களை சந்திக்காமல் இருந்து விட முடியுமா?

    4) ஒரு greek alphabet விட்டு வைக்கற மாதிரி தெரியல. பேர் ல V இருப்பதால் vaccinated என்று நினைத்து கொரோனா என்னை விட்டு வைத்துவிட்டது என்று சொன்னால் பைத்தியக்காரத்தனமா தோணுது. :grinning::grinning: ஓவர் கான்பிடன்ஸ் ஓடம்புக்கு ஆகாது. அதனால் நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால் நான் இரண்டு டோஸ் போட்டு முடித்து விட்டேன். (இதனால் ஒரு 5:30 பார்ட்டிக்கு ரொம்ப சந்தோசம்.) கொஞ்சமா இடது கை வலி தவிர வேறு எந்த உடல் உபாதையும் எனக்கு இல்லை. எந்த மாத்திரையும் சாப்பிடவில்லை. தெம்பா தெனாவெட்டா இருக்கிறேன். இன்னும் சில மாதங்களில் தாயகம் பயணிக்க டிக்கெட் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

    சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா - ஊரு விட்டு ஊரு வந்து
     
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    PBS songs Playlist 57

    இன்று தத்துவ பாடல்கள். பாடலில் நிறைய வரிகள் எனக்கு ரொம்ப பிடித்தது. யோசிக்க வைத்தது. நம்பிக்கை கொடுத்தது.

    கடைசி பாடல் ஒரு சோகப்பாடல். ஆனால் வீடியோவில் காண்பித்து இருக்கும் படங்கள் அடடா ரகம் :wink::wink: பாட்டுக்கும் படங்களுக்கும் சம்பந்தமே இருக்காது. வாழ்க்கை நமக்கு ஆப்பு வைக்கும். அதற்கு அசைந்து கொடுக்காமல் வாழ்க்கையை வெறியோடு வாழ்ந்து காட்டணும்.
    When life gives you lemons, make lemonade. :grinning::grinning:

    மயக்கமா கலக்கமா - சுமைதாங்கி
    நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் - நெஞ்சில் ஒரு ஆலயம்
    மனிதன் என்பவன் தெய்வமாகலாம் - சுமைதாங்கி
    தோல்வி நிலையென நினைத்தால் - ஊமை விழிகள்
    நிலவே என்னிடம் நெருங்காதே - ராமு
     
    suryakala and Thyagarajan like this.
  9. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,728
    Likes Received:
    12,547
    Trophy Points:
    615
    Gender:
    Male
    சிங்கப்பூர் ஞாபகம் தினம் வன்து போகும். ஆனால் வெற்றிலை இன்த* பாடலை கேட்டால் தான் நினைவுக்கு வரும்.
    தாங்கள் தாயகம் வருவது குறித்து மகிழ்ச்சி.
    நன்றி.
    *
    சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா - ஊரு விட்டு ஊரு வந்து
     
    singapalsmile likes this.
  10. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் பாராட்டுக்கும், அடுத்த இரு கேள்விகளுக்கும் நன்றி VV.
    5) அந்த அனுபவம் ஏற்பட்டதுண்டு. நான் எழுதிய சில கவிதைகள் மட்டும் அவ்வனுபவத்தைத் தந்ததுண்டு.
    பிறர் கவிதைகள் பலவற்றின் வரிகள் நினைவில் மின்னிச் செல்வதுண்டு. சில சமயம் ஒரே ஒரு வரி மட்டும் தோன்றி, அதன் அதிர்வால் சற்று மெய் மறந்ததுண்டு - "நேற்றாகிப் போனோரின் ஆற்றாமை தணியட்டும்!" ஒரு உதாரணம். மற்றபடி எழுதியதைக் கடந்து சென்ற நாட்கள் பல.

    6) எதை எழுதும் பொழுதும் அந்த உலகத்தில் சற்றே ஆழ்ந்திருப்பதுண்டு. ஆனால் சுற்றி நடப்பதிலும் கவனம் இருக்கும். சில சமயம் நல்ல இசை கேட்கும் போது சில வரிகள் வந்ததுண்டு. எழுதும் போது இருக்கும் மனநிலை ஒரு கயிற்றின் மையச் சரடை ஒத்தது. அது அறுபடாது இருக்கும் வரையில், எழுதுவது சிறப்பாக இருக்கும்.
     
    singapalsmile likes this.

Share This Page