1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,643
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    ராகிங் கேள்வி புதியவர் வருகைக்கு
    பதில்
    எனக்கு தோன்றிய பாடல்

    1.03ல் பாடல் begins
     
    Last edited: May 28, 2021
  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,643
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Jagamey thanthiram song visual treat but song playing as if video is run at half speed. Lyrics in specific dialect may be enjoyable by folks with special liking. Youthful. Aishwarya Laksmi -Dhanush song sequence must be the most appealing part of the movie I suppose.
     
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi RGS,

    எப்படி இருக்கீங்க?

    காலம் படு வேகமாக ஓடி விட்டது. பதினோரு வருடங்களுக்கு முன்பு IL கவிதை தளத்தில் தங்களது மரபு கவிதைகளை படித்ததாக எனக்கு நினைவு இருக்கிறது. பாடல் வரிகளை/புது கவிதைகளை கிறுக்கும் இந்த இடத்தில் தங்களது வருகை எனக்கு ஆச்சர்யத்தை தந்தது.

    தங்களது வருகைக்கும் லைக் க்கும் மிக்க நன்றி.
     
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi T,

    ராகிங் கேள்விக்கு உங்களுக்கு பதில் அளிப்பதில் விருப்பம் என்றால் சொல்லுங்க. யோசித்து உங்களுக்காக நிறைய கேள்விகள் போஸ்ட் பண்றேன். :grinning::grinning:
     
    Thyagarajan likes this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    PBS songs Playlist 54

    கவிஞர் கண்ணதாசனின் வரிகள் மனசை அள்ளுது. தமிழும் இசையும் கவியும் பாடிய விதமும் க்ளாஸ். :worship2::worship2:

    இந்த பாடல்கள் பதிவில் ஒரு ஆண் மண/மனநிலையை பற்றி பொதுவாக நான் சொல்ல நினைத்த கருத்து. :wink::wink:

    • முதல் பாடல் - ஒரு பெண்ணை நினைத்து ஒரு ஆண் வர்ணிப்பது - காலங்களில் அவள் வசந்தம், கலைகளிலே அவள் ஓவியம், மலர்களிலே அவள் மல்லிகை, பாடல்களில் அவள் தாலாட்டு
    • இரண்டாவது - செட் ஆன பெண்ணை நினைத்து உளறுவது - கண்ணாலே பேசி கொல்லாதே, பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே, ஆசை வெட்கம் அறியாமல் ஓடுதே, போதை உண்டாகுதே மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே, என் மதிமயங்கி வீழ்ந்தேன் உன் வலையிலே
    • மூன்றாவது - திருமணத்திற்கு முன் சண்டை வந்து, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்,
      இந்த மலருக்கு என் மேல் என்னடி கோபம் என்று கூடுதலாக உளறி அந்த பெண்ணை சமாதானப்படுத்துவது
    • நான்காவது - திருமணம் முடிந்து மனைவியிடம் கவி பாடுவது - அங்கம் தழுவும் வண்னத் தங்க நகை போல் என்னை அள்ளிச் சூடிக் கொண்டு விட வேண்டும்
    • ஐந்தாவது - திருமணத்திற்கு பின் சண்டை வந்தால் புலம்புவது - காதல் சொன்ன பெண்ணை இன்று காணமே கண்ணா கட்டியவள் மாறி விட்டாள்
    மூன்றாவது பாடலோடு நிறுத்தி கொண்டால் ஒரு பெண்ணின் வாழ்க்கை எவ்ளோவோ நல்லா இருக்கும். சரி அந்த ஆணுக்கு தான் புத்தி இல்லை..அந்த பொண்ணுக்கு எங்க போச்சு புத்தி னு வாதம் புரியறீங்களா? பெண் புத்தி தான் பின் புத்தி ஆச்சே. எப்புடி!! :wink::wink:

    காலங்களில் அவள் வசந்தம் - பாவ மன்னிப்பு
    கண்ணாலே பேசி பேசி கொல்லாதே - அடுத்த வீட்டு பெண்
    நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் - போலீஸ்காரன் மகள்
    மௌனமே பார்வையால் - கொடி மலர்
    வளர்ந்த கதை மறந்து விட்டாள் - காத்திருந்த கண்கள்
     
    suryakala and Thyagarajan like this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    உலகம் தெரியாத விவரம் அறியாத IL website தெரியாத ஒரு பெண்ணின் மண/மனநிலையை விவரிக்கும் பாடல்கள். எதிர் காலத்தில் எத்தனை பல்பு வாங்கப்போறோம் னு தெரியாம பாடுது..பழசும் புதுசும் அப்படியே தான் இருக்கு. ஒன்னும் சொல்றதுக்கு இல்லை..:wink::wink:

    புதுசு
    தட தட ரயிலா - கணேசாபுரம்

    பழசு
    நெஞ்சம் மறப்பதில்லை - நெஞ்சம் மறப்பதில்லை
     
    suryakala and Thyagarajan like this.
  7. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,643
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    புத்தி ஆண் புத்தி பெண் -
    அருமையான பதிவு . தெளிந்த நீரோடை அருகில் இளம் காலை பொழுது இன்த ஐந்து பாடலை கேட்ட போது மிக்க மன நிறைவு. நன்றி.
     
    singapalsmile likes this.
  8. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi T,

    தங்களது பாராட்டிற்கு நன்றி. ரம்மியமான சூழலில் பாடல்கள் கேட்டு மன நிறைவு கொண்டதாக தாங்கள் எழுதியதை பார்த்து எனக்கும் மன நிறைவு நான் பதிவிடும் பாடல்கள் ரசிக்கப்படுவதால். :grinning::grinning:

    இளமை காலத்தில் இருந்தே நீங்க ரசனை மிக்கவரா? வேலை பார்த்து ஓய்விற்கு பிறகு ரசனையை கூட்டிக்கொண்டவரா? இந்த வயதிலும் தங்களுக்கு இருக்கும் ரசனையை பார்த்து நான் வியந்து போகிறேன். :clap2::clap2:
     
    Thyagarajan likes this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    PBS songs Playlist 55

    இங்கு நிறைய கேள்விகள் போஸ்ட் பண்ணி இருக்கிறேன். சுவாரசியமான பதில்களும் படித்து ரசித்து இருக்கிறேன். நான் இங்க மட்டும் தான் இப்படி னு நீங்க நினைச்சா அது தப்பு கணக்கு. நான் எல்லா இடங்களிலும் அப்டி தான். எனது அலுவலகத்தில் கூட எனக்கு question bank என்று பட்ட பேர் இருக்கிறது. எதுக்கு இவ்ளோ பில்ட் அப் என்று கேக்கறீங்களா? எல்லாம் இன்றைய பாடல்களுக்கு சம்பந்தப்பட்டது தான்.

    இன்றைய பாடல்கள் பதிவில் எல்லாமே எனக்கு மிகவும் மிகவும் மிகவும் பிடித்த கேள்வி பதில் வடிவத்தில்.

    கவிஞர் கண்ணதாசனின் காதலும் கருத்தும் ஆன வரிகள் அத்தனை பாடல்களும். எந்த வரிகள் போடறது எந்த வரிகள் விடறது னு தெரியல. :worship2::worship2: ஒரு பாடலில் சபை நாகரீகம் கருதி போட நினைத்த வரிகள் போடாமல் வேறு வரிகள் போஸ்ட் பண்றேன். :wink::wink:

    ஒரு பாடலை SJ பாடி இருக்கிறார். குரலை வைத்து பாடலை கண்டுபிடிங்க.

    PBS/PS பாடல்கள் காதில் தேன் பாய்கிறது னு சொல்லிட்டே இருக்கணும்.

    Most Fav lines:

    1- வாதம் செய்வது என் கடமை அதில்
    வழியைக் காண்பது உன் திறமை


    2- இரு கரங்களை பிடித்ததும்
    மயங்குவதேனடி ராதா ராதா
    அதில் காந்தத்தை போல் ஒரு
    உணர்ச்சி உண்டானது ராஜா ராஜா


    3- கொஞ்சி வரும் பருவ முகம்
    கோபுரத்து கலசம் என
    அந்தி வெய்யில் நேரத்திலே

    மின்னும்

    மின்னி வரும் நேரத்திலே
    மேனி கொண்ட பருவத்திலே
    முன் இருந்தால் தோற்று விடும்

    பொன்னும்


    4- குழி விழுந்த கன்னத்தை
    என் இதழில் மூடவா
    உன்னைக் குழந்தையாக்கி மடியில்
    வைத்துப் பாட்டு பாடவா


    5 - கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களைத் தேடும் - பாதி
    கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும்
    பட்டு நிலா வான்வெளியில் காவியம் பாடும் - கொண்ட
    பள்ளியறைப் பெண் மனதில் போர்க்களமாகும்


    (உச் கொற்றது பதிலா னு நினைக்கறீங்களா? ஆழ் கடலில் புதைந்து இருக்கும் முத்துக்களை போல வார்த்தைகளை தேடி பிடித்து ஒற்றை சொல் பிரயோகிப்பவர் உச் கொட்டினாலும் கணக்குல வரும். :wink::wink:)

    ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் - சாரதா
    எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன - சுமைதாங்கி
    காற்று வந்தால் தலை சாயும் - காத்திருந்த கண்கள்
    ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே - பனித்திரை
    பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது - பாவ மன்னிப்பு
     
    Thyagarajan and suryakala like this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,483
    Likes Received:
    2,467
    Trophy Points:
    338
    Gender:
    Female
    கேள்வி பதில் உரையாடல்கள் பாடல்கள் பதிவிட்ட பிறகு ஒரு கேள்வி கேக்காம போய்விட என்னால் முடியுமா?

    சமீபத்தில் சேர்ந்து பார்த்த படங்களில் எங்கள் இருவருக்குமே மிகவும் பிடித்த ஒரு புது படம் - கமலி from நடுக்காவேரி. 12th la ஸ்கூலில் முதலிடம் வகித்தவர்களுக்கு இந்த படம் பிடிக்காமல் இருக்குமா? :grinning::grinning: படத்தில் அவ்ளோ பாசிட்டிவ் எனர்ஜி. Cinematic liberty எடுத்து இருந்தாலும் படம் பார்த்தபோது ஒரு புத்துணர்ச்சி கிடைத்தது.

    இந்த படம் எனது 12th ஸ்கூல் நினைவுகளை இனிமையாக தட்டி எழுப்பியது.

    ஒரு மாறுதலுக்காக ரொமான்டிக் தவிர்த்து உருப்படியான இரண்டு கேள்விகள் இதற்கு முன் இங்கு கேட்டு பதிலும் சொல்லி இருக்கிறேன். நண்பர்களிடம் இருந்து பதிலும் வாங்கி இருக்கிறேன். அந்த வரிசையில் இன்று ஒரு கேள்வி.

    Q#3: நீங்க 12th படிக்கும்போது வாங்கிய அதிக பட்ச பாராட்டு எது?

    ஆசிரியரிடமிருந்து அல்லது உடன் படிக்கும் மாணவர்/மாணவியிடம் இருந்து அல்லது பெற்றோர்களிடம் இருந்து எந்த பாராட்டாகவும் இருக்கலாம். எனது பதில் அடுத்த முறை நான் இங்கு வரும்போது. விருப்பம் இருப்பவர்கள் பதில் அளிக்கலாம்.

    தெரியாத தென்றல் - கமலி from நடுக்காவேரி
     
    Thyagarajan and suryakala like this.

Share This Page