1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சிரமப்படாமல், பாத்ரூம் டைல்ஸை 5 நிமிடத்தில் பளிச் பளிச் ஆக்கிவிடலாம்

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Dec 15, 2020.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    உங்களுடைய பாத்ரூம் டைல்ஸை 5 நிமிடத்தில் பளிச் பளிச் ஆக்கிவிடலாம். சிரமப்படாமல், கைபடாமல் கறைகளை சுத்தம் செய்ய இதை விட சுலபமான வழி வேறு எதுவும் இருக்க முடியாது.
    உங்களுடைய வீட்டில் இருக்கும் குளியல் அறையின் சுவற்றில் ஒட்டி வைத்திருக்கும் டைல்ஸ் கறைகள், தரையில் இருக்கும் கறைகள், கதவில் படிந்திருக்கும் உப்பு படிந்து வெள்ளை நிற கறைகள், இப்படி எல்லா வகையான அழுக்குகளையும் கஷ்டப்படாமல் சுத்தம் செய்வதற்கு 2 வழிமுறைகளை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பாத்ரூம் சுத்தம் செய்ய பல சிரமங்கள் இருக்கும். தேய்த்து கழுவினால் சொல்ல முடியாத அளவிற்கு கை வலி வந்துவிடும். தரையில் இருக்கும் அழுக்கு போனால் கூட, நீண்ட நாட்களாக இருக்கும் கறைகள் சுத்தமாக போகாது. குறிப்பாக பெண்கள் கஷ்டப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டுள்ள குறிப்புதான் இது. உங்களுடைய வீட்டிலும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. உங்களுடைய பாத் ரூம் ஃபுல்லா சுத்தம் ஆயிடுச்சின்னா, அதுவும் சுலபமா சந்தோஷம் தானே!
    உங்களுடைய பாத்ரூம் தரையில் ஒட்டியிருக்கும் அழுக்கை சுலபமாக நீக்க இந்த வழியை ட்ரை பண்ணி பாருங்க. சில பேர் வீட்டு பாத்ரூமில் டைல்ஸ் மொழுமொழுவென்று போட்டிருப்பார்கள். சிலரது வீட்டில் பாத் ரூம் என்பதால் வழுக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக அதற்காக சொறசொறவென்று டைல்ஸ் மாடலில் ஒட்டி இருப்பார்கள். மொழு மொழுவென்று இருந்தால் அதில் இருக்கும் அழுக்குகள் சீக்கிரமே போய்விடும். கொஞ்சம் சொறசொறப்பாக இருந்தால் அதிலிருந்து அழுக்கை நீக்குவது என்பது கொஞ்சம் கடினமான விஷயம்தான்.

    சரி, இந்த டிப்ஸை யூஸ் பண்ணி தான் பாருங்களே! முதலில் ஒரு சிறிய கப்பில் பித்தளைப் பாத்திரங்கள் தேய்பதற்காக பயன்படுத்தப்படும் பீதாம்பரி பவுடரை கொட்டி கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் வினிகரை ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள். உங்களுடைய பாத்ரூம் தரையில் இந்த கலவையை ஊற்றி, துடைப்பத்தாலோ அல்லது பிரஷ்ஷாலோ முழுமையாக பரப்பி விட்டு விடுங்கள். 20 லிருந்து 30 நிமிடங்கள் கூட அப்படியே ஊறட்டும்.

    கொஞ்சமான கறை என்றால், துடைப்பத்தால் லேசாக தேய்த்து கழுவினால் கறைகள் போய்விடும். உங்கள் தரை சொறசொறப்பாக இருந்தால் வேறு வழியே கிடையாது. கையை கொண்டு தான் ஸ்டீல் நாரை வைத்து தேய்க வேண்டும். இந்தப் பவுடரில் கறைகள் ஊறிய பின்பு சுலபமாக நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

    இரண்டாவதாக குளியலறையில் சுவற்றில் ஒட்டி இருக்கும் டைல்ஸில் படிந்திருக்கும் கறை வேறு மாதிரி இருக்கும். இதை நீக்குவதற்கு நம் வீட்டில் கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் ஹார் பிக்கை பயன்படுத்த போகின்றோம். ஒரு சிறிய கப்பில் கொஞ்சம் போல ஹார்பிக்கை ஊற்றிக்கொண்டு, அதில் 2 டேபிள் ஸ்பூன் அஜினமோட்டோ சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். தண்ணீரெல்லாம் ஊற்ற வேண்டாம். இந்த பேஸ்டை பெயிண்ட் அடிக்கும் பிரஷ்ஷால் எடுத்து உங்களது அழுக்குப் படிந்த சுவற்றில் உள்ள இடத்தில் நன்றாகத் தடவ வேண்டும். அதாவது கொஞ்சம் மொத்தமாக தடவிக் கொள்ளுங்கள். கறை படிந்த இடத்தில் இந்த ஹார்பிக் ஒட்டி இருக்க வேண்டும்.
    இதையும் 20 நிமிடங்கள் அப்படியே ஊற வைத்துவிட்டு, லேசாக ஒரு நாரை போட்டு தேய்த்து கழுவினால் போதும். உங்களது பாத்ரூம் டைல்ஸ் அனைத்தும் பளிச் பளிச்சென்று மாறிவிடும்.

    சந்தேகமாய் இருந்தால், இந்த 2 டிப்ஸியும் உங்க வீட்ல கொஞ்சம், ஒரு டயிலுக்கு மட்டும் யூஸ் பண்ணி பாருங்க. பிறகு, உங்களோட தரையில உள்ள அழுக்கு முழுமையா இதேயே ஃபாலோ பண்ணிக்கோங்க.:cheer::cheer::cheer:
     
  2. Madhurima21

    Madhurima21 Gold IL'ite

    Messages:
    188
    Likes Received:
    467
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Very useful tips... Thank you....
     
    krishnaamma likes this.
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thank you ! :)
     

Share This Page