1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. cinderella06

    cinderella06 Platinum IL'ite

    Messages:
    1,210
    Likes Received:
    517
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Mara beautiful padam. Padatula vara oviyatukagave padam pakalam and andha sipai kadhai. Oru fantasy olaguthukulla pona madiri oru feel. Enaku pidicha padal Theeranathi
     
    singapalsmile likes this.
  2. cinderella06

    cinderella06 Platinum IL'ite

    Messages:
    1,210
    Likes Received:
    517
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Memories enna engeyo izututu poi YouTube la kondupoi vitadala iniki ennoda romba pidicha padalgal from 90’s and 2000



     
    singapalsmile likes this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Vanakkam C.

    Maara padam kudutha feel romba sariyaa sonneenga..andha sippai kadhai, oviyangal, night kulfi ice-cream vaangara scene, ragasiyam nu badhil vara vidukadhai, thirudan kadhai, book la paathi kadhaiyai oviyangalaa kirukkiyadhu, baaki kadhaiyai thedaradhu, ethanaiyo varudangalukku mun ezhudiya love letter la ezhuthukkal azhindhu maraiyaamal irukku ezhuthukkalai thirumbavum adhu mela ezhudharadhu, unna kalyanam panna book la irundhu oruthan kudhichu varanum nu heroine oda amma solradhu, kannukku kulirchiyaana idangal, meenakshi pathi pesuvaar nu bet katradhu nu evlovo haikku indha padathil irundhadhu..


    Neenga post panna songs athanaiyum enakkum romba pidikkum. :beer-toast1:
    Endha memories ungalai ippadi izhuthadhu enbadhai ingu pagirndhaal adhai padikravanga memories avangalaiyum engo izhuthu sellum..adhukku dhaane indha poetic thread? :wink::wink:
     
    suryakala likes this.
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    AMR பாடல்கள் தேடி பிடித்து கேட்கும்போதே நான் தூங்கி விடுகிறேன். கடல் அளவு பொறுமை எனக்கு இருக்கிறது என்று பெருமை பட்டு கொண்டிருந்தேன். அர்த்த பழசு பாடல்கள் கேட்கும்போது பொறுமை சோதிக்கப்பட்டு பெருமை சிறுமை பட்டு விட்டது. :grinning::grinning:

    எனது அம்மா பிறந்து இருக்கும் முன்னரே வந்த பாடல்களை கேட்க எவ்ளோ பொறுமை எனக்கு வேண்டும்? ஆனாலும் விடப்போவதில்லை. PBS, TMS பாடல்கள் தேடிப்பிடித்து கொஞ்சம் கேப் விட்டு போஸ்ட் பண்றேன்.

    இன்றோடு AMR பாடல்கள் பதிவை முடித்து கொள்கிறேன். அடுத்த மாதம் முழுதும் லேட்டஸ்ட் ரொமான்டிக் பாடல்கள் மட்டுமே பதிவு செய்ய போகிறேன்..:wink::wink:

    AMR songs Playlist 43

    Oho எந்தன் பேபி - தேன் நிலவு

    பூவில் தோன்றும் மென்மை உந்தன் பெண்மை அல்லவா
    தாவும் தென்றல் வேகம் உங்கள் கண்கள் அல்லவா

    தனிமையிலே இனிமை காண முடியுமா - ஆடிப்பெருக்கு

    மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை
    செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை
    கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
    நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை

    மயக்கும் மாலை பொழுதே - குலேபகாவலி

    கனியிதழ் காதல் பசி தீர்க்குமே
    காண்போம் பேரின்பமே

    என்ன என்ன இன்பமே - அன்பு

    தேன் மதியோடு வான் முகிழ் போல
    சேர்ந்து விளையாடுவேன் காதல் இசை பாடுவேன்
    நான் காதலரை கண்டதும் ஆனந்தமாக ஆனந்தமாக

    ஆசையினாலே மனம் - கல்யாண பரிசு

    ஆசையினாலே மனம் அஞ்சுது கெஞ்சுது தினம்
    அன்பு மீறி போனதாலேஅபிநயம் புரியுது முகம்
     
    suryakala likes this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Feb 2021 Special Assignment - ஜெய்சக்தி எழுதிய கனிந்த மனத் தீபங்களாய் என்ற ரொமான்ஸ் நாவலில் என்னை கட்டி இழுத்த விஷயங்களை இங்கு பகிர்ந்து கொள்ள/கொல்ல போகிறேன் இந்த மாதம் முழுவதும். இங்கு வருகை புரிபவர்கள் பதிவு செய்பவர்கள் விருப்பம் இருந்தால் உங்களுக்கு பிடித்த ரொமான்ஸ்நாவல் பத்தி நீங்களும் எழுதலாம்.

    கதை சுருக்கம்: நாயகனின் பெயர் சிவநாதன். நாயகியின் பெயர் குந்தவி. இருவரும் ஒரே கல்லூரியில் பேராசியர்களாக வரலாற்று துறையில் வேலை பார்ப்பவர்கள். இருவருமே புத்தக பிரியர்கள்; கவிஞர்கள்; இலக்கியவாதிகள்; சமூக சேவை ஆர்வலர்கள்; ஒத்த சிந்தனை கொண்டவர்கள்; ஒருவரை ஒருவர் தலையில் வைத்து கொண்டாடுபவர்கள்; காதலித்து மணம் புரிந்து ரொமான்ஸ் ஆழம் கண்ட காதல் தீவிரவாதிகள்; பத்ம ஸ்ரீ விருதை பெற்றவர்கள். இவர்கள் வாழ்ந்த 360 டிகிரி வாழ்க்கை தான் கதையாக கவிதையாக நாவலாக செதுக்க பட்டிருக்கிறது.

    இந்த போஸ்ட் வெறும் முன்னோட்டம் தான். விரிவாக்கம் இந்த மாதம் முழுவதும் தொடரும்.
    நாவலில் எனக்கு பைத்தியமாக பிடித்த வரிகள். :wink::wink:

    1) ரொமான்ஸ் ரசம் குற்றால அருவியாக கொட்டுகிறது

    அந்த கருத்தாழம் மிக்க பேச்சை எவ்ளோ கருத்தா கொடுத்தீங்கனு கேட்டாயே
    அன்னிக்கே நான் கருத்தழிந்து போனேன்

    உங்களுக்கு மறுப்பதற்கு எதுவும் என்னிடம் இல்லை. சர்வம் சிவார்ப்பணம்.
    உங்களிடம் எனக்கு போட்டி இல்லை. சரணாகதி.

    அடிக்குரலில், உலகத்துக்கெல்லாம் கருணை காட்டுகிறாய். எனக்கு கொஞ்சம் கருணை காட்ட கூடாதா ?
    நான் ஒன்னும் வேண்டாம்னு சொல்லலையே.

    ஒத்த சிந்தனை.
    ஒத்து ஊதறதே வேலையா போச்சு
    .

    மிரட்டனா ரொம்ப பயந்துருவாராக்கும். அதான் நெடுஞ்சாண் கிடையா கால்ல விழறதுனு ஒரு அஸ்திரம் வச்சிருக்காரே.

    2) கண்ணாதாசன் அவர்களின் ஹாட் வரிகள் கோட் பண்ணது

    நீ பசியாற நானே உன் விருந்தாகினேன்
    பரிமாறும் போதே நான் பசியாறினேன்


    3) ஹைக்கூ வார்த்தைகள். பொருள் எங்கெங்கோ இழுத்து சொல்லுது.

    பொழிப்புரை அம்மணி
    சிலேடை சிவநாதா
    சொக்குபொடி
    வசியக்கலை
    சொல்லாத கவிதை
    களப்பணி நாணம் கெல்லி எடுத்தல்
    பெண் மலர செய்வேன்
    உலகம் படைப்போம்


    4) இரு பொருள் வரும் வார்த்தை சிக்குவதே கடினம். இந்த கவிதையில் அகம் என்பதற்கு நான்கு அர்த்தம் வருகிறது..(மனம், ஈகோ, வீடு, அக வாழ்க்கை என பொருள் கொள்ளவும்)..அட்டகாசம்..

    என் அகம் நுழைந்தாய்
    என் அகம் கெடுத்தாய்
    என் அகம் திருத்தினாய்
    என்னுடன் அகம் எப்போது?


    5) குரு பாவம் பற்றி என்ன ஒரு அதி அற்புதமான விளக்கம்..கண்களால் ஒற்றி எடுத்துக்கொள்ள தூண்டும் வரிகள்..

    கன்னியாகுமாரி ட்ரிப் ஏற்பாடு செய்றது பேராசிரியரா? சிவநாதனா ?
    பேராசிரியர் னா கட்டளைக்கு கீழ்படியனும் வரேன் ஆனா நோ பர்சனல் டாக்
    சிவநாதன் என்றால் நான் வர மாட்டேன்

    உன்னோட தீசிஸ் க்கு என்னை கைடா இருக்க எவ்ளோவா கேட்டாங்க ஆனா நான் மறுத்துட்டேன். கைடா இருந்தா குரு சிஷ்ய பாவம் வந்துருமில்ல..ஆனா உனக்கு ஹெல்ப் பண்ணனும் என்று இருந்தது அதான் அப்படி ரெக்வெஸ்ட் பண்ணி இன்னொருத்தர் கைடா இருக்க நான் உனக்கு ஹெல்ப் மட்டும் பண்ணேன்


    YT - காதலே காதலே - 96
     
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    தம்பதிகள் இருவரும் ஒரே துறையில் இருந்தால் சூப்பரா இருக்குமா? சலிப்பா இருக்குமா?

    இதற்கான பதில் personality பொறுத்து மாறுபடும்.

    என்னை பொறுத்தவரை இந்த உறவு ஆரம்பத்தில் படு சுவாரசியமாக இருந்தாலும் நாட்கள் போக போக சலிப்பை தரலாம். நான் வேலையும் வீட்டையும் தனி தனியாக பார்க்கிறேன். அலுவலக வேலையில் இருந்தால் வீட்டை பற்றி நினைக்க மாட்டேன். வீட்டில் இருந்தால் அலுவல வேலையை பற்றி நினைக்க மாட்டேன்.

    வேலை இடத்தில எனக்கு intellectual கிக் வேண்டும். விஷயம் தெரிந்தவர்களோடு பேசும்போது அறிவு விசாலமாகும். வாதம் பிரதிவாதம் என்னை வேறு கோணத்திலும் சிந்திக்க வைக்கும். ஆனால் செயல்பாடு என்று வரும்போது எனது அறிவு சொன்னதாக இருக்க வேண்டும். வீட்டிலும் நம் துறையை சார்ந்தவர் துணையாக அமைந்தால் வேலையை பற்றி பேசும்போது சில நேரங்களில் சிக்கல் வராதா? வேலை சார்ந்த முரண்பாடான கருத்துக்கள் தவறான பின் விளைவுகள் அன்றாட வீட்டு நடைமுறையை கொஞ்சம் பாதிக்காதா? இருக்கற வீட்டு சிக்கலில் வேலை சிக்கலையும் அதில் சேர்த்து இடியாப்ப சிக்கலாக்கணுமா?

    படிப்ஸ் பசங்க மேல எப்பவும் ஒரு ஈர்ப்பு எனக்கு இருக்கும். நான் படித்த படிப்பிற்கு இணையான படிப்பு படித்த துணை வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். என்னை விட அதிகம் படித்தவர் இன்னும் உத்தமம். படிப்பிற்கேற்ற உத்யோகம் வேண்டும். எனக்கு என் வேலை மேல் இருக்கும் காதல் போல என்னை மணம் புரிபவர்க்கும் அவரது வேலை மேல் காதல் இருக்க வேண்டும் என்று நினைத்ததும் உண்டு. ஆனால் என் அலுவலக வேலை என்று வரும்போது நான் கை கட்டிக்கொண்டு என்னவர் என்னை கைட் பண்ணி அவர் சொல்வதை கேட்டு வேலை செய்வது என்னால் இயலாத காரியம். அப்படி செஞ்சா என்னோட தனித்துவம் காணாம கரைஞ்சி போய்டும்.

    இருவரும் வேறு வேறு துறையில் இருந்து வேலை பத்தி விவாதிக்காம அவங்க அவங்க வேலையில் அவங்க அவங்க பிஸ்த் என்ற பிம்பம் இருந்தால் ஒருத்தர் மேல் இன்னொருத்தருக்கு மரியாதை வருமா வராதா ? (இதில் டிக் அடிச்சாச்சு) :grinning::grinning: காதலுக்கு 'மரியாதை' சேர்க்கணும்ல.:wink::wink:
     
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    காதல் மலர்ந்த தருணங்கள்

    இந்த நாவலில் கண்டவுடன் காதல் என்றில்லாமல் அறிவு சார்ந்த காதலாக சித்தரித்தது என்னை ரொம்பவே கவர்ந்தது. இருவரும் ஆழமான ஆட்கள் - அறிவுக்கு ஈடு கொடுக்கற செம பொருத்தமான ஜோடி..இவங்க வாழ்க்கை சுவாரசியமா இருக்கும்னு படிக்கிற எனக்கு தோணுச்சு..

    சிவாவின் மீது குந்தவிக்கு இருந்த தனிப்பட்ட பார்வை:
    சிவாவை சந்திப்பதற்கு முன்பே குந்தவி அவனை பற்றி அவளது கைட் மூலம் அவனது ரிசர்ச் பெருமை அறிந்து இருப்பாள். கல்லூரிக்கு அவன் ஒரு அஸெட் என்று அறிந்தது, மாணவர்களுக்கு அவன் மேல் இருக்கும் மரியாதை, பிரமிட் பத்தி அவன் கூட்டத்தில் பேசும்போது அசந்து போய் கேட்டு 'அந்த கருத்தாழம் மிக்க பேச்சை எவ்ளோ கருத்தா கொடுத்தீங்க?' என்று பாராட்டியது, அவனது கிளாசில் பாடம் நடத்துவதை பார்த்து பிரமித்து போனது, வீட்டு லைப்ரரி ல இருக்கும் புத்தகங்கள் பத்தி அவனுடன் பேசியது, அவனது கட்டுரைகள் படித்து அவளது கருத்துக்கள் பகிர்ந்தது, மொழி எளிமை படுத்தனும், சொல்லவேண்டிய விஷயம் புரியணுமா? மேதைமைத்தன்மை தெரியணுமான்னு? அவனை கேள்வி கேட்டது, அவனது வெற்றியை மனம் திறந்து பாராட்டுவது..இப்படி சொல்லிட்டே போகலாம்..

    குந்தவியின் மீது சிவாவிற்கு இருந்த தனிப்பட்ட பார்வை:
    குந்தவையின் க்ளாசில் அவள் பாடம் நடத்துவதை பார்த்து நீ தென்றல் நீ பாடம் நடத்தும் விதம் புயல் என்று அவளை பாராட்டியது, ரொம்ப இன்டெலிஜெண்ட், உன்னை போல அறிவுப்பூர்வமான பெண்ணை இதுக்கு முன்னால் நான் சந்தித்தது இல்லை என்று வியந்தது, பேச்சு பூரா பொருக்கி எடுத்த மாதிரி இருக்கு உன்னோட வார்த்தைகள் என்று சொன்னது, பிரமிட் ஸ்ரீ சக்ரம் எல்லாத்துக்கும் கணிதம் தான் அடிப்படை, சதுரம் வட்டம் எல்லாத்துக்கும் வாழ்க்கைக்கும் தொடர்பு இருக்கணும் என்று அவள் சொன்னபோது கூர்ந்து கவனித்து நீங்க ஆள் மட்டும் அழகு இல்லை உங்க சிந்தனையும் பேச்சும் அழுகு தான் னு என்று அவளை புகழ்ந்தது, அவனது கட்டுரை புத்தகமாக அவள் வெளியிட வைத்து அதற்கு கிடைத்த பணத்தை அவளோடு சமமாக பங்கு போட்டது..இப்படி சொல்லிட்டே போகலாம்..

    சிவா அவளுக்கு போட்ட தூண்டில் வரிகள்:
    • நீ எனக்கு என்னென்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று உனக்கு புரியவில்லை குந்தவி
    • உன்ன மாதிரி பொண்ணு கிடைச்ச எவ்ளோ தூரம் வேணாலும் போகலாம்.. மகிழ்ச்சியாக போகலாம்
    • உயரத்தில் நிறுத்தி மேதையாக என்னை பார்க்கிறாய் மனிதனா பார்க்க கூடாதா?
    அவனது கல்லூரியில் சிவா தனது காதல் பத்தி பேசுவதை குந்தவி கேட்டுவிட்டு குடுத்த ரியாக்ஷ்ன்:

    எனக்கு அவளை பிடிச்சிருக்கு. எது படிச்சாலும் ஷேர் பண்ண தோணுது. கூட நிறைய நேரம் இருக்கணும் னு தோணுது. ஆனா அவ மனசுல என்ன இருக்கு னு தெரியுமா நான் என்ன செய்யறது னு யோசிக்கறன்..

    எதிர்பாராத விதமாக இதை கேட்ட அவளுக்கு நெஞ்சு படபடத்தது..நடுக்கம் தோன்றியது..அவன் சிரிப்பு காதில் ஒலித்தது..கலவையான எண்ணம் தோன்றி மனசு அலைக்கழிக்கப்பட்டது..

    அவன் தனது காதலை பத்தி மறைமுகமாக அவளிடம் பேசும்போது தனது தங்கையின் காதல் பிரச்னையால் நட்பாக பழகலாம் என்று சொல்லும் இடம் அழகு:

    சினிமா பத்திரிகை பார்த்து வருவது இனக்கவர்ச்சி. காதல் வேற. அதை உனக்கு சொல்லி கொடுக்க ஒருவன் வராமலா போயிடுவான்?

    வேண்டாம் சிவா..இப்போ தான் வீட்டு ஆட்களை தாண்டி உங்களோட பழக ஆரம்பித்து இருக்கிறேன்..உங்க கம்பீரம் சிந்தனை எல்லாமே எனக்கு பிடிச்சிருக்கு..நண்பர்களாக இருப்போம்..சில நேரம் இப்படியே நண்பர்களாக எப்பவுமே இருந்திடலாம் னு தோணுது..

    YT - கோடி அருவி கொட்டுதே- மெஹந்தி சர்க்கஸ்
     
  8. candidheart

    candidheart IL Hall of Fame

    Messages:
    1,976
    Likes Received:
    6,078
    Trophy Points:
    383
    Gender:
    Female
    yep full template thaan..athan I lost interest very soon..hero glorification romba irukum..teenage la it was fine..:D

    naan one night stand katha padikaliye..I felt her stories were all regressive somewhat..
    share the ones you enjoyed, will try to read sometime..
     
    stayblessed likes this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    பிடிச்ச பாடல்கள் மட்டுமே கேட்கணும் னா YouTube ல தேடி பார்த்து கேட்கலாம். அதுபோல கதை எழுதும் போது நமக்கு பிடிச்ச விஷயங்கள் மட்டுமே வைத்து தம்பதிகளை வடிவமைக்கலாம். ஆனா நிஜ வாழ்க்கையில்?

    FM ரேடியோ ல வர பாடல்கள் கேட்கும்போது அதில் நமக்கு பிடிச்ச பாடல்களும் இருக்கும் பிடிக்காத பாடல்களும் இருக்கும். FM ரேடியோ ல எந்த பாடல்கள் வந்தாலும் ரசித்து ஏற்று கொள்வது கஷ்டமா? எல்லாமே பாடல்கள் தானே?

    மண வாழ்வில் வரப்போகும் துணை நல்லதும் கெட்டதும் கலந்த ஒரு பேக்கஜ். நல்லது மட்டும் எனக்கு பிடிச்சது மட்டும் எனது ரசனைக்கு ஏற்றபடி மட்டும் தான் இருக்கணும் னு எப்படி நாம ஒரு மனிதனை/மனுஷியை டிசைன் பண்ண முடியும்?

    முதல நாம யாரு னு நமக்கே தெளிவு இருக்கா? எதை மாற்ற முடியும் எதை மாற்ற முடியாது என்பதை ஆராயும் அறிவு நமக்கு இருக்கா? எதிர்பார்ப்புகளுடன் மண வாழ்வில் நுழைவது எந்த விதத்தில் நியாயம்? இந்த கேள்விகளை எல்லாம் திருமணத்திற்கு முன்னரே என்னை நானே கேட்டு கொண்டேன்.

    எனக்கு அடிப்படையாக ஒன்று தேவைப்பட்டது. என்னை அப்படியே ஏற்றுக்கொள்ள கூடிய ஒரு பிரியமான நட்பு/நண்பர். என்ன வேணாலும் மனசு விட்டு அந்த அக(ம்) நண்பரிடம் பேச முடியனும். (புற நண்பர்களுக்கு அவர்கள் குடும்பம் இருக்கும். எனக்கு மட்டுமே நேரம் செலவளிக்க முடியாது.) நான் அந்த அக(ம்) நண்பரை அப்படியே ஏற்றுக்கொள்வேன். மாற்ற முயற்சிக்கவே மாட்டேன்.

    அந்த அக(ம்) நண்பரிடம் அக வாழ்க்கைக்கு ஒப்புதல் கொடுப்பதற்கு முன்னால் கேட்ட அதி முக்கியமான கேள்வி: உங்களுக்கு எப்படிப்பட்ட துணை வேண்டும்? ஒரே ஒரு வார்த்தையில் அவரது பதில்: Independent.

    கணக்கு சரியா இருக்கா?? :wink::wink:
     
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Vanakkam CH.
    You are asking the wrong person.
    Enakku kadhai padikkum pazhakkamillai/aasaiyumillai..Indha Feb 2021 la namma thread la special la edhaavadhu kirukkanum enbadharkku mattume romance novel thedi pidithu padithen.

    Neengalum neenga paditha oru most romantic novel pathi inga ezhudhalaame..yaan petra inbam peruga ivvaiyagam!! :wink::wink:
     
    stayblessed likes this.

Share This Page