1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வேதம் அனைத்துக்கும் வித்து – திருப்பாவை

Discussion in 'Posts in Regional Languages' started by MULLAI62, Dec 17, 2020.

  1. MULLAI62

    MULLAI62 Platinum IL'ite

    Messages:
    230
    Likes Received:
    540
    Trophy Points:
    225
    Gender:
    Female
    பாடல் 11
    கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
    செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்
    குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
    புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
    சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
    முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
    சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ
    எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.
    விளக்கம்: நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. தோழியோ எழுந்து வந்தபாடில்லை! நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்? அவளை விட்டுவிட்டு, நீராடச் சென்றிருப்போம். ஆனால், பக்திநெறிக்கு இது அழகல்ல. பிறரை விட்டுவிட்டு, தான் மட்டும் இறைவனை அடைய முயன்றால் அது நடக்காத ஒன்று. எல்லோருமாய் இறைவனை நாட வேண்டும், அவன் புகழ் பேச வேண்டும். அப்போது தான் அவனருள் கிடைக்கும். இதனால் தான் கூட்டுப்பிரார்த்தனைக்கு மகத்துவம் அதிகமாக இருக்கிறது.

    பொருள்: கன்றுகளோடு கூடிய பசுக்களிடமிருந்து பால் கறப்பவனாகவும், தங்களைப் பகைத்தவர்களை எதிர்த்து நின்று போரிடும் தன்மையுடையவனும், மாசுமருவற்றவனுமான கோபாலனை தழுவத் துடிக்கின்ற பொற்கொடியே! புற்றில் இருக்கும் பாம்பின் படத்தைப் போன்ற அல்குலை உடைய மயில் போன்றவளே! நம் சுற்றுப்புறத்திலுள்ள எல்லாத் தோழியரும் உன் வீட்டு வாசலில் வந்து கூடிவிட்டார்கள். அவர்கள் மேகவண்ணனாகிய கண்ணனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
     
  2. MULLAI62

    MULLAI62 Platinum IL'ite

    Messages:
    230
    Likes Received:
    540
    Trophy Points:
    225
    Gender:
    Female
    பாடல் 12
    கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
    நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
    நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
    பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
    சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
    மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
    இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
    அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

    விளக்கம்: எருமைகள் பால் சொரிந்து உறங்கும் தோழியின் இல்ல வாசலை சேறாக்கி விட்டதால், அவளது வீட்டுக்குள் நுழைய முடியாத பெண்கள், அவளது வீட்டு வாசலிலுள்ள ஒரு கட்டையைப் பிடித்துக் தொங்கியபடி அவளை எழுப்பு கிறார்களாம் இந்தப் பாடலில். தலையிலோ பனி பெய்கிறது. மார்கழியில் எழுந்து குளிர்தாங்காமல் வெந்நீரில் குளிப்பவர்கள், இவர்கள் படும் கஷ்டத்தை உணர வேண்டும். கீழே பால் வெள்ளத்தால் குளிர்ச்சி, மேலே பனியின் குளிர்ச்சி, இத்தனையையும் தாண்டி இறைவனை அடைய எத்தனிக்கிறார்கள் இவர்கள். எவ்வளவு சிரமப் பட்டேனும் ஒருவர் விடாமல் எல்லாரும் அவன் திருப்பாதம் சேரவேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.
    பொருள்: பசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள் தங்கள் மடியில் சொரியும் பாலைச் சிந்தியபடியே அங்குமிங்கும் செல்கின்றன. அவை சொரிந்த பால் இல்லத்து வாசல்களை சேறாக்குகின்றது. இந்த அளவுக்கு விடாமல் பால் சொரியும் எருமைகளுக்கு சொந்தக்காரனான ஆயனின் தங்கையே! கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு தலைவாசலில் நாங்கள் காத்து நிற்கிறோம். சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனின் மீது கோபம் கொண்டு அவனை அழிக்க ராமாவதாரம் எடுத்த கோமானாகிய அந்த நாராயணனின் பெருமையைப் பாடுகிறோம். நீயோ, இன்னும் பேசாமல் இருக்கிறாய். எல்லா வீடுகளிலும் அனைவரும் எழுந்து விட்ட பிறகும், உனக்கு மட்டும் ஏன்பேருறக்கம்?
     

Share This Page