1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

தீபாவளியன்னிக்கு தெவசம் பண்றார் ஒருத்தர்.. அது தெரியுமா ? அதுவும் கோவிலில்....

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Nov 17, 2020.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    தீபாவளியன்னிக்கு தெவசம் பண்றார் ஒருத்தர்.. அது தெரியுமா

    அவங்க வீட்ல தெவசம் அன்னிக்கு வந்திருக்கும்.. அதனால் பண்றாளோ.. நாம் அன்னிக்கு அமாவாசை வந்தால் தர்ப்பணம் தான் பண்ணுவோம்...

    தெவசம் நடக்கற இடம் .. கோயில்..

    தெவசம் பண்றவர்.. அந்த கோயில் பெருமாள்..

    அட.. இதென்ன புதுக் கதையா இருக்கு...
    அது எந்த கோயில்...

    அதுதான் கும்பகோணம், சார்ங்கபாணி கோயில். ....

    இதோ.. இந்த கோபுரம் மிக அழகாக இருக்கிறதில்லையா. இதில் உள்ள சிற்பங்கள் க்ருஷ்ணாவதார கதைகளை சித்தரிப்பதாக உள்ளன. ஆனால் இந்த கோபுரத்திற்கே ஒரு INTERESTINGஆன கதை இருக்கு தெரியுமா. ஶ்ரீரங்கத்தில் கோபுரம் கட்டப்படும் முன் இதுதான் தமிழ்நாட்டின் பெரிய கோபுரமாக இருந்தது. இவ்ளோ பெரிய கோபுரத்தை யார் கட்டினா?

    இக்கோவிலில் லக்ஷ்மி நாராயணர் என்று ஒருவர் இருந்தார். அவருக்கு இந்த கோவிலுக்கு, வரும்போதும், போகும்போதும் பெருமாளுக்கு ஒரு பெரிய கோபுரத்தைக் கட்ட வேணும்னு தோனித்து. உடனே பெருமாள் பேர்ல பாரத்தை போட்டுட்டு, அந்த வேலைகள்ல முழுமூச்சா இறங்கிட்டார்.

    கோபுரத்தையும் இத்தனை பெரிஸ்ஸா… ரொம்ப அழகா….. கட்டிமுடிச்சிட்டார்.

    அவர்யார்?

    ஏதாவது சிற்றரரசரா….? இல்ல…..! ஜமீன்தாரா…..? இல்ல…….! பெரிய்ய தனவந்தரா…..?

    இல்லவே இல்லீங்க……! ஒரு மிக சாதாரணமான, இந்த கோவில்லேயே மடப்பள்ளியில் வேலை செய்து வந்தவர்தான்.

    அட… அப்படியா….ன்னு, ஆ….ன்னு வாயைப் பொளந்தா எப்படி? இன்னும் கேளுங்க கதைய....

    சாதாரணமா, ஒரு வீடு கட்டவே நாம, "தத்திங் கின்னத்தோம்"னு..., கையையும் காலையும், நீட்டாத இடத்திலெல்லாம் நீட்டி, ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி, படாத பாடெல்லாம்பட்டு, கட்டி முடிச்சு, ஒரு வழியா ஓஞ்சு உட்கார்ரோம்.

    இத்.த்.தனாம் பெரிய கோபுரத்தை…. அடேயப்பா… நினைச்சுப் பாக்கவே முடியல….. இல்லையா?

    பாவம்.. நம்ம லக்ஷ்மி நாராயணரும் அப்படித்தாங்க…….

    தன் கிட்ட, சொத்துன்னு இருந்தது,... தான் சம்பாதிக்கிறது... ஊர்க்காரா கிட்ட கேட்டு வாங்கறது,... பெரிய தனவந்தர்கள கேட்டு வாங்கறது..., கோவிலுக்கு வரும் சேவார்த்திகள்ட்ட.. கேட்டு.. கேட்டு.. வாங்கறது...ன்னு கொஞ்சங்கொஞ்சமா... சேர்த்து.. சேர்த்து...,
    இந்த பெரிய்ய்ய்ய... கோபுரத்த கட்டி முடிச்சு..,
    கும்பாபிஷேகமும் முடிஞ்சு….. பார்த்தா….

    வயசாகி….. தொண்டு கிழமாகி….. ( தொண்டு செய்த கிழம்தானே நிஜத்திலும் )

    ஒருநாள்…. ஊரே தீபாவளி கொண்டாட காத்திண்டுருக்கிற அன்னிக்கு... அவர் ப்ராணனே போயிடுத்து.

    யார்ரா இருக்கா… கொள்ளி போட…ன்னு பார்த்தா, மனைவி.., மக்கள்… புள்ள..., குட்டி…. பேரம்பேத்தி…..

    ஊஹூம்…. ஒருத்தர் கிடையாது.

    எப்படி… அவர்தான் கோபுரம்.. கோபுரம்...னு, அதே நினைப்புல தானே இருந்தார். குடும்பமாவது ஒன்னாவது. ஒன்னும் கிடையாது.

    சரி, இருக்கிற சொந்த பந்தங்கள் யாரையாவது கொள்ளி போடச்சொல்லலாம்னு, அவாளப் போய் கேட்டா, ரௌத்ராகாரமாய்ட்டாங்க அவங்கள்ளாம்.

    கெழந்தா கோபுரங்கட்ட அவ்வளவு காசு சேர்த்துதே..., எங்களுக்கு கொஞ்சமா, ஏதாவது தரப்படாதா...,

    இல்ல… இப்படி போனவுட்டு, கொள்ளி போடறத்துக்காவது, ஏதாவது.. சொத்தெழுதி வச்சிருக்கா…. எதுவும் இல்ல… எனக்கென்ன தலையெழுத்தான்…..னு, அவா அவா கழண்டுண்டு போய்ட்டா.

    ஊர்க்காரா கைய பெசஞ்சிண்டு இருக்கிறத்த, ஒருத்தர் வந்து, எனக்கு இவருக்கு செய்யறதுக்கு பாத்யத இருக்கு, நா இவருக்கு கொள்ளி போடறேன்னு முன்வந்தார்.

    யார்ரா…. இவர பார்த்தா, பார்த்தாமாதிரியே இருக்கு, ஆனா யாருன்னே.... தெரியலேயே….

    ஆனா… இதெல்லாம் யோசிக்க, இப்ப நேரமே இல்லையே.

    பெரியவரோட சம்ஸ்காரத்தை, எப்படியோ முடிச்சா சரி. வீட்டுக்கு போய் தீபாவளி வேற கொண்டாடனுமே…ன்னு, வந்தவருக்கு, மொட்டைய போட்டு, உட்கார்த்தி….

    எல்லாத்தையும் கர்ம ஸ்ரத்தையா பண்ணினார், வந்தவர்.

    கோவிந்தா….. கோவிந்தா…..ன்னு கொள்ளிபோட…..

    ஒருத்தரும் இல்லேனா கோவிந்தா கொள்ளிதானே…..

    எல்லாம் முடிஞ்சுது….. சுத்தி பண்ணி…..

    கோவில் கர்ப்பக்ருஹ கதவை திறந்தவா….

    shockஆயிட்டா….!!!!!!!!!

    உள்ளே, லக்ஷ்மிநாராயணருக்கு கொள்ளி போட வந்தவர் ரூபத்தில்.... ஸ்வாமி.

    ஆமாம், தனக்கு, அழகா இவ்வளவு பெரிய கோபுரத்தை கட்டி வைச்சவர, சும்மா விட்டுடுவாரா, ஸ்வாமி.

    கோவிந்தா கொள்ளிய, கோவிந்தனே வந்து போட்டுட்டார். ஆஹா.. இனி, லக்ஷ்மிநாராயணருக்கு, நிச்சயமா பரமபதமேதானே வாய்க்கும்.

    இன்றைக்கும் தீபாவளி அமாவசையில் அந்த லக்ஷ்மி நாராயணருக்கு சார்ங்கபாணியே தெவசம் பண்ணுகிறார், வருஷாவருஷம்.

    கோயிலும் கோபுரமும் கட்றதுக்கு நம்மால முடியறதோ இல்லயோ, ஏதோ சின்ன சின்ன சத்கார்யங்களில் ஈடுபடறத்துக்கான, தருணத்தையும், மனஸ்ஸையும், ஸ்வாமி நமக்கு தந்தருளனும்னு, இந்த தீபாவளி நன்னாளில், அவரண்டையே நம்மள ஒப்படைச்சுடுவோமே......

    ஓம் நமோ நாராயணாய...
     
  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,726
    Likes Received:
    12,546
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:This story I hear for the first time. My late dad hails from oothukadu said so much about kalinga narthanar story and stories about other temples in Kumbakonam town including Sarangapani temple. But this story neither he told me nor I heard from any official of temple in Kumbakonam.

    I shall be grateful for any inputs in this regard.

    Thanks and Regards.
     
    krishnaamma likes this.
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female

    நானும் முதல் முறையாக கேள்விப்படுகிறேன் அண்ணா.... இது எனக்கு வந்த மெசேஜ்...:)
     
    Thyagarajan likes this.

Share This Page