1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)

Discussion in 'Posts in Regional Languages' started by krishnaamma, Nov 22, 2020.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அன்று காலையில் தான் ராகவ பட்டரின் அன்பு மகளுக்கு கல்யாணம் நடந்து முடிந்திருந்தது. எல்லோரும் சாப்பிட்டாச்சு, இனி மாலை தான் வரவேற்பு. கொஞ்சம் நிம்மதியாக அமர்ந்திருந்தார் அவர். மனம் அன்பு மகள் கோதையைப் பற்றி அசை போட்டது. ஏதோ நேற்று பிறந்தது போல இருந்தது, அவளைப் பிரிவது என்பது மிகவும் கடினமான காரியமாக இருக்கப் போகிறது அவருக்கு. ஏன் அவளுக்குமே இந்த கோவிலையும் நந்தவனத்தையும் பிரிந்து போவது என்பது எப்படி சாத்தியமாகப் போகிறதோ தெரியவில்லை. அவள் அத்தனை நெருக்கம் இந்த காளிங்க நர்தன பெருமாளுக்கும் அந்த நந்தவனத்திற்கும். ஆம் அவள் வீட்டில் இருந்த நேரத்தைவிட இங்கு செலவிட்ட நேரம் தான் அதிகம்.

    என்னவோ சின்ன வயதில் இருந்தே, அதாவது அவள் நடக்க ஆரம்பித்த போதே அவருடன் கோவிலுக்கு கிளம்பிவிடுவாள். கொஞ்சமும் படுத்த மாட்டாள். அமைதியாக உட்கார்ந்து கொண்டு அப்பா பெருமாளுக்கு ஆராதனை செய்வதைப் பார்த்தபடி இருப்பாள். சோறு தண்ணீ கேட்கமாட்டாள், அழமாட்டாள். இப்படியும் ஒரு பெண்ணிருக்குமா என்று இவர்கள் அதாவது பெற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள்.

    அவள் பிறந்த நேரம் அப்படி என்று பேசிக்கொள்வார்கள். ஆமாம், அவள் பிறந்தது ஒரு ஆடிப்பூர நன்னாளில். அதனால் தான் ஆசையாகக் கோதை என்று பெயர் வைத்தார்கள். அஞ்சாவது பெண் கெஞ்சினாலும் கிடைக்காது என்று சொல்வார்கள். அப்படிபட்ட பெண் இவள்.


    ஆம், ராகவா பட்டருக்கு ஏற்கனவே இரண்டு பெண்களும் இரண்டு பிள்ளைகளும் இருந்தார்கள். இவள் கடைசி பெண்; செல்லப் பெண்.

    முதலில் அப்பாவுடன் கோவிலுக்கு சென்று வந்தவள், கொஞ்சம் கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பித்த பிறகு தானாகவே சின்ன சின்ன கைங்கர்யங்கள் செய்ய ஆரம்பித்தாள். மடப்பள்ளி மாமா பிரசாதம் கொண்டு வந்தால், இவள் எல்லோருக்கும்
    பிரசாதம் வாங்கிக் கொள்ள இலைகளை கொடுப்பாள்.

    குடிக்கத் தண்ணீர் எடுத்துக் கொடுப்பாள். அதுபோல சின்ன சின்ன வேலைகள் செய்ய ஆரம்பித்தாள்.

    இவர்கள் இருந்தது கும்பகோணத்தை ஒட்டிய ஒரு சிறு கிராமம். அதில் ஒரு காளிங்க நர்தன கிருஷ்ணர் கோவில் இருந்தது.

    கிராமத்திலுள்ள மக்கள் இவர்களுக்கு உதவி செய்தார்கள் இவர்கள் கோவிலைப் பார்த்துக் கொண்டார்கள்.

    அதாவது ராகவ பட்டர் மாமா கோவிலின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். அவர்களின் குடும்ப தேவைகளை கிராமத்து மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஊரை விட்டு வெளியேறியவர்கள் கூட கோவிலுக்கு பணம் அனுப்புவதையோ உத்சவங்களில் முடிந்த போது கலந்து கொள்வதையோ விட்டுவிடவில்லை. எனவே இவர்களுக்கு சாப்பாட்டிற்கும் தங்குவதற்கு எந்த கஷ்டமும் இல்லை ஓரளவு வசதியாக இருந்தார்கள்.

    சின்ன கோவில் தான் அது என்றாலும் மிகவும் வரப்பிரசாதி அந்த காளிங்க நர்த்தன கிருஷ்ணர் அதனால் பக்தர்கள் வருகைக்கு குறைவு ஒன்றும் இல்லை. எனவே கோவிலில் பூஜைகள் நன்றாகவே நடந்து வந்தன. ஒரு சின்ன நந்தவனமும் அதை ஒட்டியே இருந்தது இரண்டு மூன்று பசு மாடுகளையும் அவர்கள் பராமரித்தார்கள். கோவிலுக்கு என்றே நில புலங்களும் இருந்தன.

    எனவே ஏதாவது ஒரு வேலை இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் வீட்டில் இருக்கும் எல்லோருமே அந்த வேலைகளை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

    தொடரும்....
     
    Thyagarajan likes this.
  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ராகவனின் அப்பா அம்மா தன்னுடைய பேரன் பேத்திகள் மற்றும் கிராமத்துக் குழந்தைகளுக்கு ஸ்லோகங்கள் கற்றுக் கொடுப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து கோதையும் அவளின் சகோதர சகோதரிகளும் கூட கற்றுக் கொண்டார்கள். மிகவும் சிரத்தையாக கற்றுக்கொள்வார்கள்.


    முதலில் கோதை, தன் பாட்டி பூ தொடுப்பதற்காக பூ பறித்து கொடுப்பாள். துளசி பறித்துத் தருவாள். கொஞ்சம் பெரிய பெண்ணாக ஆன பிறகு அவளே பூ தொடுக்க ஆரம்பித்தாள். ஆனால், பூக்கள் குறைவாக இருந்தன. எனவே, நந்தவனத்தை செப்பனிட ஆரம்பித்தாள்.

    நந்தவனத்திற்கு முதலில் தண்ணீர் மட்டுமே விட்டு கொண்டிருந்தாள் கோதை பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சின்ன சின்ன செடிகள் கொண்டுவந்து நட ஆரம்பித்தாள். அங்கு உள்ள குப்பைகளை பெருக்கினாள். கோவில் வேலைக்கு என்று இரண்டு பெண்கள் பெருக்கி கூட்ட இருந்தார்கள் இருந்தாலும் இவளும் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்தாள்.

    அப்படிச் செய்யும் போது, இவள் தன்னுடைய அக்ரஹாரத் தோழிகளையும் கூப்பிட்டுக் கொண்டு அவர்களையும் இந்த மாதிரி வேலைகளில் ஈடுபடுத்த ஆரம்பித்தாள்.

    அதில் இவளின் சகோதரர்களின் ஆண் நண்பர்களும், கிணற்றிலிருந்து தண்ணீர் சேந்தித் தருவது தோட்டத்தில் இலை தழைகளைப் பெருக்குவது போன்ற வேலைகளில் உதவினார்கள் தங்களுடைய ஆசிரியர் சொல்லிக் கொடுத்தபடி தோட்டத்தில் ஒரு மூன்றடி குழி தோண்டி எல்லா குப்பைகளையும்
    அதாவது தோட்டத்தில் உள்ள இலை தழை குப்பைகள் ஸ்வாமிக்குப் போட்டுக் களையப்பட்ட மாலைகள், வாழைப்பழத் தோல்கள், தேங்காய் ஓடுகள் போன்றவற்றை போட்டார்கள்.
    அந்தக் குழி நிரம்பியதும் அதை மண்ணைப் போட்டு மூடி விட்டார்கள். இது அடுத்த 90 நாட்களில் நல்ல உரமாக மாறும் அதை அவர்கள் நந்தவனத்திற்கு பயன்படுத்திக்கொண்டார்கள்

    அருகே அதேபோல அடுத்த குழி தோண்டினார்கள். தாங்கள் பார்த்த செடி கொடிகளை எடுத்துக் கொண்டு வந்து இங்கு தோட்டத்தில் நட்டார்கள். அதனால் இவர்களுடைய நந்தவனத்தில் நிறைய செடி கொடிகள் இடம் பெறத் துவங்கின.

    இதற்குள் கோவிலுக்கு கும்பாபிஷேகம் ஏற்பாடானது. அதற்கு முன், கோவிலின் சுற்றுப் பிரகாரம் முழுவதும் கோலம் போடலாம் என்று எண்ணினார்கள். இவள் தன் தோழிகளுடன் அதை செய்வதாக ஒப்புக் கொண்டாள். கும்பாபிஷேகத்திற்கு நான்கு மாதத்திற்கு முன்பே இந்த வேலைகளை அவர்கள் ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு சனி ஞாயிறும் எல்லோரும் சேர்ந்து போட்டார்கள். இவ்வாறு ஒவ்வொரு கோலமாகப் சாக்பீஸில் போட்டு பிறகு பெயிண்டில் போட்டார்கள். இப்படி சிறுக சிறுக போட்டு நான்கு மாதங்களில் , அழகழகான கோலங்கள் போட்டு கோவிலின் சுற்றுப் பிரகாரம் முழுவதும் போட்டு முடித்து விட்டார்கள். எல்லா படிகளிலும் கோலம் போட்டார்கள். இவர்களின் விடா முயற்சியால் நந்தவனமும் பூத்துக் குலுங்கத் தொடங்கியது. கோவில் கும்பாபிஷேகத்துக்குத் தயாரானது.

    தொடரும்.....
     
    Thyagarajan likes this.
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    இவர்கள் வைத்த செடிகள் நாளா வட்டத்தில் பூத்துக்குலுங்கத் துவங்கின அல்லவா, அதேபோல் இப்போழுது நிறைய துளசியும் கிடைத்தது அவர்களுக்கு. அவற்றை எல்லாம் பறித்து, விதவிதமாக மாலைகளாகக் கட்டி பெருமாளுக்கு சமர்ப்பித்தார்கள்.

    அவள் தான் பூ தொடுத்ததை தன் வகுப்புத் தோழிகளிடம் சொன்னாள். இவள் சொல்வதைக் கேட்ட அவர்களும் தாங்களும் அப்படி பூ தொடுக்க ஆசைப்படுவதாக சொன்னர்கள். எனவே, அவர்களையும் அழைத்துக் கொண்டு வந்து அவர்களுடன் சேர்ந்து பூ மற்றும் துளசி பறித்து, மாலையாக தொடுத்து, போடஆரம்பித்தார்கள். பெருமாள் தாங்கள் தொடுத்த மாலைகளை அணிந்து கொள்வதைப் பார்க்க பார்க்க பரவசம் ஆனது குழந்தைகளுக்கு.

    இப்படி தினமும் பள்ளியில் இருந்து வந்ததும் ஒரு மணி நேரம் ஒரு பத்து பதினைந்து குழந்தைகள் வேலை செய்தார்கள். நந்தவனத்தில் வேலை செய்யதார்கள், பூ கட்டினார்கள். அதை பார்த்துக் கொண்டிருந்த பட்டருக்கு, இப்படி சின்ன குழந்தைகள் பகவானுக்கு கைங்கர்யம் செய்யும் பொழுது நாமும் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது அதனால் தன்னுடைய தர்மபத்தினி ராதாவை அழைத்து நாளை முதல் சாயரட்சை பூஜை க்கு வரும் பொழுது ஏதாவது கொஞ்சம் ஸ்பெஷலாக நைவேத்தியம் எடுத்துக் கொண்டு வரவேண்டும் என்று சொன்னார்.

    கொஞ்சமாக இருந்தால் கூட போதும் இந்தக் குழந்தைகள் வரை சுண்டலோ, பனங்கல்கண்டோ, பானகமோ ஏதாவது ஒன்று என்று சொன்னார். அதைக் கேட்டுக்கொண்டே வந்த கோதையும் நானே கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் அப்பா

    இப்போழுது, இவர்களுக்கு ஏதாவது தரவேண்டும் என்று நீங்களே முடிவு எடுத்தது மிகவும் சந்தோஷம் என்று சொன்னாள். ஆமாம் அம்மா இந்த காலத்தில் எல்லோரும் தங்கள் தங்கள் காரியமே பெரிது என்று ஓடிக் கொண்டிருக்கும் போது இந்த மாதிரி சின்னஞ்சிறுசுகள் சத்சங்கத்தை உருவாக்குகிறார்களே, இது மிகவும் பாராட்டப் படவேண்டிய ஒன்றல்லவா?...

    பெருமாள் கைங்கர்யம் செய்வது என்பது மிகவும் நல்லது. இது சின்ன வயதிலேயே ரத்தத்தில் ஊறிவிட்டால் நம் மதத்துக்கும் நல்லது என்றும் சொன்னார். அதனால் அவர்களை ஊக்குவிக்க வேண்டியது நம்முடைய கடமை என்று சொன்னார். இதேபோல ஒவ்வொரு கோவிலிலும் செய்தாலே போதும் நம் சனாதன தர்மம் தழைக்கும் என்றும் சொன்னார்.

    பூப்பறித்தல் பூத்தொடுத்தல் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுதல் மாடுகளை பராமரித்தல் என்று இந்த வேலைகள் போக இவர்கள் சில சமயம் பெருமாள் முன் அமர்ந்து ஸ்லோகங்களும் சொன்னார்கள். தன்னுடைய தாத்தா பாட்டியிடம் கற்றுக்கொண்ட திவ்ய பிரபந்தங்களை அவர்களுக்கும் கற்றுக் கொடுத்தாள் கோதை. சில சமயங்களில் பாட்டியோ தாத்தாவோ கூட பாடுவார்கள்.

    குழந்தைகள் அனைவரும் சேர்ந்து பிரபந்தப் பாடல்களைப் பாடுவது மிகவும் இனிமையாக இருந்தது. இவ்வாறாக கொஞ்சம் கொஞ்சமாக கோதையுடன் வரும் கூட்டம் பெரும் கூட்டமாக அதிகரித்துக்கொண்டே போனது. அது அவருக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுத்தது கிராம மக்களும் மிகவும் ஆர்வமாக தங்கள் தங்கள் பிள்ளைகளை கோவிலுக்கு சாயந்திரம் அனுப்பி வைத்தார்கள். எல்லாம் பெருமாள் அனுக்கிரகம் என்று சொனார் பட்டர்.

    அனாலும் மனதில் தன் பெண்ணைப்பற்றிய பெருமையும், மகிழ்வும் இருந்தது அவருக்கு. அதற்கு காரணம் இல்லாமல் போகவில்லை.

    தொடரும்....
     
    Thyagarajan likes this.
  4. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    பின்னூட்டம் ப்ளீஸ்....
     
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    கோதையின் ஆயுஷேபத்தின், அதாவது முதல் வருட பிறந்த நாளின் பொழுது கோவிலில், ஸ்பெஷல் பூஜை செய்து
    சக்கரை பொங்கல் விநியோகம் செய்துகொண்டிருந்தார் பட்டர். அப்போது அங்கு ஒரு ஜோஸ்யர் மாமா வந்திருந்தார் அவர்
    குழந்தையை பார்த்து ஆசீர்வதித்தார். குழந்தையை பார்த்த போதே அவள் மிகவும் தேஜஸ் ஆக இருந்ததைக் கவனித்தார் அவர். அது தெய்வாம்சம் பொருந்திய குழந்தை என்று நினைத்தார்.

    பொதுவாக யாராவது வெளியூரில் இருந்து வந்தார்கள் என்றால் அன்று மதியம் ராகவா பட்டர் மாமா வீட்டில் அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்து விடுவார்கள் அதேபோல அந்த ஜோசியர் மாமாவும் அவர்கள் வீட்டில் உணவு அருந்தினார். அப்போது அவர் குழந்தைக்கு ஜாதகம் கணித்தார்.

    ஜாதகம் கணித்து பலன் சொல்லும்பொழுது அவர் சொன்னார் இந்த பெண் நம்முடைய இந்து மதத்தை நன்றாகப் பரப்புவாள்.
    சாஸ்திர சம்பிரதாயங்களை சிரமேற் கொண்டு கடைபிடிப்பாள். ஆனால் என்ன, அவள் வெளிநாட்டில் தான் செட்டில் ஆவாள், என்று சொல்லிவிட்டார்.

    அதைக்கேட்ட ராகவ் பட்டருக்கு சந்தோஷம் ஒருபுறம், வருத்தம் ஒருபுறம். “இந்து மதத்தை நன்றாகப் பரப்புவாள்.
    சாஸ்திர சம்பிரதாயங்களை சிரமேற் கொண்டு கடைபிடிப்பாள்” என்பதில் சந்தோஷமும், தன்னைவிட்டு மிகவும் தூரம் போகப்போகறாள் என்பதில் வருத்தமும் இருந்தது அவருக்கு.

    என்றாலும் ஒரு சராசரி தந்தையாகத் தன் பெண் அமெரிக்கா போகப் போகிறாள் என்று அப்போதிலிருந்தே சந்தோஷப்பட ஆரம்பித்து விட்டார். ஆனால் எப்படி என்ன என்று அவருக்கு தெரியாது சரி யாரோ ஒரு ராஜகுமாரன் வந்து அவளை கல்யாணம் செய்து அமெரிக்கா கூட்டிக் கொண்டு போகப் போகிறான் என்று நினைத்துக்கொண்டார். அதை அவ்வப்பொழுது சொல்லியும் காட்டுவார்.


    ஆனால் இவை எதிலும் கோதை நாட்டம் காட்டியது இல்லை அவள் கோயில் உண்டு த் வேலை உண்டு என்று இருப்பாள். இது தவிர, அவள் படிப்பிலும் படு சுட்டி. வகுப்பில் முதல் மார்க் அவள்தான் என்று இல்லாவிட்டாலும் நல்ல மார்க் எடுத்து வந்தாள் . டிகிரி வரை நல்லபடி முடித்த நேரத்தில் அவளுடைய அண்ணன் மார்களுக்கும் அக்காக்களுக்கும் திருமணம் ஆனது.

    அடுத்தது இவள் தான். இவளும் திருமண வயதை எட்டியதும் அவளுடைய தந்தைக்கு கவலை வந்தது. இப்போதய தன்னுடைய நிலைமையில் யாராவது அமெரிக்க மாப்பிள்ளை வந்தால் கூட அவர்களுக்கு ஈடாக தன்னால் சீர் வரிசை செய்து கல்யாணம் செய்து கொடுக்க முடியுமா என்ற கவலை வாட்டியது.

    இதை ஒரு முறை மனைவியிடம் சொல்லி வருத்தப்பட்டார் அதைக் கேட்டுக் கொண்டிருந்த கோதை, “அப்பா நான் ஒன்று சொல்லட்டுமா” என்று கேட்டாள் சரி சொல்லம்மா என்று சொன்னார்.
    அப்பா நான் சொல்கிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம் எனக்கு இந்த நந்தவனத்தை இந்த கிருஷ்ணரையும் விட்டு போக மனம் இல்லை என்று தயங்கிய படியே சொன்னாள். என்னம்மா இது?..அப்படியானால் கல்யாணமே வேண்டாம் என்று சொல்கிறாயா என்று பதட்டப்பட்டுக் கேட்டார் அப்பா. இல்லை இல்லை அப்பா பண்ணி கொள்கிறேன் ஆனால் இங்கே அருகில் ஏதாவது பார்த்து செய்யுங்கள் நான் இங்கு தினமும் வந்து போக ஏதுவாக இருக்கும் என்று சொன்னாள்.

    தொடரும்....
     
    Thyagarajan likes this.
  6. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    இல்லை அம்மா ஜோசியர் அப்படிச் சொன்னார் என்று மெதுவாக ஆரம்பித்தர் அவர். அதற்குள் இவள், அவர் ஆயிரம் சொல்லட்டும் இருந்தாலும் யோசியுங்கள். நீங்கள் தானே சொன்னீர்கள் இந்தியா கர்மபூமி அது போக பூமி என்று. எனக்கு அந்த போகத்தில் இஷ்டமில்லைபா. அங்கு போனாலும் என்ன செய்வது
    டிவி பார்த்துக்கொண்டு போன் பேசிக்கொண்டு இங்குமங்கும் அலைந்து கொண்டு ஒரு படாடோபமான வாழ்க்கை இருக்குமே தவிர இது போல பெருமாளுக்கு கைங்கர்யம் செய்து கொண்டு வாழும் நிம்மதியான வாழ்க்கை கண்டிப்பாக கிடைக்காது. மேலும் என் உடை, உணவு என எல்லாவற்றிலுமே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்குமே. நாம் இங்கு வெங்காயம் பூண்டு கூட இல்லாமல் சாத்வீக உணவாக உண்கிறோம் அதைக் கூட நான் மாற்றிக் கொள்ள வேண்டி வருமே அப்பா, கொஞ்சம் யோசியுங்கள். உடை விஷயத்திலும் அப்படித்தானே.

    நான் அங்கு உள்ளவர்களைப் பற்றி குறை கூறவில்லை, எனக்கு அது ஒத்துவராது என்று தான் சொல்கிறேன். அதாவது நான் 23 வருடங்களாக வாழ்ந்து வரும் வாழ்க்கையை அப்படியே மறந்து, அந்த கலாசாரத்துக்கு எப்படி ஒரே நாளில் மாறுவேன்?.... அப்படி என் வாழ்க்கையின் போக்கையே புரட்டிப் போடும் அந்த வாழ்க்கை எனக்குத் தேவையா என்று யோசியுங்கள் அப்பா. அந்த ஒரு வாழ்க்கையை என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியாது அப்பா ஒருவேளை இந்த ஊரில் மாப்பிள்ளை கிடைக்காவிட்டாலும் பக்கத்து ஊரில் அல்லது கொஞ்சம் தொலைவில் இருந்தாலும் பரவாயில்லை ஒரு கோவிலைப் பார்த்துக்கொண்டு ஒரு நந்தவனம் வைத்துக் கொண்டிருக்கிற ஒரு மாப்பிள்ளைக்கு, ஒரு வரனுக்கு என்னை செய்து கொடுத்து விடுங்கள் தயவுசெய்து எனக்கு அதுதான் நிம்மதி; எனக்கு அதுதான் விருப்பத்தை கொடுக்கும் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டாள் .

    இது அப்பாவிற்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும்
    அவருக்குத் தன்னுடைய மகளைப் பற்றி பெருமையாக இருந்தது தனக்கு தோன்றவில்லையே இது. தான் இவ்வளவு பெருமாளுக்கு செய்தும், இப்படி கோவிலே கதியாகக் கிடக்கும் குழந்தை எப்படி அவ்வளவு தூரத்தில் தனியாக, கோவில் , குளம் என்று எதுவும் இல்லாமல், வெறும் போகத்தை மட்டுமே அனுபவிப்பாள், சௌகரியமாக இருப்பாள் என்று தப்புக் கணக்கு போட்டேன், என்று நினைத்துக் கொண்டார். தண்ணீரில் இருந்து எடுத்து வெளியே எறியப் பட்ட மீனாக அவள் தவித்தது இவருக்குப் புரிந்தது.

    தன் குழந்தை சௌக்கியமாக இருக்க வேண்டும் என்று தோன்றியதே தவிர, அவளுக்கு எது சௌகர்யம் என்று நினைக்கத் தோன்றவில்லையே, பெருமாளை விட்டு விட்டு, இந்த சாஸ்திர சம்பிரதாய விட்டு விட்டு அவள் எப்படி இருப்பாள் என்று யோசிக்கத் தோன்றவில்லையே என்று நினைத்து, சே, என்ன தகப்பன் நான் என்று தன்னத்தானே கடிந்து கொண்டார் அவர்.

    இப்போழுது நல்ல தெளிவு பெற்றவராக, மிகவும் சந்தோஷமாக, சரி அம்மா உன் இஷ்டப்படியே நடக்கட்டும் என்று சொல்லி,அதற்கு ஏற்றார்போல வரன் பார்க்கத் துவங்கினார்.

    அன்று காலை தான் ஒரு வாட்ஸாப் மெசேஜ் பார்த்தார், அது அப்பொழுது படித்ததை விட இப்போழுது அதிக அர்த்தம் உள்ளதாகப் பட்டது. தில்லி இல் உள்ள ஒரு பெண்ணுக்கு வரன் தேடி இருக்கிறார்கள். அந்தப் பெண்ணின் அம்மா அந்த வரனை வேண்டாம் என்று சொல்லி விட்டார். இது சகஜம் தான் ஆனால் வேண்டாம் என்று சொன்ன காரணம்தான் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதாவது அந்தப் பையன் நெத்திக்கு இட்டுப்பானாம், சந்தியாவந்தனம் செய்வானாம். இதெல்லாம் செய்துகொண்டு மடிசஞ்சி(?) போல இருக்கும் உங்க பையனுக்கு தான் தன் பெண்ணைத்தர மாட்டேன், நாங்கள் எல்லாம் கொஞ்சம் மார்டன் டைப் என்று தாயார்காரி சொல்லி இருக்கிறாள். என்று போட்டிருந்தது. தங்கள் குல வழக்கத்தை தன் பெண்ணுக்குச் சொல்லி வளர்க்க வேண்டிய தாயாரே இப்படி என்றால்? எங்கே போகிறது நம் சமூகம் என்று எண்ணினார் அப்போழுது. இப்போழுது கோதை இன் பேச்சிலிருந்து, தில்லிக்கே இந்த கதி என்றால், அமெரிக்காவில் நம் ஆட்களின் நிலமை எப்படி இருக்குமோ என்று யோசித்து, அங்கு போய் தன் பெண் என்ன பாடு படுவாளோ என்று எண்ணிக் கலங்கிவிட்டார். வேண்டாம் பா, இங்கு உள்ளூரிலேயே சந்தோஷமாக இருக்கட்டும் என்று முடிவெடுத்து விட்டார்.

    தொடரும்....
     
    Thyagarajan likes this.
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அப்போதுதான் இந்த வரன் கிடைத்தது இவர்கள் பக்கத்து ஊரில், ஒரு பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊரில் இதே போல ஒரு பெருமாள் கோயில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள் வீட்டில் இரண்டு மகன்கள் பெரியவனுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது இரண்டு வருடங்கள் முன்பு. சின்னவனுக்குத் தான் இப்போது கோதையை செய்து கொடுத்திருக்கிறது. அவர்கள்
    கோவிலிலும் அழகான நந்தவனம் உண்டு; வீட்டிலும் சின்ன தோட்டம் உண்டு. இரண்டு மாடுகளும் வைத்து இருந்தார்கள். பார்த்ததுமே மாப்பிள்ளையை இவர்கள் எல்லோருக்கும் பிடித்துவிட்டது. வேண்டியபோது, இங்கும் வந்து போக முடியும் . அவர்களுக்கும், கோவிலைப்பார்த்துக் கொள்ளும் வரனுக்கு பெண் கிடப்பதே குதிரைக் கொம்பாக இருக்கும் இந்த நாளில், பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்ய ஆசை கொண்டு, இப்படி ஒரு கண்டிஷன் போட்ட பெண்ணை விட மனமில்லை. அதிலும் இத்தனை கை காரியங்கள் செய்து கொண்டிருக்கும் ஒரு அழகு தேவதையை வேண்டாம் என்று சொல்ல அவர்களுக்குப் பைத்தியமா என்ன? எனவே, அவர்களும் மிகவும் சந்தோஷமாக கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டார்கள்.


    கல்யாணம் நல்லபடி முடிந்தது என்றாலும், அவளை விட்டு எப்படி இருக்கப் போகிறார் என்று தெரியவில்லை 24 மணி நேரமும் நிழல் போல கூடவே இருந்த பெண். மற்றவர்கள் போல இல்லை இவள். இவர் கூடவே இருந்து விட்டாள் அல்லவா, பிறந்ததிலிருந்து. அதனால் எப்படி இருக்கப் போகிறோமோ என்று கலக்கமாக இருந்தது அவருக்கு. யாரோ மாமா என்று கூப்பிடவே நினைவு கலைந்து எழுந்தார். சாயங்காலம் வரவேற்புக்குத் தயார் செய்ய ஆரம்பித்தார்கள்.


    ஆச்சு, எல்லாம் நல்லபடி முடிந்து, இதோ இன்று அவர்கள் எல்லோரும் கிளம்புகிறார்கள். பக்கத்து ஊர்தான் என்றாலும் கூட
    கோதை மிகவும் அழுதுவிட்டாள். இத்தனை கிட்டத்தில் தானே இருக்கிறது புக்ககம், நீ நினைக்கும் பொழுது வந்து போகலாம் அம்மா; கிட்ட தானே இருக்கிறது என்று எவ்வளவோ சமாதானம் செய்தார்கள். அவளுடைய கணவன் கோபாலனும், அழாதே கோதை, எப்பொழுது வேண்டுமானாலும் சொல்லு, நாம் வந்து போகலாம்; இங்கேதானே கூப்பிடு தூரத்தில் இருக்கிறார்கள்” என்று சொன்னான்.



    அங்கு வந்து நீ நம் பெருமாளைப் பார்; உனக்கு அவரைப் பிடித்து விடும் என்று சொன்னான். எல்லா இடத்திலும் ஒரே பெருமாள்தான் கவலைப்படாதே என்றும் சொன்னார்கள். ஒருவழியாக சமாதானம் ஆகி அவள் கிளம்பினாள். இவர்கள் இரண்டு நாளில் வந்து பார்ப்பதாக சொல்லி அனுப்பி வைத்தார்கள். இப்படியாக அவள் புக்ககம் வந்து சேர்ந்தாள் இங்கு வந்ததும் முதலில் கோவிலைத்தான் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.

    முதலில் கோவிலுக்கு தான் போனார்கள் எல்லோரும் அத்தனை உயர பெருமாளை பார்த்ததும் அவள் மிகவும் பரவசப்பட்டாள். அம்மாடி எத்தனை பெரிய பெருமாள்; அவர் ஒரு பதினாறு அடி இருப்பார் அருகில் இரண்டு தாயார்களும்,12 12 அடி உயரத்தில் இருந்தார்கள். கண்ணிறைய பார்த்தாள் பெருமாளை.

    அவர்களுடைய கோயிலை விட இது கொஞ்சம் பெரிதாகவே இருந்தது நந்தவனமும் பெரியது மாடுகளும் நிறைய இருந்தன அது அவளுக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுத்தது தனக்கு மிகவும் நிறைய வேலை இருப்பதை உணர்ந்து கொண்டாள் என்ன ஓகேவா என்று மாமியார் கேட்டதற்கு ரொம்ப நன்றாக இருக்கிறது அம்மா என்று சந்தோஷமாக பதில் சொன்னாள்.

    வீட்டு வேலைகளை மாமியாரும் பெரிய ஓர்ப்படியும் பார்த்துக் கொண்டிருந்ததால் சந்தோஷமாக கோவிலை பார்க்க ஆரம்பித்தாள்.

    தொடரும்...
     
    Thyagarajan likes this.
  8. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,723
    Likes Received:
    12,544
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:ம்ம். அப்பறம்.....
     
  9. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female

    இதோ போடுகிறேன் அண்ணா...கார்த்திகை வேலைகள் அதிகம் ...அதுதான் இங்கு வர முடியவில்லை...:)
     
    Thyagarajan likes this.
  10. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    இந்த கோவிலிலும் நந்தவனத்தில் நிறைய வேலைகள் இருந்தது செப்பனிட வேண்டி இருந்தது பிரகாரம் முழுவதும் கோலங்கள் போட இடம் இருந்தது. இங்கு கோவிலை அவளுடைய மாமனார் மைத்துனர் இருவருமே பார்த்துக்கொண்டிருந்தார்கள். கோபாலனும், தன் டிகிரி முடிந்ததும் கொஞ்ச காலமாக கோவிலை பார்த்துக் கொள்ள ஆரம்பித்திருந்தான். அது தவிர, அங்கு ஒரு மடைப்பாளி மாமா இருந்தார்.

    ஒரு பெண் கூட்டி பெருக்கி துடைக்க வேலைக்கு இருந்தாள். நந்தவனத்தைப் பார்த்துக்கொள்ள ஒரு தோட்டக்காரன் இருந்தான். மாடுகளைப் பார்த்துக் கொள்ள ஒரு ஆள் இருந்தான். இன்னும் கொஞ்சம் ஆள் சேர்ப்பதற்காக எல்லோரிடமும் பேசினாள்.

    அக்கம் பக்கம் பேசி, சின்ன சின்ன பசங்களை கூப்பிட்டுக் கொண்டு வந்தாள். அதே போல தன் வயதுள்ள புதிதாக கல்யாணம் ஆகி வந்த பெண்களையும் சேர்த்துக் கொண்டாள். சின்ன சின்ன குழுவாக பிரிந்து, வேலைகளை ஆரம்பித்தார்கள்.

    சின்ன பசங்களுக்கு ஒரு வேலை பெரியவர்களுக்கு ஒருவேலை என்று பிரித்துக் கொண்டார்கள். பொதுவாக எல்லோரும் சாயந்திரம் ஒரு மணி அல்லது ஒன்றரை மணி நேரம் இங்கு வந்து செய்தாலே போதும் நம் கோவில் மிகவும் அருமையாக இருக்கும். நாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது போலத்தான் கோவிலும். பெரியாழ்வார், அனந்தாழ்வார் என்று பலரும் பெருமாளுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்து இருக்கிறார்கள். நம் ஆச்சார்யர் ஸ்ரீ இராமானுஜரும் காஞ்சிப் பெருமாளுக்கு தீர்த்த கைங்கர்யம் செய்து இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், அவைகளால் எத்தனை எத்தனை புண்ணியம் என்று; அது போல இவைகளை செய்வதால், நம் அனைவருக்கும் புண்ணியம் கிடைக்கும்” என்று சொன்னாள்.

    இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பேசி அனைவரையும் வரவழைத்தாள் எனவே அவளுடைய அந்த கோவில் போலவே இந்தக் கோவிலும் அருமையாக மாற ஆரம்பித்தது. செடிகள் அத்தனையும் அத்தனை அழகாக பூக்க ஆரம்பித்தன. துளசிச் செடிகள் மண்டின. பூ வேண்டும் என்றால் வெளி ஊருக்குத்தான் போகவேண்டும் என்கிற நிலை மாறி, பூக்களும் துளசியும் வேண்டுமளவுக்கு இங்கேயே கிடைத்தது பெருமாளுக்கு.

    கோவில் குளத்தை தூறு வாரினார்கள். மாடுகளையும் நன்றாக பராமரித்தார்கள். பெருமாளுக்கு வேண்டிய பால் நிறைய கிடைத்தது. தோட்டத்து இலைதழைகள் மாட்டுக்கும், மாட்டுச்சாணம், இவர்களுக்கு நந்தவனத்திற்கு போடவும் கிடைக்க ஆரம்பித்தது. இயற்கையே அப்படித்தானே, ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பது?

    அங்கு செய்தது போலவே இங்கும் பெருமாளுக்கு சாற்றி களைந்த பூக்கள் இலைகள் என எல்லாவற்றையும் உரமாக்கினார்கள். அந்த நந்தவனம் பூத்துக் குலுங்கத் தொடங்கியது. இங்கு சின்ன காய்கறி தோட்டமும் இருந்தது.

    வாழை மரமும் குலை தள்ளியது. அக்ரஹாரம் பூராவும் வினியோகித்தர்கள் அதை. தேங்காய்கள் காய்த்திருந்தன.
    இந்த நந்தவனம் கொஞ்சம் பெரியது அதனால் மரங்களும் நட்டார்கள். ஒரு செண்பகப்பூ மரம் ஒரு மகிழ மரம் என்ற நட்டார்கள்.

    தினப்படி பூவிற்காக நந்தியாவட்டை, அரளி, செம்பருத்தி போன்ற குறு மரங்களும், சாமந்தி , ரோஜா, கனகாம்பரம், சம்பங்கி போன்ற செடிகளும், மல்லி, நித்திய மல்லி, கொடி சம்பங்கி போன்ற கொடிகளும் நட்டார்கள். எல்லாம் பூக்கத் தொடங்கின. கோவில் மிகவும் ரம்மியமாக மாறிவிட்டது. அங்கு போலவே இங்கும் சாயரட்சை, பெருமாள் சன்னதியில் பலப்பல பஜனைகளும் ஸ்லோகங்களும் சொன்னர்கள்.

    இப்படியாக போய்க் கொண்டிருக்கிற பொழுது ஒரு நாள்
    இரண்டு ஜோடி அமெரிக்க தம்பதிகளும் ஒரு அமெரிக்க வாழ் இந்திய ஜோடியும் பெருமாளை சேவிக்க வந்தார்கள்.

    அவர்கள் அங்கு வந்த பொழுது, இவர்கள் எல்லோரும் கோலத்திற்கு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார்கள்
    உள்ளே பெருமாளை சேவிக்கும் பொழுது அவர்களுக்கு ஆங்கிலத்தில் விளக்க மாமாவிற்கு முடியவில்லை தெரியவில்லை கோபாலன், தான் அவர்களுக்கு விளக்குவதாக சொல்லி கோவிலின் அருமை பெருமை, பெருமாளின் பெருமை என்று எல்லாவற்றையும் அருமையாக விளக்கினான்.

    அவர்கள் அனைவரும் கோவிலை சுற்றி வரும்பொழுது இவர்கள், அதாவது பெண்கள் அனைவரும் ஏதோ செய்து கொண்டிருப்பதை பார்த்து என்ன ஏது என்று விசாரித்தார்கள்.
    கோதையும் அவர்களை வரவேற்று, அழகான ஆங்கிலத்தில் விளக்கினாள். இது கோவிலுக்கும் பெருமாளுக்கும் அவர்கள் செய்யும் கைங்கர்யம் என்றாள். நந்தவனத்தை சுற்றிக் காண்பித்தாள்.இப்படி செய்வதனால் தங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் என்று சொன்னாள். அது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அவர்கள் அனைவருமே இந்து சமயத்தை மிகவும் போற்றி மதிப்பவர்களாக இருந்தார்கள் அதனால் அவர்களுக்கு இது எல்லாமே, மிகவும் பிடித்திருந்தது.

    தொடரும்...
     
    Thyagarajan likes this.

Share This Page