1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    புது படம் பார்க்காம தீபாவளியா ? Amazon Prime la சூரரை போற்று படம் பார்த்தாச்சு. போற்றும்படி படம் இருந்தது. ஒரு போட்டி மிகுந்த பெரிய துறையில் நுழைய/சாதிக்க எவ்ளோ நொந்து நூடுல்ஸ் ஆகனும் என்பதை கண் முன்னே காட்டும் படம். போட்டி மிகுந்த துறையில் (Red ocean) சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த படத்தை ஒரு முறை பார்த்தால் தாங்கள் முன் வைத்த காலை கொஞ்சம் பின் வைக்கலாமா என்று யோசித்தாலும் யோசிப்பார்கள்.

    Blue ocean ஈஸி கிடையாது. எதுலயும் சாதிக்கணும்னு நினைத்தாலே உயிரை குடுத்து முயற்சிக்கணும். இதெல்லாம் எனக்கு இப்போ தேவை இல்லை. தேவையான விசயத்திற்கு வருகிறேன். அன்னப்பறவை பாலையும் தண்ணீரையும் பிரிக்கற மாதிரி நான் எந்த படத்துலயும் ரொமான்ஸ் பிரிச்சு பார்த்துடுவேன். அதுக்கு தான் பெரும்பாலும் படம் பார்க்கறது. :wink::wink:

    Surya - Hot!! Hero-Heroine சம்பந்தப்பட்ட காட்சிகள் அத்தனையும் செம! ரொம்ப கம்மியா சீன்ஸ் வச்சுட்டாங்க. இன்னும் கொஞ்சம் வைத்து இருக்கலாமே என்று ஏங்க வைத்தது. நான் எதிர்ப்பார்த்து காத்திருந்த இந்த இரண்டு பாடல்களின் காட்சி அமைப்பும் அருமை. செம ரொமான்டிக் பாடல் வரிகள் கேட்டு கேட்டு கிறங்கி போயிருக்கிறேன்.

    YT - காட்டு பயலே - சூரரை போற்று
    YT - வெய்யோன் சில்லி - சூரரை போற்று
     
    Thyagarajan and suryakala like this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    என்னோட மைண்ட் எப்பவும் துறுதுறு என்று இருக்கும். மைண்ட் க்கு பிடிச்சதை செய்யும்போது அழகாக கட்டுப்படும். வேலை நாட்களில் மைண்ட் பெரும்பாலும் ஓவர் டைம் பார்க்கும். பாடல் கேட்கும்போது மகுடி இசைக்கு மயங்கும் பாம்பு போல மைண்ட் மயங்கி நிற்கும். எப்போ ப்ரீ டைம் கிடைத்தாலும் கிடைக்கும் நேரங்களை புதுசா இளமையாக இனிமையாக எப்படி கழிக்க வேண்டும் என்று திட்டம் போட்டு கொள்வேன். இந்த வார திட்டம் - தமிழ் ரொமான்டிக் நாவல்கள் :wink: :wink:

    போன வார இறுதியில் இருந்து தமிழ் ரொமான்டிக் நாவல்கள் தேடி பிடித்து படித்து கொண்டிருக்கிறேன். இதுவரை படித்ததில் சாப்பாட்டிற்கு ஊறுகாய் தொட்டுக்கொள்ளும் அளவிற்கு தான் ரொமான்ஸ் இருக்கு. நான் எதிர் பார்த்த அளவிற்கு இல்லை. நானே சொந்தமாக எழுத முடியும் என்ற நம்பிக்கை கொடுத்து இருக்கிறது. ரொமான்ஸ் நாவல் எழுத ஆரம்பித்தால் அதீத கற்பனை சுழலில் சிக்கி எனது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும் என்று நினைக்கிறேன். இன்னும் 10-15 வருடங்கள் அலுவலக பணியில் இருக்க ஆசைப்படுகிறேன். ரிட்டயர்மெண்ட் க்கு பிறகு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதற்கு அனுமார் வால் மாதிரி ஒரு பெரிய லிஸ்ட் வைத்து இருக்கிறேன். ரொமான்ஸ் கதை எழுதுவதும் எனது லிஸ்ட் ல இப்போ சேர்த்து இருக்கிறேன்.

    Feb 2021 special assignment க்கு ஒரு ஐடியா கிடைத்து இருக்கிறது. நிறைய காய்கறிகள் குறைவான சாதம் போல நிறைய ரொமான்ஸ் குறைந்த குடும்ப சிக்கல்கள் நிறைந்த ஒரு தமிழ் நாவல் கண்டுபிடித்து படித்து அந்த நாவலில் எனக்கு பிடித்த விஷயங்களை/ சம்பவங்களை Feb மாதம் முழுவதும் நம்ம thread ல கோட் பண்ணி எதற்கு பிடித்தது என்பதற்கு தனிப்பட்ட நிகழ்வுகள் அல்லது கற்பனை கிறுக்கல் கிறுக்க போகிறேன். :wink::wink: இதற்கு டிசம்பர் மாதம் ஹோம் ஒர்க் பண்றதுக்கு பிளான் போட்ருக்கேன்.
     
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi C/CH/Indha thread la sandhitha matra friends,

    Ellorukkum oru Punnagai kalandha Vanakkam. :grinning::grinning:

    Ungalukku tamil romantic novels padikkum pazhakkam irukkaa? Pazhakkam irundhaal ungalukku piditha most romantic novel edhuvenru kuripidungal. Naan thedi pidithu padikiren. Nanri!
     
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    SPB songs Playlist 25

    இந்த லிஸ்ட் பாடல்கள் சோகப்பாடல்கள் இல்லை.. எல்லா படங்களுக்கும் சந்தோசமான முடிவு தான்..ஆண்கள் 'feel' பண்ணி பாடறது பெண்களுக்கு சோகமா தோணுமா? சுகமா தோணுமா? :wink::wink:

    YT - காதல் ரோஜாவே - ரோஜா
    YT - இதயமே இதயமே - இதயம்
    YT - மன்றம் வந்த தென்றலுக்கு - மௌன ராகம்
    YT - போகுதே போகுதே - கடலோர கவிதைகள்
    YT - மேகங்கள் என்னை தொட்டு - அமர்க்களம்
     
    Thyagarajan and suryakala like this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    SPB songs Playlist 26

    பச்சை மல பூவாசம், பொன்மாலை பொழுது, மேகம் கொட்டட்டும், மடை திறந்து, தகிட ததுமி என்று கவிதையான கலவை.

    YT - பச்சமல பூவு - கிழக்கு வாசல்
    YT - இது ஒரு பொன்மாலை பொழுது - நிழல்கள்
    YT - மேகம் கொட்டட்டும் - எனக்குள் ஒருவன்
    YT - மடை திறந்து - நிழல்கள்
    YT - தகிட ததிமி - சலங்கை ஒலி
     
    Thyagarajan and suryakala like this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    ஆங்கில வருடத்தின் கடைசி மாதத்தில் இருக்கிறோம்.

    திரைப்படத்தில் மெயின் கதை இருந்தாலும் பாடல்கள் ரொமான்டிக் சீன்கள் நகைச்சுவை காட்சிகள் இருந்தால் படத்திற்கு சுவாரசியத்தை கூட்டும். ஒரு ஓவியத்தில் அழகான வீடு இருந்தால் அந்த வீட்டை சுற்றி சின்ன தோட்டம் ஓடை மலை இருந்தால் இன்னும் வண்ணமயமாக ஓவியம் தோன்றும்.

    இந்த வருடத்திற்கு Workaholic மெயின் தீம் எனக்கு இருந்தாலும் குட்டி குட்டி சைடு தீம்கள் இருந்தது. அது பற்றி இந்த மாதம் இங்கு கிறுக்கறேன்.

    Th #1: Walkaholic

    மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து அலுவலகம் செல்ல முடியாமல் வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் கட்டாய நிலை. ஏப்ரல் மாதத்தில் இருந்து தினமும் கொஞ்சம் நேரமாவது வெளிக்காற்றை சுவாசிக்க வேண்டும் என்று நினைத்தேன்.

    கடந்த எட்டு மாதங்களில் ஒரு நாள் கூட விடாமல் குறைந்தது நாற்பது நிமிடங்கள் தினமும் வெளியே நடந்து இருக்கிறேன். ஒரு நாள் இடைவிடாத மழை கொட்டியது - அன்று ரெயின் ஜாக்கெட் போட்டு குடை பிடித்து நடந்தேன். மழையோடு சேர்ந்து சுற்றுப்புறம் முழுதும் பச்சை பசேல் என்று ரம்மியமாக இருந்தது.

    YT - என் மேல் விழுந்த மழை துளியே - மே மாதம்

    இப்போ குளிர் ஆரம்பித்து விட்டது. தினமும் வெளியே நடப்பது சிரமம்.
    *பேச வைத்து கேட்டு கொண்டு கரம் பற்றி பார்க்கில் போன வாரம் நடந்த நடை இந்த வருடத்திற்கு முத்தாய்ப்பாய் இருந்தது.

    *என்னை பொறுத்தவரை 'பேசும் திறன் இருக்கிறது' என்றால் சாமர்த்தியமாக சுயமாக பேசவும் தெரியணும் சுவாரசியமாக தூண்டிலிட்டு பேசாதவர்களை பேச வைக்கவும் தெரியணும் :wink::wink:
     
    cinderella06 and suryakala like this.

Share This Page