1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    suryakala likes this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    YT - கண்ணே கலைமானே - மூன்றாம் பிறை

    காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
    கண்மணி உனை நான் கருத்தினில் நிறைப்பேன்


    இந்த பாடலில் வருவது போல ஆண் தான் பெண்ணை பூவாய் கையில் தாங்கணுமா?

    பெண் ஆணை தாங்கினால் எப்படி இருக்கும்?
    இந்த அனுபவம் இருப்பவர்கள் வரிகள் இப்படி மாத்தி படிக்கலாமா? :wink::wink:

    காதல் கொண்டேன் காலில் விழுந்தேன்
    கணவா உனை நான் கையில் தாங்கினேன்
     
    suryakala likes this.
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த வருடம் எனக்கு workaholic வருடம் என்பதால் எங்க டீம் பத்தி எழுத தோன்றியது. அலுவலகத்தில் பாஸ் மற்றும் டீம் சிறப்பாக அமைந்தால் எதுக்குடா அலுவலகம் போகிறோம் என்று தோன்றாமல் எப்படா அலுவலகம் போவோம் என்று இருக்கும்.

    எங்க டீமில் என்னை தவிர எல்லோரும் இதே கம்பெனியில் 10-20 வருடங்கள் அனுபவம் மிக்கவர்கள். வேறு வேறு டீமில் இருந்து வந்தவர்கள். மொத்தம் அனுபவத்தை கூட்டினால் 100 வருடங்கள் வந்து விடும். இவ்ளோ அனுபவம் மிகுந்தவர்களிடம் சேர்ந்து வேலை பார்க்கிறேன் என்பதே பெருமிதமாக இருக்கும். இது என்னோட ட்ரீம் கம்பெனி ட்ரீம் ஜாப் என்று சொன்னால் மிகை ஆகாது.

    நாங்க எல்லோரும் individual contributors. போட்டி பொறாமை இல்லாமல் ஒருத்தருக்கு தெரிந்ததை மற்றவர்க்கு போட்டி போட்டு பகிர்ந்து கொள்வோம்.

    டீம் சேர்ந்த புதிதில் 10 மணி நேரங்கள் வேலையிலே மூழ்கி இருக்கற டாகுமெண்டஷன் எல்லாத்தையும் கரைத்து குடித்து படித்து நாலு பேரோடு நிறைய நிறைய பேசி டீம் சார்ந்து இருக்கும் மற்ற நாலு டீமோடு பேசி நாலு புத்தகங்கள் படித்து நாலு யூட்யூப் வீடியோஸ் பார்த்து எத்தனையோ இணைதளங்களில் விஷயம் சேகரித்து காம்பெடிட்டர் கம்பெனி என்னவெல்லாம் பண்றங்க என்று ஆராய்ந்து ஒரு டீம் SME ஆவது செம அனுபவம்.

    எங்க எல்லோருக்கும் அவங்க அவங்க டெஸ்க் ல ஒரு வைட் போர்டு இருக்கும். ஒருத்தர் வைட் போர்டு ல கிறுக்கி இன்னொருத்தருக்கு ஏதாவது விளக்கம் சொன்னால் மற்ற டீம் மெம்பரும் அவர்களாகவே சேர்ந்து கொள்வார்கள். Out of Syllabus கேள்விகள் வந்தால் எங்க பாஸ் க்கு நேரம் இருந்தால் அவரையும் அழைத்து கொண்டு டிஸ்கஸ் பண்ணுவோம். Intellectual kick - இந்த வருடம் ரொம்ப மிஸ் பண்றேன்.

    எங்க டீம் மெம்பெர்ஸ் வைத்திருக்கும் பவுசு கார்களை வைத்து டைரக்டர் ஷங்கர் ஒரு பாடலை எடுத்து விடலாம். என்னோட காரில் நான் தினமும் அலுவலகம் போகாததை மிஸ் பண்றேன்.

    YT - வேல வேல - அவ்வை சண்முகி - SPB
     
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    அலுவலக டீம் பத்தி எழுதியாச்சு இப்போ அலுவலக பாஸ் பத்தி எழுதறேன்.

    தலைமை பதவி உயர உயர அவர்களுக்கு கீழே வேலை பார்ப்பவர்கள் வேலைக்கு முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள் என்பதை நான் என்னோட பாஸ் பார்த்து கத்துக்கொண்டேன். அப்போ தான் அவங்க இன்னும் உயரமாக போக முடியும். Strategy செட் பண்றது தலைமை இடம். அதை Execute பண்ற டீம் மெம்பெர்ஸ் எதிர் வாதம் பண்ண கூடாது முழு ஒத்துழைப்பு குடுத்து காரியம் முடிக்கணும். எள்ளுனா எண்ணெய்யா வந்து நிக்கணும். எனக்கு வேற்று வேற்று கருத்து இருந்தால் என்னோட பாஸ் க்கு தெரிவிப்பேன். ஆனா என்ன செய்ய வேண்டும் என்ற முடிவு அவர் தான் எடுப்பார். நான் அவர் சொன்ன வேலையை அப்படியே செயல்படுத்துவேன். ஒரு கடினமான வேலை கொடுத்தால் அதை எப்படி முடிப்பது என்று தீவிரமா யோசித்து இருக்கிறேனே தவிர எதற்கு இதை வேலை என் தலையில் கட்டி விட்டார்கள் என்று நினைக்கவே மாட்டேன். அதனால் விளைந்த நன்மைகள்:

    • எந்த எதிரணி என்னை நோக்கி வீரியமான அஸ்திரம் வீசினாலும் என்னோட பாஸ் என்னை பாதுக்காக்க எதிர் அஸ்திரம் அல்லது சமாதான புறா பறக்க விடுவார்
    • பணத்தை அள்ளிக்கொடுத்து எனக்கு விருப்பமான வேலை சம்பந்தப்பட்ட ட்ரைனிங் அனுப்புவார்
    • எவ்ளோ பிஸியாக இருந்தாலும் நேரம் ஒதுக்கி என்னோட சந்தேகங்கள் தீர்ப்பார்
    • காம்பெடிஷன் கலந்துக்க சொல்லி ஆலோசனை வழங்குவார் (இது மட்டும் நான் பண்ண மாட்டேன். வார இறுதியில் நான் வேலை சம்பந்தப்பட்ட ரிசர்ச் பண்ணவே மாட்டேன்.)
    • இன்றைய போன் காலில் நான் அடுத்த வருடம் என்ன வேலை செய்ய ஆசைப்படுகிறேன் என்று எனது விருப்பம் கேட்டு வேலையை கொடுக்கிறார்
    • எல்லோர் முன்னிலையிலும் மனம் திறந்து பாராட்டுவார்
    • வருடம் தோறும் எனக்கு பிடிச்ச store gift card கொடுப்பார் (அதுக்கு இரண்டு மடங்கு இன்னும் செலவு பண்ணா தான் அந்த கடையில் ஒரு சின்ன பொருளாவது வாங்க முடியும் என்பது வேறு விஷயம்)

    ஒரு வார்த்தை பர்சனல் பத்தி பேச மாட்டோம். வேலை தவிர்த்து நாங்கள் பேசுவது பர்சனல் பைனான்ஸ் மட்டும் தான். ஸ்டாக் மார்க்கெட் பத்தி பேசுவோம். இவோரட investment strategy டிஸ்கஸ் பண்ணுவார். இவர் risk averse. நான் risk lover. எங்களது stock portfolio எதிர் துருவங்களாக இருக்கும். Debt-free வாழ்க்கை வாழ்வதை பெருமையாக பேசிக்கொள்வோம்.

    இவர் நிறைய புத்தகங்கள் படிப்பார். அடுத்த வருடம் இவர் படிக்கும் புத்தகங்கள் லிஸ்ட் வாங்கி bookaholic ஆக இருக்கலாம் என்று நினைத்து இருக்கிறேன்.

    (இவர் பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சி. என்னை விட ஒரு வயது பெரியவர். இவரது சுதந்திரம் இவருக்கு அளவிட முடியாத சந்தோஷம். திருமணம் வேண்டாம் என்று முடிவு எடுத்து வாழ்பவர். விவரமா இருக்கிறார் :wink::wink:)
     
    candidheart and suryakala like this.
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    போன வாரம் முழுதும் வேலையில் பிஸி. வார இறுதியில் ஒரு மாற்றம் தேவைப்பட்டது. தீபாவளி வருகிறது. மால் க்கு போய் டிரஸ் வாங்கியாச்சு. இந்த வருடத்தில் முதல் முறையாக ரெஸ்ட்டாரென்ட் போய் சாப்டாச்சு. இன்னும் இரண்டு கடைகளுக்கு சென்று வரும் இரண்டு வாரங்கள் வீட்டிற்கு தேவையான மற்றும் தேவை இல்லாத பொருட்கள் வாங்கியாச்சு. 6 மணி நேரங்கள் வெளியே தொடர்ந்து சுற்றியது ஒரு புத்துணர்ச்சி தருகிறது. இப்போ self-quarantine!

    தாயகத்தில் இருக்கும் குடும்பத்து நபர்களை நண்பர்களை ஆன் லைனில் டிரஸ் எடுக்க சொல்லியாச்சு. ஊருக்கு தான் உபதேசம்.

    ஞாயிறு அன்று நிறைய SPB பாடல்கள் கேட்டேன். எல்லாமே gems. கொஞ்சம் கொஞ்சமாக இங்கு போஸ்ட் பண்றேன். இன்றைய ஸ்பெஷல் black & white பாடல்கள்.

    SPB songs Playlist 12

    YT - விழியிலே மலர்ந்தது - புவனா ஒரு கேள்வி குறி
    YT - நந்தா என் நிலா - தெய்வம் தந்த வீடு
    YT - சம்சாரம் என்பது வீணை - மயங்குகிறாள் ஒரு மாது
    YT - கடவுள் அமைத்து வைத்த மேடை - அவள் ஒரு தொடர்கதை
    YT - இலக்கணம் மாறுதோ - நிழல் நிஜமாகிறது
     
    suryakala likes this.
  6. candidheart

    candidheart IL Hall of Fame

    Messages:
    1,976
    Likes Received:
    6,078
    Trophy Points:
    383
    Gender:
    Female
    One of my all time favorite song for lyrics and satish chakravarthy voice, :hearteyes: loved the location as well!




    this is just the male version! Wish he sang more..

    ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளிஉன்னை தொடவே அனுமதி
    ஒரு துளி ஒரு துளி சிறு துளி வழிகிறதே விழி வழி
    உனக்குள் நான் வாழும் விவரம்நான் கண்டு வியக்கிறேன் வியர்க்கிறேன்
    எனக்கு நான் அல்ல, உனக்கு தான் என்று உணர்கிறேன்
    நிழல் என தொடர்கிறேன்

    உயிர் அல்ல உயில் இது உனக்கு தான் உரியது
    இமைகளின் இடையில் நீ இமைபதை நான் தவிர்க்கிறேன்
    விழிகளின் வழியில் நீ உறக்கம் வந்தால் தடுக்கிறேன்..

    I'll just have to put enitre lyrics..every line is lovely..
     

Share This Page