1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

*சோம்பேறி ஓநாயும், சோர்ந்திருந்த நாயும்* (சிறுவர்களுக்கான சிறு கதை -5)

Discussion in 'Stories in Regional Languages' started by Rrg, Sep 6, 2020.

  1. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    *சோம்பேறி ஓநாயும், சோர்ந்திருந்த நாயும்* (சிறுவர்களுக்கான சிறு கதை -5)

    
ஒரு காட்டில் ஓநாயொன்று வசித்து வந்தது. பொதுவாக ஓநாய்கள் கூட்டமாகவே வேட்டை ஆடும். எல்லா ஓநாய்களும் கூடித் தாக்குவதால் அவற்றை விட பலம் வாய்ந்த மிருகங்களும் அவற்றைக் கண்டு அஞ்சும். கூட்டு வேட்டையே அவற்றின் சக்தி.
    நாம் காணும் இந்த ஓநாயோ மிகவும் சோம்பேறியாக இருந்தது. அதன் கூட்டத்தில் பிறர் வேட்டையாடும் வரை தூங்கிவிட்டு வேட்டை முடிந்ததும் விருந்துக்கு வந்துவிடும். எவ்வளவு சொல்லியும் திருந்தாததால் அது கூட்டத்திலிருந்து விரட்டி அடிக்கப் பட்டது. வேட்டையாடி பழக்கம் இல்லாததால் உணவு கிடைப்பதே மிகவும் கடினமாகிப் போயிற்று. உணவு தேடி காடெல்லாம் அலைந்து ஏதோ கிடைத்ததை உண்டு காலம் தள்ளிக் கொண்டிருந்தது.
    ஒரு நாள் அந்த ஓநாய் உணவு தேடி அலைந்து கொண்டிருந்த போது ஒரு வழி தவறிய நாய் ஒன்று மரத்தடியில் படுத்துக்கொண்டு இருப்பதைப் பார்த்தது. அந்த நாய் மிகவும் களைத்துப் போய் சக்தியின்றி கிடந்ததைப் பார்த்து ஓநாய்க்கு மிக்க சந்தோஷம்.
    அந்த நாயை நெருங்கி, “நீ வேண்டும் தெய்வங்களை வேண்டிக்கொள். நான் உன்னைக் கொன்று தின்னப்போகிறேன்” என்றது.
    அதற்கு நாய், “நண்பா! நீ என்னைத் தின்பதில் எனக்கு மகிழ்ச்சி தான். நான் பல நாட்களாகப் பட்டினியாய் இருக்கிறேன். எனக்கு பசியின் அருமை நன்கு தெரியும். உன்னைப் போல ஒரு வீரனுக்கு உணவாவதைக் குறித்து நான் பெருமைப் படுகிறேன். இருப்பினும் இறக்கும் முன் ஒரு சிறு விண்ணப்பம். நான் இப்பொழுது எலும்பும் தோலுமாக இருக்கும் நிலையில் உனக்கு சுவையான உணவு ஆகமாட்டேன். எனக்கு நீ நல்ல உணவு கொண்டுவந்து கொடுப்பாயானால் அதை உண்ட பிறகு நானும் மகிழ்வோடு இறப்பேன். உனக்கும் என்னை உண்பது மிகவும் சுவையானதாகவும் இருக்கும். நான் சொல்வது சரியெனப்பட்டால் என் கடைசி உணவு சிறப்புடையதாகப் படைப்பாய். இல்லையெனில் இப்பொழுதே என்னை தின்று விட்டு பசியோடு வேறு உணவு தேடி ஓடு” என்று பதில் உரைத்தது.
    ஓநாய் யோசித்துப் பார்த்ததில் அதற்கு அந்த நாய் சொல்வது சரியெனத் தோன்றியது. அது கஷ்டப்பட்டு காடெல்லாம் தேடி ஓடி பழங்களும், நல்ல உணவும் சேகரித்து வந்து நாய்க்குப் படைத்தது. இதுவரை அலையாத அலைச்சல் இன்று அந்த ஓநாய்க்கு. மிகவும் களைத்து விட்டது. ‘நாய் அந்த உணவை உண்ட பிறகு அதை உண்ணலாம்’ என்று எண்ணி மர நிழலில் ஓய்வெடுத்துப் படுத்திருந்தது.
    நாய்க்கோ நல்ல விருந்து. நன்கு உண்ட பிறகு அதன் களைப்பு மறைந்து தேகம் வலுவடைந்து விட்டது. கம்பீரமாய் நிமிர்ந்து நின்றது.
    “ஏனடா மூடா! என்னையா தின்னப்போகிறாய்? சீக்கிரம் வா. ஒரு கை பார்த்து விடுகிறேன்” என்று தன் கூரிய பற்களை காட்டி உருமிக்கொண்டே ஓநாயை நோக்கிப் பாய்ந்தது.
    ஒநாய் அதைக்கண்டு பயந்து தன் களைப்பையும் மறந்து ‘தப்பித்தோம், பிழைத்தோம்’ என்று
    எழுந்து ஓடியது.

    *படிப்பினைகள்:*
    1) சிந்தித்து செயல்படு.
    2) பேராசை பெரு நஷ்டம்.
    இன்னும் பலப் பல.

    அன்புடன்,
    RRG
    06/09/2020
     
    Thyagarajan likes this.
  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,742
    Likes Received:
    12,558
    Trophy Points:
    615
    Gender:
    Male
    நல்ல கற்பனை ரசித்தேன்
     
    Rrg likes this.
  3. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    Thanks sir.
    Perhaps it is easier to teach morals for the kids through such stories.:blush:
     

Share This Page