1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

*ஒரு ஆற்றின் நினைவலைகள்!*

Discussion in 'Regional Poetry' started by Rrg, Sep 3, 2020.

  1. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    *ஒரு ஆற்றின் நினைவலைகள்!*

    கடலினுள் கலக்கும் முன்னர் கலங்கியதாம் ஒரு ஆறு.
    கடந்து வந்த பாதை அதன் கண்முன்னே விரிந்ததுவாம்
    ஓடையாய்ப் பிறந்ததுவும் ஓட ஓடப் பரந்ததுவும்
    காடென்ன மலையென்ன கண்ணிமைப்பில் கடந்ததுவும்
    உப நதிகள் சேர்ந்ததுவும் கிளை நதிகள் பிரிந்ததுவும்
    உலகிற்கே உயிர்நிலையாய் ஊடுருவி விரிந்ததுவும்
    மேடுகளை இடித்ததுவும் மடுக்களை நிரப்பியதும்
    மடை திறந்த போதெல்லாம் மண் செழிக்கப் பாய்ந்ததுவும்
    வழியெல்லாம் வறண்ட பூமி விளைநிலமாய்ச் செய்ததுவும்
    மன்னுயிர் மகிழ்வுற தண்ணீரை வழங்கியதும்
    தருவைகள் தடாகம் இலஞ்சி குளம் குட்டை யென
    தரணியெங்கும் நீர்நிலைகள் தடையின்றி நிரப்பியதும்
    இன்னும் எத்தனை எத்தனையோ நினைவுகள் எண்ணங்கள்
    இவையெல்லாம் பழங்கதை இனி எண்ணி ஏது பயன்?

    முன்னால் இருப்பதோ முடிவில்லாப் பெருங்கடல்
    இதுவரை நான் கண்டறியா இணையில்லா நீர்ப்பரப்பு
    நதியாக நான் இருந்து நடத்திய நாடகங்கள்
    கடலினுள் நுழைந்ததும் காணாமல் போய்விடும்

    இதுநாள் வரை-
    என்னைத் தொடர்ந்துவரும் இடரில்லா நீரோட்டம்
    என் சக்தி என எண்ணி இறுமாந்து இருந்திருந்தேன். இன்றோ
    திரும்பவும் வழியில்லை; நிற்கும் நிலையுமில்லை
    என் இருப்பையே குலைக்க வந்த இடரே அது நன்குணர்ந்தேன்.
    சக்தி என வாழ்வில் நாம் நினைப்பது எல்லாமும் இருமுனைக்
    கத்தி என்று இன்று தெளிவாக உணர்ந்து கொண்டேன்

    வாழ்க்கை என்பதே ஒருவழிப் பாதை தான்
    வென்றது தோற்றது எல்லாமே கனவுகள் தான்
    நற் செயல்கள் ஒன்றே நாம் மறைந்து போனாலும்
    குன்றாது ஒளிர்ந்திருக்கும்; நாட்பட நிலைத்திருக்கும்.
    மாறிவரும் தோற்றங்கள் மாற்றங்கள் இவையன்றி
    மற்றவை நிலைப்பதில்லை. சென்றவை மீண்டு வருவதில்லை.

    வேறு வழி எனக்கில்லை. விரைவாக முடியட்டும்
    விரிந்து நிற்கும் கடலினினுள் என் வாழ்வு அடங்கட்டும்
    ஆர்ப்பரிக்கும் அலை கடலே என்னை நீ விழுங்கிவிடு - என்
    அகம்பாவம் அழித்து உன் தாகத்தை தணித்துக்கொள்

    ஆ ஆ இதுவென்ன நானும் ஓர் அலையாகி
    அடுத்து வரும் ஆற்றுநீரை அன்போடு அணைக்கின்றேன்?
    இதுதானா மரணம்? இதைக்கண்டா நான் பயந்தேன்
    இனி நான் ஆறில்லை அளவில்லாப் பெருங்கடல்
    ஏன் தான் பயந்தேனோ இதை நான் உணராமல்?
    ஆறாய் ஓடியது ஒருவகையில் இன்பமென்றால்
    ஆர்ப்பரிக்கும் அலைகடலாய் மாறியதோ பேரின்பம்.

    இதுவே நடப்பு இதுவே முடிவு
    இதுவே என்கதை எடுத்துரைத்தேன்
    இதுவே வாழ்க்கை இதுவே மரணம்
    இந்த உண்மையை மனிதர் என்று உணர்வாரோ?

    அன்புடன்,
    RRG
    03/08/20
    பின் குறிப்பு:
    என் நண்பர் ஒருவர் கலீல் கிப்ரானின் Fear என்னும் ஆங்கிலக் கவிதையை சில நாட்கள் முன்பு என்னுடன் பகிர்ந்து கொண்டார். அதன் தாக்கத்தினால் விளைந்தது இக்கவிதை.
     
    rgsrinivasan and Thyagarajan like this.
    Loading...

  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,718
    Likes Received:
    12,541
    Trophy Points:
    615
    Gender:
    Male
    @Rrg
    :hello:I commend your efforts in translating the Kali Gibran conceived FEAR of river into chaste tamil. Heart rending and the strong undercurrent of merging fear into conquer blending into one that was large .

    Kudos to Your Great penchant for translation of beautiful meaningful thoughts that drives one to contemplate the oneness in the ultimate.

    I went through for more in link
    Kahlil Gibran on fear

    And enjoyed reading contents therein.
    However one thought crept in mind. Apprehensions of the river not during its journey from its genesis but only when she was closer proximity to ocean but mankind suffers fear invariably throughout It’s journey?!

    Thanks & Regards.

    God Bless.
     
    Last edited: Sep 3, 2020
  3. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    Thanks for your feedback.
    I liked the message and the way it was conveyed by the poet in his poem and wanted to share it the way I understood in Tamil. I am pleased to note that you liked it.
    Cheers
     

Share This Page