1. The Great Big Must Read List : Find Interesting Book Suggestions
    Dismiss Notice
  2. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

Summary Of Chitra.g Novels

Discussion in 'Books & Authors in Regional Languages' started by storiesdetails, Dec 9, 2019.

  1. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    சமயோசிதம் : சித்ரா.ஜி
    “குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்கள்…” என்பது இன்றைய காலத்தில் எங்கு திரும்பினும், ஒரு முழக்கமாக, முணுமுணுப்பாக, உரையாடலாக கேட்டுக் கொண்டிருக்கும் அல்லது கூறிக் கொண்டிருக்கும் ஒரு சொற்றொடர். ஆனால், அப்படி இருக்கக்கூடிய சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? என்றால், இல்லை என்பது தான் திட்டவட்டமான பதிலாக இருக்க முடியும்.

    குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக தயாரிக்கப்படும் கார்ட்டூன் தொடர்கள் கூட, அவர்களுக்கான உலகத்தைப் பற்றிப் பேசுவதில்லை. வீடுகளும் பள்ளிகளும் கூட அவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றியே பேசுகிறது. பின், யார் தான் அவர்களுக்கான உலகத்தைப் பற்றி பேசுவது?

    கதைகள்… ஆம், சின்ன சின்னக் கதைகள் மட்டுமே அவர்களுக்கான உலகத்தை உருவாக்குகிறது. அவர்களைப் பற்றிப் பேசுகிறது. எழுத்தின் வழி… அதனுடனான சொல்லின் வழி… அதில் துளிர்க்கும் கற்பனையின் வழி… அதனுள் விரியும் காட்சியின் வழி… என அத்தனையிலும் அவர்களுக்கான உலகமும் அவர்களின் உணர்வுகளும் புதிது புதிதாகப் பிறக்கின்றன. விளைவு, சிறகுகள் கொண்டு, அவர்கள் பறக்கத் தயாராகின்றனர். எனில், நாம் ஏன் அவர்களுக்கு நம் சுட்டு விரல் கொண்டு அக்கதைகளை காட்டக்கூடாது?

    அப்படிச் சுட்டிக் காட்டக்கூடிய கதைகளில் ஒன்று தான், சித்ரா.ஜி அவர்களின் “சமயோசிதம்” எனும் சிறுவர் கதை.

    குழந்தைகளின் உலகம் மிகச் சிறியது. ஆனால், மிக மிக நுண்ணிய உணர்வுகளைக் கொண்டிருப்பவர்கள். அதை மிகச் சிறப்பாக இக்கதையில் ஆசிரியர் வடித்திருக்கிறார். நட்பு, புரிதல், சமத்துவம் என எத்தனையோ இக்கதையில் அடங்கியிருந்தாலும் கூட, தன்மானம் எனும் மிக மிக நுட்பமான ஒன்றை, ஆசிரியர் மிக அநாயசமாக கையாண்டிருக்கிறார். கூடவே, அதனை நேரடியாகக் கூறாமல், ஒரு சின்னத் தூண்டுதல் மூலமாகவே கதையில் கொண்டு வந்திருக்கும் விதமே இக்கதையின் வெகு சிறப்பான ஒன்று.

    மேலும், தாங்களே வாசித்துப் புரிந்து கொள்ளும், எளிய மொழி நடையில் கதை அமைந்திருப்பதும், கூடுதல் பலம்.
     

Share This Page