1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

*கொரோனா ஈந்த விடுமுறை*

Discussion in 'Regional Poetry' started by Rrg, Apr 27, 2020.

  1. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    *கொரோனா ஈந்த விடுமுறை*

    சுற்றுகிறேன் சுதந்திரமாய் தடையின்றி - இல்லமெல்லாம்
    கொட்டுகிறேன் நீர்க்குடங்கள் தோட்டத்து செடிகளுக்கு
    வெட்டுகிறேன் காய்கறியோ இயன்றவரை துண்டு துண்டாய்
    தட்டுகிறேன் தினமும் கை தயங்காமல் மனைவிக்கும்.

    இருக்கிறோம் தினமும் இறைவன் அடி தொழுது
    பெருக்கிறோம் அன்றாடம் கிடைப்பதெல்லாம் உண்டு
    மறுக்கிறோம் கொரானாவின் கையில் சிக்கிவிட
    வெறுக்கிறோம் நிலையறியா மாந்தர் தம் புலம்பல்.

    நன்று நன்று நன்று எம்
    மனம் நன்று உடல் நன்று குடல் நன்று குணம் நன்று
    கும்பிடும் தெய்வம் ஒன்று
    தினம் எம்மைக் காத்திடும் தேவைக்கு கொடுத்திடும்
    இன்பமே எந்நாளும் துன்பமில்லை.

    என்னைப் பொறுத்தவரை:
    நடந்தேன் நாளெல்லாம் நான்கு மணி நேரம்
    இழந்தேன் ஈரைந்து கிலோ பாரம்
    முனைந்தேன் கவிதையும் கதைகளும் வடித்திட
    அடைந்தேன் அளவிலா மகிழ்ச்சியும் அமைதியும்.

    அன்புடன்,
    RRG
    27/04/2020
     
    rgsrinivasan and Thyagarajan like this.
  2. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,726
    Likes Received:
    12,547
    Trophy Points:
    615
    Gender:
    Male
    ஆடாத மனமும் ஆடுதே
    பாடத மனமும் பாடுதே
    மெட்டி ல்
    அமரும் கவிதை. நன்றி
     

Share This Page