1. The Great Big Must Read List : Find Interesting Book Suggestions
    Dismiss Notice
  2. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

tamil novel lovers

Discussion in 'Books & Authors in Regional Languages' started by deepthiraj, Jun 26, 2014.

  1. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி – (எஸ்.பர்வின் பானு)
    லிங்க் : https://www.amazon.in/பார்த்த-பார்வைக்கு-ஒரு-நன்றி-Tamil-ebook/dp/B083KF4WL1

    உருக வைக்கும் அன்பை மட்டுமே காட்டத் தெரிந்த குடும்பத்தில் பொறாமை சூறாவளி கொண்டு வந்த இடர்களால் சில காலம் துன்பத்தில் அவதிபட்டாலும் முடிவில் இன்பத்தில் வாசலை எட்டிப்பிடிக்கும் கதை.

    பாசம் என்ற சொல்லை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்திருக்கும் பார்வதியின் இரு மகன்களும் அவரின் பிரதிபலிப்பே, காதலை காட்டுவது கூட அப்படியே. அத்தை மகள் உதயபானுவும் சந்திரனும் காதலின் உருகலில் இருந்தாலும் பொறுப்புக்கு முதன்மை இடத்தைக் கொடுத்தவன் அதன்பொருட்டே இந்த உலகத்தில் சில மாதங்கள் தன் அடையாத்தை தொலைத்துப் போகிறான்.

    வயிற்றில் பிள்ளையுடன் தவிக்கும் உதயபானுவின் வாழ்வை நேர்செய்கிறேன் என்று பெரியவர்கள் சந்திரனின் தம்பி சூர்யாவை முன்னிருத்தும் போதும் மேலும் வாழ்வின் மீதான பற்றை விடுபவள் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காகவே நாட்களைத் தள்ளிக் கொண்டு போக, பொறாமை தீயினால் சுட்டெறிக்காமல் தப்பித்த சந்திரன் குடும்பத்தைத் தேடி வரும் போது காதலி தம்பி மனைவியா என்ற ஐயம் அவனை மீண்டும் மறைய செய்கிறது.

    இந்த முறை சூர்யாவின் காதலியால் தன் பிள்ளை பூமியில் வெளிவரும் அந்த நொடியில் கையிலேந்தும் பாக்கியத்தைப் பெற்ற டாக்டர் சந்திரன் புரிதலின் தவறை உணரும் சந்தர்ப்பத்தைக் காலம் வழங்குகிறது.

    இரண்டு காதல் ஜோடிகளும் இனி எதிர்காலமே இல்லை என்ற நினைப்பில் இருந்த காதலை மீட்டெடுக்கின்றனர்.
     
  2. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    பூவே பூச்சூட வா – (நந்தினி செல்வன்)
    லிங்க் : https://www.amazon.in/பூவே-பூச்சூட-வா-தமிழ்-நாவல்-ebook/dp/B083LSX3F4

    இழப்பில் இருந்து கற்றுக் கொண்ட வாழ்க்கை பாடம் சுலபத்தில் மறக்காது.

    தொழில் நஷ்டத்தால் தற்கொலையில் இறந்து போன தந்தையின் ஞாபகத்தைக் கொண்டே தங்களின் வாழ்க்கையைச் செதுக்கிக் கொண்ட பூஜாவை பெரும் செல்வந்தர் வீட்டில் இருந்து பெண் கேட்டு வர மாப்பிள்ளையின் அழகில் மயங்கியவள் திருமணம் நடக்கப் போகும் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு தான் மயக்கம் தெளிகிறாள்.

    மகன் செழியன் ஜாதிவிட்டு காதலிப்பதை பொறுக்காத தந்தை தன் பலத்தைக் காட்டியதால் காதலி வேறு ஒருவனுக்கு மனைவியாகப் போனதை பொறுக்க முடியாமல் இருந்தவனைத் தாய் பாசம் காட்டி பூஜாவுடனான திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்துமில்லாமல் அழகான செழியனின் நண்பனை மாப்பிள்ளையாகக் காட்டி சுமாரான மகனை பூஜாவின் கழுத்தில் தாலி கட்ட வைத்த வேலையும் செய்கிறார். அதற்குப் பரிகாரமாக பூஜாவின் பொருளாதாரக் கஷ்டத்தை மேம்படுத்திவிட எந்த வகையிலும் இதிலிருந்து தப்ப முடியாத நெருக்கடி ஏற்பட்டாலும் கணவன் மனம் மாறும் நாளுக்காகக் காத்திருக்கும் முடிவை கடந்த காலத்தில் வாங்கிய படிப்பனையில் இருந்து பூஜா ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறுவழியில்லை.
     
  3. sweetsmiley

    sweetsmiley Platinum IL'ite

    Messages:
    1,256
    Likes Received:
    3,529
    Trophy Points:
    283
    Gender:
    Female
    can you please share this book link or DM me the book. Thanks
     
    storiesdetails likes this.
  4. sweetsmiley

    sweetsmiley Platinum IL'ite

    Messages:
    1,256
    Likes Received:
    3,529
    Trophy Points:
    283
    Gender:
    Female
    All your narrations are really good, You can write stories
     
    storiesdetails likes this.
  5. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    இது புத்தகத்தில் படித்தேன்.
     
    sweetsmiley likes this.
  6. mindwar

    mindwar Bronze IL'ite

    Messages:
    20
    Likes Received:
    29
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Hi all,

    I like to read tamil books. Can you suggest me some good novels/award winners that got published recently?
     
  7. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    மெய் பேசும் இதயங்கள் - (இந்திரா செல்வம்)
    லிங்க் : https://www.amazon.in/gp/product/B083MX2GPS

    சமூகம் பல முன்னேற்றங்களைக் கடந்தாலும் ஆங்காங்கே காதலுக்கு ஜாதி மூலம் பிரச்சனைகள் வளர்வது வலுப்பெற்று தான் இருக்கிறது.

    எம்.எஸ்.டபிள்யூ பயிலும் தேஜஸ்வினி ப்ராஜெக்ட் செய்ய கோர்ட்டுக்கும் வரும் போது அங்கே அனு அழுது கொண்டிருப்பதைப் பார்த்து தன் கவுன்சிலிங் மூலம் எதாவது உருபடியாகப் பண்ணலாம் என்று தொடர்பவள் அவள் இருப்பிடத்தையும் மற்றும் டிவோர்ஸி என்று தெரிந்து கொள்கிறாள்.

    அனுவிடம் நட்பை ஏற்படுத்தி எதனால் டிவோர்ஸ் நடந்தது என்று அறிய முற்படும் போது அவள் கணவனைப் பார்த்து அதிர்கிறாள். சில வருடங்களுக்கு முன் உருகி காதலித்தவன் அவளை வேண்டாம் என்று ஒரு கடிதம் மூலம் அவளின் வாழ்க்கையில் இருந்து வெளியேறிய நரேன் தான் அவன்.

    இந்த விஷயமே கேஸ் நடத்த தேஜஸ்வினியை தூண்டிவிடுகிறது. அது மட்டும் அல்லாமல் அனு அவன் மேல் வைத்து இருக்கும் காதலை தெரிந்து இருவரையும் சேர்த்து வைக்கத் துடிக்கிறாள்.

    பிறகு உண்மை தெரிகிறது நரேன் தான் அனு கணவனின் லாயர் கணவன் அல்ல. அது மட்டும் அல்லாமல் விபத்தால் குடும்ப வாழ்க்கை வாழும் தகுதியை இழந்ததால் மனைவியாவது வேறு ஒரு திருமணம் செய்து சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று காதல் மனதையும் அடக்கி டிவோர்ஸ் கொடுத்ததாகச் சொல்லும் அவளின் கணவனிடம் அனு எதிர்பார்ப்பு அவனின் அருகாமை மட்டுமே என்று உணர வைத்து சேர்த்து வைக்கிறாள்.

    தேஜஸ்வினியின் தந்தை தான் நரேனின் ஜாதியை காரணம் காட்டி அவளின் வாழ்வில் இருந்து விலக வைத்தான் என்ற உண்மையைச் சொல்லி இந்த இடைபட்ட காலத்தில் தவறை உணர்ந்த தந்தை மூலமே இவர்கள் இணைகின்றனர்.
     
  8. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    தவமின்றி கிடைத்த வரமே – (எஸ்.பர்வின் பானு)
    லிங்க் : https://www.amazon.in/தவமின்றி-கிடைத்த-வரமே-Tamil-பர்வின்-ebook/dp/B083SNL5ZD

    தன்னிடம் பாசம் காட்டும் பெண்களிடம் தாயின் அரவணைப்பை ஆண் தேடுவது இயல்பே என்றாலும் உதறி சென்ற தாயால் மனதில் எவ்வித வஞ்சனையும் வைத்துகொள்ளாமல் தான் தேடும் பெண்ணின் அன்பு கிட்டும் என்ற நம்பிக்கையை வளர்த்து கொண்டிருப்பவனுக்கு மற்றொரு எதிர்பாரா அடி கிடைக்கும் போது தன் பார்வையை முற்றிலும் மாற்றிச் சந்தேகச் சாயலை எதிர்படுபம் பெண்களிடம் காட்டுவதைத் தவிர்க்கவே முடியாது.

    ஷரவந்தியின் அறிமுகமும் அவளைப் பாதுகாக்கும் கரமுமான ரத்னாவின் விவரிப்பு பெண்பிள்ளைகளின் தனிப்பட்ட ஆசை உடைபடும் போது அவர்கள் சமுதாயத்தில் உதவி தேடுபவர்களின் ஆதர்சனமாகி தன் வாழ்வையே அர்ப்பணிக்கும் நிகழ்வாக மாற்றும் நிசர்சனம் பிடிபடும் வேளையில் வாழ்வின் உன்னதத்தைப் புரிந்து கொள்கிறோம்.

    இருக்கும் ஒரே ஆதரவான ரத்னாவின் முடிவு நாட்களை எண்ணிக்கொண்டிருக்க அவர் கைகாட்டும் திசையில் புதிய பயணத்தைத் தொடங்கும் ஷரவந்திக்கு அவமானங்களும் சேர்ந்தே வந்தாலும் அது மனிதர்களின் கோபத்தின் வெளிபாடு என்பதை உணர்ந்தவள் அதை ஒதுக்கிவிட்டே செல்கிறாள்.

    தன் அருகில் அமைதியையும் பொறுமையையும் கொண்ட பாசக்கார பெண் இருக்கும் போது அவளின்பால் சரியும் மனதை தடுக்க இயலாது அதைத் தான் தினேஷும் விக்ரமும் ஒரே நேரத்தில் செய்தாலும் பெண்ணின் நுட்ப மனது அன்பையும் காதலையும் வித்தியாசப்படுத்திக் கொள்ளும்.

    சிறுவயது முதல் பெண்ணின் அரவணைப்பிற்கும் ஏங்கும் விக்ரமனின் கடந்த காலம் இரு பெண்களால் சூறையாடப்பட்டிருப்பதைத் தெரிந்திருந்தாலும் அவனின் கோபம் முன் தன் காதலை மறைக்க முயலும் ஷரவந்தி அவ்விடத்தை விட்டே ஓடமுயன்றாலும் அன்பின் இழை இறுக்கிவிடுகிறது.
     
  9. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    யாளி வீரனும் இந்திர ரகசியமும் - பாகம் 1 – (கிருத்திகா சுப்பிரமணியன்)
    லிங்க் : https://www.amazon.in/gp/product/B07R6DV4VT

    மாய எதார்த்த நாவல் வகை.

    இவ்வகையான நாவல்களின்‌ மையக்கரு எப்பொழுதும் தீமையை அழித்து நல்லதை நிலைநாட்ட அத்தீமைக்கு வலு சேர்க்கும் பொருளை அதன் கைகளில் சேர விடாமல் தடுப்பதே. இதில் இந்திர ரகசியம் என்ற பொருளை அடையத் தன்னைக் கட்டுப்படுத்திய கட்டுக்களை அவிழ்த்து மறு ஜென்மம் எடுத்திருக்கும் நல்லவர்களை அழிக்க முயலும் காமரியின் கதை.

    கதை போக்கிலே மறுபிறவி எடுத்தவர்களை அறிமுகப்படுத்தியிருக்கலாம், அறிமுகத்திற்காகவே கதையின் காட்சிகள் நகர்ந்தது சற்று தொய்வைக் கொடுத்துவிட்டது.

    தன் ஆறு வயதிலே சிம்ம யாளியை அடக்கிய பெருமை கொண்ட ருத்ரனும், பேரரசின் மகளுமான அரண்யாவும் முக்கியக் கதாபாத்திரங்கள் அவர்களைப் பாதுகாக்க வரும் இணைகதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

    முன் ஜென்மத்தில் யாளி வீரன் என்று கொண்டாடப்படும் ருத்ரனின் கையில் எப்படி இந்திர ரகசியம் வந்து சேர்ந்தது என்பதுடன் இப்பாகம் முடிகிறது.
     
  10. storiesdetails

    storiesdetails Junior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    8
    Trophy Points:
    13
    Gender:
    Female
    காதல் வேண்டாம் கண்மணி – (வேதா கோபாலன்)
    காதல் புகுந்த உள்ளத்தில் தன்சார்பு முடிவுகளை மட்டுமே கவனத்தில் கொண்டு அருகில் இருப்பவர்களுக்கும் தண்டனையை வழங்கும்.

    தன் பக்கத்து வீட்டு ஏழைப் பையனான மதனை மருமகனாக மகள் காட்டிய போது சும்மா இருந்த அவளின் தாய் பணக்காரனான சிவக்குமார் பெண் கேட்டு வந்த போது மிரட்டல் மூலம் அக்காதலை பிரித்து வேறு ஒருவனுக்கு மனைவியாக்கியதோட தன் கடமை முடிந்ததாக ஒதுங்கிப் போக, தலைவலி ஆரம்பிக்கிறது சிவக்குமாருக்கு.

    அபிநயாவின் மனதில் மதன் தான் இருக்கிறான் என்று தெரிந்தும் சிவக்குமார் அவளை அடைய போட்ட திட்டம் விரைவிலே சலிப்பை கொண்டுவந்துவிடுகிறது.

    ஐந்து வருடம் படாதுபாடுபட்டு அபிநயாவுடன் குடும்பவாழ்க்கை வாழ்ந்தவன் அவளுக்குக் குழந்தையே பிறக்காது என்று தெரிந்த பிறகு அப்பழியைத் தன் மேல் போட்டுக் கொள்ளும் காதல் கணவனாக இருந்தாலும் மதனை மறக்க முடியாதவள் விவாகரத்து மூலம் பிரிந்து தன் முதல் கணவன் தயவிலே மதனை கைப்பற்றுகிறாள்.

    அவர் அவர்களுக்குத் தங்கள் காதல் தான் பெரியது, பார்க்கும் வகையில் சிவக்குமாரின் பிடிவாதக் காதலே அவனின் வாழ்க்கை தோல்விக்குக் காரணமாகிவிட்டது.
     

Share This Page