1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

பாட்டி பழமொழிக்கதை

Discussion in 'Posts in Regional Languages' started by Rrg, Oct 31, 2018.

  1. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    Dear All
    என் தாயைப் போல் பழமொழியை கையாண்ட இன்னொருவரை நான் கண்டதில்லை. எந்த ஒரு சூழ்நிலைக்கும் ஏற்றவாறு உபயோகிப்பார். அவரை கவனித்தே நான் கற்ற பழமொழிகள் ஏராளம். அவர் நினைவாக இந்த பாட்டி பழமொழிக்கதை.
    முடிந்தால் இப் பழமொழிகளை ரசித்து அனுபவியுங்கள்.
    அன்புடன்,
    RRG

    *பாட்டி பழமொழிக்கதை*

    “என்ன பாட்டி? சௌக்கியமா?”
    “யாரு? கந்தசாமியா? எங்க இவ்வளவு தூரம்?”
    “சும்மா உங்களையெல்லாம் பார்த்திட்டு போகலாம்னுதான்.”
    “சோழியன் சிண்டு சும்மா ஆடுமா? என்ன விஷயம்?”
    “என்ன பாட்டி இப்படி சொல்லிட்டே? உன்னையும் தாத்தாவையும் பார்த்து ரொம்ப நாள் ஆயிட்டதில்லே? ஆமாம், தாத்தா எங்கே?”
    “கழுதை கெட்டா குட்டிசுவரு. அதான் குடும்பத்தையே குட்டிசுவராக்க கவர்மெண்ட் TASMAC ன்னு கடைவச்சிருக்காங்களே அங்கதான். சரி சரி. என்ன சாப்பிடற? ஒரு வாய் மோர் தண்ணி தரவா?”
    “இந்த வெய்யிலுக்கு அதுதான் சவுரியம்.”
    “சும்மா சப்பை கட்டு காட்டாதே. வௌவால் வீட்டுக்கு வௌவால் வந்தால் நீயும் தொங்கு நானும் தொங்கு தான். காப்பியெல்லாம் இங்கே கட்டுப்படி ஆகாது. ஆமாம் கூட யாரு சின்ன பையன்?”
    “என் அக்கா பையன். கூட வரேன்னான். கூட்டிட்டு வந்தேன்.”
    “அது சரி. எள்ளுதான் எண்ணெய்க்கு காயுதுன்னா எலி புழுக்கை எதுக்கு காயுதாம்? வேகாத வெய்யிலிலே இவன் வேறு.”

    “என்ன பாட்டி? நீயே தனியா எல்லா வேலையும் செய்யறயா?”
    “என்னடா பிரமாதம்? யானை முழுங்கியா அம்மையாருக்கு பூனை சுண்டங்கி தெரியுமில்ல.”

    “சரிதான். இந்த வயசுல புள்ளைகிட்ட போய் இருக்க கூடாது? அவன் நல்ல வேலைல தான இருக்கான்? வீடு ஸ்கூட்டர் எல்லாம் வச்சிருக்கான்னு கேள்வி பட்டேன்?”
    “இடித்தவள் புடைத்தவள் இங்கிருக்க எட்டிப் பார்த்தவள் கொட்டிண்டு போனாளாம்.
    ஆயா இங்கே அம்மணம்; கும்பகோணத்திலே கோதானமாம். இதையெல்லாம் எங்க போய் சொல்ல?”
    “ஏன் பாட்டி? அண்ணன் பொண்ணு தானே? அதுவுமா இப்படி?”
    “அதயேன் கேக்குற? முன்னாடியே அண்ணன் பொண்டாட்டி ஆடாத ஆட்டம் ஆடுவா? எவ்வளவோ சொன்னேன். இவதான் வேணும்னு ஒத்தக் கால்ல புள்ளை நின்னான். சரி போன்னு விட்டுட்டேன். இப்போ என்னடான்னா தாய் எட்டடி பாஞ்சா குட்டி பதினாறு பாயரேங்குது.
    ஆரம்பத்தில நம்ம குழந்தைகள் தானே, ஒத்து போயிடும்னு நினச்சு அங்க போனால் எதுக்கெடுத்தாலும் குத்தம் குறை.
    தேளுக்கு மணியம் கொடுத்தா ஜாமத்திற்கு ஜாமம் கொட்டுமாங்கற கதையாய்.
    குரங்கு கள்ளும் குடித்து, பேயும் பிடித்து, தேளும் கொட்டின மாதிரி குதிக்கிறாள்.
    அதுக்கு மேல அவ அம்மா வேற அங்க உக்காந்துண்டு நாட்டாமை பண்ணறா.
    திருட்டு பய கல்யாணத்துல முடுச்சவுக்கி பெரியதனங்கற மாதிரி.
    அவயாறு என்புள்ள வீட்டுல என்ன அதிகாரம் பண்ண?
    பொறுக்க முடியாம போய் புள்ள கிட்ட சொன்னேன். அவன் அதிகாரத்துல ஒண்ணுமே இல்ல அங்க. ஏறச்சொன்னா எருதுக்கு கோவம்; இறங்க சொன்னா நொண்டிக்கு கோவம். நான்தான் நடுவுல மாட்டிண்டு முழிக்கிறேங்கறான்.
    கும்பிட்ட கோவிலே தலையிலே இடிந்து விழுந்த மாதிரி இருந்தது.
    வேண்டாம்ப்பா. எங்கிருந்தாலும் நீ நல்லபடியாய் வாழ்கன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.”
    “தாத்தா ஒண்ணும் சொல்லலியா?”
    “அவருக்கென்ன தெருக்கு தெரு டாஸ்மாக்கு. இந்தவூரும் ஒண்ணுதான்; அந்தவூரும் ஒண்ணுதான் அவருக்கு. புட்டுக்கூடை முண்டத்தில் இது ஒரு பொருக்கி எடுத்த முண்டம்.
    அதுக்கும் சேர்த்து எனக்கு தானே விழுது? அதை விடு. தூர்த்த கிணற்றில் தூர் வார வேண்டாம்.”
    “இங்க சின்ன பையன் வேலை பார்க்கிறானா?”
    “வேலையாவது? மண்ணாவது? விடியாமூஞ்சி வேலைக்கு போனால் வேலையும் கிடைக்காது; அப்படியே கிடைத்தாலும் கூலியும் கிடைக்காது. போற இடத்தில் இருந்தெல்லாம் ‘போன மச்சான் திரும்பி வந்தான் கோமணத்தோட’ கேஸ்தான். வேலைக்கு போகணும்கற ஆர்வம் துளியும் இல்லை. எவ்வளோ சொல்லிப் பார்த்தேன், குந்தி தின்றால் குன்றும் மாளும்னு. கேட்டால் தானே?”
    “அவனை இப்போ எங்கே காணோம்?”
    “நாய்க்கு வேலையில்லை; நிற்க நேரமில்லையாம். எங்கயாவது ஊர் சுத்திண்டு இருப்பான்.
    அப்பப்போ வந்து ‘சித்திரத்து கொக்கே ரத்தினத்தை கக்குன்னா’ நான் எங்கே போவேன். என் கையிலே இருந்ததெல்லாம் அப்பனும் பிள்ளையுமா அழிச்சிட்டானுவ. எப்படித்தான் குடும்பம் நடக்குதோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.”
    “நான் எங்க ஊர்ல வேலை வாங்கி கொடுத்தா வருவானா?”
    “உள்ளூர்ல ஓணான் பிடிக்காதவன் உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா?
    மேலும், ஜாண் பண்டாரத்திற்கு முழம் தாடி கேக்குதாங்கற மாதிரி, பெரிய வேலையா கிடைச்சாத்தான் போவானாம். நீ சொல்றதெல்லாம் அவனுக்கு ஒத்து வராது.
    அப்புறம் சோத்துக்கு வேற சிங்கி அடிப்பான். வேண்டாம்ப்பா.”
    “நீயும் வந்திடு பாட்டி. நானும் பக்கத்தில இருப்பேன்.”
    “கேக்க நன்னா இருக்கு. ஆனால் தாத்தா வர மாட்டார். அவருக்கு கடன்ல குடி கிடைக்கிற இந்த ஊரு தான் சொர்க்கம். இந்த வயசுல அவரை விட்டுட்டு நான் எப்படி வரது?
    எனக்கு கல்லானாலும் கணவன்; புல் ஆனாலும் சரி, full ஆனாலும் சரி புருஷன் தானே?
    போதுமென்ற மனமே போன் செய்யும் மருந்து. நான் இருக்கற கொஞ்ச நஞ்ச நிலத்தையும் ஆடுகளையும் வச்சு காலத்தை ஓட்டிடுவேன். நீ கவலை படாதே. யானைக்கு காலம் வந்த மாதிரி பூனைக்கும் வராதா? ஆண்டவன் இருக்கான். அவனன்றி ஓரணுவும் அசைவதில்லை.
    ஆமாம் நீ எப்படி இருக்க?”
    “வீட்டுக்கு வீடு வாசல்படி தான். சில வாசல்படி பெரிசு; சில படி சிறிசு. அவ்வளவுதான் வித்யாசம்.
    அப்போ நாங்க கிளம்பறோம் பாட்டி.”
    “நீ மகராஜனா நன்னா இருக்கணும். நல்ல படியா போய்விட்டு வா.
    வாழ்க வளமுடன்!”

    அன்புடன்,

    PS: )இது எனக்கு ஒரு புதிய முயற்சி.
    இங்கு பழமொழி கையாண்ட விதம் பிடித்திருந்தால் தெரியப்படுத்தவும்.
    நன்றி
    H
     
    Loading...

  2. ktg

    ktg Senior IL'ite

    Messages:
    150
    Likes Received:
    6
    Trophy Points:
    23
    Gender:
    Male
    Ultimate
     
    Rrg likes this.
  3. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    Thanks Karti.
    Normally I write short stories for comic relief to the readers. Posted over 100 stories in this forum itself. Have posted a dozen or so poems also in this forum.
    For a change thought of writing a story with proverbs. I know there are too many proverbs in the story that never happens in our daily life. As a Tamil language lover, wanted people to get the feel of our olden day proverbs, whose usage has dwindled down of late. Hope it serves the purpose.
    I find you liked the story. Thanks for your encouragement.
    Cheers,
    RRG
     
  4. Adharv

    Adharv Gold IL'ite

    Messages:
    810
    Likes Received:
    951
    Trophy Points:
    188
    Gender:
    Female
    Fantastic sir :worship2: I haven't come across so many mozhigal. :clap2::clap2: Nice to read the story and with so much frustrations and cribbing grandma lives for her families well being and avanga situational mozhigal super :thumbup::thumbup: with little humor u rocked once again. Thank you.
    what does this mean? :confundio1: I could understand the flow but this one I didn't get.
     
    Rrg likes this.
  5. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    தங்கள் பதிவிற்கு நன்றி.
    கதையென்று பெரிதாக இல்லாவிடினும் பழமொழியை எப்படி ஆளுவது என்று ஒரு பாட்டி மூலமாக எடுத்துரைக்க ஒரு முயற்சி தான் இப்பதிவு.

    “இடித்தவள் புடைத்தவள் இங்கிருக்க எட்டிப் பார்த்தவள் கொட்டிண்டு போனாளாம்.”
    நெல்லை இடித்து, உமியை புடைத்து, அரிசியாக மாற்றி வைத்தவள் இங்கிருக்க, அந்த அறையில் எட்டிப் பார்த்தவள் அரிசி அனைத்தையும் தன்னுடையது என்று அவள் கூடையில் அள்ளிக் கொட்டிக்கொண்டு போனாளாம். ஒரு மாமியார் தான் பெற்று வளர்த்து ஆளாக்கிய மகனை நேற்று வந்த மருமகள் தன்னுடையவன் என முழுதும் உரிமை கொண்டாடுவது கண்ட பொருமல் இது.

    “ஆயா இங்கே அம்மணம்; கும்பகோணத்திலே கோதானமாம்.”
    இந்த பழமொழியை உள்ளபடி பாட்டியை சொல்ல விட்டிருந்தால் கொஞ்சம் unparliamentary யாக இருந்திருக்கும். நான் அதை பொருள் சிதைவடையாமல் சற்று மாற்றி எழுதியுள்ளேன். ஒரு தாய் கட்டிக்கொள்ளவே துணி இன்றி தவிக்கையில் அவளை பராமரிப்பதை விட்டுவிட்டு அவள் மகன் தற்பெருமைக்காக வீண் செலவு செய்வதை இந்தபழமொழி குறிக்கிறது. இது தன் பெற்றோரைப் பற்றி கவலையேதும் இன்றி ஆடம்பர வாழ்க்கை வாழும் மகனைக் குறிக்கிறது.
    இப்பழமொழிக்கு இன்னொரு உள் அர்த்தம் உள்ளது. கோதானம் என்பது மூதாதையரின் ஆன்மாவை திருப்தி படுத்துவதற்காக செய்வது. ஒருவன் தன் தாயையே கவனியாது விட்டு விட்டு இன்று உயிருடன் இல்லாத மூதாதையருக்கு என்ன செய்து என்ன பலன்? அவ்வளவும் விரயம் தான்.
    இவ்வாறு வீண் செலவு செய்யும் மகனை இங்கு பாட்டி இந்த பழமொழி மூலம் விமர்சிக்கின்றாள்.
    வருகைக்கு நன்றி!
    அன்புடன்,
    RRG
     
    Last edited: Nov 1, 2018
    vaidehi71, kkrish and Adharv like this.
  6. Adharv

    Adharv Gold IL'ite

    Messages:
    810
    Likes Received:
    951
    Trophy Points:
    188
    Gender:
    Female
    Thank you, sir for taking time to explain in detail. Creating apt situation for every proverb was cool.:thumbup:
     
    Rrg likes this.
  7. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    Thanks Adharv.
    Pleased that you are satisfied with my explanations.
    Cheers
     
    Adharv likes this.
  8. kkrish

    kkrish IL Hall of Fame

    Messages:
    5,608
    Likes Received:
    10,032
    Trophy Points:
    438
    Gender:
    Female
    மிகவும் அருமையாக பழமொழிகளை பொருள் பட எழுதி இருக்கிறீர்கள் .
    உங்கள் முயற்சி பாராட்ட தக்கது
     
    Rrg likes this.
  9. Rrg

    Rrg Gold IL'ite

    Messages:
    886
    Likes Received:
    405
    Trophy Points:
    138
    Gender:
    Male
    நன்றி kkrish,
    முன்னமே கூறியது போல் இது ஒரு புதிய முயற்சிதான். பாராட்டுதல்களைப் பார்த்தால் முயற்சி வெற்றி என்றே தோன்றுகிறது.:blush:
     
    kkrish likes this.
  10. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Wonderful collection.Reminded of my mother.
    varikku vari' pazhamozhi solluvaal.I also tried to be in the world of proverbs.But my children felt that it is a little bit too much to employ proverbs while talking and it just mars the matter.However personally I like the essay ornamented by proverbs.
    Jayasala 42
     
    Rrg likes this.

Share This Page