Want to Know about your Kuladevatha???? Post here

Discussion in 'Astrology Numerology & More!' started by malaswami, Feb 18, 2012.

  1. Bavanisekar

    Bavanisekar New IL'ite

    Messages:
    5
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    தங்களின் மூத்த சகோதரரின் குலதெய்வம் ஆறு /குளம் /ஏரி /குட்டை போன்ற நீர் உள்ள இடத்தில் உள்ளது .
    குரு / சித்தர் /சாது /ரிஷி /முனிவர் போன்ற ஒருவரின் தொடர்பு பெற்றுள்ளது .
    பெண் தெய்வம் , பார்வதி தேவி அம்சமும் , கோவிலில் கோபுரமும் உள்ளது .[/QUOTE]

    Sir,

    Thanks a lot for your help

    with thanks

    Bavani Chandrasekaran
     
  2. dc24

    dc24 Gold IL'ite

    Messages:
    589
    Likes Received:
    575
    Trophy Points:
    188
    Gender:
    Female
    Namaste @Bhaskaran sir
    Please mention some remedies for Pitru and Putra dosham as rahu is on the fifth house with moon.
     
  3. ujwalaray

    ujwalaray New IL'ite

    Messages:
    7
    Likes Received:
    2
    Trophy Points:
    3
    Gender:
    Female
    hi i dont know my kuladevata? Please help , going through a lot of financial trouble, health , legal issues ? I have asked my in laws and their brothers, no one is telling me accurately,each is giving a name ? Please please help
     
  4. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    பித்ரு தோஷம் நீங்க பரிகாரங்கள்!

    ராமேசுவரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம்செய்வதும், காசி, அலகாபாத், பத்ரி நாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்து கொண்டிருந்தாலோ மட்டுமே திலஹோமம்செய்ய வேண்டும். அனைவரும் இயற்கைமரணம் அடைந் திருந்தால், தில ஹோமம் செய்ய வேண்டிய தில்லை.

    பித்ரு சாபம் போக்குவோம்!

    நமது முன்னோர்கள் நம்மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருப்பவர்களாக இருந்திருந்தாலும் கூட, நாம் அவர்களைப் பார்த்துக் கொள்வதிலிருந்து தவறியிருந்தாலோ, அவர்களின் காலத்துக்குப் பிறகு நமது சோம்பலினாலோ அலட்சியத்தினாலோ நம்பிக்கையின்மையினாலோ சரியாக பித்ரு காரியங்களைச் செய்யாமல் இருந்தால், அதாவது நாம் செய்யவேண்டிய தர்மத்திலிருந்து வழுவியிருந்தால், அந்த தர்மமானது நம்மைத் தண்டித்துவிடும். தர்மத்தை நாம் காப்பாற்றினால், அதன்படி நடந்தால், அந்த தர்மமானது நம்மைக் காப்பாற்றும். அதே தர்மத்தை நாம் காப்பாற்றத் தவறினால், அந்த தர்மமே நம்மைத் தண்டித்துவிடும். இந்த தர்மம் பொதுவானது.

    பித்ரு சாபம் நீங்க எளிய பரிகாரம்

    காலையில் எழுந்து பித்ரு காரகனான சூரியனை நோக்கி குளித்த ஈர வஸ்திரத்துடன் நின்று கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபடுவது பித்ரு தோஷத்திற்கு தகுந்த இறை பரிகாரமாகும்.

    ஹரி ஓம் ஹ்ராம் ஹ்ரீம்!சஹசிவ சூரியாய!
    வா வா ஐயும் கிலியும் சவ்வும் வசி வசி ஸ்வாஹா


    இந்த மந்திரத்தை தினமும் காலையில் சூரியனை பார்த்து மேற்சொன்ன முறைப்படி சூரிய பகவானை மனதில் நிலை நிறுத்தி கூறி வந்தால் பித்ருக்களினால் ஏற்படும் தடை நீங்கி வாழ்வில் நன்மை ஏற்படும்.

    பித்ரு தோஷ நிவர்த்தி பூஜை

    இந்த வகை பூஜை முறையானது சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேலாக சித்தர்களும், ரிஷிகளும் கடைபிடிக்கும் வழிபாட்டுமுறையாகும், இந்த தோஷம் ஒருசமயம் சிவனுக்கும் நிகரான அகத்தியர், கொங்கணர் போன்ற முனிவர்களையே தன் சித்திகளை அடையாவண்ணம் தடுத்ததாகவும் வரலாறுகள் சொல்கின்றன

    ஜாதகத்தையும், நவகிரகத்தையும் நம்பி பலவித வழிபாடுகளை - பரிகாரங்களை செய்பவர்கள் தான் செய்ய வேண்டிய பித்ரு கடமையில் அவ்வளவாக ஈடுபாடு காட்டுவதில்லை. இதனால்தான் தொடர்ந்து கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள்.
    முறையாக பித்ரு பூஜை செய்தால், ஜாகத்தில் உள்ள தோஷங்கள் எல்லாம் நிச்சயம் அகன்று விடும். பித்ரு பூஜை வழிபாடு செய்யாமல், நீங்கள் என்னதான் வேள்விகள் செய்து கோவில் கோவிலாக அலைந்து பரிகார பூஜைகள் செய்தாலும் நிச்சயமாக பலன்கள் கிடைக்காது என்பது சித்தர்களின் வாக்கு.
    நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ் மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ் வருடமும் அதே திதியன்று (ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும். நமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தாலும் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்மை எங்கிருந்தோ ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்ந்து இந்துக்களால் நம்பப்பட்டு வரும் ஐதீகம். நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது.
    இந்த தர்ப்பணத்தை செய்ய தவறியவர்கள் , முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசையன்று ஆற்றங்கரையில் அல்லது தன் சொந்த வீட்டில் (ஆண்டுக்கு ஒரு அமாவாசை என நமது ஆயுள் முழுக்கவும்) செய்து வருவது மிகவும் நன்மையையும், அளப்பரிய நற்புண்ணியங்களையும் தரும். சாதாரணமான அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி நட்சத்திரங்களில் வருமானால் அப்போது செய்கிற சிரார்த்தம் ஒரு வருடத்துக்குரிய திருப்தியை உண்டாக்குகிறது அவ்வாறு செய்யப்படும் பிதரு பூஜையானது, பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலத்தையும், பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாக தூங்குவார்கள் என புராணங்கள் கூறுகிறது.
    பொதுவாக தர்ப்பணம் செய்யவேண்டிய பித்ருவர்க்கம்
    1. பிதா - தகப்பனார்
    2. பிதாமஹர் - பாட்டனார்
    3. ப்ரபிதாமஹர் - பாட்டனாருக்கு தகப்பனார்
    4. மாதா - தாயார்
    5. பிதாமஹி - பாட்டி
    6. ப்ரபிதாமஹி - பாட்டனாருக்கு தாயார்
    7. மாதாமஹர் - தாயாருக்குத் தகப்பனார்
    8. மாது: பிதாமஹர் - தாய்ப்பாட்டனாருக்குத் தகப்பனார்
    9. மாது: பிரபிதாமஹர் - தாய்ப் பாட்டனாருக்குப் பாட்டனார்
    10. மாதாமஹி - பாட்டி (தாயாருக்கு தாயார்)
    11. மாது : பிதாமஹி - தாய்ப்பபாட்டனாருக்குத் தாயார்
    12. மாது: ப்ரபிதாமஹி - தாய்ப்பாட்டனாருக்குப் பாட்டி
    மேற்கண்டபடி பொதுவாக 12 பேர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். இவர்களில் யாராவது ஒருவர் பிழைத்திருந்தால் அவருக்கு முன்னோர் ஒருவரை தர்ப்பணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு தர்ப்பணம் செய்யாதது கர்மம் (கடன் ). கர்ம – கடனை தீர்த்துக்கொள்வது இந்துக்களது சமய சாஸ்திர தர்மம்.


    பித்ரு தோஷம் என்றால் என்ன?

    நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம்.அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.

    பித்ரு தோஷத்தை ஜாதகத்தில் கண்டறிவது எப்படி?


    ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகு வுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு.

    உங்கள் பிறந்த ஜாதகத்தில், லக்னத்துக்கு 1, 5, 7, 9 முதலான இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால் நீங்கள் பிதுர்தோஷத்துடன் பிறந்துள்ளதாக அர்த்தம்.

    இந்த பிதுர்தோஷம், நாம் முற்பிறவியில் நமது கணவன் அல்லது மனைவியை கவனிக்காமல் இருந்ததையும், நமது அப்பா அம்மாவை பாடாய் படுத்தியதையும், நமது மகனை அவனது மனைவியுடன் பிரித்து வைத்ததையும், அல்லது நமது மகளை அவளது கணவனுடன் பிரித்து வைத்ததையும், நமது வறிய சகோதரனை அவன் கெஞ்சிக்கேட்டும் அவனுக்கு அவசர உதவிகூட செய்யாமல் பணத்திமிர், அதிகாரத் திமிரில் இருந்ததையும் காட்டுகிறது.

    பித்ரு தோஷம் எதனால் வருகிறது?

    பித்ரு தோஷம் நாம் நம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினாலும், நமது முன்னோர்கள் செய்த பாவங்களினாலும் ஏற்படுகிறது.
    ஒரு ஆண் தன் முற்பிறவியில் தனது மனைவியை கவனிக்காமல் வேறு பெண்ணின் மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில் தனது மனைவியால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
    ஒரு பெண் தன் முற்பிறவியில் தனது கணவனை கவனிக்காமல் வேறு ஆணின் மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில் தனது கணவனால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
    ஒருவர் தன் முற்பிறவியில் தனது பெற்றோர்களை கவனிக்காமல் இருந்தால் பெற்றோர்கள் இடும் சாபம் மறுபிறவியில் பித்ரு தோஷமாக மாறுகிறது.
    ஒருவர் தன் முற்பிறவியில் தனது சகோதர / சகோதரிகளுக்கு துன்பம் இழைத்திருந்தால் இப்பிறவியில் தனது சகோதர / சகோதரிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
    ஒருவர் தன் முற்பிறவியில் முறையற்ற கருச்சிதைவு செய்திருந்தால் இப்பிறவியில் மகப்பேறு இல்லாமல் சந்ததி விருத்தியடையாமல் போகும் நிலையும் அமைகிறது.
    பித்ருக்கள் என்ற சொல் இறந்து போன நமது முன்னோர்களைக் குறிக்கும். தந்தை வழியில் மற்றும் தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்கள் ஆவர். தந்தை வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பிதுர் வழி பித்ருக்கள் எனவும், தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது மாதுர் வழி பித்ருக்கள் எனவும் அழைக்கப்படுவர். மொத்தத்தில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்களே ஆவர்.
    நம்முடைய இந்த உடல், உயிர் மற்றும் பொருள் அனைத்தும் நம் பித்ருக்கள் அளித்ததே. நம்முடன் வாழ்ந்த நம்முடைய முன்னோர்களான நமது பித்ருக்கள் நமக்கு அளித்த இந்த உடல், உயிர் மற்றும் பொருள் இவற்றை நாம் அனுபவித்து வருகிறோம். அவ்வாறு நாம் அனுபவிக்கும் போது நமது பித்ருக்கள் செய்த பாவம் மற்றும் புண்ணிய பலனையையும் சேர்த்தே அனுபவித்து வருகிறோம். நம்முடன் வாழ்ந்து மறைந்த நமது பித்ருக்கள் எப்போதும் நமது நலனையே விரும்புபவர்கள்.
    நமது பித்ருக்கள் நம்முடன் வாழும் போது அவர்களை பேணிக் காத்து பசியினை போக்க வேண்டும். அதே போல் அவர்கள் மறைந்த பின்பும் அவர்களின் பசியைப் போக்க வேண்டும். இதுவே பிதுர்கடன் எனப்படும்.



    பித்ரு தோஷத்தினால் ஏற்படும் தீய விளைவுகள்

    பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது அல்லது மிகவும் தாமதமாக நடக்கும். விவாகரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியினரிடையே அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது. ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள் ஏற்படும். மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. கலப்புத் திரும ணம் நடக்கவும், பெற்றோருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. இந்த தோஷம் உள்ள சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக நடந்து கொள்வதில்லை.

    பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும்


    பித்ரு தோஷம் வருவதற்கான கரணங்கள்:
    கருச்சிதைவு செய்துகொண்டால், இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால், பித்ரு தோஷம் வரும். ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்யவேண்டும். ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை , சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும். தோஷத்தில் மிகக் கொடிய தோஷம் பித்ரு தோஷம். இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிர்ஷ்ட்டமான கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும் பித்ரு தேவதைகளும் தடை செய்கிறார்கள். பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தியுடையது.


    ராமேஸ்வரம் கோவில் சிறப்பு என்ன..?

    இந்த உலக மக்கள் அனைவருக்கும் பித்ரு தோஷம் போக்கும் கோயில- ராமேஸ்வரம் கோவில்

    யாருடைய ஜாதகத்திலாவது பித்துரு தோசம் இருக்கா அப்படின்னா நீங்க போய் வணங்க வேண்டியது இராமநாத சுவாமிளைத்தான். இந்த கோயிலதான் இராமேஸ்வரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில். பித்ரு தோசத்திற்காக இந்தியா முழுவதிலும் இருக்கக்கூடிய அனைத்து ஜோதிடர்களும் சுட்டிக்காட்டும் ஒரே இடம் ராமேஸ்வரம் தான் என்பது அனைவரும் அறிந்த விஷயமே! குடும்பத்தில் யாராவது அகால மரணம் அடைந்துவிட்டாலோ விபத்து, தற்கொலை, காரணங்களால் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இங்கு தர்ப்பணம், திதி கொடுப்பது அவசியமாகும. .அப்போதுதான் அக்குடும்பத்தில் நிம்மதி,சந்தோசம் பெருகும்.

    தேவி பட்டினம் நவகிரக கோவில்

    ராவணனால் கடத்தி செல்லப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்ட சீதை மீட்க வந்த ராமபிரான், தேவிபட்டினம் கடற்கரையில் அமர்ந்து மணலை ஒன்பது பிடி எடுத்து பிரதிஷ்டை செய்தார். அந்த ஒன்பது கற்கள் `நவபாஷாணம்' என்ற பெயரில் நவக்கிரகங்களாக வழிபடப்படுகிறது.

    இந்த ஒன்பது கிரகங்களும் கடலுக்குள் இருப்பது குறிப்பித்தக்கது. நவக்கிரகங்கள் உள்ள இந்த தலத்தில் நீராடினால் மிகவும் புண்ணியம் சேரும் என்பது நம்பிக்கை. நமது முன் ஜென்ம பாவங்களில் விலகி, முன்னோர்களின் ஆசியைப் பெற இது மிகவும் ஏற்ற தலம்.

    இந்த ஒன்பது கிரகங்களையும நவதானியங்கள் வைத்து வழிபட்டால் சகல பலன்களும் கிடைக்கும். ராமமேஸ்வரம் அல்லது ராமநாதபுரத்திலிருந்து இறங்கி இவ்ஊருக்கு செல்லலாம். ராமமேஸ்வரத்திலிருந்து 77 கி.மீ. தொலைவிலும், ராமநாதபுரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

    பித்ரு தோஷத்தை நீக்கும் விஜயாபதி நவகலசயாகம்

    உங்களுக்கு ராஜ யோகம் இருக்கிறது என்று சோதிடர்கள் சொல்லியிருப்பார்கள். ஆனாலும் உங்களுக்கு தொடர்நது கஷ்டங்களும் சோதனைகளும் வந்து கொண்டு இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்கு பித்ரு தோசம் இருக்கலாம்!. எந்த நல்ல பலனையும் தடுக்கும் சக்தி இந்த யோகத்துக்கு உண்டு!.

    ராகு 5ல் இருந்தால் தந்நலம் கருதாதவராக இவர் இருப்பார. ஆனால் இவரது உதவிபெற்று முன்னேறியவர்கள் இவரை உதாசீனம் செய்வார்கள்.

    கேது 5ல் இருந்தால் ஊருக்கெல்லாம் உபகாரியாக இருப்பார். ஆனால் இவர்வீட்டில் இவருக்கு மரியாதை இருக்காது. எல்லாருக்கும் நல்லது செய்யும் இவருக்கு மட்டும வேறு யாரும் நல்லது செய்ய மாட்டார்கள்.

    லக்னத்துக்கு 9ல் ராகு இருந்தால் அப்பா வழி முன்னோர்களின் பிள்ளைகள் பகையாளிகளாக இருப்பார்கள். பூர்விக சொத்துக்கள் அழியும். அல்லது அந்த சொத்துக்கள் சம்பந்தமாக வழக்குகளை சந்திக்க நேரிடும்.
    லக்னத்துக்கு 9ல் கேது இருந்தால் அம்மாவழி,அப்பாவழி முன்னோர்களின் பித்ரு சாபம் இருக்கிறது என்றே அர்த்தம்.!

    கொலை, தற்கொலை போன்ற செயற்கையான மரணத்தினால் அந்த ஆன்மாக்களுக்கு மறுபிறவி இல்லாமல் அலைந்து கொண்டிருக்கும். இதனால் 4ம்,5ம் தலைமுறைகூ்டதோசத்தைஅனுபவிக்க நேரிடும். முன்னோர்களின் சொத்துக்கள் மட்டும் நாம் அனுபவிப்பது இல்லை அவர்கள் காலத்து பாவங்களையும சேர்த்தே நாம் அனுபவிக்கிறோம். பித்ரு தோஷத்தினால்நாம் செய்யும் எந்த ஒரு புண்ணிய காரியமும் நமது கணக்கில் சேரவிடாது தடுக்கும் சக்தி வாய்ந்தது!.

    நவக்கலச யாகம் - ஸ்ரீவிஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவில்

    இந்தியாவில் ஸ்ரீ விஜ்வாமித்திரர் க்கு என்றே தனியாக கோவில்இருக்கிறது. தமிழ்நாடு,திருநெல்வேலி மாவட்டம் ,கூடங்குளம் அனுமின் நிலையம் பக்கத்தில் விஜயாபதி என்ற ஊர் இருக்கிறது. இந்த ஊரில்தான் அந்த ஸ்ரீ விஸ்வாமித்ரர் மகாலிங்கசுவாமி திருக்கோவில்இருக்கிறது. விஜயாபதி என்பது வெற்றிக்கு சொந்தமான இடம் என்று பொருள்.

    கர்மாவை மாற்றும் விதியையும் மாற்றி அமைத்த வித்தகர் இந்த விஸ்வாமித்திரர் மகரிஷிஆவார். இங்கிருந்துதான் உலக வெற்றியின் ரகசியம் ஆரம்பமாகிறது.ஸ்ரீவிஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவில்

    முன்பொருசமயம் ராமனையும் லட்சுமணனையும் தில்லைவனக்காட்டிற்கு இந்த முனிவர் அழைத்து சென்றுயாகம் செய்தார். அந்த யாகத்தை கெடுக்க தாடகை என்னும் அரக்கி வந்தாள். யாகத்தை கத்திட ராமனும் லட்சுமணனும் அந்த தாடகையை கொன்றார்கள். இதனால் அவர்கள் இருவருக்கும் பிரம்மஹத்தி தோஷம்பிடித்தது. அந்த பிரம்மஹத்தி தோசம்நீங்கிட நம்ம விசுவாமித்திர மகரிஷி நவக்கலச யாகம் செய்தார். அவர் யாகம் செய்தஇடம்தான் இந்த விஜயாபதி என்னும் ஊர். சுமார் 350 வருடங்களுக்கு முன்புவரை அது மிகப்பெரிய நகரமாக இருந்ததாம். இந்த விஜயாபதி துறைமுகத்திலிருந்துஇலங்கைக்கு கடல்வாணிபம் செய்துள்ளார்கள்.
    ஸ்ரீவிஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவில் விஜயாபதி
    இங்கே விஸ்வாமித்ர மகரிஷியால் ஹோமகுண்ட கணபதி கோயிலும்,அதையொட்டிவிஸ்வாமித்ரமகாலிங்கசுவாமி கோவில் ம் உருவாக்கப்பட்டது இன்றும் சூட்சுமமாகவிஸ்வாமித்ர மகரிஷி இங்கு வாழ்ந்து வருகிறார்.விஸ்வாமித்ர மகரிஷி அவர்கள் ! இந்த இடத்தோடு சேர்ந்து ஒரு சிறிய கிணறு இருக்கிறது.இந்தக் கிணற்றைத் தோண்டிப் பார்த்ததில்,சாம்பல் நிறைய கிடைத்திருக்கிறது.இந்த சாம்பலை மேல்நாட்டைச் சேர்ந்த சிலரும் வந்து எடுத்துப்போய்,ஆராய்ச்சி செய்து பார்த்ததில், சாம்பலின் வயது 17,50,000 ஆண்டுகள் என தெரிந்துள்ளது.எனவே,இராமாயணம் நிஜம்என்பதற்கு இந்த விஜயாபதி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி கோவில்லும் ஒரு ஆதாரம் ஆகும்
    முடியாது என்ற வார்த்தையை மாற்றி நம்மால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடமே விஜயாபதி ஆகும். இந்த இடத்தில் தான் விஸ்வாமித்திர மகரிஷி தன்னுடைய இழந்த சக்தியை மீண்டும் பெற்று பிரம்மரிஷிபட்டம் பெற தகுதி பெற்றார். விஜயாபதிக்கு திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர்சென்று,அங்கிருந்து .அரசு பஸ் , பிரைவேட் பஸ் பயணிக்க வேண்டும்(காலை 5.00மணி முதல் மாலை 7.30வரை ) அங்கிருந்து,25 கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலோரகிராமமே விஜயாபதி ஆகும் .(இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைப்பட்டிருப்பதுதான்கூடங்குளம் அணுமின் நிலையம் )
    ஸ்ரீவிஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவில் - விசுவாமித்திரர்-விஜயாபதி
    இந்த ஊருக்குப் போய் நவக்கலச யாகம் செய்த பின்னர் 100 நாட்களுக்குள் நீண்ட காலப் பிரச்சனைகள் தீரும். இந்த யாகம் செய்தபின்னர் ஒவ்வொரு அமாவாசைக்கும் நமது ஊரில் இருக்கும் சிவன் கோயிலில் 9 நபருக்கு அன்னதானம் செய்ய வேண்டும் இப்படி 12அமாவாசைகளுக்கு செய்ய வேண்டும். இதன்மூலம் நமது பித்ரு கடன் என்ற பித்ரு தோஷம்நீங்கிவிடும். அதன்பின்பு நமது வாழ்க்கை வளமாகிவிடும்.


    பித்ருக்களின் மனம் குளிரவைக்கும் தில ஹோமம் - விளக்கக் கட்டுரை

    பல ஆயிரக்கணக்கான அன்பர்களின் வருங்கால ஷேமத்தை மனதில் கொண்டு, அவர்கள் வாழ்வில் நிச்சயமாக ஒரு மலர்ச்சியை ஏற்படுத்த , அந்த சர்வேஸ்வரனை முழு மனதாய் தியானித்து - திலா ஹோமம் பற்றி ஒரு முழு விளக்கக் கட்டுரை சமர்ப்பிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.


    தில் என்றால் எள். திலா ஹோமம் ( Thilaa homam ) என்பது எள்ளினால் செய்யப்படும் ஹோமம். சாதாரணமாக பிதுர்க்களுக்கு செய்யும் தர்ப்பனத்திற்கும் , திலா ஹோமத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. திலா ஹோமம் - ராமேஸ்வரம் அல்லது திருப்புல்லாணி ஆகிய இரு இடங்களில் மட்டுமே செய்யப்படுகிறது.


    ராமேஸ்வரம் - நம் நாட்டின் தொன்மை வாய்ந்த புண்ணிய ஸ்தலங்களில் மிக முக்கியமானது. ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ஸ்தாபித்த ராமநாதரால் உலகம் எங்கும் கோடிக்கணக்கான பக்தர்களை வசீகரித்து, பல கோடிக்கணக்கான ஆன்மாக்களின் பாவங்களைக் கரைத்து ஜீவன் முக்தி அடையை செய்யும் தவ பூமி.



    திலா ஹோமம் எங்கே செய்வது? ஏன் செய்ய வேண்டும்? யார் யார் கண்டிப்பாக செய்ய வேண்டும்? என்ன பலன்கள் ஏற்படும் என்கிற உங்கள் மனதில் தோன்றும் கேள்விளுக்கு விளக்கம் இதோ.


    நீங்கள் அந்தணர்களாய் இருந்தால் நீங்கள் செல்லவேண்டிய இடம் திருப்புல்லாணி. மற்ற அனைத்து சமூகத்திற்கும் ராமேஸ்வரத்தில் செய்வது தான் முறை. ஒரு சிலருக்கு ராமேஸ்வரத்தில் தொடங்கி தனுஷ்கோடியில் முடிப்பதும் வழக்கம்.
    திலா ஹோமம் முடித்தவுடன் - சோளிங்கர் சென்று யோக நரசிம்ஹர் ஆலயம் வந்து , தங்களால் முடிந்த அளவுக்கு ( 3 பேருக்கோ, 9 பேருக்கோ, 27 பேருக்கோ ) அன்னதானம் செய்வதும் நல்லது. சோளிங்கர் - திருத்தணி , அரக்கோணம் அருகில் இருக்கும் ஸ்தலம். யோக நரசிம்ஹர் ஒரு மலையிலும், ஆஞ்சநேயர் சின்ன மலையிலும் அமர்ந்து அருள் பாலிக்கின்றனர்.

    பிதுர் தோஷம் நீங்குவதற்கு ஒரே பரிகாரம் இந்த திலாஹோமம் தான். எவர் ஒருவர் குடும்பத்தில் முன்னோர்களுக்கு உரிய தர்ப்பனங்கள் தரப் படவில்லையோ, எவர் ஒருவர் தலைமுறையில் - செயற்கை மரணம் ( கொலை) , ஆத்மாவின் விருப்பம் இல்லாமல் பிரிந்த உயிர் - விபத்துகள் போன்றவை, தற்கொலை , வயதான பெற்றோர்களை சரியாக கவனிக்காமல் , அநாதை இல்லம், முதியோர் இல்லம் போன்றவற்றில் அவர்களை வாட விடுதல் , போன்ற சமபவங்கள் நடந்திருப்பின், அந்த குடும்பத்திற்கு பிதுர் தோஷம் ஏற்படுகிறது. அந்த ஜாதகர் திலா ஹோமம் செய்யாமல் வேறு எத்தனை பரிகாரங்கள் செய்தாலும் அது உரிய நிவாரணம் அளிக்காது.

    எவர் ஒருவர் வாழ்வில் திருமணத் தடை, விவாக ரத்து , நிம்மதி இல்லாத திருமண வாழ்க்கை , முறைகேடான உறவு முறைகள் - அதனால் வழக்கு, வில்லங்கம், குழந்தைகள் இல்லாமை, கர்ப்பசிதைவு, குழந்தைகள் - பெற்றோர் மனம் கோணும்படி வேறு மதம் அல்லது சமூகத்தில் திருமணம் புரிதல், எத்தனையோ உரிய தகுதிகள் இருந்தும் , திறமைகள் இருந்தும் வாழ்வில் அதற்குரிய நிலையை அடைய முடியாமல் போதல், குடும்பத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுதல் , இதோ முடிந்துவிட்டது இந்த வேலை என்று நினைத்துக் கொண்டிருக்கும் கடைசித் தருணத்தில் - நம் கை நழுவி போகும் நிலை , என்று - திருப்தி அடையாத ஆத்மாக்கள் - அந்த தலைமுறையை , அது தாய் தந்தையோ , வாரிசுகளோ - அவர்கள் வாழ்வில் ஏதோ ஒரு வகையில் வேதனை ஏற்படுத்திவிடுகிறது. அப்படி தலைமுறை தலைமுறையாக ஏங்கித் தவிக்கும் ஆத்மாக்களை , சாந்தி அடையச் செய்து - அவர்களின் முழு ஆசீர்வாதம் வேண்டி செய்யப்படும் ஹோமமே இந்த திலா ஹோமம்.


    ஜாதகப்படி - யார் யாருக்கு பித்ரு தோஷம் இருக்கிறது என்பதை எப்படி உணர முடியும்?

    எல்லோருடைய ஜாதகத்திலும் அவரவர் பிறந்த நேரப்படி லக்கினம் கணிக்கப்படுகிறது. மொத்தம் இருக்கும் பன்னிரண்டு கட்டங்களில் , ஒரு கட்டத்தில் " ல" என்று எழுதி இருக்கும். இது அந்த ஜாதகரின் முதல் வீடு என்று அழைக்கப்படுகிறது . கடிகாரச் சுற்றுப்படி 1 முதல் 12 வீடுகள் எண்ணிக்கொள்ளவும். எவர் ஒருவர் ஜாதகத்தில் - 1 , 5 , அல்லது 9 எனப்படும் திரிகோண வீடுகளில் - சர்ப்ப கிரகங்கள் எனப்படும் இராகு அல்லது கேது கிரகங்கள் இருந்தால் - அது பிதுர் தோசமுள்ள ஜாதகம் என்று கருதப்படுகிறது.
    இதைத் தவிர எவர் ஒருவர் ஜாதகத்தில் இரண்டு முக்கியமான வீடுகளும் - பூர்வ புண்ணியம் எனப்படும் 5 ஆம் வீடும், கர்ம ஸ்தானம் எனப்படும் 10 ஆம் வீடும் - பாதிக்கப் பட்டிருந்தால் , அதன் அதிபதிகள் பாவ கிரகங்களால் பாதிக்கப் பட்டிருந்தால் , அந்த அதிபதிகளின் திசை நடக்கவிருந்தால் அவர்களும் பிதுர் தோஷத்தால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று பொருள்.

    இது ஒரு பவர்புல் ஹோமம். முழு மனதுடன் செய்ய வேண்டும். முறைப்படி செய்ய தவறினால் அது செய்பவர்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அது போக முக்கியமான விஷயம் - நம் வாழ் நாளில் ஒரே ஒரு தடவை மட்டுமே இதை செய்ய வேண்டும். சரியாக செய்யப்படும் திலா ஹோமம் , ஒரு சந்ததிக்கே நல்ல வழிகாட்டும்.
    இதை செய்த ஆறு மாதங்களில் - நீங்கள் இதைக் கண்கூடாக உணர முடியும். உங்கள் வாழ்வில் ஒரு திருப்பு முனை நிகழும்.


    கிட்டத்தட்ட ஐந்து - ஆறு மணி நேரம் இந்த ஹோமம் செய்யப்படுகிறது. பெரும்பாலான நேரம் இடுப்பளவு தண்ணீரில் நிற்க வேண்டும். ஆதலால் நீங்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்கும் நாளில் இதை செய்வது நல்லது. உங்கள் ஜாதகப்படி பலம் பொருந்திய நாளில் இதைச் செய்வது நல்லது. பெரும்பாலும் அதிகாலை நேரத்தில் செய்ய ஆரம்பித்தால் , காலை 11 மணி அளவில் தான் முடியும். அந்த தினம் இரவு ராமேஸ்வரத்தில் தங்கி , மறுதினம் நீங்கள் ஊருக்கு கிளம்புவது நல்லது.

    யோக பலம் பொருந்திய நாளை எப்படி தெரிந்து கொள்வது ?
    உங்கள் லக்கினத்திலிருந்து - 9 ஆம் வீட்டுக்கு உரியவரின் கிழமை உங்கள் வாழ் முழுவதும் - யோகமான நாளாக கருதப்படும். உதாரணத்திற்கு நீங்கள் மேஷ லக்கினத்தில் பிறந்து இருந்தால், 9 ஆம் வீடு தனுசு. அதற்கு அதிபர் - குரு பகவான். ஆகவே வியாழக்கிழமை - உங்களுக்கு யோகமான நாள்.
    ஆகவே மேஷ லக்கினத்தில் பிறந்தவராக இருந்தால் - ஒரு வளர்பிறை வியாழக்கிழமையில், உங்கள் ராசிக்கு சந்திர அஷ்டமம் இல்லாத நாளில் - திலா ஹோமம் செய்து , அன்று இரவு தங்கி, வெள்ளிகிழமை ராமேஸ்வரத்திலிருந்து கிளம்புதல் நலம். இதைபோலே , உங்கள் ஜாதகப்படி யோகமான நாளைத் தெரிந்துகொண்டு செயல்படவும்.

    அனைவருக்கும் அந்த சர்வேஸ்வரனின் ஆசிகளும், முன்னோர்களின் ஆசிகளும் கிடைக்க பிராத்திப்போம்.
     

    Attached Files:

  5. ujwalaray

    ujwalaray New IL'ite

    Messages:
    7
    Likes Received:
    2
    Trophy Points:
    3
    Gender:
    Female

    Unable to read Tamil pdf , have tried various google translate options but in vain ,Unable to send you dob and other details via a private message,Please help.
     
  6. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    Double click my name
    you see a new dialogue box
    Click at start conversation.
    Now you can send a private message .
     
    Last edited: Sep 28, 2018
  7. ujwalaray

    ujwalaray New IL'ite

    Messages:
    7
    Likes Received:
    2
    Trophy Points:
    3
    Gender:
    Female
     
  8. ujwalaray

    ujwalaray New IL'ite

    Messages:
    7
    Likes Received:
    2
    Trophy Points:
    3
    Gender:
    Female
    I did not understand.
     
  9. dc24

    dc24 Gold IL'ite

    Messages:
    589
    Likes Received:
    575
    Trophy Points:
    188
    Gender:
    Female
    Respected Sir
    I'm a North indian hence unable to understand Tamil.
    If possible, kindly send in English. That would be a great help.
    Thanks a lot
     
  10. Bhaskaran

    Bhaskaran Silver IL'ite

    Messages:
    375
    Likes Received:
    52
    Trophy Points:
    68
    Gender:
    Male
    please watch in the link below


    Pitra Dosh: Ancestors are Calling eBook: Himanshu Shangari: Amazon.in: Kindle Store

    Buy Shiva Rudraksha Ratna Pitra Dosh Upri Badha Nivarak Yantra Online at Low Prices in India - Amazon.in

    Buy Pitra dosh Nivaran Yantra/Pitro Dosss/Pitru dosh Nivaran Yantra for Good Luck, Success and Prosperity Online at Low Prices in India - Amazon.in

    Raviour Lifestyle Shree Pitra Dosh Nivaran Yantra
    Please refer my earlier reply in this thread.

    Also you can see more remedies in youtube in your prefered languages.
    Effects of Pitru Dosha

    • No Male Child to continue the Gotra
    • No children at all
    • Frequent abortions
    • Disputes between siblings, leading to seperations
    • Son discontinuing educating or career without proper reason
    • Children refusing to marry
    • Cannot find suitable person to marry
    • Physical or social restrictions block marriage and progeny
    • Kids getting addicted to alchohol or drugs
    • Children dying before carrying on till next generation
    • Mentally or Physically challenged children being born
    • Cracked walls, leaking water pipes, ever runnings taps, spilling of boiling milk frequently
    • Mosquitoes, cockroaches and ants in house despite heavy pest control
    • Always in debts and losses in business.
    • Frequent change of job or no job at all
    • Children disrespecting elders.
    • Vedic Remedies to reduce Pitru Dosha Effects
      No remedy can completely nullify a dosha as one has taken birth to experience his/her karmic debt and clear it.But few methods can reduce the intensity of those effects.
      • Take blessings from parents everyday before leaving the house
      • Perform religious rights prescribed for deceased ancestors regularly
      • Feel sorry in your mind for past deeds
      • Donate atleast 5-10% of your income to physically or mentally handicapped people
      • Try to maintain good relations within the family and siblings.
      • Taking responsibility for the marriage of a girl preferably of a poor family to obtain the grace of God and ancestors.
      • Water the Banyan tree and observe fasting during nights of fullmoon and newmoon days
      • Contact vedic persons at TRIMBAKESHWAR TEMPLE AND DO THILA HOMAM , AND NARAYANA NAG BALI POOJA IF ANY ONE DIED UNNATURALY IN YOUR FAMILY.
     
    Last edited: Oct 18, 2018

Share This Page