1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

படமும் கவிதையும் - Picture & Poetry

Discussion in 'Regional Poetry' started by jskls, Jun 15, 2016.

  1. anupartha

    anupartha Gold IL'ite

    Messages:
    220
    Likes Received:
    975
    Trophy Points:
    190
    Gender:
    Female
    Long time no see all. How is everybody??..Right, I havent been around for quite some time. And I see no post here after July I guess. So here's my take. Not a very good write up..but decent enuf to start the convo. ok.

    DSC_0593.JPG
    உயிருக்கா அன்றி உணுவுக்கா இந்த ஒட்டம்
    உயிர்காக்கும் உணவை பெற்றிட
    உயிர் கொடுத்து ஓடும் ஓட்டம் இது
    உணவும் உயிரும் இரண்டற கலந்திருக்கும்
    வாழ்வின் தத்துவத்தை உணர்த்தும், இந்த
    சிற்றணிலின் ஓட்டம்.
    Now c'mon it's your turn..let's see.
     
    kaniths, GoogleGlass, jskls and 2 others like this.
  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Hi Anu
    Good to see you here! And thanks for reviving this thread again. That was lovely one on squirrel
     
    anupartha likes this.
  3. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,889
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஒவ்வொறு முறையும்
    நீ கடந்து செல்கையில்
    எகிறும் இதயத்துடிப்பு
    காதலனை கண்ட
    காதலியாய் அல்ல
    வண்டியில் அடிபடாது
    நீ தப்பித்ததால்
     
    kaniths, stayblessed, Amica and 4 others like this.
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ஆபத்தை நோக்கி ஓடும்
    தன் குழந்தையை காக்க
    எதிரே வருவது பற்றி
    கவலை கொள்ளாமல்
    ஓடி கொண்டு இருக்கும்
    தாய்மையை வணங்கி போற்றுவோம்
     
  5. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    முன்னிருக்கும் சாலை
    என் கண்ணிமைக்குச் சமமே
    கண்ணிமைக்கும் கணத்தில்
    கடந்திடுவேன் மனமே
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @pgraman வாங்க வாங்க கல்யாண மாப்பிள்ளை எப்படி இருக்கீங்க .
    கண்ணிமைக்கும் நேரத்தில் கவிதை புனையும் கவிஞரே உங்கள் கவிதை பயணத்தை மீண்டும் தொடருங்கள்
     
    pgraman likes this.
  7. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    மா, எப்படி உங்களுக்கு தெரியும் கல்யாணம் னு..... முக நூல் வாயிலாகவா.....

    நன்றாக உள்ளேன்....தாங்கள் எப்படி உள்ளீர்கள் :)
     
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Aamam Ram. Muganool vaayilaaga therinthu konden
    Nalamaaga irukkiren.
     
    pgraman likes this.
  9. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    அருமை மா...இன்னும் மாதமே உள்ளது
     
    periamma likes this.
  10. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    அழகான படம் ! இந்தப் படத்தை மகனிடம் காண்பித்தேன். அழகாய்ப் பாடினான், மழலைப் பாடல்களுள் ஒன்றை.

    அணிலே,அணிலே ஓடி வா !
    அழகு அணிலே ஓடி வா !
    கொய்யாமரம் ஏறி வா !
    குண்டுப்பழம் கொண்டு வா !
    பாதிப்பழம் என்னிடம்,
    மீதிப்பழம் உன்னிடம்,
    கூடிக்கூடி இருவரும்
    கொறித்துக் கொறித்துத் தின்னலாம் !

    ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்னர் வரை கூட அணில் அதை நம்பி வந்தது. பங்கிட்டு மகிழ்ந்தது. ஆயினும் இன்று காலம் மாறியதை அந்தப் புத்திசாலி அணில் புரிந்து கொண்டது. அழகாகப் பேசி நம் பங்கையும் மனிதரே எடுத்துக் கொள்வார்களாகையால், நாம் சேகரித்த உணவை நம் குடும்பத்திற்குக் கொடுக்க எடுத்துக் கொண்டு நம்மிருப்பிடம் ஓடிச் சென்று விடுவோமென்று துள்ளி ஓடுகின்றது ! :smile:


    வீசிய கால் தரைபாவாமல் தாவி
    உன்னிரை தேடிச்சேர்த்துப் போகும்,
    தேவதைகளின் குறியீடாய் உள்ள
    தேகஞ்சிறுத்த அணிற்பிள்ளையே !
    வசிப்பிட மரத்தையாவது
    விட்டுவைத்திருக்கிறானா மனிதன் ?
    பட்டு வாலினைப் பத்திரப்படுத்து !
    தொட்டுப் பார்க்குமாசை என்னுள் !
    கைப்பட்டுன் மேனி சிலிர்ப்பதை
    எண்ணினாலும் எனக்கும் சிலிர்க்குமே !
     

Share This Page