1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    YT - மழைக்குள்ளே நனையும் - மெல்லிசை

    Singers: Shreya Ghoshal, Haricharan
    MD: Sam C.S

    இந்த படத்திற்கு முதலில் புரியாத புதிர் என்று பெயரிட்டு பிறகு மெல்லிசை என்று பேரை மாற்றி விட்டார்கள்.

    இந்த பாடலில் காட்சி அமைப்பு/இசை/பாடல் வரிகள்/பாடிய விதம் அத்தனையும் அருமையோ அருமை. ஆரம்பத்தில் வயலின் வாசிப்பில், காட்சி அமைப்பில் மனம் ஒன்றி போய் விடும்போது, எதிர் பாரா தருணத்தில் பாடல் வரிகள் காதில் தேனாக வந்து பாயும்.

    எந்த வரிகளை போடுவது எந்த வரிகளை விடுவது என்று தெரியவில்லை. பாடல் கேட்டு/பார்த்து எத்தனை மணி நேரங்கள் போனாலும் ஏனோ இந்த வரிகள் மட்டும் என் மனதை விட்டு போக மறுக்கிறது:

    மழைக்குள்ளே நனையும்
    ஒரு காற்றே போல அல்லவா மனம்
    உனை பார்க்கும் போது
    எந்தன் வார்த்தை ஊமை எனவே மாறும்
     
    stephanchennai likes this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    எனது நெருங்கிய நண்பர் ஒருவர் என்னை சமீபத்தில் பார்க்க சொன்ன படம் - மாநகரம். முதலில் அவருக்கு எனது நன்றி!

    கண்டிப்பாக இந்த படம் பார்க்கலாம். விறுவிறுப்பான திரைக்கதை. அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை யூகிப்பது கடினம். யாரையும் சாகடிக்காமல் விட்டது பிடித்தது. 'Dark' காமெடி படத்திற்கு இன்னும் பிளஸ். முரட்டு சுபாவம் உள்ள நல்லவரான ரொமான்டிக்கான அந்த ஹீரோ பெரும்பாலான இளம் பெண்களை ஈர்ப்பார். இன்று அந்த படத்தில் இருந்து ஒரு பாடல்..அனைத்து வரிகளும் இந்த பாடலில் பிடித்தது.

    இந்த பாடலில் ஒரு செம feel --> இளம் வயதில் கன்னா பின்னா வென்று யாரோ ஒருவர் பின்னால் சுற்றி இருந்தால் இந்த பாடலை கேட்கும்போது அந்த நபர் கண்டிப்பாக நினைவிற்கு வந்து போவார். :wink: பவர் பாண்டி படத்தில் வருவது போல அந்த நபரை தேடி போய்டாதீங்க..அப்புறம் குடும்பத்தில் குழப்பம் வந்துடும்..:wink:

    YT - ஏண்டி உன்ன பிடிக்குது - மாநகரம்

    ஏண்டி உன்ன பிடிக்குது
    ஏதோ ஒன்னு இருக்குது
    ஓர பார்வையா
    மயக்கும் வார்தையா
    வேறயா தெரியல
     
    stephanchennai likes this.
  3. stephanchennai

    stephanchennai New IL'ite

    Messages:
    10
    Likes Received:
    1
    Trophy Points:
    3
    Gender:
    Male
    Good taste..
     
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    எந்த வித பாகுபாடு இன்றி எல்லோருடனும் சகஜமா பழகினாலும் எனக்கு தமிழ் பேசறவங்களை தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களை கொஞ்சம் அதிகமாக பிடிக்கும். அதுக்கு முக்கிய தனிப்பட்ட காரணம் அவர்களுடன் என்னால் அதிகமாக கனக்ட் ஆக முடியும் என்பதால் தான். (இன்னொன்றையும் குறிப்பாக சொல்லி கொள்கிறேன் - என்னுடைய நெருங்கிய நண்பர்கள் வட்டம் தமிழர்களை மட்டும் சார்ந்தது அல்ல. நட்புக்கு ஆண் பெண் பேதம் நான் பார்த்ததில்லை. என்னோட நெருங்கிய ஆண் நண்பர்களில் ஒருவர் வட இந்தியர். 12 வருடங்கள் கடந்தும் இன்றும் தொடர்கிறது எங்களது நட்பு. )

    இன்று எனக்கு தோன்றிய எண்ணம் - ஏன்டா சிலருக்கு தமிழ் படிக்க தெரியுது? என்று. இப்படி எனக்கு தோன்றுவது அரிதிலும் அரிது. இப்படி இன்று நினைத்ததிற்கு தமிழ் தாயே என்னை மன்னித்து விடுங்கள்.

    தமிழ் தாய்க்காக கவிஞர் பாரதிதாசன் வரிகளில், PS இன் குரலில், MSV-TKR இன் இசையில் ஒரு கருப்பு வெள்ளை பாடல்..

    YT - தமிழுக்கு அமுதென்று பேர் - பஞ்சவர்ண கிளி
     
  5. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இது ஒரு சிம்பிள் ரொமான்டிக் மெலடி. பாடல் கேட்பதற்கு இனிமையாக இருந்தது. கருப்பு வெள்ளை பாடல்கள் கேட்க ஆரம்பித்ததில் இருந்து எனக்கு PBS/PS காம்பினேஷன் ரொம்ப ரொம்ப பிடிக்க ஆரம்பித்து விட்டது.

    Singers: PBS, PS
    MD: MSV-TKR
    Lyricist: Kannadasan

    YT - போக போக தெரியும் - சர்வர் சுந்தரம்

    கள்ள விழி கொஞ்சம் சிரிப்பதென்ன
    கைகள் அதை மெல்ல மறைப்பதென்ன
     
    vaidehi71 likes this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    இந்த பாடல் ஆரம்பத்தில் வரும் இசை, நீர் துளிகளை, ripples அழகாக காட்டும்.

    PBS குரலை போலவே AM Rajah வின் குரலும் மென்மையிலும் மென்மையாக இருக்கிறது. PS குரல் - தேனினும் இனிய குரல்.

    கவிஞர் கண்ணதாசனின் வரிகளை பற்றி நாள் முழுதும் பேசிக் கொண்டே இருக்கலாம்..இந்த மாதிரி வரிகள் கேட்டால் மனசு மயங்கி மயங்கி திரும்ப திரும்ப இந்த பாடலை கேட்க சொல்லாதா என்ன? :wink::wink:

    "நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது"
    "நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம் கானம் பாடுவோம்"


    YT - நிலவும் மலரும் பாடுது - தேன் நிலவு

    நிலவும் மலரும் பாடுது
    என் நினைவில் தென்றல் வீசுது
    நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது
     
    vaidehi71 likes this.
  7. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    singapalsmile and vaidehi71 like this.
  8. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    YT - கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே - Paadum paravaigal - IR/ SPB/SJ

    நீ பார்த்ததால் தானடி சூடானது மார்கழி
    நீ சொன்னதால் தானடி பூ பூத்தது பூங்கொடி
    தவம் புரியாமலே ஒரு வரம் கேட்கிறாய்
    இவள் மடி மீதிலே ஒரு இடம் கேட்கிறாய்
     
  9. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    YT - இதழில் கதை எழுதும் நேரமிது

    நாளும் நிலவது தேயுது மறையுது
    நங்கை முகமென யாரதைச் சொன்னது
    மங்கை உன் பதில் மனதினைக் கவருது
    மாறன் கணை வந்து மார்பினில் பாயுது


    Bonus song

    YT - வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது
     
  10. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    YT - ராஜ ராஜ சோழன் நான்

    கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே
    கை நீட்டும் போது பாயும் மின்சாரமே
    உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
    இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்
    இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
    அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்
    உன் ராக மோகனம் என் காதல் வாகனம்
    செந்தாமரை செந்தேன் மழை என் ஆவி நீயே தேவி

    YT - மகராஜனோடு ராணி வந்து சேரும்
     

Share This Page