1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஆதலால் காதல் செய்வோம் !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Aug 18, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    கயலுலாவும் நதியில், நீந்துகின்ற மதியே !
    துயிலிலாத விழிகள், ஏந்துகின்ற கனவே !
    புயலிலாத பொழுதில், கொட்டுகின்ற மழையே !
    நீயிலாது போனால், ஏதிவற்றில் அழகே ?


    அலர்த்தடாகக் கரையில், நீரெடுக்க வருவாய் !
    மலர்ந்த தாமரைகளை, நாணஞ்சூடச் செய்வாய் !
    கலைந்த கூந்தற்கற்றை, கோதும் கோதையுன்னை
    மலைத்துப் பார்ப்பதற்கே, மோதும் ஆசையுள்ளே !


    நீரிலாடிக் களிக்கும், நங்கையுன்னைக் காணத் ,
    தேரிலேறி அருளும், தெய்வமாகத் தோன்றும் !
    வாரியணைத்துக் கொள்ள, வஞ்சியுன்னைக் கொஞ்ச,
    கோருமனதை அடக்கப் , பாடுபடுவேன் நானும் !


    அழகையள்ளிப் பருகக், காலமென்று கூடும் ?
    தழுவியுன்னை நடக்க, நேரமென்று வாய்க்கும் ?
    நழுவப் பார்ப்பதேனோ, நெஞ்சமெனக்குத் தெரியும் !
    மெழுகாய்க் கரையுதுள்ளே, காதலென்று புரியும் !


    தேனும் வெல்லப்பாகும், சேர்த்தெடுத்தவள் நீ !
    நானும் காதலிக்க, வாய்ப்பளித்தவள் நீ !
    மெளனமாக மனதைக், களவெடுத்தவள் நீ !
    ஆனபோதும் அன்பைப் பூட்டிவிட்டவள் நீ !


    ஊருமுறவும் வாழ்த்தக் , கரம்பிடித்துக் கொள்வோம் !
    நாரும் பூவுமாக, ஒன்றிணைந்து வாழ்வோம் !
    வேரும் விழுதுமாகக் , குலவிருட்சம் தழைப்போம் !
    தீருங்காலம் வரையில், காதலித்துக் களிப்போம் !


    பூத்திருக்கும் உன்னை, ஆயுளுள்ள வரையில்
    காத்திருக்க விரும்பிக், காத்திருக்கிறேன் நான் !
    வாத்தியங்கள் முழங்க, வாழ்த்துரைகள் எழும்பத்,
    தோத்திரங்கள் செய்து , சேர்ந்திருக்கலாம் வா !



    Regards,

    Pavithra
     
    Gaiya3, kaniths, suryakala and 5 others like this.
    Loading...

  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அருமையான காதல் கவிதை பவித்ரா!
     
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவித்ரா ஏன் வரவில்லை என்ற கேள்வி மனதில் இருந்தது .இப்போது புரிந்து கொண்டேன் .காதல் சுகங்களை அசை போட்டு கொண்டு இருந்ததே இதற்கு காரணம் என்று அறிந்து கொண்டேன் .அழகான கவிதை .இனிய கவிதை
     
    PavithraS, kaniths and jskls like this.
  4. Caide

    Caide IL Hall of Fame

    Messages:
    6,460
    Likes Received:
    10,829
    Trophy Points:
    438
    Gender:
    Female
    lovely super
     
  5. aasaiajiith

    aasaiajiith Silver IL'ite

    Messages:
    267
    Likes Received:
    207
    Trophy Points:
    93
    Gender:
    Male
    மிரள வைக்கும் இனிமை ஒவ்வொரு வரிகளிலும் !!
     
    kaniths likes this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    காதல் கவிதைகளுக்கு அஜித் பதில் தந்து விடுவார் .அவருக்கு பிடித்த சப்ஜெக்ட் ஆச்சே
     
    kaniths and jskls like this.
  7. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    aathalaal kathaal seivorai
    kaathalukkum atharku yaetraarpola
    vandhu vizhum vaarthaikalukkum vaazhththiduvom
     
    jskls likes this.
  8. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,879
    Trophy Points:
    470
    Gender:
    Female
    அன்பு மகள் பவித்ரா @PavithraS ,

    கன்னியைக் காதலிக்கவா?
    காதலைக் காதலிக்கவா ?
    கவிதையைக் காதலிக்கவா ?
    கவிஞரைக் காதலிக்கவா ?

    நிச்சயம் குழப்பம் என்னைக் காதலிக்கிறது !
    அழகு கவிதை அருஞ்சுவைத் தமிழில்.
    மனம் நிறைந்த பாராட்டுக்கள்!
     
  9. aasaiajiith

    aasaiajiith Silver IL'ite

    Messages:
    267
    Likes Received:
    207
    Trophy Points:
    93
    Gender:
    Male

    ஒரு வகையில் இக்கருத்தை ஒப்புக்கொள்கிறேன் வருத்தமின்றி சிறு திருத்தத்தோடு, பிடித்த எனும் வார்த்தையை தெரிந்த என்று மாற்றினால்
    சாலை பொருத்தமாக இருக்கும் .
     
    periamma likes this.
  10. kaniths

    kaniths IL Hall of Fame

    Messages:
    5,628
    Likes Received:
    11,612
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Unga tamizh en mandaila nalla uraikkanumnu azhuthi azhuthi bold la ezhuthineengala? :D Kidding, lovely! :)
     
    PavithraS and jskls like this.

Share This Page