1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சந்தனத் தென்றல் - ஸ்ரீஜோ!

Discussion in 'Stories in Regional Languages' started by Sivasakthigopi, Apr 27, 2016.

  1. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Thank you so much Sakthi for posting this story here up on my request.:worship2:

    Last rendu update ippathan inga padichen. Super Sakthi kalakareenga. :thumbup:
     
  2. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    Its ok Priya! :thumbup:
     
  3. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    சந்தனத் தென்றல் - ஸ்ரீஜோ

    அத்தியாயம் - 6


    "யார் சொன்னது? எங்களுக்கு கல்யாணம் ஆகலைன்னு?"

    அனைவரும் அதிர்ந்து எழ,

    "இது என் மனைவி. திருமதி. சந்தனா மதிவதனி பார்த்திபன்."

    அவள் கழுத்தில் இருந்த செயினை வெளியே எடுத்து போட்டவன், "இது நான் கட்டின தாலி, நல்லா பார்த்துக்கோங்க இது எங்க பரம்பரை வைரக்கல் பதித்த மாங்கா காசு. எங்க அம்மா இவளுக்கு தந்தது."

    அப்போது வந்த ராமசாமி, "இது இவங்க திருமண புகைப்படம். இதுல பெரியய்யா, பெரியம்மா ரெண்டு பேரும் இருக்காங்க" என்று காட்டினார்.

    "எங்களுக்கு கல்யாணம் முடிஞ்சு 4 வருஷம் ஆய்டுச்சு. இவ சென்னைல படிச்சதால இங்க வரதில்ல. வீட்டுல நடந்த கெட்டதுக்கு கூட அவ வர முடியாம போயிடுச்சு. அப்ப அவ முக்கிய வேலையா வடநாடு போயிருந்தா. இங்க நிலைமை சரி ஆனதும் அலைசுக்கலாம் அப்டின்னு, நான் மட்டும் போயி பார்த்துப்பேன். இவ இங்க வராம பாத்துக்கிட்டேன். இங்க வரணுங்கர ஆசைல என்கிட்ட சொல்லாம வந்துட்டா. நானும் கல்யாணம் முடியற வரைக்கும் இருக்கட்டும்னு விட்டுட்டேன். எங்க கல்யாணத்த நான் மறைக்கல. சொல்லல. அவ்ளோதான்." என்றவன் "வதனி வா" என்று அவளை அழைத்துக்கொண்டு சென்றான்.

    ஊர் பெரியவர்கள் நகர முயல, அவர்களை ராமசாமி அமரச் சொன்னார்.

    மேலே அவளை அறையில் விட்டவன் கீழே வந்தான்.

    "இப்ப சொல்லுங்க"

    "என்ன தம்பி சொல்ல?"

    "பிராதுன்னு வந்திங்க. இப்ப என்ன?"

    "இல்ல தம்பி"

    "சின்னதுரை இனி என் மனைவியோட நிழல தொட்டாலும் அவன அடிப்பேன். சொல்லி வைங்க"

    "சரி தம்பி"

    அனைவருக்கும் மோர் தர ஏற்பாடு செய்தான்.

    அனைவரும் கிளம்ப, அவர்களோடு வந்த சுப்பையா வீட்டிற்கு திரும்பினார்.

    ராணி, "ஏங்க, என்ன சொன்னாக? அந்த பிள்ள எங்கிங்க?"

    "அந்த பிள்ள மதிக்கு ஒன்னும் ஆகலின்களே அப்பா" என வினவினாள் பாரதி.

    மற்ற மூவரும் ஆவலாய் பார்க்க,

    "ஷ். மருவாதி இல்லாம பேசாதிங்க புள்ள. அவுக நம்ம பெரியம்மா புள்ள"

    "என்ன சொல்லுதீய?" என ஆச்சர்யத்தில் வினவ,

    "ஆமாம் பிள்ள. நம்ம பெரியதம்பி அவுக சம்சாரம் புள்ள"

    "எப்படிங்க, எப்ப கல்யாணம் ஆச்சுது? சின்னதுரைல கூட்டி போனதா சொன்னாக, பெரிய தம்பி எப்புடி இதுல வந்தாக?"

    "அவுகளுக்கு கல்யாணம் முடிஞ்சு 4 வருசமாகுதாம் புள்ள. நேத்து சின்னதுரை அவுகள தோப்பு வீட்டுக்கு கட்டாயபடுத்தி கூட்டிட்டு போக பாத்து இருக்காக. அந்நேரம் நம்ம அம்மா, அவுகள ஏமாத்தி, நம்ம பெரிய தம்பி வீட்டுக்கு ஓடி இருக்காக. போன வேகத்துல அவுக கார்ல விழுந்து அடி பட்டிருக்கு. பொறவு நம்ம ஐயா விசயம் தெரிஞ்சு சின்னதுரைய அடிச்சு போட்டாராம். இனிமே அவன் நெலலு கூட என் பொஞ்சாதி மேலே பட கூடாதுன்னு சொல்லிபிட்டாக."

    "என்ன?"

    மற்ற மூவரும் உறைந்து நின்றனர்.

    "ஏ பிள்ள, வெரசா கிளம்பி வா. நேரா போய் நம்ம பிள்ள கல்யாணத்துக்கு வர அழைப்பு வைச்சுருவோம். மொத மொதல நம்ம பிள்ள பெரிய வீட்டு சீர் வாங்க போறாளே, பெரியம்மா இல்லையேனு கிடந்தேன், அவுகளே இவுகள இங்க அனுப்பி வைச்சுருக்காங்க"

    "ஆமாங்க. அவுக கலந்துக்கற மொத விசேஷம் நம்மளுதுதேன்"

    "நல்ல வேல இங்கன தங்காம அவுக வீட்லயே தங்கிட்டாக, ஊர் பல்லுல விழ வேனாம்"

    அவர்கள் இருவரும் கிளம்ப மற்ற மூவரும் திக் பிரமை பிடித்து நின்றனர்.

    அங்கு மதியோ, சுவரை வெறித்து பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.

    அனைவரும் சென்ற பின்,

    ராமசாமியிடம், "எல்லா ஆளுங்களையும் வர சொல்லுங்க" என்றான் பார்த்திபன்.

    சில நிமிடங்களில் அனைவரும் வர,

    "என் வீட்ல நடக்கறது இந்த வீட்ட தாண்டி வெளிய போக கூடாது. இது எல்லாருக்கும் தெரியும். அப்புறம் எப்படி போச்சு?"

    அனைவரும் பயத்தில் மிரள,

    "பொம்மா, முத்து" என்றான்.

    அவர்கள் பயந்தபடியே முன்னால் வர,

    "நான் என்ன பண்றேன், என் கூட இருக்கவங்க என்ன பண்றாங்கன்னு பார்க்கறது உங்க வேலை இல்லையே. அப்புறம் எதனால இப்படி பண்ணிங்க?"

    அவர்கள் மவுனம் சாதிக்க, "இவங்கள தோப்பு வேலைக்கு மாத்திடுங்க. சமையலுக்கு, கை வேலை, வீட்டு வேலை பார்க்க யாரோட பொண்டாட்டியாவது பார்த்து 2 பேர் போடுங்க. துணி துவைக்க வண்ணார் வீட்ல இருந்து மாரப்பன் வரப்ப அவன் சம்சாரத்தையும் வர சொல்லிடுங்க" என்று ராமசாமிக்கு கட்டளை விதித்துக்கொண்டு இருந்தான்.

    "சரி தம்பி"

    "வரவங்களுக்கு சொல்லிடுங்க, இனி ஏதாவது வெளிய போச்சு, உயிரோட விட மாட்டேன்னு"

    "சரி தம்பி"

    மேலே சென்றவன், அவள் சுவற்றை வெறித்து பார்பதைப் பார்த்தவன் பதில் எதுவும் பேசாது, அமைதியாக அவனது வேலைகளைப் பார்த்தான்.

    அதே நேரம், மருத்துவர் வர ராமசாமி பார்த்திபனை அழைத்தார்.

    மருத்துவர் அவளது காயத்தை பரிசோதித்து, ஊசியும், மருந்துகளும் தந்தார். ஜுரம் இருப்பதாக தெரிவித்தவர், அதற்கும் மாத்திரை தந்தார். பின் பார்த்திபனிடம் திரும்பியவர், "பீவர் இருக்கு. 2 டேஸ்ல சரி ஆகிடும், பிளட் டெஸ்ட் படி பிராப்ளம் ஒன்னும் இல்லை. ஸ்டிச்சஸ் பிரிக்க நான் ரஞ்சிதாவ அனுப்பறேன்."

    "ஓகே டாக்டர், இனி நீங்க மேடத்தையே அனுப்புங்க. ஷீ ஆல்வேஸ் டோன்ட் கோ டு எ ஜென் டாக்டர்."

    "ஓகே பார்த்திபன், பை"

    அவர் வெளியேற, அவர் தந்த மருந்துகளினால் மதி உறங்க ஆரம்பித்தாள்.

    அவள் உறங்குவதைப் பார்த்த பார்த்திபன், மெதுவாக கீழே இறங்கி வந்தான்.

    "தம்பி"

    "சொல்லுங்க"

    "வேலைக்கு ஆள் வைச்சுட்டேன். மீனா சமைக்க, பாத்திரம் கழுவ, செல்வி வீடு சுத்தம் பண்ண, மத்த வேலைகளுக்கு தம்பி"

    "சரி. அவங்ககிட்ட சொல்லிடுங்க. வீட்டு விஷயம் வெளிய போக கூடாது"

    "சரிங்க தம்பி. ஏற்கனவே சொல்லிட்டேன்"

    அதேநேரம் வாயிலில் அரவம் கேட்க இருவரும் திரும்பி பார்த்தனர்,

    அங்கு சுப்பையா, ராணி, பிரியா மற்றும் ராதி நின்று கொண்டு இருந்தனர்.

    "வாங்க"

    "வணக்கம் தம்பி"

    "சொல்லுங்க என்ன விஷயம் ?"

    "நாளைக்கு நம்ம பாரதிக்கு கல்யாணம் தம்பி. ஏற்கனவே வந்து பத்திரிக்கை வைச்சுட்டோம். பெரியம்மா விஷயம் இப்பதேன் தெரியும் , அதான் முறைப்படி அவுகளையும் அழைக்கணும்னு வந்திருக்கிறோம்."

    "யாராவது ஒருத்தற்கு அழைப்பு இருந்தாலும் ரெண்டு பேரும் வருவோம். நீங்க தனியா கூப்பிடனும் அப்படின்னு அவசியம் இல்ல.. அதும் இல்லாம இப்ப அவளுக்கு உடம்பு சரி இல்ல. பீவர். நாளைக்கு நாங்க வரது சந்தேகம் தான்"

    இருவரும் முகம் வாட,

    பிரியா, "சார். நாங்க மதிய பார்க்கணும். பார்க்கலாமா?"

    "இப்பத்தான் டாக்டர் வந்துட்டு போனார். தூங்க மருந்து தந்து இருக்கார். மதியம் வேணா பார்க்கலாம்"

    "மதியமா, ஓகே சார். நாங்க ஈவ்னிங் வரோம். அவ போன் டிரை பண்ணோம். பட் சுவிட்ச் ஆப்னு வந்துச்சு"

    "எஸ். நேத்து கீழ விழுந்துடுச்சு. அங்கிள், இவங்களுக்கு வீட்டு லேன்ட் லைன் நம்பர் தாங்க" என்று ராமசாமியிடம் சொன்னவன் பிரியாவிடம் திரும்பி "நீங்க அதுக்கு கூப்பிடுங்க"

    "ஓகே சார்"

    அதற்குள் மீனா குடிக்க மோர் எடுத்து வர, அனைவரும் வாங்கி பருகினர்.

    "சரி, எனக்கு வேலை இருக்கு, நான் கிளம்பனும், நாளைக்கு நாங்க வரமுடியுமான்னு தெரில, அப்டி வரலினா, எப்பயும் போல பொண்ணு, மாப்ளை, அப்பா, அம்மா 4 பெரும் வாங்க" என்று அவர்களிடம் கூறியவன், ராமசாமியிடம் திரும்பி, "அங்கிள் காரம் இல்லாம சாப்பாடு ரெடி பண்ண சொல்லுங்க. அவளுக்கு தர நானே வந்துடுவேன்."

    "சரிங்க தம்பி"

    அவன் வேகமாக கிளம்பிச் சென்று தன் காரில் ஏறினான்.

    "சார். நாங்க மதிய பார்க்கணும்."

    "பொழுதோட வாங்க மா. இந்தாங்க வீட்டு நம்பர். வரலாமா இல்லையானு கேட்டுட்டு வாங்க"

    "சரிங்க"

    அனைவரும் கிளம்பிச் சென்றனர்.

    பிரியா, "என்னடி இது மதிய பார்க்கவே முடில?" என்க,

    ராதி, "என்ன பண்ணறது? ஈவ்னிங் வரைக்கும் வெயிட் பண்ணலாம்" என்றாள்.

    அவர்கள் பேசுவதை கவனித்த ராணி, "இனி பேர் சொல்லி கூப்பிடாதிங்க பிள்ளைகளோ, அப்படி கூப்பிட கூடாது"

    "ஏன் மா. எங்க பிரண்ட் தான"

    "உனக்கு பிரண்ட், இந்த ஊருக்கு ராணி"

    "என்ன?"

    "அவுக ஜமின் வம்சம். நம்ம ஊருக்கு உள்ள முக்கால் வாசி நிலம் அவுகளுக்குதேன் சொந்தம். இதும் இல்லாம ஏகப்பட்ட தொழில் இருக்கு. இங்கன ஊர் பெரியவுக வீட்டு மருமக. அவுகளுக்கு கண்டிப்பா மரியாதையை தரனும். யாரேனும் பார்த்தாக உடனே பஞ்சாயத்து கூட்டுவாக"

    "ஜமினா?"

    "ம்ம். ஐயா பேரே பார்த்திபன் சக்கரவர்த்தி."

    "இவங்களுக்கு எப்படி கல்யாணம் ஆச்சு மா?"

    "எங்களுக்கும் தெரியாது பிள்ள. அவுக 5 வருஷம் முன்னாடி மதுரைல இருந்தாக, இப்ப 3 வருசமாத்தேன் இங்க இருக்காக"

    "ஹோ"

    "ஏம்பிள்ளைகளா பாரதி உங்க 3 பேருக்குமே கல்யாணம் ஆகலைன்னு தான சொல்லுச்சு"

    "இந்த விஷயமே இப்பத்தான் எங்களுக்கும் தெரியுது மா"

    "ஆமா மா."

    ஒரு வழியாக பேசிக்கொண்டே வீட்டை அடைந்தனர்.

    --- தென்றல் வீசும்

    Copy Right to Shrijo
     
    Caide, IniyaaSri, Deepu04 and 2 others like this.
  4. Viswadaaliah

    Viswadaaliah Silver IL'ite

    Messages:
    232
    Likes Received:
    140
    Trophy Points:
    93
    Gender:
    Female
  5. Rajijb

    Rajijb Silver IL'ite

    Messages:
    56
    Likes Received:
    62
    Trophy Points:
    58
    Gender:
    Female
    Interesting twist! Thanks
     
  6. Rajijb

    Rajijb Silver IL'ite

    Messages:
    56
    Likes Received:
    62
    Trophy Points:
    58
    Gender:
    Female
    Interesting twist! Thanks
     
    Sivasakthigopi likes this.
  7. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Interesting and twisty.... superb update Sakthi. Waiting for the next.
     
    Sivasakthigopi likes this.
  8. Sreeramcharan

    Sreeramcharan New IL'ite

    Messages:
    8
    Likes Received:
    6
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Unga story romba nalla irukku Sakthi... Adutha update eppo nu aavala irukku...
    unga Manathodu mazhai vasam superb... adhula varsha oda feelings superb...
     
    Sivasakthigopi likes this.
  9. bcgowri

    bcgowri New IL'ite

    Messages:
    11
    Likes Received:
    4
    Trophy Points:
    3
    Gender:
    Female
    very nice and different story. andha village manam iruku kadhaiyila
     
    Sivasakthigopi likes this.
  10. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    Thanks Gowri!
     

Share This Page