1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

'கயா' யாத்திரை !

Discussion in 'Stories in Regional Languages' started by krishnaamma, Apr 10, 2016.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    இதோ போடுகிறேன்.............எப்பவும் போல உமாவைத் தேடினேன் :)
     
  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    இதோ அந்த பல்குனி நதி இன் சாபக்கதை :

    ஸ்ரீராமபிரான் வனவாசம் செய்கையில் சிரார்த்ததினம் வந்தது. வழக்கம் போல் லட்சுமணர் பிக்ஷை அரிசி வாங்க அருகிலுள்ள கிராமத்துக்குச் சென்றிருந்தார். வெகு நேரமாயிற்று. லட்சுமணரை காணும் . இராமர் தம்பியைத் தேடி கிளம்பினார் . சிரார்த்த காலம் வந்தது. சீதை தவித்தாள். சிரார்த்தகாலம் தாண்டி விட்டால் பிதுர்க்கள் சபிப்பார்களே என்று வருந்தினாள்.

    தாபசம், இங்குதி ஆகிய பழங்களை பறித்து அக்கினியில் வேகவைத்தாள். அதைப் பிசைந்து பிண்டம் தயாரித்தாள். அப்போது அவள் முன்பு தேஜோ மயமாக பிதுர்க்கள் தோன்றினர்.

    "சீதே, பிண்டத்தை எங்களுக்கு சமர்ப்பிக்கலாம். மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறோம்'' என்றார் மாமனாரான தசரதர்.

    "உங்கள் பிள்ளைகள் சமர்ப்பிக்க வேண்டியதை நான் செய்யலாமா?'' என்று சீதை தயங்கினாள்.

    "சிரார்த்த காலம் தவறி அசுர காலம் வந்து விடும். சாட்சி வைத்துக் கொண்டு கொடு. தப்பில்லை'' என்றார் தசரதர்.

    சரி என்று சீதையும் பல்குனி நதி, பசு, ஒரு பிரம்ஹணன், துளசிச்செடி மற்றும் அக்ஷய வட ஆலமரம் ஆகியவற்றை சாக்ஷி வைத்துக்கொண்டு, அவை எல்லாம் ஒப்புக்கொண்டதும்,

    "உங்களைச் சாட்சி வைத்து பிதுர்க்களுக்கு பிண்டம் தருகிறேன். என் கணவரிடம் இந்த நிகழ்ச்சியைச் சொல்ல வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டு பிண்டம் கொடுத்தாள்.

    பிதுர்க்கள் பிண்டத்தை மகிழ்ச்சியோடு ஏற்று மறைந்தனர். சிறிதுநேரத்தில் ஸ்ரீராம லட்சுமணர்கள் தானியங்களோடு வந்தனர்.

    "சீதா, சீக்கிரம் சமையல் செய்'' என்றார் ராமர். சீதை நடந்ததைக் கூறினாள்.

    ராமர் திகைப்புடன் "சாஸ்திரோக்தமாக சிரார்த்தம் நடத்தும் எங்கள் முன் வராத பிதுர்க்கள் உன் முன்தோன்றி நேரில் பிண்டம் வாங்கினர் என்பது கற்பனை'' என்றார்.

    "நாதா! நான் உண்மையைத்தான் சொல்கிறேன் பல்குனி நதி, பசு, ஒரு பிரம்ஹணன், துளசிச்செடி மற்றும் அக்ஷய வட ஆலமரம் ஆகியவற்றை சாக்ஷி வைத்துக் கொண்டேன். அவற்றிடம் விசாரித்துக் கொள்ளுங்கள்'' என்றாள்.

    உடனே ராமர், "சீதை சொல்வது போல் என் தந்தை பிதுர்க்களோடு நேரில் வந்து பிண்டம் வாங்கினாரா?'' என்று கேட்க, அக்ஷயவட ஆலமரம் தவிர மற்றவர்கள் '`நாங்கள் அறியோம்' என்று சொல்லி விட்டன.

    கர்த்தாவான ராமர் வருவதற்குள் சீதை பிதுர் காரியம் முடித்ததற்குத் தாங்கள் உடந்தையாக இருந்தோம் என்று ராமர் கோபிப்பாரோ எனப் பயந்தன.

    ராமரும் வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு "சமையலை முடி. நாங்கள் நீராடி வருகிறோம்'' என்று கூறிச்சென்றார். சீதை தன்னைக் கணவர் நம்பாததை எண்ணி துக்கத்தோடு சமையல் செய்தாள்.

    ராமர் நீராடி வந்து சங்கல்பம் செய்து கொண்டு, பிதுர்க்களை சிரார்த்த சாமான்களில் ஆவாஹனம் செய்யும்போது வானிலிருந்து அசரீரி ஒலித்தது.

    "ராமா! ஏன் இரண்டாம் முறையாக திதி கொடுக்க எங்களை அழைக்கிறாய்? சீதை கையால் பிண்டம் வாங்கி நாங்கள் திருப்தியுள்ளோம்'' என்றது அசரீரி.

    அதன் பின் ராமர் சமாதானமானார்.

    ஆனால் கோபமே வராத சீதா ..............
     
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    "பல்குனி நதியே! உன்னிடம் எந்தக் காலத்தும் வெள்ளம் தோன்றாது, தண்ணீர் வற்றியே காணப்படும் என்றும்,

    பசுவே! உன் முகத்தில் வாசம் செய்த நான் உன் பின்பக்கத்துக்குப் போய் விடுவேன் என்றும்,

    இந்த கயாவில் எங்கும் துளசி வளராது போகட்டும் என்றும் ,

    'கயா பிராமணர்கள்' தங்கள் வித்தையை விற்று வயிறு வளர்க்கும் அவலம் உண்டாகட்டும், மேலும் அவர்கள் எவ்வளவு இருந்தாலும் திருப்தி இல்லாமலே இருப்பார்கள் என்றும் " என்று சீதை பொய்ச்சாட்சி கூறிய நால்வருக்கும் சாபமிட்டாள்.


    ஆலமரம் தனக்கு சாட்சியாக நின்றதற்கு மகிழ்ந்து , "யுக யுகாந்திரங்கள் நீடுடி வாழ வாழ்த்தி, யுக முடிவின்போது பிரளயத்தின் போது, அக்ஷய வட இலையிலேயே பரமாத்மா குழந்தை வடிவில் தோன்றுவார். அவரது திருவடிகளில் உலகங்கள் அனைத்தும் லயமாகும் " என்று அருளினாள். மேலும், "கயாவில் ஸ்ரார்த்தம் செய்ய வருபவர்கள் அக்ஷய வடத்திலும் பிண்டங்களை அர்ப்பணம் செய்வார்கள் அப்போது தான் கயாவில் ஸ்ரார்த்தம் செய்வதன் பலன் கிடைக்கும் " என்றும் ஆசிர்வதித்தாள்.[​IMG]

    இது தான் பல்குனி நதி இன் சாபக்கதை [​IMG]

    இன்றும் இந்த சாபப்படி தான் நடக்கிறது அங்கு :(

    தொடரும்........................
     
    Rajijb likes this.
  4. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    இந்த கதைகளை எல்லாம் கேட்டுவிட்டு சத்திரத்துக்கு வந்தோம். மணி 4 -30, சாப்பிடவே தோணலை. மனம் ரொம்ப நிம்மதியாக இருந்தது தான்காரணம். ஒரு மிகப்பெரிய காரியத்தை முடித்த திருப்தி எங்களுக்கு இருந்தது.

    ஜீவதோர் வாக்ய கரணாத்
    ப்ராத்யாப்தம் பூரி போஜணாத்
    கயாயாம் பிண்ட தானாத்
    த்ரிபி : புத்ரஸ்ய புத்ராய




    என்கிறது வடமொழி ஸ்லோகம். தாய், தந்தையரை மதித்துப் பராமரிப்பது மட்டுமல்ல புத்திரனின் கடமை. அவர்கள் இறந்தபின்னும் அவர்கள் மேல்நிலைக்கு உயர நீத்தார் வழிபாடுகளைச் செய்ய வேண்டும். அதுவும் ’கயை’ போன்ற இடத்திற்குச் சென்று அவர்கள் உயர்நிலைக்குச் செல்ல பிண்ட தானம் செய்ய வேண்டும். அவனே நல்ல புத்திரன் என்கிறது இந்த ஸ்லோகம்.

    அந்த வாத்திர்யார் சொல்வதை கேட்டீர்கள் தானே ? "ஒருவருக்கு 10 பசங்க இருந்தாலும் ஒருத்தராவது வந்து கயாவில் வந்து பிண்டம் போடமாடானா என்று அந்த ஆத்மா ஏங்கும் " என்று சொன்னார் இல்லையா ? [​IMG]அப்படிப்பட்ட கர்மாவை முடித்த திருப்தி [​IMG]

    என்றாலும் , எங்களை நம்பி அவர் சமைத்து வைத்திருந்தாரே, எனவே சாப்பிட்டோம். பிறகு ஹோட்டலுக்கு சென்று கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுத்தோம். காலை லிருந்து நின்று நின்று காலெல்லாம் வலி. நல்லா கால் நீட்டி உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். எங்க ஒர்படியும் மச்சினரும் மறுநாள் விடியக்காலை 3 மணிக்கெல்லாம் கிளம்பணும். எனவே, அலைச்சலுடன் அலைச்சலாய் புத்த காவும் போய்வந்து விடலாம் என்று சொன்னார்கள்.

    புத்த கயா அங்கிருந்து ஒரு 12 - 15 கிலோமீட்டர் இருந்தது. எனவே, சிறிது நேரத்தில் கிளம்பினோம்.

    தொடரும்..........
     
    uma1966 likes this.
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அங்கு போகும் வழி இல் ஒரு புத்தர் , 80 அடி புத்தர் சிலை இருந்தது. ஆனால் நேரம் ஆனதால் மூடி விட்டார்கள். என்றாலும் வெளி இல் இருந்து எடுத்தோம். அந்த வீடியோ இதோ [​IMG]

     
  6. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Very true ma. Every year my hubby tries to feed orphan kids on my fil's birth anniversary. Hope god helps us to continue this every year.
     
    krishnaamma likes this.
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
  8. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    மா.. இந்த காலத்தில் தெவசத்திற்கு வரும் பிராமிணர்கள் யாரும் ஒழுங்காக சாப்பிடுவதில்லை. அவர்கள் தட்சணையில் தான் குறிக்கோளாக இருக்கிறார்கள். நாம் நமது மன திருப்திக்கு எல்லாவிதமான item களும் பரிமாறுகிறோம். அவர்கள் என்னடா வென்றால் பக்கத்தில் உள்ள தொன்னையில் சாபிடாமல் வைத்து விடுகிறார்கள். சர்வம் கிருஷ்ணார்ப்பணம் என்று நினைக்க வேண்டியது தான்
     
    krishnaamma likes this.
  9. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    கயா பதிவு ஒவ்வொரு பாகமும் அருமை. மிகவும் அழகாக விவரித்து உள்ளீர்கள் .. ஆலமர போட்டோ அழகு.. அன்னதானம் பற்றி அழகாக சொல்லி உள்ளீர்கள் நன்றி
     
    krishnaamma likes this.
  10. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ம்ம்.. ரொம்ப நிஜம் உமா :( ..........நமக்குத்தான் மனசு அடித்துக் கொள்ளும் ..........
     

Share This Page