1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நித்திரைக் கலைந்து சித்திரைப் பிறந்தது !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Apr 14, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    இனிய வாசகர்களே !
    அனைவருக்கும் என் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் !



    கலைந்தது இயற்கையின் குளிர்கால நித்திரை !
    மலர்ந்தது பூக்களால் இளவேனிற் சித்திரை !


    துன்பங்கள் தீர்க்கட்டும் பிறந்த புத்தாண்டு !
    இன்பங்கள் சேர்க்கட்டும் சிறந்த இவ்வாண்டு !


    துவர்ப்பும் கசப்பும் புளிப்பும் இனிப்பும்
    உவர்ப்பும் கார்ப்பும் சேர்ந்ததே வாழ்க்கை !


    இதையே எளிதாய் விளக்கும் வகையில்
    அதையே உணவில் சேர்த்துக் கொள்வோம் !


    வேம்பின் கசப்பும் மருந்தே ஆகும் !
    கரும்பின் இனிப்போ இன்பம் நல்கும் !


    மாங்காய்ப் புளிப்பும் உப்பின் உவர்ப்பும் ,
    பாங்காய்ச் சேர்க்கும் கார்ப்பும் துவர்ப்பும்,

    பசியைத் தூண்டிச் செரிக்கவும் செய்யும் !
    ருசிக்கவும் ரசிக்கவும் நம்மை இழுக்கும் !


    உணவில் கூட உயர்ந்த கொள்கைகள்
    உணர்வில் இருக்கும் அன்பைப் போலவே !


    இவ்வறிவை தந்தவள் தாய்த் தமிழ்ச்செண்டு !
    செவ்வையாய் செய்யனும் அவளுக்குத் தொண்டு !

    வேறொரு தேசத்தில் இன்று இருந்தாலும்
    வேர் அறுகாமல் பார்த்துக் கொள்ளுவோம் !


    கன்னித் தமிழின் அன்புப் பிள்ளைகள் ,
    அன்னை அவளின் பெருமை காப்போம் !


    யாதும் ஊராய் யாவருங் கேளிராய்
    தீதற்ற வழியில் வாழ்க்கையில் உயர்வோம் !


    கோதற்றத் தமிழுக்கு நாம் தொண்டாற்றுவோம் !
    இதைப் புத்தாண்டின் கொள்கையாய்க் கொள்வோம் !

    Regards,

    Pavithra
     
    Last edited: Apr 14, 2016
    jskls, uma1966 and kaniths like this.
  2. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    பவித்ரா .. அருமையான கவிதை. ரசித்தேன் கவிதையை @PavithraS
     
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    மிக்க நன்றி ! :blush:
     

Share This Page