1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அஷ்டமி, நவமி

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Apr 16, 2016.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,365
    Likes Received:
    10,561
    Trophy Points:
    438
    Gender:
    Female
    அஷ்டமி, நவமி என்ற வார்த்தைகளைக் கேட்டாலே சில் பேருக்கு ஒவ்வாது.
    இவை இரண்டும் ஏன் தீயவைகளாக,அசுபமாகக் கருதப் படுகின்றன?
    15 நாளுக்கு ஒரு முறை அஷ்டமி, நவமியும், 27 நாட்களுக்கு ஒரு முறை பரணி, கார்த்திகையும் மாறி மாறி வரும்போது ,இன்னும் வார சூலை, சனி, செவ்வாய், ராகு காலம், யம் கண்டம் என்று ஒத்திப் போட்டுக் கொண்டெகொண்டே இருந்தால் நல்ல நாள் எப்படி வரும்?
    ஸ்ரீராம நவமியையும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியையும் கோலாகலமாகக் கொண்டாடும் நாம் ஏன் அஷ்டமி, நவமியைத் தவிர்க்க வேண்டும்?
    மனிதர்களுக்குத் தான் அஷ்டமி, நவமி-கடவுளர்க்கு இல்லை --இது ஒரு பதில்.
    நவமி யில் பிரயாணம் செய்தால் நவமி புருஷன் எதிர்ப் பட்டுத் தடங்கல் ஏற்படும்-இன்னொரு பதில்.

    எல்லா ரயில் வண்டிகளும் அஷ்டமி, நவமியிலும் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றன.விபத்துக கள் சுப நாட்களிலும் நிகழ்ந்துள்ளன.
    இன்னொரு விவரம்: நவமியின் அதிபதி சனி பகவான்.அஷ்டமியின் அதிபதி செவ்வாய்.இவர்களுக்கு ஏக மனக்குறை..தங்களை மட்டும் அமங்கல்மாகவே எல்லோரும் நினைக்கின்றனர் என்று.மீதி எல்லா நாட்களையும் நிராகரிப்பது இல்லை.
    சனியும் செவ்வாயும் ஸ்ரீமன் நாராயணிடம் சென்று முறையிட்டனராம்.உடனே மகாவிஷ்ணு ப்ரத்யக்ஷமாகி 'கவலைப் படாதீர்கள், நான் ராமனாக நவமியில் அவதாரம் எடுப்பேன்.என்னுடைய ஜன்ம தினத்தை பத்து நாள் உற்சாகமாகக் கொண்டாடும்போது உன்னுடைய குறை நீங்கும் என்றாராம்.

    அதேமாதிரி கிருஷ்ணாவதாரம் நிகழ்கையில் அஷ்டமிக்குத் தனி அந்தஸ்து ஏற்படும் என்றாராம்.
    துஷ்ட நிக்ரஹமும் அசுர வதமும் தான் அவதார நோக்கம் என்று கருதிய நமக்கு, சனி, செவ்வாயின் பங்கும் இதில் உண்டு எனத் தெரிகிறது.
    என்னுடைய திருமணம் கூட அஷ்டமி திதியில் தான் நடந்தது 53 ஆண்டுகளுக்கு முன்.
    இன்னும் ஓர் விளக்கம்:-

    முன் காலத்தில் காலெண்டர் கண்டுபிடிக்கும் முன் திதி கணக்கு தான்.அமாவாசை பௌர்ணமி தான் அவர்களது எல்லைகள்.குரு குல த்தில் 24x7 பாடம் கற்பித்தால் குழந்தைகள் அலுத்துப் போய் விடுவர்.எனவே ஒரு பக்ஷத்தில் 2 நாட்கள் லீவு.அது அஷ்டமி, நவமியில் அமையப் பெற்றது.
    அஷ்டமி, நவமி வித்தைக்கு ஏற்றதல்ல என்ற கருத்து மெல்ல மெல்ல பரவி ,அவை அமங்கல நாட்கள் என்ற முடிவுக்கு ஜனங்களை இழுத்துச் சென்றது.
    இறைவன் அருள் இருக்கும் வரை நாள் என் செயும்? கோள் என் செயும் ?

    ஜெயசாலா 42
     
    sindmani, uma1966 and vaidehi71 like this.
    Loading...

  2. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    அஷ்டமி , நவமியைப் பற்றிய அருமையான விளக்கம். இந்த பதிவை படிக்கும் வாசகர்கள் அஷ்டமி, நவமியை ஒதுக்க மாட்டார்கள் நன்றி உமா வெங்கட்
     
    sindmani likes this.
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    நல்ல பகிர்வு, எனக்கு எல்லாமே '8' தான்...........நான் சேவிக்கும் பெருமாள் முதல்[​IMG][​IMG]......என் கணவர் எண், கல்யாண நாள், வீடு எண், இப்படி பல சொல்லலாம், நானாக தேடிப்போகமாட்டேன் எனக்கு அப்படித்தான் வாய்க்கும்........அதை நான் சுபமாகவே எண்ணுகிறேன் :)
     
    sindmani likes this.

Share This Page