1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கண் கெட்ட பிறகு!

Discussion in 'Posts in Regional Languages' started by rajiram, Apr 16, 2012.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female

    [JUSTIFY]திரு. கோபிநாத் அவர்களின் நிகழ்ச்சி ஒன்றை நான் விரும்பிப் பார்ப்பது வழக்கம். நேற்றைய நிகழ்ச்சியில் நல்ல விஷயம் ஒன்று பகிர்ந்துகொள்ளக் கிடைத்தது.

    ஐம்பது வயதைத் தாண்டி, வாழ்க்கைத் துணையை இழந்த ஆண்கள், பெண்கள் பங்கேற்ற நிகழ்ச்சி. பொதுவாக, அனைவருமே தம் துணையைப் பற்றிய நினைவுகளைப் பசுமையாகக் கொண்டு இருப்பதுபோலத் தோன்றியது. அதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், தன் மனைவி உலகை நீத்த பின்பு, அவளிடம் மன்னிப்புக் கேட்டு, மனம் கலங்கும் கணவர் சிலர் பங்கேற்றுப் பேசினார்கள். ஒருவர், தன் மனைவி என்ன செய்தாலும் குறை கண்டு, அவளை மனம் நோகச் செய்து, அவளின் சுற்றமும் அதைச் சொல்லி வருந்தியதைக் குறிப்பிட்டார். அவர்களிடம் மன்னிப்பும் கேட்டார்! அப்போது நினைவில் தோன்றியதுதான், 'கண் கெட்ட பிறகு..............!!'

    குறைகள் இல்லாது யாருமே உலகில் உலவ முடியாது! வாழ்க்கைத் துணை நாமே தேடிக்கொண்டாலும், பெரியவர் தேடித் தந்தாலும், குறை நிச்சயம் இருக்கும். அதை மறந்து, விட்டுக் கொடுத்து மகிழ்வுடன் வாழ்வதே, நல்ல வாழ்க்கை. இதை அனைவரும் மனதில் உறுதியாக வைத்துக் கொள்ளவேண்டும்.

    Love is blind என்பதை உருவ ஒற்றுமை இல்லாத ஜோடிகளைப் பார்த்துக் கூறுவது வழக்கம். ஆறடியும், ஐந்தடியும்; கருப்பும், சிவப்பும்; ஒல்லியும், பருமனும்; அழகும், அழகில்லாததும் என்று பல வகை ஜோடிகள் உள்ளனரே! நான் எண்ணும் விளக்கமே வேறு! அன்பு இருந்தால், அவர்கள் செய்யும் தவறுகளை நம் கண்கள் காணவே காணாது; அதுதான் அந்தகத் தன்மை (blind)!

    உயிரோடு உலவும்போது, வெறுப்பை அள்ளிக் கொட்டிவிட்டு, இல்லாதபோது அழுது வருந்துவதை விட்டு, இருக்கும் காலத்தில் சில அன்பு வார்த்தைகள் பேசுவோம்; வாழ்க்கைத் துணையை மகிழ்வித்து, நாமும் மகிழ்வோம்!

    (இது நம் சுற்றம், நட்புக்கும் பொருந்தும் அல்லவா?)

    :cheers
    [/JUSTIFY]
     
    Loading...

  2. swathi14

    swathi14 IL Hall of Fame

    Messages:
    7,587
    Likes Received:
    1,602
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Raji, today morning only my MIL discussed abt this neeya naana topic. She also said that the husband's feeling is of no use now. it wont reach the wife, who spent all her life under the harsh words of the DH.

    Like you said, we must give respect, give love, use kind words to our beloved ones now itself.

    andal
     
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Its almost very hard, not to take someone close to us, for granted. But if only there is a room for self respect and a bit of love, things will eventually be worked out. Nice post Raji Ram. Thanks. -rgs
     
  4. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Dear Andal and RGS,

    Thanks a lot for your feed back. :)
     
  5. PreethiArun66

    PreethiArun66 Senior IL'ite

    Messages:
    167
    Likes Received:
    10
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Good one... Better late than never :)
     
  6. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thanks for your comment Preethi. :)
     

Share This Page