1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

எல்லா நாட்டிலும் இருப்பார்கள்!

Discussion in 'Posts in Regional Languages' started by rajiram, Jan 26, 2012.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female

    [JUSTIFY]என்னவரின் தூய பண்பை முதலாக்கி, ஏமாற்றிய மரத்தச்சன் பற்றி

    ஏற்கனவே எழுதியுள்ளேன்! இதோ, எங்கள் மகன் இரக்க சுபாவத்தால்

    ஏமாந்த சம்பவம்...


    ஃபிலடெல்பியா சென்று திரும்பும் வழி. ஒரு உணவகத்தில் நிறுத்தினோம்

    இளைப்பாறவும், உண்ணவும். வெளியேறும் சமயத்தில், பதட்டமாக ஒரு

    பெண் (எந்த நாட்டினளோ, தெரியவில்லை) மகனை நோக்கி வந்தாள்.

    அருகில் நிற்கும் பெண்ணரசியின் பக்கமே திரும்பாமல், மகனிடமே

    பேசினாள். தன் கார் ரிப்பேர் ஆகி நின்றுவிட்டதாகவும், போன் செய்து

    கேட்டதில், அறுபது டாலர்கள் செலவாகும் என்று ஒரு மெக்கானிக்

    கூறியதாகவும், தன்னிடம் இருபது டாலர்களே உள்ளதாகவும் சொல்லி,

    மீதிப் பணத்தைத் தந்து உதவுமாறு கேட்டாள்; மகனின் விலாசத்திற்கு,

    செக்கை மறுநாளே அனுப்புவதாக வாக்களித்தாள். ஒரு நொடி கூட

    யோசிக்காமல், உதவும் மனப்பான்மை கொண்ட மகன், பணத்தையும், தன்

    விசிடிங் கார்டையும் கொடுத்தான். இந்தக் காட்சியை நானும், என்னவரும்

    காரிலிருந்துதான் பார்த்தோம்.


    எங்கள் கார் புறப்பட்டதும், நின்றுபோனதாகச் சொன்ன அவளின் காரில்

    ஏறி, அவள் வேகமாகச் சென்றுவிட்டாள் அப்போதே தெரிந்தது அவள் ஒரு

    ஏமாற்றுக்காரி என்று! அனாலும், நீண்ட தூரம் செல்ல முடியாத

    நிலைமைதானோ என்னவோ என்று மகன் சமாதனம் சொன்னான்.

    பணம் வந்துவிடும் என்றான். ஆனால், இன்றுவரை அது வரவே இல்லை.

    நாற்பது டாலர் என்பது அந்த ஊரில் அதிகப் பணம்தான்!


    பெண்ணரசியின் அனுமதியின்றி இனி தானம் செய்யாதே என்று கூறினேன்

    இதற்குத்தான் நம்மவர்கள் ஒரு சொட்டு நீர் விட்டு, தானம் செய்யும்

    அதிகாரத்தை, விசேஷங்களின்போது, பெண்களிடம் தருகின்றார்களோ?

    :rotfl[/JUSTIFY]
     
    Loading...

  2. rajisrinivasan

    rajisrinivasan New IL'ite

    Messages:
    14
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    innum ethnai kallam than eemartuvar in the nattuniliea , ella nattunilea ,ayal nattunilee
     
  3. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    எல்லா நாட்டினரும் மனிதர்கள்தானே, ராஜி? :)
     
  4. Viswamitra

    Viswamitra IL Hall of Fame

    Messages:
    13,370
    Likes Received:
    24,115
    Trophy Points:
    538
    Gender:
    Male
    Penn Enral Peyum irangum? Manithan iranguvadhu sagajamdhane?

    Viswa
     

Share This Page