1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கடாரம் - ஒரு முன்னுரை

Discussion in 'Posts in Regional Languages' started by iniyamalar, Nov 25, 2011.

  1. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    அன்பு வாசக நெஞ்சங்களே..

    வெகு நாட்களாய் உங்களையெல்லாம் என் கதையெனும் ’கதை’ கொண்டு அடித்துத் துன்புறுத்தாமல் இருந்தது எனக்கு என்னவோ நீண்டகாலமாய் சைபீரியச்சிறையில் அடைபட்டது போன்ற உணர்வைத் தந்துவிட்டது.[​IMG]
    அதனால் இதோ என் அடுத்த படைப்பு…உங்களுக்கான மண்டையுடைப்பு.

    கடாரம்- ஒரு முன்னுரை:

    ந்திய சரித்திரமென்றாலே அசோகர் குளம் வெட்டியதையும் மரம் நட்டதையும், அக்பர் அரசாண்டதையுமே நாம் சிறு வயதில் சரித்திர புத்தகங்களில் படித்தோம். இந்தியாவே இவ்வளவு தானோ என்ற எண்ணம் நம்முள்(என்னுள்) விதைந்ததற்கு அதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம்.

    ஆனால் உண்மையில், இந்திய சரித்திரத்தில் சிறந்த பல மன்னர்கள், வீரர்கள், புலவர்கள், அறிவியல், கணிதம், தனித்தன்மை வாய்ந்த ஆட்சிமுறை என்று எல்லாவற்றிலும் முன்னோடியாக இருந்த தமிழகத்தைப் பற்றி பெரும்பாலும் பேருக்கு (தமிழர் உள்ளிட்ட) தெரிவதில்லை.

    இந்திய சரித்திரமன்றி உலக சரித்திரத்திலேயே தொன்மை வாய்ந்தது தமிழனின் சரித்திரம் என்ற ஏற்றுக்கொள்ளப்படாத ஆனால் உண்மை கூற்றைப் பற்றிய என் கருத்தை என் புதிய புத்தகத்துக்காக கோர்த்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், கொஞ்சம் முன்னோக்கி வந்து நமக்கும் தெரிந்த ஒரு சரித்திர காலத்துப் பின்னணியில் ஒரு கதையை அதுவும் தேந்தமிழில் கூற விளைந்த ஆசையின் முடிபே “கடாரம்”.

    இது என் முதல் சரித்திரப் புதின முயற்சி.

    என் கன்னி முயற்சி அதனால் தவறுகளைப் பொறுத்துக் கொள்வதோடு அவற்றைச் சுட்டிக் காட்டினால் அகமகிழ்வேன்.

    இந்தக் கதைக்காக நாம் செல்வது முதலாம் இராஜேந்திரச்சோழதேவன் காலத்துக்கு. இந்தக் கதையில் இராஜேந்திரச்சோழன், அவன் மகன் இராஜாதிராஜன், தண்ட நாதர் கிருஷ்ணன் இராமர் என்று அரசனைச் சுற்றியவர்களும், கடாரத்து மன்னர் சங்கராம விஜயோத்துங்கரும் உண்மை சரித்திரக் கதாபாத்திரங்கள். அவர்கள் தவிர ஏனையோர் என் கற்பனைச் சித்திரங்கள்.

    இராஜேந்திரச் சோழன் காலத்தில் அதாவது பொ.உ. 1025 ல் அவன் ’கடாஹ’ எனும் கடாரம் நோக்கிப் படையெடுத்து வென்றதாகத் திருவாலங்காட்டுப் பட்டயமும், அந்த படையெடுப்பின் சிறப்பும் கவரப்பட்ட நாடுகளின் பட்டியலும் அவனது விரிவான தமிழ் மெய்கீர்த்தியிலும் தெளியக் கூறப்பட்டிருக்கிறது.

    ஆனால் இதில் எதுவும் அத்துனை நாள் நட்புறவில் இருந்த நாட்டின் மீது ஏற்பட்ட இந்த திடீர் படையெடுப்புக்கான காரணத்தைக் கூறவில்லை.

    இந்தக் கதையில் அதற்கொரு கற்பனைக் காரணத்தைக் கொணர்ந்து அதைச்சுற்றிச் சின்னதாய் ஒரு கதை சமைத்திருக்கிறேன்.

    சரித்திரமே புதிரின் விடையான ஊகங்கள் தானே! இப்படித்தான் நடந்தது என்று சொல்ல யாரும் அன்றைய பொழுதில் இருந்து பார்த்துத்தெளியவில்லை. சான்றாகக் கிடைக்கும் பொருள் கொண்டு நாமே உருவாக்கிக்கொள்ளுங்கதை தான் சரித்திரம்.

    இந்தக் கதையைப் பொறுத்தவரை, இது இப்படித்தான் நடந்தது என்ற தெரிவும் இல்லை, இப்படி நடந்திருக்கலாம் என்ற யூகமும் இல்லை. இப்படி நடந்திருந்தால் எப்படி இருக்கும் என்ற எனது கற்பனையே. இயன்றவரை சரித்திர உண்மைகளைப் புரட்டிப்பார்த்துச் சேர்த்திருக்கிறேன். அதற்கு நீலகண்ட சாஸ்திரிக்கும்,மா.ரா வுக்கும், கோ.எட்சுக்கும், இன்னும் எக்கச்சக்கமான பேருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

    முழுவதும் சரித்திரச் செய்திகள் என்றில்லாமல் இயன்ற அளவில் வாசகர்களின் ரசனைக்கு விருந்தாகவே இதைப் படைக்க முனைந்திருக்கிறேன்.
    மற்ற குறிப்புகளை அவ்வப்போது கதையின் பின்னோடு தருகிறேன்.

    இனி (28.11.11) முதல் திங்கள் தோறும் காலையில் ’IL – regional stories and fictions’ பகுதியில் பதிவேற்றப்பட்டு உங்களுக்காகக் காத்திருக்கும் - கடாரம்.

    நன்றி…

    பி.கு: ஏற்கனவே அகிலனின் வேங்கையின் மைந்தன் படித்திருந்தால், தயவு செய்து அதை மறந்துவிட்டு இந்தக் கதைக்குள் செல்லவும்.

    இது முற்றிலும் மாறான கருத்தை பிரதிபலுக்கும் (என்று நினைக்கிறேன்).
    சார்பிருக்கக் கூடாதென்றே நான் இன்னும் வேங்கையின் மைந்தனைத் தீண்டவுமில்லை.
     
    Loading...

  2. varalotti

    varalotti IL Hall of Fame

    Messages:
    9,047
    Likes Received:
    1,238
    Trophy Points:
    340
    Gender:
    Male
    இந்த செய்தியைப் படித்ததில் இருந்து மனதில் ஒரு இனம் தெரியாத பூரிப்பு. இந்த உலகத்திற்குத் தமிழன் செய்த பங்களிப்பு குடத்திலிட்ட விளக்காகவே இருக்கிறது. உலகம் அளவிற்குப் போவானேன்! நம் நாட்டு விடுதலைக்குத் தமிழர்கள் சிந்திய ரத்தத்தின் வ்ரலாறு கூட இன்னும் சரியாக எழுதப்படவில்லை என்பதே என் ஆதங்கம். சாகக் கிடக்கும் தன் மகனின் முகத்தைக்கூடப் பார்க்காமல் கப்பல் வாங்கக் காத்திருந்த வ.உ.சி., விடுதலைப் போராட்டத்துக்காக தன் படிப்பையும் வளமான எதிர்காலத்தையும் ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலத்தையும் தாரை வார்த்துக் கொடுத்த அருணாச்சலம் பிள்ளை போன்றவர்கள் ஏன் இன்னும் பேசப்படாமல் இருக்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
    இந்த சூழ்நிலையில் ஒரு நல்ல எழுத்தாளரான நீங்கள் கதை எழுதப் புறப்பட்டிருப்பது மனதிற்கு உற்சாகமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
    கடாரம் மிக நல்ல ஒரு வரலாற்றுத் தொடராக மலர்ந்து இந்த வலைதளத்தின் பெண்களின் மனதில் நீங்காத இடம்பிடிக்க வேண்டும் என்று எங்கள் மதுரையின் அரசியை மனமார வேண்டிக் கொள்கிறேன்.
    அன்புடன்,
    வரலொட்டி
     
  3. rkalpana

    rkalpana New IL'ite

    Messages:
    45
    Likes Received:
    3
    Trophy Points:
    8
    Gender:
    Female
    kadaram nalla varalatruth thodaraga malara en idhayam kaninda nalvazhththukkal...ungalukku nagaichuvai unarvum siridu ulladu endru ninaikkiraen...nijamthanae...ungal ezhuththil adhu satru velippadugiradhu...vazhththukkal

    anbudan


    kalpana
     
  4. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    உங்கள் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
    நட்புடன், ராஜி ராம் :cheers
     
  5. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    மிகச் சரியாகச் சொன்னீர்கள் ஐயா..

    தமிழனின் சரித்திரம் திருத்தி எழுதப்பட வேண்டியது. மெய்க்கீர்த்திகள் நிறைந்த சரித்திரம் இன்று கீர்த்தியற்றுக் கிடக்கிறது. விடுதலைப்போராட்ட சரித்திரக்காலம் என் மனதில் பெரும் வலியை வடுவை ஏற்படுத்துவன. அதனால் தான் அதைச் சொல்லி அழுது தீர்ப்பதைக் காட்டிலும் பொலிவோடிருந்த காலத்தைப்பேசி புன்னகை பூசிக்கொள்வது நல்லது என்று நினைப்பேன்.
    இதுவும் அத்தகைய முயற்சி தான்.
    எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்ள முடியாது.
    ஒரு புது கதைசொல்லியாய் என்னால் முடிந்த அளவு கடாரத்தைக் கண்முன் நிறுத்தப் பார்க்கிறேன்.
    தங்களைப்போன்ற நல்ல உள்ளங்களின் ஆசி இருக்கையில் வேறென்ன வேண்டும்?

    நன்றிகள் கோடி..
     
  6. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    அன்பு ராஜி.

    தங்களின் வாழ்த்துக்கு நன்றி.
     
  7. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    dear kalpana

    வாழ்க்கையில் பொன்னகையைக் காட்டிலும் புன்னகைக்கு மதிப்பும் அழகும் அதிகம் என்று நம்புபவள் நான். அதனால் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. இது சரித்திரப் புதினமென்பதால் அது எந்த அளவு சாத்தியமென்று எனக்குத் தெரியவில்லை.(ஏன் எழுத்து சாமர்த்தியம் அதற்கு போதாது என்று தோன்றுகிறது)

    தருகைக்கு நன்றி.
    வருகை தொடரட்டும்..
     

Share This Page