1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உறவைத் தேடும் இதயம்

Discussion in 'Stories in Regional Languages' started by pinky21, Sep 1, 2015.

  1. pinky21

    pinky21 Gold IL'ite

    Messages:
    351
    Likes Received:
    403
    Trophy Points:
    123
    Gender:
    Female
    தேடல் 21
    அருணும், மகாதேவனும் ஜோசியரிடம் சென்ற சமயம் லேடீஸ் கிளப்பில் சில பெண்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் ஒரு பூஜைக்குச் செல்ல முடிவு செய்தனர்.

    மதுவிற்கு இந்த வரன் எப்படி அமையும் என்ற யோசனையில் தேவி சுழன்றதால் அந்த மாதக் கடைசியில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பூஜைக்காக ஏற்பாடு செய்யலாம் என்று வேறு சில கிளப் வேலைகளை முன்னிறுத்தி தேவி கூறியதைச் செல்ல இருந்த எழு பேரும் ஒத்துக்கொண்டனர்.

    அங்கு ஜோசியகாரர் மதுவிற்கு நேரம் நன்றாக இருப்பதாகவும், இந்த வரன் பொருந்தி இருப்பதாலும் முயற்சி செய்யலாம், இந்த வரனுடனே திருமணம் நல்ல படியாக முடியும் வாய்ப்பு இருக்கிறது என்றும் திருமணத்திற்குப் பிறகும் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று கூறினார்.

    வீட்டிற்கு அவர்கள் செல்லவும் மதுவைத் தவிர பாட்டியும், தேவியும் வீட்டிற்கு வரவும் சரியாக இருந்தது. சந்துருவிடம் அழைத்து சூரியா குடும்பத்திடம் ஜாதகம் பொருந்தியதை பற்றி சொல்லலாம் என்று முடிவு செய்த சமயத்தில்,

    “ஏங்க அந்தச் சந்துரு தான் சொன்னாருன்ன நம்ம என்ன உடனே விழுந்து அடிச்சுகிட்டு பதில் சொல்ல வேண்டுமா என்ன? ஒரு இரண்டு மூணு நாள் ஆறப்போட்டு அவுங்க மறுபடியும் கேட்ட பின்னால் சொன்னால் தானே நம்ம மரியாதையை காப்பாத்திக்க முடியும்” என்று தேவி கூறியதைக் கேட்ட மகாதேவன்,

    “விழுந்து அடிச்சுகிட்டு பதில் சொல்லக் கூடாதுன்னு அருண்க்கு நீ பொண்ணு பார்க்கற மாதிரி நான் மது விஷயத்துல பண்ண முடியாது. மது கல்யாணம் முடியற வரை தான் உனக்கு அருண்க்கு பொண்ணு பார்க்க டைம். அதுக்குள்ள நீ ஒரு நல்ல பொண்ணா பார்த்து முடிவு பண்ணலைன்னா நான் அருண்க்கு பொண்ணு பார்க்கற வேலைல முழுசா இறங்கறதா இருக்கேன். உன்ன நம்பி விட்டதுக்கு என் பையனுக்கு கல்யாணம் இந்த ஜென்மத்தில் நடக்கும் தோணலை. சோ மறுபடியும் சொல்லறேன் மது கல்யாணம் வரை தான் உனக்கு டைம். அருணுக்குன்னு ஒரு பொண்ணு வந்தால் தான் எல்லாம் சரியா நடக்கும். இதுக்கும் மேல நீ எதுவும் பேசவேண்டாம். நான் சந்துரு கிட்ட இப்போ கூப்பிட்டு பேசத்தான் போறேன்.”

    என்று கூறி அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

    அங்கு சிவகாசியில் பவித்ரா வீட்டில், “சுபா ரொம்ப நாளா ஒரு கோவை தரகர்கிட்ட ஜாதகம் கொண்டு வர சொல்லி கேட்டுகிட்டு இருந்தோம் ல அவரு இன்னைக்கு சாய்ந்திரம் சிவகாசி வருவார் போல. வீட்டுக்கு வரேன்ன்னு போன் பண்ணாரு. நீ நம்ம மது ஜாதகக் குறிப்ப முன்னமே எடுத்து பூஜையறையில் வெச்சுவிடு. ரொம்ப செலக்டிவாகத் தான் அவரு ஜாதகம் எப்போவுமே வெச்சு இருப்பாருன்னு சொல்லுவாங்க” என்று கூறிக்கொண்டே மதிய உணவிற்காக செந்தில் வீட்டிற்குள் நுழைந்தார்.

    “சரிங்க. எதாவது பாசங்க profile நல்லா இருந்தால் குறிப்பு மட்டும் எடுங்க. எப்படி மாப்பிள்ளை இருக்கணும், குடும்பம் எப்படி இருக்கணும்ன்னு எல்லாம் எங்ககிட்ட நீங்களும் சக்தியும் சொல்லற மாதிரி வர தரகர்கிட்டையும் சொல்லதேங்க. மதுக்கு எப்படி வரன் அமையனும்ன்னு இருக்கோ கண்டிப்பா அப்படித் தான் அமையும். அதுனால அவரு கொடுக்கற ஜாதகத்தை மட்டும் வாங்கிகோங்க. நம்ம எதிர்பார்ப்பு என்னன்னு கேட்டா, படிச்ச, பாரம்பரியமான குடும்பமா இருக்கணும்ன்னு மட்டும் சொல்லுங்க” என்று சுபா கூறியதைக் கேட்ட செந்தில்,

    “சுபா நீயும் உன் அத்தை மாதிரி எனக்கு பாடம் எடுக்காத. நான் ஒன்னுமே பேசல போதுமா. குறிப்பை மட்டும் எடுத்துக்கறேன். இப்போ எனக்கு சாப்பாடு மட்டும் எடுத்து வை. பசிக்குது.” என்று கூறிக்கொண்டே உள்ளே சென்றார்.

    அருண் வீட்டில் சந்துருவிற்கு அழைத்தார் மகாதேவன், நலன் விசாரிப்புகளுக்குப் பிறகு நேரடியாகவே விஷயத்திற்குத் தாவினர், “சந்துரு நான் மது ஜாகதத்தை அந்த சூரியா தம்பி ஜாதகத்தோடு சேர்த்து வைத்துப் பொருத்தம் பார்த்துவிட்டேன். ஜோசியர் முயற்சி பண்ணி பாருங்கன்னு சொன்னார். அந்த விவரத்தை உன்னிடம் சொல்லிவிட்டு மேற்கொண்டு எப்படி பண்ணலாம்ன்னு கேட்கத் தான் அழைத்தேன்” என்று கூறினார்.
     
    3 people like this.
  2. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Hi Kruti dear,

    Romba romba sandoshama eruku ma ungaludaiya pinnutam parthu. Please stay in touch dear.

    Update nalla erunthu Kruti. Just to bring to your notice am telling this. You have mentioned madhu's name instead of pavithra in two places dear.
     
    1 person likes this.
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    kruti glad to see you .short episode .parava illai .aduthathu long episode varum enru nampugiren.As Priya said slight confusion in the names.Have a nice day
     
    2 people like this.
  4. pinky21

    pinky21 Gold IL'ite

    Messages:
    351
    Likes Received:
    403
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Re-post on clearing the confusion with names.. sorry for the trouble

    தேடல் 21
    அருணும், மகாதேவனும் ஜோசியரிடம் சென்ற சமயம் லேடீஸ் கிளப்பில் சில பெண்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் ஒரு பூஜைக்குச் செல்ல முடிவு செய்தனர்.

    மதுவிற்கு இந்த வரன் எப்படி அமையும் என்ற யோசனையில் தேவி சுழன்றதால் அந்த மாதக் கடைசியில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பூஜைக்காக ஏற்பாடு செய்யலாம் என்று வேறு சில கிளப் வேலைகளை முன்னிறுத்தி தேவி கூறியதைச் செல்ல இருந்த எழு பேரும் ஒத்துக்கொண்டனர்.

    அங்கு ஜோசியகாரர் மதுவிற்கு நேரம் நன்றாக இருப்பதாகவும், இந்த வரன் பொருந்தி இருப்பதாலும் முயற்சி செய்யலாம், இந்த வரனுடனே திருமணம் நல்ல படியாக முடியும் வாய்ப்பு இருக்கிறது என்றும் திருமணத்திற்குப் பிறகும் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று கூறினார்.

    வீட்டிற்கு அவர்கள் செல்லவும் மதுவைத் தவிர பாட்டியும், தேவியும் வீட்டிற்கு வரவும் சரியாக இருந்தது. சந்துருவிடம் அழைத்து சூரியா குடும்பத்திடம் ஜாதகம் பொருந்தியதை பற்றி சொல்லலாம் என்று முடிவு செய்த சமயத்தில்,

    “ஏங்க அந்தச் சந்துரு தான் சொன்னாருன்ன நம்ம என்ன உடனே விழுந்து அடிச்சுகிட்டு பதில் சொல்ல வேண்டுமா என்ன? ஒரு இரண்டு மூணு நாள் ஆறப்போட்டு அவுங்க மறுபடியும் கேட்ட பின்னால் சொன்னால் தானே நம்ம மரியாதையை காப்பாத்திக்க முடியும்” என்று தேவி கூறியதைக் கேட்ட மகாதேவன்,

    “விழுந்து அடிச்சுகிட்டு பதில் சொல்லக் கூடாதுன்னு அருண்க்கு நீ பொண்ணு பார்க்கற மாதிரி நான் மது விஷயத்துல பண்ண முடியாது. மது கல்யாணம் முடியற வரை தான் உனக்கு அருண்க்கு பொண்ணு பார்க்க டைம். அதுக்குள்ள நீ ஒரு நல்ல பொண்ணா பார்த்து முடிவு பண்ணலைன்னா நான் அருண்க்கு பொண்ணு பார்க்கற வேலைல முழுசா இறங்கறதா இருக்கேன். உன்ன நம்பி விட்டதுக்கு என் பையனுக்கு கல்யாணம் இந்த ஜென்மத்தில் நடக்கும் தோணலை. சோ மறுபடியும் சொல்லறேன் மது கல்யாணம் வரை தான் உனக்கு டைம். அருணுக்குன்னு ஒரு பொண்ணு வந்தால் தான் எல்லாம் சரியா நடக்கும். இதுக்கும் மேல நீ எதுவும் பேசவேண்டாம். நான் சந்துரு கிட்ட இப்போ கூப்பிட்டு பேசத்தான் போறேன்.” என்று கூறி அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

    அங்கு சிவகாசியில் பவித்ரா வீட்டில், “சுபா ரொம்ப நாளா ஒரு கோவை தரகர்கிட்ட ஜாதகம் கொண்டு வர சொல்லி கேட்டுகிட்டு இருந்தோம் ல அவரு இன்னைக்கு சாய்ந்திரம் சிவகாசி வருவார் போல. வீட்டுக்கு வரேன்ன்னு போன் பண்ணாரு. நீ நம்ம பவித்ரா ஜாதகக் குறிப்ப முன்னமே எடுத்து பூஜையறையில் வெச்சுவிடு. ரொம்ப செலக்டிவாகத் தான் அவரு ஜாதகம் எப்போவுமே வெச்சு இருப்பாருன்னு சொல்லுவாங்க” என்று கூறிக்கொண்டே மதிய உணவிற்காக செந்தில் வீட்டிற்குள் நுழைந்தார்.

    “சரிங்க. எதாவது பாசங்க profile நல்லா இருந்தால் குறிப்பு மட்டும் எடுங்க. எப்படி மாப்பிள்ளை இருக்கணும், குடும்பம் எப்படி இருக்கணும்ன்னு எல்லாம் எங்ககிட்ட நீங்களும் சக்தியும் சொல்லற மாதிரி வர தரகர்கிட்டையும் சொல்லதேங்க.
    பவித்ராவிற்கு எப்படி வரன் அமையனும்ன்னு இருக்கோ கண்டிப்பா அப்படித் தான் அமையும். அதுனால அவரு கொடுக்கற ஜாதகத்தை மட்டும் வாங்கிகோங்க. நம்ம எதிர்பார்ப்பு என்னன்னு கேட்டா, படிச்ச, பாரம்பரியமான குடும்பமா இருக்கணும்ன்னு மட்டும் சொல்லுங்க” என்று சுபா கூறியதைக் கேட்ட செந்தில்,
    “சுபா நீயும் உன் அத்தை மாதிரி எனக்கு பாடம் எடுக்காத. நான் ஒன்னுமே பேசல போதுமா. குறிப்பை மட்டும் எடுத்துக்கறேன். இப்போ எனக்கு சாப்பாடு மட்டும் எடுத்து வை. பசிக்குது.” என்று கூறிக்கொண்டே உள்ளே சென்றார்.

    அருண் வீட்டில் சந்துருவிற்கு அழைத்தார் மகாதேவன், நலன் விசாரிப்புகளுக்குப் பிறகு நேரடியாகவே விஷயத்திற்குத் தாவினர், “சந்துரு நான் மது ஜாகதத்தை அந்த சூரியா தம்பி ஜாதகத்தோடு சேர்த்து வைத்துப் பொருத்தம் பார்த்துவிட்டேன். ஜோசியர் முயற்சி பண்ணி பாருங்கன்னு சொன்னார். அந்த விவரத்தை உன்னிடம் சொல்லிவிட்டு மேற்கொண்டு எப்படி பண்ணலாம்ன்னு கேட்கத் தான் அழைத்தேன்” என்று கூறினார்.

    will try posting the next episode as a lengthier one asap... thanks all..
     
    3 people like this.
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Hi Kruti sorrypa.In your tight schedule you have retyped the story.Thanksma
     
    pinky21 likes this.
  6. naliniravi

    naliniravi Gold IL'ite

    Messages:
    990
    Likes Received:
    492
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Hi Pinky,

    After long time, I read your updates. Super story.
     
    pinky21 likes this.
  7. Deepu04

    Deepu04 IL Hall of Fame

    Messages:
    2,857
    Likes Received:
    1,484
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Hi Kruti nice update dear... Take care of urself too... Do update wen u r free....
     
    pinky21 likes this.
  8. pinky21

    pinky21 Gold IL'ite

    Messages:
    351
    Likes Received:
    403
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Hi all...

    Hope all is well with all of you.. Every thing is great at my end. I was a little held up with a few personal commitments and could not inform you for the the hibernation. I will still continue my hibernation for two more months and would continue with the same story. sorry for having taken an uninformed break and also for the one's to continue. Thank U all so much for your continuous support. will see you all soon..
     
    sreeram likes this.
  9. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    No issues dear. We will wait. Hope you are fine. Take care.
     
  10. Deepu04

    Deepu04 IL Hall of Fame

    Messages:
    2,857
    Likes Received:
    1,484
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Hi pinky, take ur time dear... Please complete the story wen u can.
     

Share This Page