1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உறவைத் தேடும் இதயம்

Discussion in 'Stories in Regional Languages' started by pinky21, Sep 1, 2015.

  1. pinky21

    pinky21 Gold IL'ite

    Messages:
    351
    Likes Received:
    403
    Trophy Points:
    123
    Gender:
    Female
  2. pinky21

    pinky21 Gold IL'ite

    Messages:
    351
    Likes Received:
    403
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Hi all....

    Am finally back. Hope to give the next updates without such long delays.. Have given a small update for the day. Sorry for the delay.

    தேடல் – 16
    முதலில் அவர்கள் மூவர் மட்டுமே செல்வதாக இருந்தது. ஆனால் நல்ல விஷயம் ஆரம்பிக்கும் பொழுது மூவர் மட்டும் செல்ல வேண்டாம் மதுவையும் அழைத்துச்சென்று வா என்று பார்வதி பாட்டி கூறியதால், மகாதேவன், தேவி, அருண் மற்றும் மது என நால்வரும் கிளம்பிச் சென்றனர்.

    முதலில் காவிரிக் கரையோரம் காலமாங்களம் என்னும் ஊரில் இருக்கும் மகாதேவனின் குலதெய்வமான குலவிளக்கு அம்மன் கோவிலுக்குச் சென்றனர். கோவிலில் முதல் நாள் இரவே அழைத்துக் கூறியதால் அவர்கள் சரியான நேரத்திற்குச் சென்றவுடன் அபிஷேகம் ஆரம்பித்தது. அலங்காரமும் ஆராதனைகளும் முடித்தவுடன் மகாதேவன் பூசாரியிடம் மகள் திருமணதிற்கு உத்தரவு கேட்டு பூ போட்டுப் பார்க்க வேண்டும் என்று கூறியதை அடுத்து, பூசாரியும் அதற்கு உண்டான பூஜைகளை செய்து, மகாதேவனை வேண்டிக் கொள்ளச் சொல்லி அம்பாளிடம் வாக்குக் கேட்டார்.

    மகாதேவன் மனதில் எண்ணிய சிகப்பு மலரே விழுந்ததால் அனைவரும் மகிழ்ச்சியாகக் கிளம்பினர். கோவிலை விட்டு வெளியே வந்து காரில் ஏறியதும் அருண் தேவியிடம்,

    “மம்மி உங்க வீட்டுக்காரருக்கு கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ண முடியும்ன்னா அப்படியே பாரியூரும் போலாம். அவருக்கு வேலை இருக்குன்னா நீங்க எல்லாம் கார்ல போங்க நான் பஸ் ல போயிட்டு வரேன்” என்று கூறினான் அருண்.

    அருணுக்கு சிறு வயதில் இருந்து கடைபிடிக்கும் சில நல்ல பழக்கங்களில் ஒன்று எந்த விஷயம் ஆரம்பிக்கும்போதும் பாரியூர் குண்டத்துகாளி அம்மன் ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொண்டு தான் ஆரம்பிப்பான். அதை நன்கு அறிந்தவர் மகாதேவன். அதனால் அவரும் பாரியூர் செல்லும் முடிவில் தான் இருந்தார்.

    எனவே,
    “மதும்மா எனக்கு உன் anna kitta enakku பிடிச்ச ஒரே விஷயம் அவனுக்கு இருக்கும் பக்தி தான். அதுனால அவன் மனசுக்கு பிடித்த பாரியூர் போகணும்ன்னு நான் ஏற்கனவே முடிவு பண்ணது தான்.

    அதுனால ரொம்ப பேசி மனசுல இருக்க சந்தோஷத்தைக் கெடுக்காம உன் அண்ணனை காரை எடுக்கச் சொல்லு” என்று கூறிய மகாதேவனை புரியாத பார்வை ஒன்று பார்த்துவிட்டு காரை எடுத்தான்.

    அதுவரை எல்லாம் சுமுகமாகச் சென்று கொண்டு தான் இருந்தது. அவர்களுக்கு, அதிலும் அருணிற்கான அதிர்ச்சி பாரியூரில் காத்துக் கொண்டு இருந்தது தெரியாமல், தங்கை திருமணத்திற்கு உத்தரவு ஆன மகிழ்ச்சியில் பாரியூர் நோக்கிச் சென்றான்.

    அங்கு பவித்ரா வீட்டில் வந்த வரனை எல்லாம் செந்திலும், சக்தியும் விதம் விதமாக காரணம் சொல்லி தட்டிக் கழித்துக்கொண்டே இருந்தனர்.

    “எங்க, உங்க பொண்ணு அதிரூப சுந்தரி மாதிரி இருக்கா, நல்ல படிச்சு இருக்கான்னு நீங்களும் உங்க பையனும் வர வரன் எல்லாம், பையன் படிக்கல, தலைல முடி இல்லை, பையனோட அம்மா பார்க்க கொடுமைக்காரி மாதிரி இருக்காங்கன்னு ஊருல உள்ள காரணம் எல்லாம் கண்டு பிடிச்சு நிராகரிச்சுகிட்டே இருக்கீங்க. இப்படியே காலத்தைக் கடத்திகிட்டே இருக்கறது எனக்கு நல்லதா படலை" என்று பல்லவி பாடிக் கொண்டு இருந்ததை அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருந்தார் செந்தில்.

    இவை அனைத்தும் சக்திவேல் skypeபில் பார்த்துக் கொண்டு இருந்தான்.,

    “அம்மா சும்மா எதுக்கு அப்பாவைத் திட்டிகிட்டு இருக்கீங்க. உங்கள் மனசாட்சியை தொட்டு உங்கள் அருமை கணவர் தலையில் அடித்து சத்தியம் செய்து கூறுங்கள், வந்த வரனில் ஏதாவது என் செல்ல பவித்ரா குட்டிக்கு பொருத்தமாக இருந்தா என்று” என்று வசனம் பேசி சுபாவின் இலவச முறைப்பைப் பெற்றுக் கொண்டான் அந்த உத்தமமான புத்திரன்.

    சக்திவேல் கூறிய உண்மையை புத்தி ஒத்துக்கொண்டாலும், மனது ஏற்றுக்கொள்ள வில்லை. நம் மகளைப் பற்றி நாம் ரொம்ப சுப்பிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்யில் இருக்கிறோமோ என்ற பயம் தான் அவர் கணவனையும், மகனையும் வறுத்து எடுக்கக் காரணம்.

    அந்த பயத்தைப் பகிர்ந்து கொண்டால் கணவனும் மகனும் மீண்டும் ஒரு வாக்கு வாதத்தை ஆரம்பித்து சுபாவை பேசவேவிடாமல் செய்து விடுவார்கள் என்று தன் அனுபவத்தால் அறிந்ததால்,

    “என்னவோ கொஞ்சம் வேகமா மாப்பிள்ளை பார்க்கற வேலையை செய்தால் பரவால்லைன்னு எனக்கு படுத்து. அவளுக்கு வயசு ஏறிகிட்டே போகுது, பவித்ராக்கு முடிச்ச தான் சக்தி கல்யாணம் பண்ணிகுவேன்ன்னு சொல்லறான். அடுத்து அடுத்து வேலை இருக்கு.” என்று சுபா கூறி முடிக்கும் முன்,

    “காலகாலத்துக்கு நடக்க வேண்டிய விஷயம் சரியா நடக்கும். நான் சொல்லறது சரி தானே பேராண்டி,” என்று சக்திக்கு ஒத்துப் பேசுவது போல முதலில் கூறிய பாட்டி,

    “அதுக்குன்னு வர இடத்தை எல்லாம் குத்தம் சொல்லிகிட்டே இருந்தா தெரியாத புதைகுழியில் விழுந்துட்டா என்ன பண்ணன்னு சுபா யோசிக்கறது சரி தானே தம்பி” என்று மருமகளையும் விட்டுக் கொடுக்காமல் பேசினார் அந்தக் குடும்பத்தின் ஆணிவேர் பாட்டிம்மா.

    அவர் சொன்ன கடைசி வாக்கியத்தை மட்டும் இறைவன் சரியாகப் பிடித்தது தான் பவித்ரா அடுத்த sila kaalam படப்போகும் துன்பத்திற்கு ஆணிவேராகப் போனதோ என்னவோ!
     
  3. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Very happy for you Kruti. hugsmiley. Very well written.
     
    1 person likes this.
  4. naliniravi

    naliniravi Gold IL'ite

    Messages:
    990
    Likes Received:
    492
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Hi,

    At last the story continues. Very nice.waiting for next episode.
     
    1 person likes this.
  5. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    How are you doing Kruti? Waiting for you.
     
    1 person likes this.
  6. pinky21

    pinky21 Gold IL'ite

    Messages:
    351
    Likes Received:
    403
    Trophy Points:
    123
    Gender:
    Female
    @sreeram and @naliniravi - Thanks for ur comments ma.. will post the next episode tomorrow...thanks
     
    1 person likes this.
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Kruti how are you?all fine there?
     
    1 person likes this.
  8. pinky21

    pinky21 Gold IL'ite

    Messages:
    351
    Likes Received:
    403
    Trophy Points:
    123
    Gender:
    Female
    @periamma - nalla erukken amma :) thanks ma
     
  9. pinky21

    pinky21 Gold IL'ite

    Messages:
    351
    Likes Received:
    403
    Trophy Points:
    123
    Gender:
    Female
    தேடல் – 17
    எந்த வித பேச்சுகளும் இல்லாமல் இயற்கையை ரசித்துக் கொண்டு அருண் குடும்பத்தினர் பாரியூர் சென்று அடைந்தனர். உள்ளே சென்று நல்ல படியாக குண்டத்துக்காளி அம்மனை வழிபட்டு விட்டு வெளியே வந்தனர்.

    அருணிற்கு சிறு வயதில் இருந்து பாரியூர் கோவிலிற்குச் செல்லும் போதும் கோவிலிற்கு பின்னால் வாய்கால் மேட்டில் இருக்கும் கோவில் கோசாலைக்குச் சென்று சில நிமிடங்கள் பசுக்களை பார்த்துவிட்டு வருவது பழக்கம். அதே போல் அன்றும் பூஜை முடிந்து கோசாலைக்குச் சென்றான்.

    அப்பொழுது கோசாலையின் காப்பாளருக்கும் அவர் மனைவிக்கும் நடந்த தகராறில் காப்பாளர் கையில் இருந்த மூடி இல்லாமல் இருந்த சாராயம் குவளையில் இருந்து அருணின் மீது கொட்டியது.

    அதற்கு மேல் அங்கு நிற்க வேண்டாம் என்று முடிவு செய்த அருண் அந்த இடத்தை விட்டு வேகமாக அகன்று வாய்க்காலில் சட்டையை அலாசிய பின்பும் அந்தச் சாராய வாடை அருண் மீது அடித்துக் கொண்டு இருந்தது.

    நல்ல நாளிலேயே அருணிற்கும் மகாதேவனிற்கும் ஒத்துப் போகாது. இதில் கோவிலுக்கு வந்த இடத்தில் எதிர்பாராமல் நடந்த இந்த விஷயத்திற்கு என்ன ஏச்சுகளும் பேச்சுக்களும் கேட்க்க வேண்டுமோ என்று நினைத்துக் கொண்டு மீண்டும் கோவில் வளாகத்திற்குள் சென்ற அருண் எதிரில் வந்த மனிதனை கவனிக்காது அவன் மீது மோதியது காலம் செய்த கோலம் தான் போல.

    “பார்ல தான் குடிச்சுட்டு ஹோட்டல் ல பிரச்சனை பண்றாங்கன்னா கோவிலையுமா... நாடு தாங்காது டா சாமி” என்று எதிரில் இருந்த உருவம் பேசிய பொழுது தான் அருண் தான் சிந்தனையில் இருந்து சுதாரித்தான்.

    “சாரி சார்” என்று அருண் கூறியதை காது கொடுத்து கேட்காமல் தன் பாட்டிற்கு பேசிக்கொண்டு இருந்தான் அருண் மீது மோதியவன்.

    நம் அருணிற்கு ஏற்கனவே பொறுமை கிலோ என்ன விலைக்கு எங்கு விற்கும் என்று கேட்கும் ரகம். இதில் தன் மீது தப்பு இல்லாமல் ஒருவன் தன்னைப் பற்றி தாறுமாறாகப் பேசியதைக் கேட்ட அருண் அவன் சட்டையைப் பிடிக்க போகையில் அவன் கையை தடுத்தது மற்றொரு கரம்.

    “சுரேஷ் என்ன இது வந்த இடத்தில் தகறாறு? நம்ம கவுரவத்தை கெடுத்துக் கொள்ளும் மாதிரி தேவை இல்லாத குடிகாரர்களிடம் என்ன பேச்சு” என்று கூறிக்கொண்டு வந்தது நம் சூரியாவே தான்.

    தன் நண்பன் சுரேஷுடன் நான்கு நாட்கள் முன்னால் தான் ஹோட்டல் சென்ற போது அருண் குடி போதையில் தள்ளாடி சுரேஷ் மீது மோதினான். அது மட்டுமல்லாம் சுரேஷிடம் தகறாறு வேறு. சுரேஷும் சூர்யாவும் அவ்விடம் விட்டு நகருவதர்க்குள் பெரும் பாடு பட்டனர்.

    மறுபடியும் அதே ஆள் கோவிலில் வந்து தகராறு செய்யவும் தான் சூர்யாவிற்கு கோவம் வந்தது. அதனாலே குடிகரர்களிடம் வம்பு வேண்டாம் என்று கூறியது. அதே சமயம் மதுவும் அருணைத் தேடிக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தாள்.
    அங்கு என்ன நடக்கிறது என்று அறியாமல், இருவர் நின்று கொண்டு தன் அண்ணனை குடிகாரன் என்று கூறுவதை கேட்ட மது,

    “ஹலோ மிஸ்டர் என்ன நினைத்துக் கொண்டு இருக்கேங்க இரண்டு பேரும். சும்மா என் அண்ணாவை கண்ட படிக்கு பேசுறேங்க. என்ன அண்ணா நீயும் அமைதியா நிக்கற? என்ன ஆச்சி அண்ணா?” என்று கேட்டுக் கொண்டே வந்த மது, அருண் மீது வரும் வாடையை உணர்ந்தாலும் எங்கோ தப்பு நடத்து இருக்கிறது. பத்து நிமிடத்திற்குள் அருண் மீது இந்த வாடை வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று உணரந்ததாலும், அருணும் மௌனமாய் இருந்ததாலும் சண்டைகுச் சென்றால்.

    “நல்ல குடும்பம் போல மச்சி. குடிகார அண்ணனுக்கு தங்கை வக்காலத்து போல. ஊருக்கு எப்படி குடும்பம் இருந்தா நாடு விளங்கிடும். நமக்கு எதுக்கு இந்த ஊர் வம்பு வா போகலாம்” என்று மதுவைப் பார்த்து எள்ளலாக கூறிய படி சூரியா சுரேஷை அழைத்துக் கொண்டு செல்ல முற்படுகையில்,

    சூரியா முன் சொடக்குப் போட்டு,

    “என்ன என் அண்ணா பேசாம இருகாங்கன்னு ரொம்ப பேசுறேங்க? பார்த்தா நாகரீகமான குடும்பத்தை சேர்ந்தவுங்க போல இருக்கேங்க. என்ன நடந்ததுன்னு தெரியாம யாரையும் பேசாதீங்க” என்று கூறிக் கொண்டு இருந்த போது கோசாலையின் காப்பாளரின் மனைவி வந்து,

    “தம்பி என் புருஷன் பண்ண தப்புக்கு மனிச்சுடுங்க, எங்க சண்டைல அந்த கருமம் பிடித்த சாராயம் உங்க மேல் கொட்டிவிட்டது” என்று மன்னிப்பு படலம் வசித்து விட்டுச் சென்றார்.

    “இப்போ என்ன பேசப் போறேங்க மிஸ்டர்” என்று மீண்டும் சூரியாவிடம் சண்டைக்குச் சென்ற மதுவை,

    “அன்னைக்கு ஹோட்டல்ல நடந்ததற்கும் இன்னைக்கு நடந்ததற்கும் சாரி சார்” என்று கை எடுத்து கும்பிட்டுவிட்டு அருண், மதுவை இழுத்துக்கொண்டு சென்றான்.

    அருணிடம் இருந்து திமிறிய மதுவை,

    “மது ப்ளீஸ் டா. அன்னைக்கு நான்அவுங்க கிட்ட கொஞ்சம் போதை ஜாஸ்தியாகி தப்பா நடந்துகிட்டேன். அந்த கோபத்துல பேசுறாங்க, நீ வாடா ப்ளீஸ்” என்று கூறி அழைத்துச் சென்றான்.

    “இந்த பொண்ணையெல்லாம் கல்யாணம் பண்ண போறவன் நிலைமை என்ன ஆகுமோ... ஆனாலும் ஏதோ ஒன்னு அந்த பொண்ணுகிட்ட இருக்கு மச்சி” என்று கூறிய சூரியாவைக் கண்ட சுரேஷ்,

    “டேய் சாமியாரே நீ யா ஒரு பொண்ணைப் பார்த்து இப்படி சொல்லற?”

    “நீயா”

    “நீயா”

    என்று எக்கோ எப்பெக்ட் கொடுத்த சுரேஷை முதுகில் ஒரு அடி போட்டு அழைத்துச் சென்றான் சூரியா.

    காரில் செல்லும் போது கோவிலில் நடந்த விஷயங்களை தன் தாய் தந்தையிடம் கூறிக்கொண்டு சூரியாவை நன்றாக வறுத்து எடுத்துக்கொண்டு சென்றால் நம் அமைதியின் சிகரம் மது. அடுத்த நாள் அதே சூரியா தன்னைப் பெண் பார்க்க வர மகாதேவன் ஏற்பாடு செய்யப் போகிறார் என்று அறியாமல்..
     
    2 people like this.
  10. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Wow Kruti.... nice twist.... very interestingly going. All the best.

    Waiting to know what was their reactions.
     

Share This Page