1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஒருபக்கக் கதை – குணம்!

Discussion in 'Stories in Regional Languages' started by ayyasamy1944, Jun 9, 2015.

  1. ayyasamy1944

    ayyasamy1944 Silver IL'ite

    Messages:
    250
    Likes Received:
    237
    Trophy Points:
    93
    Gender:
    Male
    இரவு நேரம் வீட்டுக்கு வந்த சங்கரன் – மூத்த
    மருமகள் சப்பாத்தி சாப்பிடுவதையும், இளைய
    மருமகள் பழைய கஞ்சி சாப்பிடுவதையும்
    கண்டார்.
    -

    தன் மனைவி கமலாவை அழைத்து, “மூத்த
    மருமகள் சீர் வரிசை, நகை, வரதட்சணையோட
    வந்ததால அவளுக்கு சப்பாத்தியும் இளைய
    மருமகள் காதல் கல்யாணம் பண்ணி வெறும்
    கையோட வந்ததால அவளுக்கு பழைய
    கஞ்சியும் கொடுக்கறியே! இது நியாயமா?’ என்று
    கேட்டார்.
    -

    மாமனாரின் பேச்சை கேட்ட இளைய மருமகள்,
    “இல்லை மாமா, நான்தான் வெயில் காலத்துல
    கஞ்சி குடிச்சா உடம்புக்கு நல்லது, தூக்கம் நல்லா
    வரும்னு விரும்பி சாப்பிடறேன். அத்தை மேல
    எந்த குத்தமும் இல்லை’ என்றாள்.
    -

    சங்கரன் அங்கிருந்து சென்றதும் கமலா, இளைய
    மருமகள் கையைப் பிடிச்சு “என்னை
    மன்னிச்சுடும்மா, நான் தப்பு செய்தும் என்னைக்
    காட்டிக் கொடுக்காமல் உன் மாமனார்கிட்டே இருந்து
    என்னைக் காப்பாத்திட்டே.
    -

    நீ சீர் செனத்தியோட வரலேன்னாலும் நல்ல
    குணத்தோட வந்திருக்கே; அதுவே போதும்’ என்று
    நா தழுதழுக்க இளைய மருமகளைப் பாராட்டினாள்.

    —————————–
    – எஸ். முகம்மது யூசுப்
    நன்றி – குமுதம்
     
    Loading...

  2. srikumarsavi

    srikumarsavi New IL'ite

    Messages:
    18
    Likes Received:
    7
    Trophy Points:
    8
    Gender:
    Female
  3. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    நல்ல கருத்துள்ள கதை....
     

Share This Page