1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இது காதலின் சங்கீதம்!!!

Discussion in 'Stories in Regional Languages' started by shinara, Apr 25, 2014.

  1. shinara

    shinara Platinum IL'ite

    Messages:
    2,027
    Likes Received:
    1,891
    Trophy Points:
    283
    Gender:
    Female
    thanks vidya... sure next post la irunthu increase panren
     
  2. devirams

    devirams Silver IL'ite

    Messages:
    528
    Likes Received:
    90
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Hi pa
    nice starting n nalla poguthu
    fb la enna nadainthu irrukkum endru theruinchuka romba interest ah irruku..
     
    1 person likes this.
  3. shinara

    shinara Platinum IL'ite

    Messages:
    2,027
    Likes Received:
    1,891
    Trophy Points:
    283
    Gender:
    Female
    sekramave secret reveal paniddalam devi...
     
  4. JeniferRaj

    JeniferRaj Senior IL'ite

    Messages:
    96
    Likes Received:
    20
    Trophy Points:
    23
    Gender:
    Female
    romba nalla kondu porenga very nice.
     
    1 person likes this.
  5. shinara

    shinara Platinum IL'ite

    Messages:
    2,027
    Likes Received:
    1,891
    Trophy Points:
    283
    Gender:
    Female
    thanks jeni...
     
  6. MadhuSharmila

    MadhuSharmila IL Hall of Fame

    Messages:
    2,717
    Likes Received:
    2,529
    Trophy Points:
    310
    Gender:
    Female
    Shinara,

    Going good.. Enjoyed reading it. Eagerly waiting for the next episode. When are you going to give us the next treat?
     
    1 person likes this.
  7. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Hi Shinara,

    Good going eagarly waiting for updates:roll:
     
    1 person likes this.
  8. shinara

    shinara Platinum IL'ite

    Messages:
    2,027
    Likes Received:
    1,891
    Trophy Points:
    283
    Gender:
    Female
    5.இது காதலின் சங்கீதம்!!!

    உத்ராவை அப்படி நிலைகுலைய வைத்தது அறையினுள் 'அவுட் சைஸ் பிச்சராக' மாட்டியிருந்த குரு நாதனின் படம்.


    பின்னிக் கொண்ட கால்களை முயன்று மெதுமெதுவாக அடியெடுத்து சுவரருகே சென்றவள் படத்திலிருந்த குரு நாதனின் பிம்பத்ததில் சாய்ந்து கொண்டாள். அவளது கரங்கள் இலக்கற்று படத்தின் ஒவ்வொரு பகுதியையும் தொட தொட அவளது நினைவு பின்னோக்கிச் சென்றது.


    வங்கி வேலை உத்ராவுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை படித்தவர்கள் படிக்காதவர்கள் என பலதரப்பினருடனும் பழகும் வாய்ப்பு கிடைத்த போது தான், தந்தை கட்டாயம் வேலைக்குப் போக வேண்டும் என்று சொன்னதின் பொருள் முழுமையாகப் புரிந்தது.


    ஒருவாரப் பயிற்சிக்குப் பின் வேலை மிகவும் எளிதாக இருந்தது. சுந்தரமும் அவ்வப்போது பல நுணுக்கங்களை அவளுக்குக் கற்றுக் கொடுத்தார்.


    மாலையில் சீக்கிரமே வேலை முடித்து வரும் உத்ரா அக்காவுடம் பேசுவதும், அன்னைக்கு உதவுவதுமாகப் பொழுதைக் கழிப்பாள்.அப்படியே ஒரு மாதமும் கழிந்தது.


    ஒரு நாள் கல்லூரி தோழி ஒருத்தி உத்ராவை தனது திருமணத்திற்கு அழைத்திருந்தாள்.. அன்று வேலை நாள். பயிற்சி காலத்தில் விடுப்பு எடுக்க முடியாத சூழ்நிலை.. மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்துவிட்டு போவதற்குள் நேரமாகிவிடும். அதனால் வங்கியிலிருந்தே நிகழ்ச்சிக்குப் போவதாக முடிவு செய்திருந்தாள். தாமரை பூ நிறத்தில் தங்க ஜரிகை வைத்த காஞ்சிபுரப் பட்டு அவளது அழகை மேலும் எடுத்துக் காட்டியது. அதற்குப் பொருத்தமாக பெரிய குடை ஜிமிக்கியும், அதனோடு சேர்ந்த வைர அட்டியலும் கைகளில் வைர வளையல்களும் அணிந்து தேவதையாக நின்ற மகளைக் கண்குளிர பார்த்தாள் கீதா.


    கிளம்பி முடித்த உத்ரா நேராகச் சென்று வண்டியை எடுக்க "இன்று மட்டுமாவது காரில் போ உத்ராமா... புடவைக் கட்டிக் கொண்டு வண்டியை ஓட்டுவது சிரமம். அம்மா சொல்வதைக் கேளு டா.."என்று கெஞ்சினாள்.


    "அதுலாம் ஒன்னும் இல்லைமா.. நான் பார்த்துக்குறேன்"என்றபடி படிகளில் இறங்க, கையில் ஒரு டப்பர்வேர் பாத்திரத்துடன் உள்ளே வந்தான் தினேஷ்.


    பட்டுப் புடவையில் உத்ராவைக் கண்டதுமே கைகளிலிருந்த டப்பாவை அருகே நின்ற அவளது வண்டியில் வைத்துவிட்டு தன் இரு கைகளையும் தலைமேல் தூக்கி குவித்து "அம்மா.... தாயே.. அபிராமி.... மஹாலக்ஷ்மி..." என்று கண்மூடி அவன் நின்ற விதத்தில் கீதாவுக்கே சிரிப்பு வந்துவிட்டது. அவனது செய்கையால் தன்னை கட்டாயப்படுத்தி நகைகளை அணிய வைத்த அன்னையைப் பார்த்து முறைத்த உத்ரா "அம்மா பாருங்கம்மா... என்னைப் பார்த்து அம்மம் மாதிரி இருக்குறேன்னு சொல்றான். போங்க... அதான் இதெல்லாம் போட மாட்டேன்னு சொன்னேன். நீங்க தான போட்டு விட்டீங்க... இதுலாம் வேண்டாம் போங்க..." என்றபடி கையில் கிடந்த வளையல்களை கலட்டத் தொடங்கினாள்.


    "ஏய்ய்... கலட்டாத டீ... அவன் சும்மா விளையாட்டுக்குச் சொல்றான்." என்று உத்ராவைத் தடுத்த கீதா "டேய் நீயும் சும்மா இரேன் டா... நானே கெஞ்சி கூத்தாடி இதை போட்டு விட்டுருக்குறேன். நீ வேற..."என்று தினேஷை கடிந்தாள் கீதா.


    ஆயினும் உத்ராவின் மனம் சமாதானம் அடையாமல் "ஏய் தினு நிஜமாவே அப்படியா இருக்குது?"என்று பாவமாய் தினேஷிடம் கேட்டாள்.


    "ஹேய் நான் சும்மா சொன்னேன் உத்ரா. அது சரி கிரீடமும் , ஒட்டியானமும் போடலையா?"என்று மீண்டும் கேலி செய்த தினேஷை வீட்டினுள் அழைத்து உத்ராவை அங்கிருந்து கிளப்பினாள் கீதா.


    வண்டியின் மேலிருந்த டப்பாவைத் திறந்தவள் உள்ளிருந்த பாதாம் அல்வாவை ஒரு விண்டு எடுத்து ருசித்துவிட்டு "அய்... நன்றாக இருக்கிறதே!.. நானே கொண்டு போறேன்... எல்லாருக்கும் பை..." என்று கையசைத்துவிட்டு வண்டியைக் கிளப்பினாள் உத்ரா.


    "ஹேய் அது உனக்கு மட்டும் இல்லை. எல்லாருக்கும் கொடுக்கச் சொன்னாங்க அம்மா!"என்றவனிடம் "போடா! நான் சாப்பிட்டால் அத்தை ஒன்னும் சொல்ல மாட்டார்கள்"என்றுவிட்டு வண்டியைச் செலுத்தினாள் உத்ரா.


    வந்த வேலை முடிந்ததும் தாமத்திக்காமல் அங்கிருந்து கிளம்பினான் தினேஷ்.


    இருவர் செல்வதையும் கண்கொட்டாமல் பார்த்தபடி வாசலிலேயே நின்ற கீதாவின் தோள்களில் கைவைத்த விஜயகுமார் "என்ன கீது? குழந்தைகளை அப்படிப் பார்க்குறே?" என்றார்.


    "உத்ராவுக்கு தினேஷுக்கும் முடிச்சுப் போட்டு வைக்கலாம்னு நினைத்தோம். ஆனால் இரண்டும் எலியும் பூனையுமாக அல்லவா இருக்கிறது"என்று மனக் குறையை கணவனிடம் கூற*


    "யாருக்கு யாருன்னு முடிவு பண்ண நம்ம யாரு கீதா.. நாம என்ன நினைத்தாலும் முடிவெடுப்பது என்னவோ மேல இருப்பவன் தான்"என்றவர் மனைவியை வீடினுள் அழைத்துச் சென்றார்.




    வெகு நாடகளுக்குப் பின் விசேஷத்தில் தன் தோழிகளைச் சந்தித்த உத்ரா அது பற்றி அம்மா அக்காவிடம் கதை அளக்க வேண்டும் என்ற உற்சாகத்துடன் வண்டியை ஓட்டுச் சென்றவள் ஒரு குறுகிய சாலையின் முனையில் எதிரே வந்த காரில் மோதி கீழே விழுந்தாள்.


    உத்ரா "சிக்னல்" கொடுத்து சரியாகத் தான் சென்றாள். ஆனால் எதிரே வந்த கார் தான் ஓசை எழுப்பாமல் வந்து அவள் மேல் மோதியது.


    காரை ஓட்டி வந்தவன் காரிலிருந்து இறங்கும் முன்பே ஒருவாறு தன்னைச் சமாளித்துக் கொண்டு உத்ரா எழுந்தாலும் கால்கள் பயத்தில் பரபரத்தன. மனதிடத்துடன் கீயே சரிந்து கிடந்த வண்டியை தூக்க முயன்றவளுக்கு அது முடியாமல் போக கண்களைக் கரித்துக் கொண்டு கண்ணீர் வந்தது.அதே நேரத்தில் காரிலிருந்து இறங்கிய வாலிபனைக் கண்டது கோபத்தில் உத்ராவுக்கு முகம் விரைத்தது.


    காரிலிருந்து இறங்கும் முன்பே கண்ணாடி வழியே உத்ராவைக் கண்ட குரு நாதன் அவள் எழ முயற்சிப்பதைக் கண்டு ஒரு நிமிடம் கொடுத்து அவள் எழுந்த பின்னரே காரிலிருந்து இறங்கினான்.


    அன்று வங்கியில் சுடிதாரில் பார்த்ததைவிட இன்று புடவையில் உத்ரா முகவும் அழகாகத் தோன்ற அவளது அழகை உள்ளுக்குள் ரசித்த குரு நாதன் தன் சட்டையில் மாட்டியிருந்த கருப்புக் கண்ணாடியால் தன் கண்களை மறைத்துக் கொண்டான்.


    வண்டியைத் தவறாக ஓட்டிவந்து அவளை இடித்து தள்ளியதுமில்லாமல், மெதுவாக காரிலிருந்து இறங்கி ஸ்டைலாக கண்ணாடி அணிவதைக் கண்ட உத்ராவுக்கு ஆத்திரத்தில் ரத்தம் கொதித்தது. நெளிந்திருந்த மோதிரம் மனக் கண்ணில் தோன்ற போங்கிய சினத்துடன் "என்ன திமிர்!"என்று அவனை அடிக்க* கைகளை ஓங்கியவளுக்கு ஆளில்லாத ஒதுக்குப் புறமான சாலையில் நிற்பது நினைவிலில்லை.


    உத்ராவின் ஓங்கிய கையை ஒரே எட்டில் மடக்கிப் பிடித்தவன் சாலையில் இருபுறங்களிலும் ஆள் இல்லாததை உருதி செய்துவிட்டு தன் இரும்புக் கரங்களை அவளைச் சுற்றி படர்த்தி,அவளது செவ்விதழ்களில் அழுத்தமாக முத்தமிட்டான்.


    ஏற்கெனவே கீழே விழுந்த பயத்தில் கால்கள் விறுவிறுத்தபடி இருந்தவளுக்கு அவனது செய்கையால மூச்சே நின்றுவிட குரு நாதனின் கைகளிலேயே மயங்கிச் சரிந்தாள் உத்ரா.






    தொடரும்....
     
    vsomu, Caide, uma1966 and 5 others like this.
  9. fathisara91

    fathisara91 New IL'ite

    Messages:
    7
    Likes Received:
    5
    Trophy Points:
    8
    Gender:
    Female
    nice update. waiting for next update
     
    1 person likes this.
  10. shinara

    shinara Platinum IL'ite

    Messages:
    2,027
    Likes Received:
    1,891
    Trophy Points:
    283
    Gender:
    Female
    thanks dear...
     

Share This Page