1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காதல் ரோஜாவே !

Discussion in 'Stories in Regional Languages' started by yevanoOruvan, Sep 18, 2013.

  1. Deepu04

    Deepu04 IL Hall of Fame

    Messages:
    2,857
    Likes Received:
    1,484
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Hi Read all the 6 episodes in one go.. Good narration.. liked it..
     
  2. nivetamohan

    nivetamohan Bronze IL'ite

    Messages:
    32
    Likes Received:
    30
    Trophy Points:
    38
    Gender:
    Female
    hai..... good starting all epi are really super...... i really enjoyed...

    next epi eppo..
     
  3. yevanoOruvan

    yevanoOruvan Silver IL'ite

    Messages:
    49
    Likes Received:
    109
    Trophy Points:
    58
    Gender:
    Male
    Thanks a lot Deepu and Niveta.. Your words mean a lot. Thanks for the feedback :)
     
    1 person likes this.
  4. yevanoOruvan

    yevanoOruvan Silver IL'ite

    Messages:
    49
    Likes Received:
    109
    Trophy Points:
    58
    Gender:
    Male
    7. ட்விஸ்ட் ..

    அவளிடம் எனது காதலை (அல்லது காதல் என்று நானே நினைத்துகொண்ட ஏதோ ஒன்றை) சொன்னது சனிக்கிழமை. எப்பொழுதும் எங்களுக்கு ஞாயிறு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கும். அன்று என் நல்லா நேரமோ கெட்ட நேரமோ, கான்ஸல் செய்துவிட்டார்கள். இப்படி என்றாவது ஒரு வகுப்பை ரத்து செய்தால் அன்று முழுவதும் கொண்டாட்டமாக இருக்கும். இன்று ஏனோ அந்த கொண்டாட்டம் இல்லை. பின்னே.. என்னை செய்து தொலைத்து விட்டேன் நான். பின்விளைவுகளை பற்றி நான் நினைத்தது பார்க்கவில்லை. கண்டிப்பாக என்னை வேண்டாம் என்று சொல்லிவிடுவாள். இது தான் நான் முதலில் நினைத்தது. ஆனால் அதான் பின் என்னவெல்லாம் நடக்க கூடும் என்று எண்ணி பார்த்தபொழுது அரண்டு போனேன்.

    அவள் வீட்டில் சென்று சொல்லலாம். அவ்வுளவுதான், அவர்கள் வீட்டில் இருந்து எங்கள் வீட்டிற்கு வந்து, ‘உங்க பையன் என்ன பன்னிருக்கான் பாருங்க..’ என்று கேட்டாள் நான் காலி. முக்கியமாக அந்த நல்ல பையன் இமேஜ்க்கு கோவிந்தா கோவிந்தா.. வீட்டில் தொலைத்து விடுவார்கள். அதை விட என் தங்கை என்னை பற்றி என்ன நினைப்பாள்..

    ஆனால் மதியம் வரை அப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கவில்லை. சரி இப்படி இருக்குமோ.. நாளை காலை ஸ்கூல் ப்ரின்சியிடம் நம்மை போட்டு கொடுக்க போகிறாள். அனைவர் முன்னிலையிலும் மானம் கொடிகட்டி பறக்க போகிறது. ச்ச.. ஸ்கூலில் ஒரு ஹீரோ (கொஞ்சம் ஓவரா இருக்கோ) போல இருந்த என்னை எல்லாரும் கிண்டல் செய்வார்களே..

    ப்ச்.. கண்டிப்பாக நடக்காது. ஏனென்றால் அவள் மிகவும் அமைதியானவள், அப்படியெல்லாம் ஆப்பு வைக்கும் சாமுத்ரிகா லக்ஷணம் அவள் முகத்தில் இல்லை, கண்டிப்பாக செய்யமாட்டாள். அதுமட்டும் இல்லாமல், அவளிடம் சாரி கேட்டதற்கு அவள் தான் பரவாயில்லை என்று சொல்லிவிட்டாலே.

    கன்னா பின்னாவென்று நானே கேவலமாய் கணக்கிட்டு அதற்கும் நானே பதிலை சொல்லி என் ஞாயிறை வீனாக்கினேன்.வழக்கம் போல ஒன்றையும் படிக்கவில்லை. திங்கள் பள்ளியில் எனக்கு ஒரு ஆச்சர்யமும் ஒரு அதிர்ச்சியும் காத்திருந்தன..

    சனிக்கிழமை அவள் இருந்த வகுப்பின் உள்ளே நான் சென்றதை ஏறக்குறைய பத்து நபர் கொண்டு குழு ஒன்று பார்த்துவிட்டது. உள்ளே சென்ற நான் திரும்ப எடுத்துக்கொண்ட நேரம், வெளியே வந்தா பிறகு நான் யாரிடமும் பேசாமல் இருந்தது என்று பல்வேறு ‘சரியில்லையே’ அறிகஊகள் தோன்ற என் வகுப்பு பசங்கள் சாரதியை வலைத்து கேள்வி கேட்டிருக்கிறார்கள். அவனோ நட்பின் இலக்கணமாக எதையும் உளறாமல் சமாளிதுவிட்டான். இப்பொழுது அதனை பேரின் கேள்வியும் என் முன் வந்து நிற்க, நானும் அமைதியாகவே மழுப்ப பார்த்தேன். அன்று முழுவதும் எனை கேட்கத்த ஒருவன் இல்லை. ஏதோ ஒன்று நடந்துவிட்டது என்பதை ஊகம செய்தவர்களுக்கு உள்ளே இருந்தது யார் என்று தெரியவில்லை. அதுவே எனக்கு சாதகமாய் போய்விட்டது. கன்னபின்னவென்று ஊகம் செய்தவர்களின் வாதத்தை நானும் மறுத்துகொண்டே இருந்தேன்.

    அதை விடுங்கள்.. அந்த ஆச்சர்யம் என்னவென்றால். அது அவள் தான். என்னை இனி பார்த்தாலே எட்டு மையில் தூரம் ஓடிப்போனவள் இன்று ஏனோ வித்தியாசமாக தெரிந்தாள். அவளை நேருக்கு நேராய் பார்க்கும் தைரியம் சுத்தமாக இல்லாததால் அவ்வோபோழுது ஒற்றை கண்ணில் பார்த்து கொண்டேன். திங்கள் என்றாலே ஒரு பிடிக்காத நாள். அதுவும் ஞாயிறு முழுதும் வீட்டிலே இருந்து இன் திங்கள் பள்ளிக்கு வருவது கொடுமையில் கொடுமை. எல்லாருடைய முகமும் அன்று பே..’வென்று இருக்கும். இன்று அவள் முகத்தில் மட்டும் என்ன ஒரு பிரகாசம். அவளின் ஒற்றை மஞ்சள் ரோஜா அவளை போலவே சிரிபாதாக உணர்ந்தேன். அதை விட இன்ப அதிர்ச்சியாய் அவளே என்னை பார்பதை உணர்ந்தேன். பல்வேறு நேரத்தில் அவள் என் முன்பு தோன்றினாள். எப்பொழுதுமே என் பார்வை படும் தூரத்தில் நின்றாள். இது அன்று மட்டும் இல்லை, அடுத்த ஒரு வாரத்திற்கு தொடர்ந்தது.
    அவளது பார்வையும் சிரிப்பும் என்னை நோக்கியே வருவதை நான் பலவாறாக உறுதி செய்துகொண்டேன். ஆனால், அதுற்கு வாய்ப்பில்லையே. ஒரு வேலை என்னது கற்பனையோ என்று நினைத்தது பார்த்தால் அதுவே உண்மை என தோன்றும். என்னை பார்த்து சிரிக்கமாட்டால்.. அட பார்க்கவே மாட்டாள். ஆகா மொத்தம் என்னை போட்டு உருட்டி பிரட்டிவிட்டாள்.

    இது ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க, நான் அவளிடம் காதலிப்பதை சொல்லிவிட்டேன் என்ற தகவலும் கசிந்து விட்டது. இல்லை இல்லையென கொஞ்சம் சமாளித்த நான் கடைசியில் ஆமாம் என்றும் ஒப்புக்கொண்டேன். வேறு வழி..

    இது ஒரு பக்கம் போக, எண்களின் பப்ளிக் பரிச்சை ஜுரமும் சூடுபிடித்தது. இன்னும் ஒரே மாதம், நானும் ஏதோ ஒரு மாதிரியாக படிப்பதில் கவனம் செலுத்தினேன். எல்லாம் ஏதோ ஒரு மாதிரி நன்றாக தான் சென்றது. அப்பொழுது தான். வந்தது.. வில்லன் என்ட்ரி !!!
     
    Last edited: Mar 5, 2014
    4 people like this.
  5. drjobs2009

    drjobs2009 Platinum IL'ite

    Messages:
    55
    Likes Received:
    1,337
    Trophy Points:
    238
    Gender:
    Female
    So villan vandhadhum kili parandhu pocha??? Pls romba wait panna vaikadheenga.. next post yeppo ???
     
  6. yevanoOruvan

    yevanoOruvan Silver IL'ite

    Messages:
    49
    Likes Received:
    109
    Trophy Points:
    58
    Gender:
    Male
    8. இரவு ஏழு மணிக்கு

    அந்த வில்லன் என்ட்ரி பற்றி சொல்வதற்கு முன்னால் லாவண்யா பற்றியும் உங்களுக்கு சொல்லவேண்டும். சொல்லியிருப்பேனே எங்கள் வகுப்பின் டாப்பர், எனது நெருங்கிய தோஸ்து என்று. ஒரு பத்து பெண்களை, லாவண்யா உட்பட நிற்கவைத்து அவர்களை அழகில் வரிசைபடுத்த சொன்னால் கண்டிப்பாக நான் லாவண்யாவை தான் கடைசியில் வைப்பேன். அதற்காக நீங்கள் அவளை கன்னபின்னவென்று கற்பனை செய்ய கூடாது, அவளை சின்ன வயதில் இருந்தே நான் பார்கிறேன், என் முதல் பிரண்ட் அவள் தான். அதனாலோ என்னவோ அவள் அழகாய் இருப்பதாக எனக்கு தோன்றியதே இல்லை. இது எனக்கு , மற்றவர்களுக்கு இல்லை. அப்பொழுது அவளுக்கு பயங்கர ரசிகர் கூட்டம் இருந்தது போல. (அட எனக்கு தெரியாது, மற்றவர்கள் சொல்லி கேள்விப்பட்டேன்). அதில் ஒருவன் தான் நம்ம சதீஷ். சதீஷ் பற்றி பெரிதாய் சொல்ல ஒன்றும் இல்லை. தினம் யாரது ஒரு டீச்சரிடம் அடி வாங்குவான். தினம் யாரிடமாவது வம்பு வளர்த்து அவர்களிடம் அடி வாங்குவான். அவன் ஒன் சைடாக நம் லாவன்யாவிற்கு ரூட்டு விட்டிருக்கான். (இந்த விஷயம் இன்னும் கூட லாவண்யவிர்க்கு தெரியாது என்பது ஒரு எக்ஸ்ட்ரா பிட்)

    நம் சதீஷிற்கு ஒரு டவுட்டு. அது என்ன என்றால் எங்கே எனக்கும் லாவண்யவிர்க்கும் ஏதும் கதை ஓடுகிறதோ என்று. நானே பசங்களிடம் ஒப்புக்கொண்டு விட்டேன் அது ப்ரியா தான் என்று. ஆனால் சதீஷ் ஒரு அதிமேதாவி அல்லவா. அவனுடைய தியரி இப்படி இருந்தது. அதாவது நான் ப்ரியா’விடம் சென்று லாவண்யா’வை லவ்வு’வதாக சொல்லி அவளிடம் உதவி கேட்டிருக்கிறேன். ஆனால் பசங்களிடம் உண்மையை சொல்லாமல் இப்படி மாற்றி கதை சொல்லி இருக்கிறேன். இதனால் அவனுடைய காதல்(?) கதைக்கு நான் வில்லனாம். (நானே ஒரு காமிடி பீஸ், நமக்கு பில்ட் அப் குடுத்துருக்கு பயபுள்ள)

    இப்படி யோசித்த சதீஷி, இந்த மேட்டரை பிரகாஷிடம் சொல்லிவிடலாம். அது உண்மையோ பொய்யோ எப்படி இருந்தாலும் நமக்கு ஓகே தான் என்று ஒரு முடிவிற்கு வந்திருக்கிறான். இந்த பிரகாஷ் யார் என்றால்.. சத்தியமா எனக்கும் தெரியாது. அந்த காலத்தில் ஏரியா’ல ஒரு பார்ட் டைம் ரவ்டி என்று வைத்துகொள்ளுங்களேன், அவனோ நம் லாவண்யா வீட்டிற்கு எதிர் வீடு. சரி அவனிடம் என் இதை சொல்லவேண்டும் என்று பார்கிரீர்களா.. அவனும் என் ப்ரியாவை(அண்டர் லைன் தி வோர்ட்.. என் ப்ரியா :d ) லவ்வ முயற்சிகள் எல்லாம் எடுத்திருக்கிறான். சோ, இப்பொழுது இந்த விஷயத்தை அவன் காதில் போட்டு விட்டால், அவன் என்னை கூப்பிட்டு ரெண்டு தட்டு தட்டுவான், நான் ப்ரியாவிடம் தான் காதலிப்பதை சொன்னேன் என்றால், அது அப்புறம் என் பாடு, சதீஷ் லாவண்யாவை தாராளமாய் லவ்வலாம். இல்லை நான் லாவண்யவிடம் தான் ஏதோ காதல் சொல்ல வந்தேன் என்றால் பிரகாஷை வைத்து என்னை மிரட்டலாம், அல்லது ஏதோ செய்யலாம். இந்த மொக்கை லாஜிக்கை வைத்து என்னை அவனிடம் போட்டுகுடுத்து விட்டான். பத்தாத குறைக்கு சாரதியின் பேர் வேறு சென்று விட்டது. அவன் தான் அனுமான் வேலை பார்த்தானாம்.

    நமது வில்லன் சாரோ, என் வகுப்பில் ஒரு பையனிடம் சொல்லி இன்று இரவு ஏழு மணிக்கு அவனை ஏதோ ஒரு ஊர் மூலையில் சந்திக்குமாறு சொல்லிவிட்டான். அதெல்லாம் முடியாது என்றால் வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்துவிடுவேன் என்று மிரட்டல் வர, நாங்களும் போனோம் (போய் தொலைந்தோம்).

    அடேங்கப்பா அன்று இரவு என்ன பில்ட் அப். பார்பதற்கு வேறு அவன் செம டெர்ரர். அந்த பிரகாஷை சுற்றி அவன் நண்பர்கள் ஒரு பத்து பேர். என் சார்பாக அவர்களிடம் பேச ஒரு நண்பன் கூட வந்தான். சாரதிக்கு என் மேல் செம கோபம், தேவை இல்லாமல் அவனை இழுத்து விட்டேன் என்று. விசாரணை ஆரம்பித்தது.

    “என்ன தம்பி ப்ரியாவ லவ் பண்றியா..?”

    (இப்பொழுது இல்லை என்று சொல்ல முடியாது. ஆமாம் என்று சொன்னால் அடி விழுமோ என்று பயம்)

    நான் அமைதியாக இருந்தேன்.

    ‘ஏய்.. கேக்றான் ல.. வய தொறந்து சொல்றா..’ என்று ஒரு சைடுகிக் சவுண்டு கொடுத்தது. நானோ விடாபிடியாக அமைதியாக இருந்தேன். சமாதானம் பேச என்னோடு வந்து நண்பன் சமாளிக்க ஆரம்பித்தான்.

    “அண்ணா.. உன்ன பத்தி இவனுக்கு தெரியாது னா.. அதான் இப்படி பண்ணிட்டான். நாங்க சொலிகிறோம், இனிமே அப்டி ஏதும் நடக்காது.”

    “ஒரு தடவ தான். இனிமே இப்படி ஏதும் கேள்வி பட்டோம்..” என்று இன்னொரு வஸ்தாது மிரட்ட, அப்பப்பா.. நான் உண்மையிலே கதி கலங்கி போய்விட்டேன். எங்கே இருந்து வந்தார்கள் இவர்கள் எல்லாம்.

    ஒரு வழியாக இந்த மிரட்டல் சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து எங்களை ரிலீஸ் செய்தார்கள். விட்டா போதும் என்று நானும் வீடு வந்து சென்ர்ந்தேன். அதற்குள் வீட்டில் பெரிய கலவரம், சொல்லாமல் கொள்ளாமல் நான் எங்கு சென்று விட்டேன் என்று. எப்படியோ எதையோ சொல்லி சமாளித்து வைத்தேன்.

    அந்த பிரகாஷின் முகம் வேறு மனதிலே இருந்தது. மற்றவர்கள் தான் மிரட்டினார்கள், அவனோ பேசவே இல்லை. என்னையே உரர்’ரென்று முறைத்து கொண்டிருந்தான். அது வேறு இன்னும் டெர்ரர் ஆக இருந்தது. போதும் டா சாமி, இந்த ப்ரியா விஷயத்தை இப்படியே விட்டுடலாம். ஒழுங்கா படிப்போம் என்று ஒரு கெமிஸ்ட்ரி புத்தகத்தை எடுத்து இரவு முழுவதும் படிக்காமல் சும்மா பார்த்துகொண்டே இருந்தேன்.

    மறு நாள் காலையிலே ஒரு விஷயம் காதில் வந்தது. அந்த பிரகாஷ் ஏதோ ஒரு நம்பரை கொடுத்து ப்ரியா’வை பேச சொல்லியிருக்கிறான். அவள் முடியாது என்றால் ஸ்கூலில் வந்து பிரச்சனை செய்துவிடுவானம். இது வேற, இப்பொழுது இவளை வேறு பிரச்சனையில் இழுத்து விட்டேன். ஏற்கனவே அழவைத்து விட்டேன். இப்பொழுது.. போச்சு.. அவளிற்கு என்னை சுத்தமாய் பிடிக்காமல் போகிடும். எல்லாம் போச்சு..

    அப்படின்னு தான் நினைத்தேன்.. ஆனால் அவளோ என்னை பார்த்து.. சிரித்தாள்..

    (தொடரும்..)
     
  7. yevanoOruvan

    yevanoOruvan Silver IL'ite

    Messages:
    49
    Likes Received:
    109
    Trophy Points:
    58
    Gender:
    Male
    கிளி பறந்ததா இல்லையா என்று பொறுத்திருந்து பாப்போம் :)
     
  8. drjobs2009

    drjobs2009 Platinum IL'ite

    Messages:
    55
    Likes Received:
    1,337
    Trophy Points:
    238
    Gender:
    Female
    Adutha part yeppo????
     
  9. dheebas

    dheebas New IL'ite

    Messages:
    28
    Likes Received:
    3
    Trophy Points:
    8
    Gender:
    Female
    When next?? Cant wait!! :(
     
  10. meerapavya

    meerapavya Silver IL'ite

    Messages:
    449
    Likes Received:
    148
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Where is the update ya, post it soon
     

Share This Page