1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நித்தமும் உன் சிந்தனையே!!!

Discussion in 'Stories in Regional Languages' started by devivbs, Nov 29, 2013.

  1. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்புத் தோழமைகளே!!!

    இது எனது ஐந்தாவது கதை..
    இந்த கதையை மற்றொரு இணையதளத்தின் E-Magazineயில் எழுதினேன். இந்த கதையை முடித்துவிட்டேன், அதனால் அப்டேட்-ல டிலே இருக்காது.. 'ஐயோ.. இவ ஒழுங்கா அப்டேட் போடுவாளா?' என்ற பயமின்றி நீங்க படிக்கலாம்..

    கதையை Dec2 ஆம் தேதி தொடங்குறேன்.. இப்பொழுது சிறு முன்னுரை..
    கதையின் முன்னுரை -
    இதுவரை காதலை கருப்பொருளாக கொண்டு எழுதிய நான் இந்த முறை ஒரு புதிய முயற்சியாக 'crime-story' எழுதியிருக்கிறேன்.. அப்போ காதல் இல்லையா? ரோமன்ஸ் இல்லையா? என்று யோசிக்க வேண்டாம்.. ரோமன்ஸ் இருக்கும் ஆனால் குறைவாக இருக்கும்..

    'அடுத்து என்ன நடக்குமோ?', 'யார் செய்திருப்பார்கள்?' என்ற எதிர்பார்ப்புகளை தூண்டும் விதமாக இந்த கதை அமையும் என்று நம்புகிறேன்..


    வழக்கும் போல் இறைவன் ஆசீர்வாதத்துடனும் உங்கள் அனைவரின் ஆதரவுடனும் இந்த கதையை தொடங்குகிறேன்..

    உங்கள் கருத்துக்களை கீழே உள்ள தளத்தில் மட்டும் கூறும்.. ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/239533-comments.html#post3065603


    உங்கள் அன்புத் தோழி,
    தேவி @ கோம்ஸ்.
     
    4 people like this.
    Loading...

  2. sangeethanithi

    sangeethanithi Senior IL'ite

    Messages:
    33
    Likes Received:
    24
    Trophy Points:
    23
    Gender:
    Female
    hi akka eagerly waiting for ur novel.:)
     
    1 person likes this.
  3. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Super Madam... How are you?
     
    1 person likes this.
  4. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    நித்தமும் உன் சிந்தனையே!!!
    Front page image.jpg

    சிந்தனை 1

    காலை 6.30 மணி அளவில் இலஞ்சி சிற்றூரில் சூரியன் தனது தங்க கதிர்களை வீசி இருளை விலக்கிக் கொண்டிருக்க, கதிரவனின் வரவை குயில்கள் கீதம் பாடி வரவேற்க, தென்றலின் இசையில் பச்சை பட்டாடை உடுத்திய வயல்கள் அசைந்தாட, வாய்க்கால் நீர் சலசலவென்று ஓடிக் கொண்டிருந்தது.

    [இலஞ்சி - "Triplet City" என்று சிலரால் அழைக்கப்படும் இலஞ்சி திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் பசுமை நிறைந்த எழில் பொருந்திய சிற்றூர். முக்கோணத்தின் மையக் கோட்டுச் சந்தியை போல் இலஞ்சி தென்காசி, குற்றாலம் மற்றும் செங்கோட்டையின் மையக் கோட்டுச் சந்தியாக அமைந்திருக்கிறது. இந்த சிற்றூரை சுற்றி 'சிற்றார்' மற்றும் 'வடக்காறு' என்னும் இரண்டு ஆறுகள் ஓடுகின்றன.விவசாயம், மரத்தொழில் மற்றும் மண்பாண்டத் தொழில்களே இலஞ்சியின் முக்கிய தொழில்கள்.]

    வழக்கம் போல் இலஞ்சியின் காலை பொழுதின் அழகை ரசித்தப்படியே தனது நடைப்பயிற்சியை முடித்துவிட்டு வீட்டினுள்ளே நுழைந்தான் சேகர்.

    வீட்டின் வராண்டாவில் அமர்ந்து சேகர் செய்தித்தாளை படித்துக் கொண்டிருந்த போது காபியுடன் வந்த சாந்தி அவனிடம் காபியை கொடுத்துவிட்டு,
    "கண்ணா இன்னைக்கு சாய்ந்ரம் சீகரம் வந்துரு"

    அன்னை தந்த காபியை ரசித்து குடித்தபடி,
    "எதுக்கு மா? யாரும் என்னை மாப்பிள்ளை பார்க்க வராங்களா?" என்று கூறி கண்சிமிட்டினான்.

    சாந்தி மகனை லேசாக அடித்து, புன்னகையுடன், "போக்கிரி.."

    "ச! என் பிஞ்சு நெஞ்சை இப்படி ஏமாத்திட்டியே மா!"

    "டேய் விளையாடினது போதும்.. இன்னைக்கு யார் வராங்கன்னு நிஜமாவே மறந்துட்டியா?"

    சிறிது யோசித்த சேகர், "அண்ணா அடுத்த வாரம் தான் வரான்.. ஸோ அண்ணா இல்லை.. ஹ்ம்ம்..ஹும்..எனக்கு தெரியலை. நீயே சொல்லு மா.. யாரு வரா?"

    அன்னை செல்ல முறைப்புடன், "ரெண்டு நாள் முன்னாடி சொன்னது மறந்து போச்சு.. நீயெல்லாம் எப்படி தான் ஒரு ஸ்கூல் நடத்துறியோ!"

    "அம்மா.. உனக்கே தெரியும் ISO இன்ஸ்பெக்சன் னு ஒரு வாரமா எவ்ளோ பிஸி யா இருந்தேன்! அந்த நேரத்தில் நீ எதையாது சொல்லியிருப்ப"

    "ஆமா டா.. உன் அப்பா 'அவனுக்கு இத்தனை லோட் அனுப்பனும் இவனுக்கு இத்தனை லோட் அனுப்பனும்' னு மரத்தை கட்டி அழுறாரு..
    அந்த ப்ரொஜெக்ட் இந்த ப்ரொஜெக்ட் னு ராஜாவும் கவிதாவும் கம்ப்யூட்டரை கட்டி அழுறாங்க,
    நீ உன் ஸ்கூலை கட்டி அழு..
    நான் தனியா இந்த வீட்டை கட்டி அழுறேன்"

    சேகர் எழுந்து அன்னையின் இரு தோள்களையும் பற்றி,
    "என் செல்ல அம்மாக்கு கூட இவ்ளோ கோபம் வருமா!" என்று கொஞ்ச, சாந்தி முகத்தை திருப்பினார்.

    "எல்லாம் அவளுக்கு சப்போர்ட்க்கு ஆள் வர தைரியம் டா" என்று கூறியபடி கணேசன் வந்தார்.

    "யாரு பா வரா? நீங்களாது சொல்லுங்க"

    கணேசன், "எல்லாம் உனக்கும் வேண்டியவங்க தான்"

    "இப்பலாம் ஹீரோயின்க்கு கூட இவ்ளோ பில்ட்-அப் குடுக்குறது இல்லை.. உங்க ரெண்டு பேர் அலம்பல் தாங்கலை.. நான் சாயிங்காலம் மெதுவா வந்தே பார்த்துக்குறேன்" என்று கூறி தன் அறையை நோக்கி சென்றான்.

    கணேசன் மர்ம புன்னகையுடன், "யாரு கண்டா! வரது உன் ஹீரோயின் ஆ கூட இருக்கலாம்!"

    சட்டென்று திரும்பி பார்த்த சேகர், "அம்மா யாரு வராங்க னு சொல்ல போறியா இல்லையா!"

    சாந்தி முகமலர்ச்சியுடன், "சண்முகம் அண்ணா, அமுதா அண்ணி, கீர்த்தி வராங்க டா கண்ணா"

    சேகர் வாய்விட்டு சிரித்தான். வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிப்பின் நடுவே,
    "ஐயோ ஐயோ! அந்த கீரிபிள்ளைக்கா இவ்வளவு பில்ட்-அப்!
    அந்த குரங்கு என் ஹீரோயின் ஆ! ஐயோ ஐயோ.. போங்க பா.." என்று கூறி சிரிப்புடன் தன் அறைக்கு சென்றுவிட்டான்.

    சாந்தி சிறு கலக்கத்துடன், "என்னங்க இப்படி சொல்லிட்டு போறான்"

    கணேசன் புன்னகையுடன், "அவனும் கீர்த்தியும் ஒருத்தரை ஒருத்தர் வாறுரதென்ன புதுசா! விடு பார்த்துக்கலாம்"

    "இல்லங்க.........."

    "கவல படாத சாந்தி.. எல்லாம் நல்லபடியா தான் நடக்கும்.. அப்பறம் இதை பற்றி கீர்த்தி கிட்ட பேசிராத.. சண்முகம் கீர்த்தி கிட்ட இதை பத்தி இன்னும் பேசலை..
    இன்னொரு முக்கியமான விஷயம் மறந்தும் கூட......................."

    "ஹ்ம்ம்.. ஞாபகம் இருக்குங்க.."

    "அம்மா சோப்பு எடுத்துட்டு வர மறந்துட்டேன்.. ப்ளீஸ் மா.. கொஞ்சம் எடுத்துட்டு வாயேன்" என்ற சேகரின் சத்தம் குளியலறையில் இருந்து வரவும் சாந்தி உள்ளே சென்றார்.



    அதே நேரத்தில் சென்னையில் இருந்து புறப்பட்ட சண்முகம் குடுப்பம் காரில் இலஞ்சியை நோக்கி வந்துக் கொண்டிருந்தார்கள். சண்முகம் காரை ஓட்ட, அவர் அருகில் அவரது மகள் கீர்தன்யா அமர்ந்திருக்க, அவரது மனைவி அமுதா பின் இருக்கையில் அமர்ந்திருந்தார்.

    FM ரேடியோவில் ஒவ்வொரு அலைவரிசையாக மாற்றி கொண்டிருந்த கீர்தன்யா ஒரு கட்டத்தில் அதை அணைத்துவிட்டு,
    "அப்பா கொஞ்சம் காரை நிறுத்துங்க.. நான் பின்னாடி போறேன்"

    சண்முகம் வண்டியை நிறுத்தியதும் பின்னால் சென்ற கீர்தன்யா அன்னை மடியில் தலை வைத்து கண்மூடி படுத்துக் கொண்டாள்.

    அமுதா மெளனமாக மகளின் தலையை வருட சண்முகம் மெளனமாக வண்டியை கிளப்பினார்.
    அமுதா மெளனமாக இருந்தாலும் அவரின் மனம் மூன்று நாட்கள் பின்னோக்கி சென்றது.

    இரவு 8 மணி அளவில், கீர்தன்யாவும் அமுதாவும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த போது, கீர்தன்யா
    "ச்ச்" என்ற சலிப்புடன் எழுந்துக் கொள்ள,
    அமுதா, "என்ன கீர்த்தி?"

    கீர்தன்யா, "ஒரே போர் மா.. நான் சிஸ்டம்-க்கு போறேன்"

    "அப்பா வர நேரம் தான்.. சாப்டுட்டு போய் சிஸ்டம் ல உட்காரு"

    "ச்ச்.. என்னமா நீ............"என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே உள்ளே வந்த சண்முகம்,
    "என்னாச்சு! அம்மாக்கும் பொண்ணுக்கும் என்ன ஆர்கியுமென்ட்?"

    அமுதா, "ஒரு ஆர்கியுமென்ட்டும் இல்லை.. சாப்டுட்டு சிஸ்டம் ல உட்காரு னு சொல்லிட்டு இருந்தேன்"

    மகள் முகத்தை பார்த்த சண்முகம்,"வீட்டுக்கு வரும் போதே எனக்கு ஒரே பசி.. உங்க அம்மா வேற வந்ததும் வராததுமா வாசலிலேயே நிக்க வச்சு அதை வாங்கிட்டு வாங்க இதை வாங்கிட்டு வாங்க னு அனுப்பிட்டா..
    இப்போ வைத்துக்குள்ள பையர்(fire) இஞ்சின்னே ஸ்டார்ட் ஆகிடுச்சு..
    இப்போ நீ சிஸ்டம் ல உட்கார்ந்துட்ட.. நீ வரும்வரை சாப்பாடு போட மாட்டா..
    ப்ளீஸ் டா.. அப்பா மேல் கருணை காட்டு.."

    அமுதா இடையில் கையை வைத்துக் கொண்டு,"ஹ்ம்ம்.. வரும் போதே வாங்காம வந்தது உங்க தப்பு.. அப்பறம்.. எப்படி எப்படி! வாசலிலேயே நிக்க வச்சு அனுப்புனேனா!
    ஒரு மணி நேரம் போராடி அனுபிருக்கேன்............................."

    கீர்தன்யா, "சாப்பிடலாம் பா"

    அமுதா மகளை முறைக்க, கீர்தன்யா இதழில் மிக சிறு புன்னகையுடன்,
    "என்ன மா? வரலை சொன்னாலும் முறைக்குற.. வரேன் னு சொன்னாலும் முறைக்குற"

    சண்முகம், "அது ஒன்னுமில்லை டா.. அவ சொன்னப்ப நீ வரலையாம் அதான் இந்த முறைப்பு"

    "அப்பாவும் மகளும் ஒன்னு சேர்ந்துட்டீங்களா!............."ஏதோ சொல்ல வந்த அமுதா கஷ்டப்பட்டு அதை நிறுத்தி,"வாங்க சாப்பிடலாம்"என்று கூறி உணவறைக்கு சென்றார்.

    என்ன தான் அமுதா கவனமாக நிறுத்தினாலும் அவர் என்ன சொல்ல வந்தார் என்பதை துல்லியமாக அறிந்த கீர்தன்யாவின் இதழில் இருந்த மிக சிறு புன்னகை மறைந்தது.

    சண்முகம் சத்தமின்றிபெருமூச்சொன்றைவெளியிட்டுவிட்டு, மகளில் தோளை தட்டி, இயல்பான குரலில்,
    "வாடா சாப்பிடலாம்..(உணவறை பக்கம் பார்வை செலுத்திவிட்டு)
    அம்மா ஏதோ புதுசா ட்ரை பண்ணியிருக்காளாம்.. அதை சூடா சாபிடுறது பெட்டெர்.. இல்லாட்டி ரொம்ப கஷ்டமா போய்டும்"என்று கூறி புன்னகைத்தார்.

    பதிலுக்கு புன்னகைக்க முயற்சித்து தோற்றுப்போனாள் கீர்தன்யா.

    தன் முயற்சி தோல்வியடைந்ததை உணர்ந்த சண்முகம், மகளின் முயற்சியை அறிந்தும் அறியாதவர் போல், அன்று தன் கல்லூரியில் நிகழ்ந்த சம்பவத்தை பற்றி பேசியபடி உணவறைக்கு சென்றார்.



    உறங்கும் முன் சண்முகம்,
    "கீர்த்தி நாளைல இருந்து அப்பாக்கு வெகேஷன் லீவ் ஸ்டார்ட் ஆகுது.." என்றவர் இரண்டு நொடிகள் இடைவெளி விட்டு,
    "இந்த வெகேஷனுக்கு நாம இலஞ்சி போகலாம் னு பிளான் பண்ணிருக்கேன்"

    கீர்தன்யா ஒன்றும் பேசாமல் வெறுமையாக தந்தையை பார்த்தாள்.

    கணவரின் அறிவிப்பில் சிறு பதற்றத்துடன் மகளையும் கணவரையும் மாறி மாறி பார்த்தார் அமுதா.

    சண்முகம், "நாளானைக்கு காலைல கார் ல கிளம்பலாம் னு யோசிக்குறேன்.. நீ என்ன சொல்ற டா?"

    கீர்தன்யா, "நீங்களும் அம்மாவும் போயிட்டு வாங்க"

    சண்முகம், "உன்னை தனியா விட்டுட்டு..............."

    கீர்தன்யா, "நான் வரலை"

    "ஏன்?"

    கண்ணில் வலியுடன் தந்தையை பார்த்தாள் கீர்தன்யா.

    அமுதா ஏதோ கூறவர, சண்முகம் பார்த்த பார்வையில் அமைதியானார்.
    சண்முகம், "கீர்த்தி சந்துரு போன கஷ்டம் எங்களுக்கு மட்டும் இல்லையா! அதை ஏத்துகிட்டு வாழ பழகனும்..
    இன்னும் எத்தனை நாள் போனவனையே நினைத்து உன்னையும் கஷ்டபடுத்தி எங்களையும் கஷ்டபடுத்த போற?
    உன்னுடைய பழைய குறும்பையும் துள்ளலையும் பார்க்க நானும் அம்மாவும் ஏங்கிட்டு இருக்கோம்.."

    கீர்தன்யா, "முடியலையே பா!" என்று இயலாமையுடன் கூறினாள்.

    அமுதா மெளனமாக கண்ணீர் சிந்தினார்.

    சண்முகம், "நீ இப்படி வாடிய முகத்துடன் இருந்தா சந்துருக்கு பிடிக்குமா?"

    கீர்தன்யா வேதனையுடன் கண்களை மூடினாள். எப்பொழுதுமே சிரித்த முகத்துடன் இருக்கும் சந்துரு அவள் மனகண்ணில் வந்தான். எப்பொழுதாவது அவளது முகம் சிறிது வாடினாலும் அவளையே சுற்றி சுற்றி வந்து அவளை கொஞ்சி சிரிக்க வைக்கும் சந்துருவின் நினைவை தன் சிந்தனையில் இருந்து அகற்ற முடியாமல் தவித்தாள்.

    சண்முகம் மகள் அருகே அமர்ந்து அவளை தன் தோள் மீது சாய்த்துக் கொண்டு இதமாக பேசத் தொடங்கினார்.
    "கஷ்டமா தான் டா இருக்கும்...
    நீ இப்படி இருக்கிறதை பார்க்க பார்க்க எங்களுக்குரொம்ப கஷ்டமா இருக்கு டா..
    ப்போதும் அதையே நினைச்சுட்டு இருக்க கூடாது..
    உனக்காக தானே சென்னை வந்தோம்.............."


    "இங்கேயே இருக்க வேண்டியது தானே! எதுக்கு இப்போ இலஞ்சி போனும் னு சொல்றீங்க?
    அப்படி வெகேஷன் போனும் னா வேற எங்கேயாது போகலாம் பா.. இலஞ்சி வேண்டாம்"


    மகளில் தலையை வருடியபடி,
    "கீர்த்தி நாம இலஞ்சிக்கு தான் போக போ……………..."

    "தெரியும்.. இருந்தாலும் வேணாம்.."

    "கீர்த்தி அப்பா சொல்லி முடிச்சுக்குறேன்.. அப்பறம் நீ பதில் சொல்லு..
    நம்ம இலஞ்சி வீட்டுல கொஞ்சம் வேலை இருக்கு................"

    "அதை கணேசன் மாமா வ பார்க்க சொல்லுங்க"

    "கீர்த்தி.. நான் சொல்றதை பஸ்ட் முழுசா கேளு..
    இலஞ்சி வீடு பழசா ஆகிருச்சு ல.. பட்டாசல்(ஹால்), அரவீட்டு(ஸ்டோர் ரூம்) சீலிங் இறங்கிட்டு வருது.. உடனே சரி செய்யலை full சீலிங்கும் டமேஜ் ஆகிரும்..
    மாடி கதவு துருபிடிக்க ஆரம்ச்சு இருக்கு.. அதை மாத்தனும்..
    கணேசன் மாமா பார்த்துப்பான் தான் பட் இன்னொரு வேலையும் இருக்கு..
    ரைஸ் மில் விக்குறதுக்கு பார்த்துட்டு இருந்தது உனக்கே தெரியும்.. இப்போ ஒரு பார்ட்டி செட் ஆகிவறது போல் இருக்கு..
    ஸோ இந்த வெகேஷன் ல போனா எல்லா வேலையையும் முடிச்சுரலாம்..

    நான் மட்டும் போனா போதாதா னு நீ நினைக்கலாம்.. பட்..

    ஏற்கனவே கணேசன் மாமா ரொம்ப நாளா கூப்டுட்டு இருந்தான்..
    நாம போகவே இல்லை..
    சபரி கல்யாணத்துக்கும் போகலை.. அதான் இப்போ எல்லாரும் போகலாம் னு சொல்றேன்..

    ஸோ வேண்டாம் னு சொல்லாத டா.." என்று சிறு கெஞ்சலும், பெரும் எதிர்பார்ப்புமாக முடித்தார்.

    சிறிது நேரம் யோசித்த கீர்தன்யா, "எனக்கு அங்க போர் அடிக்கும் பா"

    கீர்தன்யாவின் இந்த பதிலில் இருந்தே அவள் மனம் இலஞ்சி செல்ல ஒத்துக் கொள்ள தொடங்கிவிட்டதை சண்முகம் புரிந்துக் கொண்டார். அவரது மனம் மகிழ்ந்தது, ஏனெனில் இலஞ்சி செல்ல அவர் முடிவெடுத்த முக்கியமான காரணம் வேறு.
    தன் நெருங்கிய நண்பன் கணேசனின் இரண்டாவது மகன் சேகருக்கும் கீர்தன்யாவுக்கும் திருமணத்தை நிச்சயம் செய்ய வேண்டும் என்பது தான் அந்த முக்கியமான காரணம்.

    சண்முகம், "நீ வேணும் னா சேகர் கூட ஸ்கூலுக்கு போ.. அங்க போய் பேன்டிங் அண்ட் கரப்ட் கிளாஸ் எடு"

    சட்டென்று நிமிர்ந்த கீர்தன்யா, "அந்த ஸ்னேக் ஸ்னேகா கூட நான் போறதா? சும்மாவே பீத்துவான்.. இதுல அவன் கூட அவன் ஸ்கூலுக்கு போய் நான் கிளாஸ் எடுத்தா.. சொல்லவே வேணாம்.. என்னவோ அவன் கிட்ட நான் சம்பளம் வாங்குவது போல் காலரை தூக்கிவிட்டுக்கும் அந்த குரங்கு"

    இரண்டு வருடங்கள் கழித்து மகளின் துள்ளல் சிறிது எட்டிப் பார்க்கவும் சண்முகமும் அமுதாவும் அகமும் முகமும் மலர்ந்தனர்.

    சண்முகம் தன் முடிவு சரி என்று நினைத்தார்.

    சண்முகம், "பேன்டிங் அண்ட் கரப்ட் கிளாஸ் 10டேஸ் லீவ் னு நாளைக்கு மறக்காம அனௌன்ஸ் பண்ணிடு டா"

    கீர்தன்யா, "10டேஸ் ஆ"

    "ஓகே ஒன் வீக்"

    "அப்பா 3டேஸ் ல வந்துரலாம் பா ப்ளீஸ்"

    "நீ 10 டேஸ் னு அனௌன்ஸ் பண்ணு டா.. அங்க போர் அடிச்சுதுனா நீயும் அம்மாவும் 3டேஸ் ல கிளம்பி வந்துருங்க.. சரியா?"

    கீர்தன்யா அரை மனதுடன் 'சரி' என்று தலையை ஆட்டினாள்.

    சண்முகம், "ரொம்ப நாளா கேட்கணும் நினைச்சேன்.. சேகருக்கு எதுக்கு டா ஸ்னேக் ஸ்னேகா னு நேம் வச்ச?"

    "இத்தன வருஷமா உங்களுக்கு தெரியாதா! நம்ப முடியலையே!"

    சண்முகத்திற்கு காரணம் தெரியும் தான் இருந்தாலும் தன் மகளின் பழைய குறும்புத்தனத்தை வெளிக்கொண்டுவரும் முயற்சியாக இந்த கேள்வியை கேட்டார்.

    சண்முகம், "அவன் உன்னை கீரிபிள்ளை னு சொன்னதால் ஸ்னேக் னு கூப்பிடுவ னு தெரியும்.. பட் ஸ்னேகா பெயர் காரணம் தெரியாது"

    கீர்தன்யா சிறு புன்னகையுடன், "அது பெருசா ஒன்னுமில்லை பா.. அவன் டென்த் படிக்கும் போது ID கார்டு ல அவன் நேம் snekar னு பிரிண்ட் ஆகிருச்சு.. அதுல இருந்து.. 'ஸ்னேக் சேகர்' 'ஸ்னேக் ஸ்னேகா' னு மாறிடுச்சு"

    சண்முகம் புன்னகைத்தார்.

    அமுதா முகமலர்ச்சியுடன் இருவருக்கும் பால் அருந்த கொடுத்தார்.






    கீர்தன்யா உறங்கிய பின், தங்கள் அறையில் அமுதா,
    "எதுக்காக இப்போ இலஞ்சி போகணும் னு சொல்றீங்க?"

    "நான் சொன்னதை நீயும் தானே கேட்டுட்டு இருந்த!"

    "உங்க வாய் சொன்னதை கேட்டுட்டு தான் இருந்தேன்.. மனசு சொன்னதை கேட்கலை"

    சண்முகம் புன்னகையுடன், "கணேசன், சேகருக்கு நம்ம கீர்த்தியை பொண்ணு கேட்கிறான்."

    அமுதாவிற்கு சந்தோஷமும் கவலையும் ஒன்று சேர்ந்து வந்தது.

    அமுதா சந்தோஷமாக, "எப்போங்க அண்ணா கேட்டாங்க?" என்று கேட்டவர், உடனே முகம் வாட, கவலையுடன்,
    "இதுக்கு கீர்த்தி ஒத்துக்கணுமே!"

    சண்முகம், "ஒத்துப்பா.. இந்த பத்து நாள் நல்ல பழகட்டும்.............."

    "என்னங்க நீங்க! என்னமோ சேகரும் கீர்த்தியும் புதுசா பழகனும் போல் பேசுறீங்க!"

    "ரெண்டு பேரும் எப்போதும் விளையாட்டா சண்டை போட்டு பழகிக்குறது வேறு.. கல்யாணம் பண்ற எண்ணத்துடன் பழகுறது வேறு"

    "ஹ்ம்ம்.. இந்த கல்யாணம் மட்டும் நல்ல படியா நடந்தா திருசெந்தூர் முருகனுக்கு தங்க தேர் இழுக்கனும்ங்க"

    சண்முகம் புன்னகைத்தார்.


    சாலையில் எதிரே வந்த லாரியின் ஹார்ன் சத்தத்தில் நிகழ் காலத்திற்கு திரும்பினார் அமுதா.
     
    2 people like this.
  5. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    சிந்தனை 2:

    காவல்
    த்துறை அசிஸ்டன்ட்-கமிஷ்னர் அலுவலகம்திருநெல்வேலி மாவட்டம்

    காலை 11.30மணி அளவில் அசிஸ்டன்ட் கமிஷ்னர் தியாகேஷ்வர் மற்றும் இன்ஸ்பெக்டர் சந்தீப் இடையே தீவிரமான வாக்குவாதம் நடந்துக் கொண்டிருந்தது.

    தியாகேஷ்வர், "மிஸ்டர் ஜெயப்ரகாஷ் அக்சிடென்ட் ல இறந்து ஒரு மாசத்துல அவரோட பஸ்ட் டாட்டர் சுபாஷினி இறந்துருக்கா.. எப்படி சுபாஷினியின் மரணத்தை சூசைட் னு இவ்ளோ சீக்கிரம் பைல் அ க்ளோஸ் பண்ண சந்தீப்?"

    "சார் அந்த பொண்ணு தூக்கு போட்டு தான் இறந்துருக்கு னு போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் தெளிவா இருக்கு.. ரூமும் உள்ளுக்குள்ள தான் தாழ்பாள் போட்டிருந்தது"

    "நீ போகும் போது கதவு பூட்டியா இருந்தது?"

    "அது.. இல்லை தான் பட் சர்வன்ட்ஸ் கிட்ட விஷாரிச்சதில்.............."

    "அவங்க பொய் கூட சொல்லியிருக்கலாமே?"

    "JP வைப் கூட அப்படி தான் சொன்னாங்க சார் அண்ட் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்……."

    "தூக்கு போட்டு சாக போறவ ஏன் தூக்க மாத்திரை சாப்டனும்?"

    "கடந்த ஒரு மாசமா அது அவ டெய்லி ரோடின் சார்"

    தியாகேஷ்வர் யோசனையில் இருந்தான்.

    சந்தீப், "சார்.. போஸ்ட்மார்டம் ரிப்போர்ட், சுபாஷினி கைப்பட எழுதிய லெட்டெர், மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் எல்லாமே சுபாஷினி மரணம் தற்கொலை னு தான் சொல்லுது..
    அந்த வக்கீல் சும்மா கிளப்பி விடுறார்"

    தியாகேஷ்வர் சிறிது கண்ணை சுருக்கி,
    "ஹ்ம்ம்.. மேலோட்டமா பார்த்தா நீ சொன்னது கரெக்ட்.. பட் பீல் சம்திங் பிஸ்ஸி.. லெட் மீ பைண்ட் அவுட்.."

    "சார்.. டூ யூ டவுட் மீ"

    தியாகேஷ்வர் சிறு புன்னகையுடன், "ஐ நொ யூ சந்தீப்.. பட் தி கேஸ் இஸ் ரி-ஒபெண்டு"

    "ஓகே சார்" என்று கூறியபடி சந்தீப் எழுத்துக் கொள்ள, அவனது கையை குலுக்கியபடி தியாகேஷ்வர் விடைகொடுத்தான்.

    தியாகேஷ்வர் அந்த கோப்பியத்தை இரண்டாவது முறையாக எடுத்துப் பார்த்தான்.
    வழக்கு - திருநெல்வேலி மாவட்டத்தில் புகழ்பெற்ற "Today's Trend" ஆடை மற்றும் நகை கடையின் உரிமையாளர் ஜெயப்ரகாஷின் முதல் மகள் சுபாஷினியின்(17 வயது) மரணத்தை பற்றிய வழக்கு.
    சுபாஷினி இறப்பதற்கு ஒரு மாதம் முன்பு தான் ஜெயப்ரகாஷ் கார் விபத்தில் இறந்திருந்தார். இறப்பதற்கு முன் சொத்துகள் அனைத்தையும் சுபாஷினி பெயரில் எழுதி, காப்பாளராக(guardian) தனது தம்பி(சித்தப்பா மகன்) பிரதாப்பை நியமித்திருந்தார்.

    முதலில் சுபாஷினியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை படித்தான்.
    அந்த அறிக்கையில், அந்த பெண் கழுத்து இறுகி கழுத்து எலும்பு நொறுங்கி இறந்ததாக கூறப் பட்டிருந்தது. மேலும் அவள் இருந்து போன நேரத்திற்கு அரைமணி நேரம் முன்னதாக அவள் ஒரு தூக்க மாத்திரையை உட்கொண்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

    அடுத்து மருத்துவ பதிவேடை எடுத்து படித்தான்.
    அதில் அந்த பெண் ஒரு மாத காலமாக மனசோர்வு காரணமாக தினமும் இரவு ஒரு தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டதாகவும், அவளுக்கு மூன்று ஆண்டுகளாக 'சைனஸ்' பிரச்சனை இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

    அடுத்து ஒரு கடிதத்தை படித்தான்.
    அதில் அந்த பெண் 'தன் இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை என்றும், தன் மன உளைச்சல் மற்றும் தீராத தலைவலி காரணமாக தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்ததாக' கூறியிருந்தாள்.

    இந்த தகவல்களை பார்க்கும் போது அந்த பெண் சுபாஷினியின் மரணம் தற்கொலை போல் தான் தெரிந்தது, ஆனால் சுபாஷினியின் குடும்ப வக்கீலும், அந்த பெண்ணின் தந்தை ஜெயப்ரகாஷின் நண்பருமான வழக்கறிஞர் கார்த்திகேயன் 'சுபாஷினியின் மரணம் கொலையாக இருக்குமோ என்ற சந்தேகம் இருப்பதால், மறுவிசாரணை செய்யுமார்' AC தியகேஷ்வரிடம் விண்ணப்பம் செய்திருந்தார்.

    பலவிதமாக யோசித்த தியாகேஷ்வருக்கும் இது கொலையாக இருக்குமோ என்று தான் தோன்றியது.

    "மே ஐ கம் இன் சார்?"

    "எஸ்" என்று தியாகேஷ்வர் தனது கம்பீரமான குரலில் கூறியதும் உள்ளே நுழைந்த இன்ஸ்பெக்டர் தினேஷ் தியாகேஷ்வர் முன் வந்து நின்று விறைப்பாக சல்யூட் அடித்து, "குட் அப்ட்டர்-நூன் சார்" என்றான்.

    தியாகேஷ்வர் சிறு தலையசைப்பில் அவனது வணக்கத்தை பெற்றுக் கொண்டு,
    "குட் அப்ட்டர்-நூன் தினேஷ்.. உன்னை தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன்..
    ஹோப் யூ நொ வொய் யூ ஆர் ஹியர்"

    "எஸ் சார்..JP டாட்டர் டெத் கேஸ் ரி-இன்வெஸ்டிகேட் பண்ண போறோம்..
    சந்தீப்க்கு பதில் யாரையும் நம்ம டீம் ல சேர்த்து இருக்கீங்கலா சார்?"

    "எஸ்.. மார்க்கெட் ஏரியாக்கு புதுசா ட்ரான்ஸ்பர் ஆகியிருக்கும் இன்ஸ்பெக்டர்"

    தினேஷ் சிறிது ஆச்சரியம் கலந்த குரலில்,
    "சார்.. புதுசா வரது லேடி இன்ஸ்பெக்டர் தானே!"

    "எஸ்.. ஏன்! லேடி இன்ஸ்பெக்டர் நம்ம டீம் ல இருந்தா உனக்கு என்ன பிரச்சனை? (சிறு புன்னகையுடன்)சந்தோஷப் படுவ னு நினைத்தேன்!"?"

    தினேஷ் புன்னகையுடன், "எனகென்ன பிரச்சனை? சந்தோஷம் தான்.. நான் உங்களை நினைத்து தான் கேட்டேன்.."

    "ஏன் எனகென்ன?"

    "அது வந்து..............."

    தியாகேஷ்வர் சிறு புன்னகையுடன், "நான் பொண்ணுங்க கூட அவ்வளவா பழக மாட்டேன் தான்.. அதுக்காக பழகவே மாட்டேன் னு யாரு சொன்னா?"

    தினேஷ் சிறிது அசடுவழிந்தபடி, "யாரும் சொல்லலை சார்.. நானா தான்...
    அது.. இந்த ரெண்டு வருஷமா நான் உங்களை பார்த்து பழகியவரை நீங்க...."

    தியாகேஷ்வர் புன்னகையுடன், "ஸோ என்னை சாமியார் னே முடிவு பண்ணிட்ட"

    "அப்படி இல்லை..சார்"

    "ஓகே லீவ் இட்.. நான் இந்த முடிவெடுக்க இரண்டு காரணங்கள்..
    பஸ்ட் ரீசன் - இறந்திருப்பது ஒரு பெண் அதுவும் மைனர்..
    செகண்ட் ரீசன் - கமிஷ்னர் ரெக்வெஸ்ட்.. மிஸ் லாவண்யா கமிஷ்னர் சிஸ்டர்'ஸ் டாட்டர்
    அது மட்டும் இல்லை அவங்க திறமைசாலியும் கூட.. "

    தினேஷ் அவசரமாக, "என்ன நேம் சார் சொன்னேங்க?"
    "லாவண்யா.. ஏன்?"

    தினேஷ் பதில் கூறும் முன், "மே ஐ கம் இன் சார்?"என்ற பெண் குரல் கேட்கவும், தியாகேச்வர், "எஸ்" என்றான்.
    உள்ளே நுழைந்த இன்ஸ்பெக்டர் லாவண்யாவை பார்த்ததும் தினேஷ் முகத்தில் எரிச்சல் கலந்த சிறு வெறுப்பு பிறக்க, மனதினுள், 'சை.. அவளே தான்'என்று நினைக்க,

    தியாகேஸ்வருக்கு சல்யூட் அடித்து, "குட் அப்ட்டர்-நூன் சார்" சொல்லிவிட்டு, தினேஷை பார்த்த லாவண்யா முகத்திலும் அதே உணர்ச்சிகள், மனதினுள் அதே எண்ணம், 'சை.. அவனே தான்'

    தினேஷின் மனம் சில அவருடங்கள் பின்னோக்கி பள்ளி பருவத்திற்குசென்றது………..

    தினேஷ் 11வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது அவன் வகுப்பில் புதிதாக வந்து சேர்ந்தாள் லாவண்யா.
    'யார் முதல் மதிப்பெண் எடுப்பது?' என்று படிப்பு விஷயத்தில் அவர்கள் இடையே தொடங்கிய போட்டி, சின்ன சின்ன விஷயத்திலும் தொடர, எப்பொழுதும் இருவரும் எதிரும் புதிருமாக நின்றனர்.

    12வகுப்பின் இறுதி நாள், அதாவது கல்வி விடுப்பு(ஸ்டடி லீவ்) தொடங்குவதற்கு முன்தினம் - இடைவேளையில் மரத்தடியில் தினேஷ் தனது நண்பர்களிடம்,
    "தமிழ் ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை லா.வ.ண்.யா" என்று கூற,
    அதை கேட்ட லாவண்யா கோபமாக தன் தோழியிடம்,
    "தமிழ் ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை தி.னே.ஷ்" என்றாள்.

    தினேஷ் தன் நண்பனிடம், "நான் சொல்லலை.. இவளுக்கு லாம் அறிவே கிடையாது.. சரியான மக்கப் கேஸ் டா"

    லாவண்யா கோபமாக, "டேய்.. யாரை பார்த்து அறிவு கிடையாது னு சொல்ற?"

    தினேஷ் அலட்டிக் கொள்ளாமல், "உன்னை பார்த்து தான்"

    "உனக்கு தான் டா அறிவு கிடையாது"

    "சொந்தமாவே பேச தெரியாதா? எப்போ பார்த்தாலும் நான் பேசுவதையே காபி அடிச்சு பேசு" என்று கூறி நக்கலாக சிரிக்க,

    "டேய் வேண்டாம்"

    "என்ன வேண்டாம்?"

    "என்னிடம் வச்சுக்காத"

    "ஆமா இவ பெரிய மகாராணி.. போடி.." என்று கூறிவிட்டு வகுப்பறை நோக்கி சென்றான். செல்லும் வழியில்,
    "எப்பா இன்னையோட விட்டது சனி.. இனி என் வாழ்வில் இந்த முகத்தை பார்க்கவே மாட்டேன்.." என்று கூறியது லாவண்யா காதில் விழுந்தது.

    தினேஷை ஒன்றும் செய்ய முடியாத கோபத்துடன் லாவண்யாவும் வகுப்பறைக்கு சென்றாள்.

    சிறிது நேரம் கழித்து தினேஷின் நண்பன் லாவண்யா அருகே இருந்த மாணவி மீது சாக்-பீஸை எறியஅதுலாவண்யாமீதுவிழுந்தது.

    தினேஷின் நண்பன் தலையின் இரண்டு கைகளையும் வைத்து,'ஐயோ' என்று கூற, தினேஷ் சிரித்தான்.

    'யார் எரிந்தது'என்றறிய லாவண்யா திரும்பி பார்த்த போது தினேஷ் சிரித்துக் கொண்டிருக்கவும் அவளுக்கு கோபம் கூடியது.

    லாவண்யா கோபமாக எழுந்து வந்து தினேஷ் கன்னத்தில் அரைந்து, கண்ணில் மித மிஞ்சிய கோபத்துடன் 'ஜாக்கிரதை' என்பது போல் சுட்டிவிரலை ஆட்டிவிட்டுதன் இடத்திற்கு சென்று அமர்ந்தாள்.

    குண்டூசி விழுந்தால் கூட கேட்கும் அளவிற்கு வகுப்பறையில் நிசப்தம் நிலவியது.

    இரண்டு நொடிகளில் தினேஷ் சுய-உணர்வு பெற்று எழவும் ஆசிரியர் வகுப்பறையினுள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

    தினேஷ் கோபத்துடன் கை முஷ்டியை இறுக மூடி மேஜையை ஓங்கி அடித்தான்.

    என்ன தான் அவனது நண்பர்கள் சமாதானம் சொன்னாலும் அவனுக்கு கோபம் குறையவே இல்லை.

    மதியம் 3மணிக்கு மேல் கிளம்பலாம் என்று ஆசிரியர் அறிவித்துவிட, மாணவர்கள் தங்களுக்குள் நினைவொப்பம்(autograph) வாங்கிக் கொண்டிருந்தனர்.
    மாலை கிளம்பும் நேரத்தில் லாவண்யாவை தேடிய தினேஷ் அவள் விளையாட்டுத் திடலில்(playground) தோழிகளுடன் இருப்பதை பார்த்ததும் வேகமாக சென்றான்.
    [அங்கே மற்ற வகுப்பை சேர்ந்த (சில) மாணவர்களும் இருந்தனர்]

    தினேஷின் கோபம் அறிந்த தோழர்கள் வேகமாக அவனை பின் தொடர்ந்தனர்.

    தினேஷ் லாவண்யா முன் நின்றதும், லாவண்யா எரிச்சல்,வெறுப்பு மற்றும் இகழ்ச்சி கலந்த பார்வையை பார்த்தாள்.
    தினேஷ், "எதை மறந்தாலும் இதை மறந்துறாத" என்று கூறி கண்ணிமைக்கும் நேரத்தில் அவளது இரண்டு கன்னங்களிலும் அழுத்தமாக அரைந்து, அவளை திரும்பி பார்க்காமல் வேகமாக பள்ளி வளாகத்தை விட்டு வெளியேறினான்.

    அதன் பிறகு இருவரும் இன்று தான் சந்திக்கின்றனர்.

    தினேஷ் வெறுப்பும் எரிச்சலுமாக அவளை முறைக்க, பழசை நினைத்தப் பார்த்த லாவண்யாவும் அவனை வெறுப்பும் எரிச்சலுமாக முறைத்தாள்.
    இருவரும் ஒருங்கே, 'அதே திமிர்.. அதே ஆணவம்.. மாறவே இல்லை'என்று மனதினுள் நினைத்துக் கொண்டனர்.

    தியாகேஷ்வர் லேசாக தொண்டையைசெரும,இருவரும் சட்டென்று முகத்தை சீர் செய்து தியாகேஷ்வரை பார்த்தனர்.

    தியாகேஷ்வர், "ஹோப்.. அப்பார்ட் ப்ரம் யுவர் பர்சனல் வெஞ்சன்ஸ் யூ போத் வில் கோ-ஆபிரெட் மீ இன் சால்விங் திஸ் கேஸ்"

    லாவண்யா ஆச்சரியமாக பார்க்க, தியாகேஸ்வரின் கணிப்புத் தன்மையை நன்றாக அறிந்த தினேஷ் ஆச்சரியமடையவில்லை, ஆனால் அவசரமாக,
    "சார் நீங்க நினைப்பது போல் இல்லை"

    தியாகேஷ்வர், "நான் என்ன நினைக்கிறன் னு உனக்கு எப்படி தெரியும்?"

    தினேஷ், "எனக்கு மைண்டு ரீடிங் தெரியும் சார் பட் உங்க மைண்ட ரீட் பண்ணுவது கஷ்டம் தான்..
    நான் என்ன சொல்ல வந்தேன் னா.." என்று கூறி லாவண்யாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு தியாகேஷ்வரை பார்க்க, அவனோ 'நீயே சொல்லி முடி'என்பது போல் தினேஷை பார்த்துக் கொண்டிருந்தான்.

    தினேஷ், "நாங்க 11த் 12த் ஒன்னா படிச்சோம்.. எங்களுக்குள் ஒத்துதே போகாது.. எப்போதும் சண்டை தான்.. 12த் லாஸ்ட் டே.. நான் பண்ணாத தப்புக்கு இவ என்னைஅடிச்சுட்டா(இதை சொல்லும் போது லாவண்யாவை பார்த்து முறைத்துவிட்டு திரும்பினான்) பதிலுக்கு நான் அவளை அடிச்சேன்.. அப்பறம் இன்னைக்கு தான் பார்கிறேன்"

    முதல் நாள் என்பதால் ஏதும் சொல்லாமல் கோபத்தை அடக்கிக் கொண்டு லாவண்யா அமைதியாக இருந்தாள்.

    தியாகேஷ்வர் லாவண்யாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு தினேஷிடம்,
    "இதையெல்லாம் ஏன் என்னிடம் சொல்ற?"

    "அது நீங்க வேற ஏதும் தப்பா நினைச்சுற கூடாதே னு"

    தியாகேஷ்வர் சிறு புன்னகையுடன், "நான் அப்படி என்ன நினைச்சுற போறேன் னு நீ நினைச்ச?"

    தினேஷ்,"சார்" என்று கண்களால் சிறிது கெஞ்ச, தியாகேஷ்வர் புன்னகையுடன்,
    "ஓகே..ஓகே.." என்றவன் லாவண்யாவை பார்த்து,
    "நீங்க ஏதும் சொல்ல விரும்புறீங்களா லாவண்யா?"

    தினேஷை முறைத்துவிட்டு தியாகேஷ்வர் பக்கம் திரும்பி, தீர்க்கமான குரலில்,
    "பழசை பற்றி பேச விரும்பலை சார்..
    நான் பர்சனல் விஷயத்தை ஆபீசியல் விஷயத்தில் கலப்பதில்லை..
    ஐ வில் கோ-ஆபிரெட் யூ சார்"

    தியாகேஷ்வர் புன்னகையுடன், "குட்" என்று கூறி தினேஷை பார்க்க, அவன்,
    "யூ நொ மீ வெல் சார்"

    தியாகேஷ்வர், "ஓகே.. லெட்ஸ் டிஸ்கஸ் அபௌட் தி கேஸ்.. லாவண்யா இது என்ன கேஸ்? என்னன்னு உங்களுக்கு ஏதாவது தெரியுமா?"

    தினேஷ் லாவண்யாவை நக்கலாக பார்த்துவிட்டு தியாகேஷ்வரிடம்,
    "இன்னைக்கு தானே சார் வந்துருக்காங்க.. என்ன................................."

    லாவண்யா தினேஷின் பேச்சை மதிக்காது தியாகேஷ்வரிடம்,
    "மிஸ்டர் ஜெயப்ரகாஷ் டாட்டர் டெத் அ சூசைட் னு இன்ஸ்பெக்டர் சந்தீப் க்ளோஸ் பண்ண கேஸ அட்வோகேட் கார்த்திகேயன் கொடுத்த பெட்டிஷன் அடிப்படையா வச்சு ரி-இன்வெஸ்டிகேட் பண்ணப்போறோம் சார்..

    மிஸ்டர் ஜெயப்ரகாஷ் ஒன் மன்த் பிபோர் தான் அக்சிடென்ட் ல இறந்திருக்கார்.
    மிஸ்டர் கார்த்திகேயன் மிஸ்டர் ஜெயப்ரகாஷ் பிரெண்ட் கம் லீகல் அட்வைசர்" என்று கூறி முடித்துவிட்டு தினேஷை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்தாள். தினேஷ் கஷ்டப்பட்டு தனது அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை மறைத்தான்.

    தியாகேஷ்வர் கண்ணில் பாராட்டுதலுடன், "ஸ்மார்ட்"

    லாவண்யா புன்னகையுடன், "தன்க் யூ சார்.. மாமா.. ஒ சாரி.. கமிஷ்னர் சார் கிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டேன்"

    தியாகேஷ்வர், "குட்" என்று கூறி தினேஷிடம்,
    "சந்தீப் போன் கால்ஸ் ட்ரக் பண்ண ஏற்பாடு பண்ணு.. ஆல்சோ புது இன்பார்மர வச்சு சந்தீபை பாலோ பண்ண சொல்லு"
    தினேஷ் சிறு அதிர்ச்சியுடன், "சார்"

    "நீ, நான், சந்தீப் சேர்ந்து கேஸஸ் சால்வ் பண்ணிருக்கோம் தான்.. சந்தீப் சின்சியர் தான்.. பட்..
    எந்த சூழ்நிலையும் யாரை வேணும்னாலும் மாற்றலாம்.. ஸோ நான் சொன்னதுக்கு ஏற்பாடு பண்ணு"

    "ஓகே சார்.. பட்.. இது மர்டர் னே முடிவு பண்ணிட்டீங்களா?"

    "மர்டர் ஆர் சூசைட்? லெட்ஸ் இன்வெஸ்டிகேட்..
    ஒருவேளை மர்டர் ஆ இருந்து பை எனி சான்ஸ் சந்தீப் குற்றவாளியுடன் துணை போயிருந்தா?அதுக்கு தான் இந்த அக்சன்.."

    "ஹ்ம்ம்.. ஓகே சார்"

    "அண்ட் ஒன் மோர் திங்............"

    "கேஸ் முடியும் வரை கேஸ் டிடேல்ஸ் பத்தி சந்தீப் கிட்ட எதுவும் சொல்ல மாட்டேன் சார்"

    தியகேஷ்வர் புன்னகையுடன், "குட்" என்று கூறி சுபாஷினி மரணம் சம்பந்தப்பட்ட கோப்பியத்தை நீட்டி,
    "ரெண்டு பேரும் படிச்சு பாருங்க" என்றான்.



    இருவரும் கோப்பியத்தை வாங்காமல் ஒருவரை ஒருவர் பார்க்க, தியாகேஷ்வர்,
    "கம் ஆன்.. சிட் அண்ட் ரீட்"

    இருவரும் தியகேஷ்வர் எதிரே அமர்ந்தனர். தினேஷ் கோப்பியத்தை வாங்கி இருவருக்கும் பொதுவாக பிரித்து வைக்க, இருவரும் படிக்கத் தொடங்கினர்.

    வேலை என்று வந்ததும் இருவரும் சொந்த விருப்பு வெறுப்பை மறந்து கோப்பியத்தில் முழுமனதுடன் கவனத்தை செலுத்தினர்.
    இதை கவனித்த தியாகேஷ்வர் இருவரையும் சேர்த்துக் கொண்டு இந்த வழக்கை வெற்றிகரமாக முடித்துவிட முடியும் என்று நம்பிக்கைக் கொண்டான்.



    உங்கள் கருத்துக்களை கீழே உள்ள தளத்தில் மட்டும் கூறவும்..
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/239533-comments.html#post3065603
    உங்கள் அன்புத் தோழி,
    கோம்ஸ்.
     
    3 people like this.
  6. banujaga

    banujaga Gold IL'ite

    Messages:
    658
    Likes Received:
    356
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Nice one. waiting for the next post
     
    1 person likes this.
  7. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    சிந்தனை 3

    மாலை விரைவாக வீடு திரும்பிய சேகர், உள்ளே நுழைந்ததும்,
    "என்னமா! அந்த கீரிபிள்ளை இன்னும் வரலையா? நீ சொன்னனு சீக்கரம் வந்தேன்.." என்று சிறு ஏமாற்றத்துடன் அலுத்துக்கொள்ள,

    சாந்தி, "யாரோ சீக்கரம் வரமாட்டேன்-னு சொன்னாங்க!"

    "நான் அப்படி சொல்லலையே!"

    "அப்படி சொல்லலை தான் ஆனா 'அவ வந்தா எனகென்ன'னு அக்கறை இல்லாதது போல் தானே போன?"

    "ஹி..ஹி..அது சும்மா.. கீர்த்தி இன்னும் வரலையா?"

    சாந்தி இடது கையை நெற்றியில் தட்டி, "அச்சோ அப்பா குடை எடுத்துட்டு போகலையே" என்று கூற, சேகர் 'சம்பந்தமே இல்லாம பேசுறாங்க' என்று மனதினுள் நினைத்துஅன்னையை பார்த்து புருவம் உயர்த்த,

    சாந்தி, "நீ கீர்த்தி-னு சொல்லிட்டியே! மழை வருமே.."

    "அம்மா இது டூ மச்"

    "டு மச் ஓ.. த்ரீ மச் ஓ.. நீ கீர்த்திக்கு வாங்கின மன்ச்-அ நான் கேட்கலை"

    "அம்மா!!!!!!"

    "என்னடா?"

    "வீட்டுக்குள்ளயே இருந்துட்டு கலக்குறியே! யாரு உனக்கு ஸ்பை வேலை பார்க்குறது?"

    "ஆமா இது பெரிய ஊரு.. உன்னை வேவு வேற பார்க்கணுமா! தெருமுனைல வாங்கிட்டு.. போடா"

    சேகர் புன்னகையுடன்,"அது சரி.. பட் நான் வரதுக்கு முன் மேட்டர் எப்படி வந்தது?"

    "மாரியம்மா(வீட்டு-வேலையாள்) சொன்னா"

    "மாரியம்மா கால்-ல ஸ்கேட்டிங்-ஆ கட்டியிருக்கா?"

    சாந்தி சிறு புன்னகையுடன், "நீ பைசா குடுத்துட்டு, காரை கிளப்பி வந்து, போர்டிகோ- நிறுத்திட்டுவரதுக்குள்ள அவ வந்துட்டா.. விஷயமும் வந்துருச்சு.. போதுமா!"

    "போதாதே!"

    "இன்னும் என்ன?"

    "நான் பஸ்ட் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லலையே!"

    சாந்தி அறியாதவர் போல், "என்ன கண்ணா கேட்ட?"

    "இன்னைக்கு நீ ரொம்ப பண்றமா.. போ.. நீ ஒன்னும் சொல்ல வேணாம்" என்று செல்ல கோபத்துடன் தன் அறை பக்கம் செல்லத் தொடங்கினான்.

    மகனின் ஆர்வத்தில் மனம் குளிர்ந்த சாந்தி விளையாடினது போதும் என்றெண்ணி,
    "கீர்த்தி 3.30 மணிக்குலாம் வந்தாச்சு"

    சட்டென்று திரும்பிய சேகர் ஆச்சரியத்துடன், "அப்புறம் எப்படி வீடு அமைதியா இருக்கு?"

    "அப்பா, மாமா, அத்தை-லாம் தென்காசி கோயிலுக்கு போயிருக்காங்க.."

    "கீர்த்தி?"

    "அவ போகலை" என்று சாந்தியின் பதில் சுருக்கமாக வந்தது.

    "என்னமா?"

    சாந்தி வருத்ததுடன்,"அவ அப்செட்-ஆ இருக்கா டா.. வரலை-னு சொல்லிட்டா"

    "இப்போ எங்க................." என்று கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது அறையை விட்டு வெளியே கீர்தன்யா வரவும், சேகர் புன்னகையுடன் கையசைத்தபடி அவளருகே சென்று,"ஹாய் கீரிபிள்ளை!"

    கீர்தன்யா வரவழைத்த சிறு புன்னகையுடன், "ஹாய்" என்றாள்.

    என்ன தான் வருத்தமான நிலையில் இருந்தாலும் குறைந்த பட்சம் 'ஸ்னேக் ஸ்னேகா' என்ற வார்த்தைகளையாது கீர்தன்யா கூறுவாள் என்று நினைத்த சேகர், இந்த அமைதியை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.
    சேகர் அதிர்ச்சியுடன் அன்னையை பார்க்க, சாந்தி தன் வருத்தத்தை மறைத்து கீர்தன்யாவிடம்,"பால் குடிக்குறியா கீர்த்தி?"

    கீர்தன்யா அமைதியாக, "வேணாம் அத்தை.. தண்ணி தான் வேணும்.. நானே எடுத்துக்குறேன்" என்று கூறி சமயலறைக்கு சென்று நீரை பருகினாள்.

    அவளை பின்தொடர்ந்த சேகர் உற்சாக குரலில்,"ஹே கீரிபிள்ளை.. நீ மூட்-அவுட்-ல இருக்கனு அம்மா சொன்னாங்க, உன்னை வரவேற்க நான் இல்லைனதும் மூட்-அவுட் ஆகிட்டியா!"

    கீர்தன்யா வெறுமையாக புன்னகைக்க சேகர் தீவிரமான குரலில்,
    "என்னாச்சு கீர்த்தி?"

    கீர்தன்யா மிக சிறிய மென்னகையுடன், "நத்திங்.. ட்ரவல்-னால கொஞ்சம் தலை வலியா இருக்கு.. தட்ஸ் ஆல்"

    சேகர் இடதுகை பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களை மட்டும் நீட்டி,
    "கொஞ்சம்-னா எவ்ளோ? இவளோ..இவ்ளோ..இவ்ளோளோ" என்று கூறி விரல்களின் இடைவெளியை குறைத்துக் கொண்டே போனான்.

    கீர்தன்யா வரவழைத்த இயல்பான குரலில்,
    "டேய் பிளேட்.. இருக்குற தலைவலியை கூட்டிறாத.."

    "நான் உனக்கு தலைவலியா?"

    "ப்ளீஸ் சேகர்.."

    கீர்தன்யாவின் மனநிலையை புரிந்தும் புரியாதவன் போல் சேகர்,
    "ஐய்யோ.. உலகம் அழிய போது.. நீ என்னை சேகர் னு கூப்டுட்ட"

    'நீ கூட தான் என்னை கீர்த்தி னு கூப்ட' என்று கூற நினைத்தவள், எங்கே அதை கூறினால் அவன் பேச்சை வளர்ப்பானோ என்ற எண்ணத்தில் ஒன்றும் கூறாமல் சிறிது புன்னகைத்தாள்.

    கீர்தன்யா,"ஓகே.. நான் போய் படுக்குறேன்.." என்று கூறி அறை பக்கம் செல்ல,

    சேகர், "ஹே கீரிபிள்ளை.. மறந்தே போய்டேன்.. இந்தா" என்று கூறி அவளுக்கென்று வாங்கி வந்த மன்சை(munch) நீட்ட,

    அதை பார்த்ததும், கீர்தன்யாவின் மனம் வலித்தது.
    'சந்துருக்கு மன்ச் ரொம்ப பிடிக்குமே'என்று நினைத்த பொழுது, பழைய நினைவுகள் மனதை அரிக்க, கண்கள் லேசாக கலங்க, அவசரமாக,"எனக்கு மன்ச் பிடிக்காது" என்று கூறி சேகரின் பதிலை எதிர்பாராமல் அறையினுள் புகுந்துக் கொண்டாள்.

    சேகர் மூடிய கதவையே பார்த்தபடி அதிர்ச்சியுடன், "என்னமா அவளுக்கு ரொம்ப பிடிக்கும்-னு தானே வாங்கிட்டு வந்தேன்.. என்னாச்சு?"என்று கூறி திரும்பியவன் பெரிதும் அதிர்ந்தான்.

    சாந்தி கலங்கிய விழிகளுடன் நிற்க, அவசரமாக அவர் அருகே சென்று,
    "என்னமா என்னாச்சு?"

    சாந்தி வருத்தம் நிறைந்த குரலில், "நம்ம பழைய கீர்த்தி திரும்பவே மாட்டாளா கண்ணா?"

    "என்னமா சொல்றீங்க?"

    "அண்ணா நம்ம கிட்ட கீர்த்தி பத்தி எதுவுமே சொல்லலை கண்ணா.."

    சேகர் அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக பார்க்க, சாந்தி,"இப்ப தான் பரவா இல்லை-னு சொல்றார்.. அண்ணா வந்ததும் அவர் கிட்டேயே கேட்டு தெரிஞ்சுக்கோ கண்ணா"

    "ஹ்ம்ம்.. எப்போ கிளம்பி போனாங்க?"

    "அவங்க போய் அஞ்சு நிமிஷத்துல தான் நீ வந்த"

    "அப்போ வர எப்படியும் 7 மணியாகும்"

    "ஹ்ம்ம்"

    "சரி மா.. அவங்க வரதுக்குள்ள நான் கொஞ்சம் வேலையை பார்க்குறேன்"

    "சரிடா கண்ணா.. நான் உனக்கு காபி கலந்துட்டு வாரேன்"

    "ஹ்ம்ம்" என்று கூறி அறை பக்கம் சென்றவன் அறை வாயிலில் நின்று,
    "அம்மா ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு கீர்த்திய போய் பாரு"

    சாந்தி மெல்லிய புன்னகையுன் தலையசைத்தார்.

    ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    லாவண்யா, "இந்த டிடேல்ஸ் எல்லாம் பார்த்தா.. சூசைட் மாதிரி தான் சார் தோணுது.."

    தினேஷ், "எனக்கும் அப்படி தான் சார் தோணுது"

    லாவண்யா ஆச்சரியமாக தினேஷை பார்க்க, தியாகேஷ்வர்,"என்ன லாவண்யா?"

    தியாகேஷ்வர் தன்னை கவனித்துவிட்டதை உணர்ந்த லாவண்யா தாழ்ந்த குரலில்,
    "அது.. வாழ்க்கையிலேயே பஸ்ட் டைம் நான் சொன்னதை ஒத்துக்கிட்டான்"

    தியாகேஷ்வர் சிறிது புன்னகைக்க, தினேஷ்,
    "சார் யாரோ பர்சனல் விஷயத்தை பிசியல் விஷயத்தில் கலப்பதில்லை-னு சொன்னாங்க"

    லாவண்யா முறைக்க, தினேஷ் அலட்சியமாக தோள்களை குலுக்கினான்.

    தியாகேஷ்வர் சிறு புன்னகையுடன், "உங்க ரெண்டு பேரையும் வச்சுட்டு எப்படி இந்த கேஸ முடிக்க போறேனோ!"

    தினேஷ், "என்ன சார் உங்க திறமையை நீங்களே குறைத்து எடை போடுறீங்க!"

    "ஓகே கயிஸ்(guys) பன்ஸ் அப்பார்ட்.. கம்மிங் டு தி கேஸ்..
    நீங்க சொல்வது போல் மேலோட்டமா பார்த்தா சூசைட்-னு தான் தோணும் பட் இதில் சில காம்ப்ளிகேஷன்ஸ் இருக்கு..
    நம்பர் 1 - வைப் அண்ட் சன் இருக்காங்க பட் சொத்துக்கள் அனைத்தையும் ஏன் மகள் பெயரில் எழுதி வைத்தார்?
    நம்பர்2 - சுபாஷினி மரணமே confusion தான்.. தூக்கு போட்டு இறக்க முடிவெடுத்தவ ஏன் தூக்க மாத்திரை சாப்பிடனும்? இல்ல..சாக முடிவெடுத்தவ தூக்க மாத்திரை சாப்பிட்டே உயிரை போக்கி இருக்கலாமே?
    நம்பர் 3 - மிஸ்டர் ஜெயப்ரகாஷ் ஒன் மன்த் பிபோர் தான் இறந்து இருக்கார், அதுவும் அக்சிடென்ட்-ல.. ஜெயப்ரகாஷ் மரணம் கூட கொலையா இருக்க வாய்ப்பு இருக்கு.."

    தினேஷ், "மே பீ அவ டைலமா-லஇருந்தப்பயாராச்சும்வழக்கம்போல்மாத்திரைகுடுத்துஇருக்கலாம்சார்.. அண்ட்..JP மரணம் உண்மையாவே ஆக்சிடென்ட்-ஆ இருக்க கூட வாய்ப்பு இருக்கே!"

    "ஓகே.. வாட் அபௌட் தி வில்(உயில்)?"

    "அது.. யோசிக்க வேண்டிய விஷயம் தான் பட் அந்தலெட்டர்?"

    "போலியா இருக்கலாம்"

    "பட் அது சுபாஷினி கையெழுத்து-னு மிஸ்ஸஸ் JP தானே சொல்லியிருக்காங்க"

    "ஹ்ம்ம்.. லெட்ஸ் பைண்ட் அவுட்"

    லாவண்யா, "எங்கிருந்து ஆரம்பிக்க போறோம் சார்?"

    தியாகேஷ்வர், "JP ஹோம்"

    தினேஷ், "எப்போ போறோம் சார்?"

    "டுமாரோ மார்னிங் அட் 10"

    "ஓகே சார்" என்று கூறி தினேஷும் லாவண்யாவும் சல்யூட் அடித்து கிளம்பி சென்றனர்.

    ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    இரவு 7.30 மணி.. மொட்டை மாடியில் சேகரும் சண்முகமும் பேசிக் கொண்டிருந்தனர்.

    சேகர், "சந்துரு-வ மறக்குறது என்பது கீர்த்தியால் முடியாதது தான் மாமா பட் இந்த அளவிற்கு ஒடுங்கி போவா-னு நான் நினைக்கலை.."

    சண்முகம் பெருமூச்சொன்றை வெளியிட்டு, "நாங்களும் நினைக்கலை பா..சந்துருவின் இறப்பு அவளை இந்தளவிற்கு பாதிக்கும்-னு எதிர் பார்க்கவே இல்லை.. போராடி மீட்டுருக்கோம்.." என்று கூறி கண்களை இறுக்கமாக மூடித் திறந்தார்.

    "என்ன சொல்றீங்க மாமா?"

    சண்முகம் வேதனையுடன் கூறத் தொடங்கினார்,
    "அவ கண் முன்னாடியே அந்த அக்சிடென்ட் நடந்துது பா..
    சந்துரு இவளை பார்த்துட்டு அவசரமா ரோட் க்ராஸ் பண்ணப்ப, வேகமா வந்த கார் அவனை அடிச்சு.... தூக்கி போட்டதுல..
    ஸ்பாட் லேயே.... இவ மடியிலேயே.... " என்று கண்கலங்க, தொண்டை கரகரக்க நிறுத்தினார்.

    சண்முகத்தின் தோளை ஆதரவாக பற்றியசேகர்,சிறு வயதில் கீர்தன்யா கூறியதை நினைத்துப் பார்த்தான்.

    கீர்தன்யா சிரிப்பும் சுட்டித்தனும் நிறைந்தவளாக இருந்தாலும், மென்மையான மனம் கொண்டவள்.
    சிறு வயதில், ஒரு முறை சேகர் தனது காலால் 'ரயில் பூச்சி'யை லேசாக தட்டி தட்டி விளையாடிக் கொண்டிருந்தான். இவனது கால் லேசாக பட்டதும் பூச்சி சுருண்டுக் கொள்ளும்.. சில நொடிகள் கழித்து அது செல்ல தொடங்கவும், மீண்டும் காலால் சிறிது உரசுவான், அது மீண்டும் சுருண்டுக் கொள்ளும்.. இப்படி விளையாடிக் கொண்டிருந்த போது, கீர்தன்யா,
    "டேய் குரங்கு ஏன்டா அந்த பூச்சியை படுத்துற?"

    "போடி குரங்கு"

    கீர்தன்யா சேகரின் முதுகில் ஒரு அடி வைத்து, கோபமாக,
    "தைரியம் இருந்தா பூரான் கூட இப்படி விளையாட வேண்டுயதானே! ஏன் இந்த வாயில்லா பூச்சியை கஷ்டப்படுத்துற?"

    இப்படி மென்மையான மனம் கொண்ட கீர்தன்யா விபத்து நடந்த நேரத்தில் எப்படி துடித்திருப்பாள் என்று பெரிதும் வருந்தினான், கண்களை இறுக மூடித் திறந்தான்.

    சண்முகம் தொடர்ந்தார்.
    "சந்துரு இறந்த கொஞ்ச நாளுக்கு பிரம்மை பிடிச்சது போல் இருந்தா.. யார் கூடயும் பேசவே இல்லை.. அந்த அக்சிடென்ட் பத்தி நினைச்சு, தூக்கத்துல திடீர்னு வீரிட்டு கத்திட்டு எழுந்திறிப்பா..
    சந்துரு போன துக்கம் ஒரு பக்கம் இருக்க, இவளை எப்படி சமாதானம் செய்றதுனே தெரியாம ரொம்ப கஷ்டப்பட்டோம்..
    அத்தையோட மாமா பையன் சைக்கட்ரிஸ்ட்-ஆ இருக்கார்………………."

    "தெரியும் மாமா.. சுனிலோட அப்பா-வ தானே சொல்றீங்க"

    "ஹ்ம்ம்.."

    சேகர் அதிர்ச்சியுடன், "ட்ரீட்மென்ட்-க்கா அத்தையும் கீர்த்தியும் லண்டன் போனாங்க?"

    சண்முகம் 'ஆம்' என்பது போல் தலையை ஆட்டினார்.

    சேகர் வேதனையும் வருத்தமுமாக, "சொல்லவே இல்லையே மாமா"

    "சந்துரு இறந்த சமயத்தில் தான் சாந்திக்கு அப்பெண்டிசிடிஸ் ஆபரேஷன் பண்ணி ஒரு வாரம் இருக்கும், நீ டெங்கு அண்ட் டைஃபாய்ட் வந்து ஹாஸ்பிடல்-ல அட்மிட் ஆகியிருந்த.. அதான் அப்பா கிட்ட கூட எதுவும் சொல்லலை.. மெதுவா சொல்லிக்கலாம்-னு நினைச்சேன்.. அப்பறம் கீர்த்தி லண்டன் போனப்ப தான் லைட்-ஆ சொன்னேன்..

    அகிலன்(லண்டனில் இருக்கும் அமுதாவின் மாமன் மகன், மனநல மருத்துவர்) ரொம்ப வருஷமா கூப்டுட்டு இருக்கான்.. கீர்த்திக்கும் மைண்ட் டைவர்ஷன்-ஆ இருக்கும்-னு போறாங்க னு சொன்னேன்..

    அகிலன் கொடுத்த கவுன்ஸிலிங்-ல கொஞ்சம் கொஞ்சமா தேரினா.. புது இடத்துக்கு போக சொல்லி அகிலன் தான் சொன்னான்.. லண்டன்-ல இருந்து கீர்த்தி வரதுக்குள்ள நான் சென்னைக்கு போய் செட்டில் ஆகிட்டேன்..

    சந்துரு பற்றிய நினைவுகளை மறக்கணும்-னு புது இடம் புது ஆட்கள் னு சூழ்நிலையையே மாற்றினேன்.. இருந்தும் அவ முக்கால்வாசி நேரம் ரூம்க்குள்ளயே அடைந்து இருக்கவும், அகிலன் கிட்ட மீண்டும் கன்சல்ட் பண்ணி, பெயிண்டிங் அண்ட் க்ரப்ட் க்ளாஸ் எடுக்க வச்சேன்..

    இப்ப தான் தெளிவா இருக்கா.. இப்பவும் சந்துருவ மறக்கலை.. பட் அவன் நினைவுகளுடன் இருக்க பழகிட்டா.. பட் பழைய கீர்த்தி இன்னும் திரும்பவே இல்லை..உன் பெயரை சொன்னப்ப ஸ்லைட்டா பழைய கீர்த்தி எட்டிப் பார்த்தா.. அதான் சமாதானம் படுத்தி கூட்டிட்டு வந்துருக்கேன்"


    சேகர் ஆச்சரியமாக பார்க்கவும், சண்முகம்,
    "இங்க வர அவ ஒத்துக்கலை பா.. திருநெல்வேலி பக்கமே வேண்டாம்-னு சொன்னவளை அது இது னு சொல்லி கூட்டிட்டு வந்தேன்..
    வர வழில திருச்சி ல சந்துரு பிரெண்ட்-அ பார்த்துட்டு மீண்டும்.............. "என்றவர் சேகரின் கைகளை பற்றி,

    "உன்னை நம்பி தான் பா வந்துருக்கேன்.. எப்படியாது என் பழைய கீர்த்தியை கொஞ்சமாவது மீட்டு தா" என்று கெஞ்சலாக கூற,

    சேகர் அவசரமாக, "என்ன மாமா நீங்க.. எனக்கு உங்களிடம் பிடிச்சதே உங்க தைரியம் தான்"

    "என்ன பண்றது பா.. பெத்த பொண்ணு-னு வரும் போது தைரியம் ஆடித்தான் போகுது"

    "கவலையே படாதீங்க மாமா.. இங்கிருந்து கிளம்பும் போது பழைய கீர்த்தியை தான் நீங்க கூட்டிட்டு போவீங்க"

    "மூனு நாள் தான் இருப்பேன் னு சொல்லிட்டு கிளம்புனா.. ஆனா நான் 'பார்த்துக்கலாம் எதுக்கும் க்ளாஸ்க்கு 10நாள் லீவ் சொல்லு' னு சொல்லி கூட்டிட்டு வந்துருக்கேன்.."

    "டோன்ட் வொர்ரி மாமா.. 10நாள் இருப்பா.. கண்டிப்பாபழைய கீர்த்தி திரும்புவா.. அவ வால்த் தனத்தை பார்த்து நீங்களே'ஐயோ' னு அலற தான் போறீங்க" என்று கூறி புன்னகைக்க, சண்முகமும் புன்னகைத்தார்.

    ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    தியாகேஷ்வர் உறங்கும் முன், வழக்கம் போல் நித்தமும் தன் சிந்தனையில் இருக்கும் பெண்ணின் புகைப்படத்தை பார்த்தான். அவளை மறக்க முடியாமல் தவித்தவனின் மனம் அவனை கேட்காமலேயே கடந்த காலத்திற்கு சென்றது.
    அவளுடன் கழித்த பொண்ணான தருணங்களை பற்றி எண்ணத் தொடங்கியவனின் சிந்தனை, தன் எதிரி ஒருவன் நிகழ்த்திய அந்த கோர சம்பவத்தில் வந்து நின்றது.கண்களை இறுக மூடித்திறந்தான்.

    நித்ராதேவியை(உறக்கம்) தழுவ முயற்சித்து தோற்றான். தினமும் மனதை சூழும் வேதனையை ஒருவாறு வென்று சிறிதேனும் உறங்குபவனால் இன்று ஏனோ அது முடியாமல் போனது.


    உங்கள் கருத்துக்களை கீழே உள்ள தளத்தில் மட்டும் கூறவும்..
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/239533-comments.html#post3073525
    உங்கள் அன்புத் தோழி,
    கோம்ஸ்.
     
    4 people like this.
  8. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    சிந்தனை 4

    சேகர் படுக்கையில் படுத்துக் கொண்டு, இப்பொழுது இருக்கும் கீர்தன்யாவையும் பழைய கீர்தன்யாவையும் நினைத்துப் பார்த்தான். அவன் மனதில் சிறு வயது சம்பவங்கள் சில படமாக ஓடியது.

    சேகர் 7வது வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது(கீர்தன்யா 4வது வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்), அவனும் கீர்தன்யாவும் தங்கள் வானர கூட்டத்துடன் அவர்கள் தெருவில் இருந்த தனியார் ஒருவரின் சிறிய தோட்டத்திற்கு சென்றனர்.

    வீட்டிற்கும் தோட்டத்து உரிமையாளருக்கும் தெரியாமல் தோட்டத்தில் ஆட்டம் போடுவதில் அவர்களுக்கு கொள்ளை பிரியம்..
    துணி துவைக்க வசதியாக கட்டி வைத்திருக்கும் சிறிய தண்ணீர் தொட்டியில் கிணற்று நீரை இறைத்து, தொட்டியை 'ஸ்விம்மிங் பூல்' ஆக மாற்றி அதில் ஆட்டம் போடுவது, நீரில் ஆட்டம் போட்டுவிட்டு, தோட்டத்திற்கு வரும் வழியில் தெரு கடையில் சுட்ட(திருடிய) அப்பளப்பூ, தேன்மிட்டாய் மற்றும் முறுக்கை நொறுக்குவது வழக்கம்.

    அன்று, யார் கிணற்றில் இருந்து நீரை இறைப்பது என்று சேகருக்கும் கீர்தன்யாவிற்கும் சண்டை வந்தது.
    [அங்கே நீர் இறைக்கும் முறை வித்யாசமாக இருக்கும்.. ஏற்றத்தின் மூலம் தான் நீரை இறைப்பார்கள்.
    ஏற்றம் - கிணற்றின் வெளிச்சுவர் அருகே தூண் போன்ற இரு கற்கள் இருக்க, அதில் ஒரு உருளை கம்பு பொருத்தப் பட்டிருக்கும். உருளை கம்பின் மேல் ஒரு பெரிய கட்டை இணைக்கப் பட்டிருக்க, அந்த பெரிய கட்டையின் இறுதியில் ஒரு கனமான கல் கட்டியிருக்க, பெரிய கட்டையின் மறுநுனியில்(கிணற்றை நோக்கி) சங்கிலியின் மூலம் ஒரு கம்பு தொங்கவிடப் பட்டிருக்கும். இந்த கம்பின் நுனியில் வாளி பொருத்தப் பட்டிருக்கும்.
    கிணற்றின் உள்ளே, ஒரு பக்கம் இருந்து மறு பக்கம் வரை ஒரு கனமான கல் இருக்கும். அந்த கல்லின் மேல் நின்று வாளி பொருத்தப்பட்ட கம்பை கிணற்றினுள்ளே அழுத்தியும், மேலே இழுத்தும் நீரை இறைப்பார்கள்.]

    சண்டையின் நடுவில் கிணற்று சுவற்றின் மேல் இருந்த அப்பளப்பூ பக்கெட் கிணற்றினுள்ளே விழுந்துவிட்டது.
    இருவரும் 'அச்சோ'என்று ஒன்றாக கூறி சண்டையை நிறுத்தினார்கள். ஆனால் அடுத்த நொடியே,
    'நீ தான் டா தள்ளி விட்ட'
    'இல்ல நீ தான்டி தள்ளி விட்ட'என்று மீண்டும் சண்டை தொடங்கியது.

    கூட்டத்தில் ஒருத்தி, "நீங்க எசல்லறத(சண்டை) வீட்டுக்கு போய் வச்சுக்கோங்க.. இப்ப இந்த அப்பளப்பூ- என்ன பண்றது? யாராது பாத்தா நாம தொலைஞ்சோம்.."

    இருவரின் சண்டை நின்றது.

    சேகர் நீர்-இறைக்கும் வாளியைக் கொண்டு,மிதந்த அப்பளப்பூ பக்கெட்டை எடுக்க பார்த்தான் ஆனால் அது வாளியினுள் சிக்காமல் விலகிக் கொண்டே போனது.

    சேகர் கிணற்றை விட்டு வெளியே வந்து, "ச்ச்.. வரவே மாட்டிக்குது.. வேற என்ன பண்ணலாம்?"

    ஒவ்வொருவரும் தீவிரமாக யோசிக்க, கீர்தன்யா,
    "ஒரு யோசனை.. கல்-ல அந்த பக்கெட் மேல எறியலாம்.. ஓட்ட விழுந்து, தண்ணி போய் மெதக்காம முங்கிடும்"

    கூட்டத்தில் ஒருத்தன் உற்சாகமாக, "ஹ்ம்ம்.. நல்ல யோசனை!"என்று கூற, கீர்தன்யா பெருமையாக புன்னகைத்து கவுனில் இல்லாத காலரை தூக்கிவிட்டுக் கொண்டாள்.

    சேகர், "பெரிய யோசனை!!!"

    "பெருசோ சிறுசோ.. உனக்கு தோனலைல.. வாய மூடிட்டு சொன்னதை செய்"

    "ஏதோ ஒரு தடவ சொல்லிட்டு பீத்திகாத"

    "போடா"

    நண்பர்கள் ஒன்றாக, "ஐயோ! உங்க சண்டையை வெலக்கிறதே பெரும் ரோதனையா இருக்கு.. முதல அப்பளபூ-வ கவனிப்போம்" என்று கூற,

    இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து முறுக்கிக் கொண்டு நண்பர்களுடன் சேர்ந்து கல்லை தேடினர்.

    ஒவ்வொருவராக கல்லை எறிந்தனர். இறுதியாக எறிந்த சேகரின் கல் மட்டும் தான் அப்பளப்பூ பக்கெட் மேல் பட்டது, ஆனால் கூர்மையான கல் வேகமாக பட்டதில் பக்கெட்டில் சிறு ஓட்டை விழுவதற்கு பதில் பக்கெட் கிழிந்து அப்பளப்பூ அனைத்தும் வெளியே வந்து மிதக்க தொடங்கியது.

    சேகர் கீர்தன்யாவை முறைத்து, "நீயும் உன் யோசனையும்"

    "நான் நல்ல யோசனை தான் சொன்னேன்.. நீ தான் மிளா மாதிரி எறிஞ்சு காரியத்தை கெடுத்துட்ட"

    சேகர் கோபத்துடன், "தப்பு தப்பா யோசனை தந்துட்டு என்னை சொல்றியா.. நீ தான்டி மிளா, குரங்கு எல்லாம்.."

    "போடா பன்னிமாடு(பன்றி, மாடு - இரண்டையும் சேர்த்து கூறினாள்).. மொத்த மிருக ஜாதியும் நீ தான்.."

    "நான் இல்லை நீ தான்.. உன் பேர்லயே இருக்கே.. போடி கீரிபிள்ளை.."

    கீர்தன்யா பல்லைக் கடித்துக்கொண்டு, "உன்னை.." என்று ஒரு நொடி யோசித்து, "போடா பாம்பு"

    "பாம்பா!"

    "ஆமா நான் கீரிபிள்ளை-னா நீ பாம்பு தான்..."

    இருவரும் சண்டைக் கோழிகளாக நிற்க, தோட்டத்தின் உரிமையாளர் தோட்டத்தை பார்வையிட வந்தார்.

    நண்பர்கள், "ஏய்.. சும்மா இருங்க.. சொட்டை தல வருது.."என்று கூற இருவரும் அமைதியானார்கள்.

    உரிமையாளர் தோட்டத்தை சுற்றி பார்த்துவிட்டு கிணறு பக்கம் வரவும் அனைவருக்கும் பயம் கிளம்பியது..

    'போச்சு.. போச்சு',
    'மாட்ட போறோம்',
    'இன்னைக்கு தொலைஞ்சோம்',
    'அம்மா வெளக்குமாத்தால மாத்த போறா'
    'இன்னைக்கு நமக்கு புளியமாறு தான்',
    'சங்கு தான் நமக்கு'
    'கடவுளே' என்று ஒவ்வொருவரும் முணுமுணுக்க..

    உரிமையாளர் சற்று தொலைவில் இருந்து,
    "அங்கன என்ன குரங்கு சேட்டை பண்ணிட்டு இருக்கீங்க?"

    ஒருத்தரை ஒருத்தர் பார்த்து திருதிருவென்று முழிக்க,
    சேகர்,"குளிக்க வந்தோம்" என்று கூற, அதே நேரத்தில் கீர்தன்யா,"சும்ம தான்" என்றாள்.

    இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து முறைத்து, கண்ணால், 'நான் தான் சொல்றேன்-ல நீ ஏன் வாய் திறக்குற?'என்று திட்டினர்.

    உரிமையாளர் என்ன நினைத்தாரோ,
    "சரி.. சரி.. கெணத்துக்குள்ள பார்த்து இறங்குங்க.. விரசலா வீட்டுக்கு போங்க" என்று கூறி சென்றுவிட்டார்.

    அனைவரும் பெருமூச்சொன்றை வெளியிட்டு, "தப்பிச்சோம்" என்றனர்.

    சேகரும் கீர்தன்யாவும் மீண்டும் சண்டையை தொடங்கும் முன் நண்பர்கள் அவர்களை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினார்கள்.

    அடுத்த இரண்டு நாட்கள் யாரும் தோட்டம் பக்கமே செல்லவில்லை. இரண்டு நாட்கள் கழித்து ஒருவனை மட்டும் அனுப்பி, எந்த பிரச்சனையும் இல்லை என்பதை அறிந்த பிறகு, 'எப்படி காணாம போச்சு?' , 'யாரும் பார்க்கலையா?'என்று பேசியபடியே தோட்டத்திற்கு சென்றனர், துள்ளலும் ஆட்டமும் தொடர்ந்தது.
    [அப்பளப்பூவை கிணற்று மீன்கள் உண்டிருக்கும் என்று யாருக்கும் தோன்றவே இல்லை :) ]


    இதழில் புன்னகையுடன் சேகர் அடுத்த சம்பத்தை பற்றி நினைத்துப் பார்த்தான்..

    ஒரு முறை பள்ளி கபடி போட்டியில் அவன் களத்தில் இறங்கி விளையாட தொடங்கியதும், பார்வையாளர்கள் கூட்டத்தில் இருந்த கீர்தன்யா சத்தமாக,
    "ஆடு பாம்பே.. விளையாடு பாம்பே..
    நல்ல விளையாடு பாம்பே.." என்று பாடி கலாட்டா செய்தாள்.

    சேகர் 8வது வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது அவனது பள்ளி அடையாள அட்டையில்(IDcard) அவனது பெயர் 'SNEKAR'என்று அச்சாகிவிட, கீர்தன்யா 'sneka' என்று அவனை கிண்டல் செய்தாள், பிறகு 'snake' என்ற அடை மொழியை சேர்த்து, அவனை 'snake sneka' என்று அழைக்க ஆரம்பித்தாள்.

    சேகர் 10வது வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, நண்பர்களுடன் சேர்ந்து படிக்க போவதாக கூறி வீட்டிற்கு தெரியாமல் கிரிக்கட் மற்றும் கில்லி விளையாடியதையும், திரையரங்கம் சென்றதையும்கணேசனிடம் போட்டுக்கொடுத்து பெரம்பால் அடி வாங்க வைத்தாள்.ஒரு முறை கணேசன் பலமாக அடித்துவிட கோபத்தில் சேகர் கீர்தன்யாவை அடித்துவிட்டான். அதன் விளைவு ஒரு வாரம் கழித்து அவனது விலங்கியல்(zoology) ‘ரெக்கார்ட் நோட்’ காணாமல் போனது.

    வீட்டிலும், பள்ளியிலும் தேடி பார்த்து, நண்பர்களிடமும் கேட்டுவிட்டு வேறு வழியே இல்லாமல் ஆசிரியரிடம் வசைகள் பல வாங்கி, புதிதாக ரெக்கார்ட் நோட் பெற்றுக்கொண்டு, இரண்டு நாட்கள் கண்விழித்து அனைத்து படங்களையும் மீண்டும் வரைந்து முடித்து ஆசிரியரிடம் கையொப்பம் வாங்கினான்.
    கீர்தன்யா அவன் கையொப்பம் வாங்கியதை உறுதி செய்துவிட்டு அன்றிரவு புன்னகையுடன் பழைய ரெக்கார்ட் நோட்டை கொடுத்தாள்.

    பழைய நினைவுகளில் இருந்து திரும்பியவன் கீர்தன்யாவை எப்படி மாற்றுவது என்று சிந்தித்து,ஒருமுடிவிற்கு வந்தபிறகுஉறகினான்.


    உறங்கும் முன் கீர்தன்யா ஒரு முடிவெடுத்தாள்.
    தன்னால் மற்றவர்கள் மனநிலையும் கெடுகிறது என்பதை உணர்ந்ததும் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தன் மனதை கட்டுக்குள் கொண்டு வந்தவள், குறைந்த பட்சம் இலஞ்சியில் இருக்கும் நாட்களாவது தன் மனதை சிதறவிடாமல், மகிழ்ச்சியாக இல்லை என்றாலும் இயல்பாக இருப்பதை போன்று நடித்தாவது மற்றவர்களை மகிழ்விக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள்.



    அடுத்த நாள் காலையில் உணவு மேசையில் சேகர் சண்முகத்திடம் கண் ஜாடை காட்ட, அவர்,"சேகர் இன்னைக்கு ஸ்கூலுக்கு கீர்த்தியையும் கூட்டிட்டு போயேன்"

    "ஏன் மாமா என் ஸ்கூல் பிள்ளைங்க நல்லா இருக்குறது பிடிக்கலையா?"

    சாந்தி, "இனியாது அந்த பிள்ளைங்க நல்லா இருக்கட்டுமே-னு தான் அண்ணா கீர்த்தி-ய கூட்டிட்டு போக சொல்றார்"

    உணவில் கவனமாக இருந்த கீர்தன்யாவை பார்த்துக் கொண்டே சேகர்,
    "ஏற்கனவே நல்ல பிள்ளைகளா இருக்குறவங்க எதுக்கு இனி நல்ல பிள்ளைகளா ஆகணும்?"

    சாந்தி, "விளையாட்டு போதும்.. அவளை கூட்டிட்டு போடா.. நல்ல வரைய சொல்லி கொடுப்பா.."

    சேகர் சிரிப்புடன், "ஐயோ அம்மா! நான் விளையாடலை..இந்த கீரிபிள்ளையை கூட்டிட்டு போனா குரங்கு சேட்டைகள் தான் பகிக்குவாங்க..சின்ன வயசுல இவளுக்கு வரைய சொல்லி கொடுத்ததே நான் தான்.."

    'அட பாவி'என்பதுபோல் சாந்தி மகனை பார்க்க, அவனோ அசராமல் புன்னகைத்தான்.

    சேகர் கீர்தன்யா ஏதாவது சண்டை போடுவாள் என்று எதிர்பார்த்து காத்திருக்க, அவளோ இவனை நிமிர்ந்து கூட பார்க்காமலிருக்க,கணேசன்,
    "அவன் கெடக்குறான்.. நீ என் கடைக்கு வா டா"

    சேகர் மனதினுள், 'இந்த அப்பா காரியத்தையே கெடுத்துருவார் போல'என்று நினைத்துக் கொண்டிருக்க, சண்முகம் மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டார்.

    சேகரும் சண்முகமும் ஒருவரை ஒருவர் பரிதாபமாக பார்க்க, கீர்தன்யாசிறுபுன்னகையுடன்,"என்ன மாமா.. அப்பாவும் இந்த குரங்கும் சேர்ந்து போட்ட ப்ளனை இப்படி சட்டுன்னு உடைச்சுடீங்களே!" என்று கூறி சேகரையும் தந்தையையும் பார்த்தாள்.

    சண்முகம் சிறிதுஅசடுவழிய, சேகர்,"அடிப்பாவி" என்று முணுமுணுத்தான்.

    கணேசன், "ப்ளான்-?"

    "என்னை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போறப்ளான்"

    "அதை நேராவே சொல்ல வேண்டியதானே!"

    "இந்த ஸ்னேக் ஸ்னேகா கூட ஸ்கூல்க்கு போக மாட்டேன்-னு சென்னை-ல வச்சே சொல்லிட்டேனே!"

    கீர்தன்யாவின் இந்த உற்சாக பேச்சில் அனைவரும் மகிழ்ந்தனர்.

    சேகர், "நீ வரமாட்டேன் சொன்னதுக்கும் நாங்க பேசினதுக்கும் என்ன சம்பந்தம்? நீ வரேன்-னு சொன்னா கூட நான் உன்னை கூட்டிட்டு போக மாட்டேன்"

    "ஓ.. என்னை கூட்டிட்டு போற ஐடியா இல்லாம தான் அப்பா கிட்ட சிக்னல் காமிச்சியாக்கும்!"

    "நான் ஒன்னும் சிக்னல் காமிக்கலை"

    "அப்படியா! மாமா நான் உங்க கூட கடைக்கே வரேன்"

    "சரி.. நீ இவ்ளோ கெஞ்சுறதால உன்னை என் ஸ்கூலுக்கு கூட்டிட்டு போறேன்"

    "உன் கிட்ட யாரும் கெஞ்சவும் இல்லை.. உன் கூட ஸ்கூலுக்கு வரேன்-னும் சொல்லவும் இல்லை"

    அமுதா, "பாவம் டா.. விட்டுரு"

    "யாரு இந்த குரங்கா பாவம்?"

    அமுதா, "சரி.. இப்போ என்ன தான் சொல்ற? ஸ்கூல் போறியா இல்லையா?"

    "அவனை நேரடியா 'என் கூட ஸ்கூலுக்கு வரியா?' னு கேட்க சொல்லு போறேன்"

    சேகர், "ஓகே.. என் கூட ஸ்கூலுக்கு வரியா?"

    கீர்தன்யா தன் கையை கிள்ளிப் பார்த்து, "நிஜம் தானா?"

    சேகர் சிறு புன்னகையுடன் கையை கழுவ எழுந்து சென்றான்.



    காரில் சென்று கொண்டிருந்த போது சேகர்,"என் கூட இருக்கும் போது நீ நீயாவே இரு"

    கீர்தன்யா புரியாமல் பார்க்க, சேகர்,"நீ இயல்பா இல்லை.. அப்படி நடிக்குற.. (கீர்தன்யா கண்களை விரித்து நோக்கினாள்)
    என்ன முட்டை கண்ணை உருட்டுற!"

    கீர்தன்யா கண்களை சுருக்கி முறைக்கவும், சேகர் சிறு புன்னகையுடன்,"இது தான் உன் இயல்பான நிலை.. இப்படியே இரு"

    கீர்தன்யா, 'ஆமா வச்சுகிட்டா வஞ்சகம் பண்றேன்'என்று முணுமுணுத்துவிட்டு,
    "நீ கூட தான் இயல்பா இல்லை"

    "நானா!!!"

    "ஆமா.. என்னை சிம்பதியோட பார்த்து ஆதரவா பேசுற.. இது உன் இயல்பு இல்லையே!"

    "ஏய்! நான் இயல்பா தான் இருக்கேன்.. உன்னை சிம்பதியோட-லாம் பார்க்கலை..
    சின்ன வயசுல சண்டை போட்டுட்டே இருந்தோம்-னா இப்பவும் அப்படியே இருக்கனுமா என்ன!
    நடுவுல எத்தனையோ வருஷங்கள் ஓடியிருக்கு.. சில வருஷங்கள் நாம மீட் கூட பண்ணலை..நாம மெச்சூர் ஆகும் போது நம் சிந்தனைகள் மாறும் தானே!"

    "உன் ஸ்டுடென்ட்ஸ் ரொம்ப பாவம்.. சின்னதா ஒன்னு கேட்டதுக்கு ஒரு எஸ்ஸே எழுதுற.."

    சேகர் புன்னகையுடன், "ஓகே சிம்பிள்-ஆ பதில் சொல்லணும்-னா..
    இப்ப உனக்கு, என் கூட முன்ன மாதிரி சண்டை போட்டே இருக்கணும்-னு தோணுதா?"

    "பதில் சொல்றேன்-னு சொல்லிட்டு குவெஸ்டீன் கேட்குற"

    "ஏதோ ஒன்னு.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு"

    கீர்தன்யா சிறிது யோசித்துவிட்டு, "இல்லை தான்"

    "தட்ஸ் இட்"

    "ஹ்ம்ம்.. இப்போ எதுக்கு என்னை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போற?"

    "வீட்டுல உட்கார்ந்து வெட்டி கதை பேசிட்டு, மொக்க டிவி சீரியல்ஸ் பார்க்குறது பதில் ஏதோ யூஸ்புல்-ஆ செய்யட்டுமே-னு தான்"

    "என் புண்ணியத்துல இந்த 10 நாளாவது உன் ஸ்டுடென்ட்ஸ்-க்கு நல்ல டீச்சர் கிடைக்கட்டும்"

    "10 நாளா.. யாரோ 3நாள்-ல கிளம்புறதா கேள்விபட்டேனே!"

    "அப்படியா! யாரு அது?"

    இருவரும் புன்னகைத்தனர்.

    ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    தியாகேஷ்வர், தினேஷ் மற்றும் லாவண்யா ஜெயப்ரகாஷ் வீட்டிற்கு விசாரணைக்காக ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர்.

    ஓட்டுனர் அருகே அமர்ந்திருந்த தியாகேஷ்வர் ஏதோ தீவிரமான சிந்தனையில் இருக்க, பின்னால் லாவண்யா அருகே அமர்ந்திருந்த தினேஷ்,
    "லா லா லா லா லா..
    லலலாலா லா லா லலலாலா..
    லா லா லா அறிந்தவளே
    தெரிந்தவளே..தள்ளி தள்ளி இருந்தவளேஎள்ளி எள்ளி சிரித்தவளே..துள்ளி துள்ளி நடந்தவளே
    கள்ளி கள்ளி அவள் இவளே..
    லா லா லா... " என்ற பாடலை லாவண்யாவிற்கு மட்டும் கேட்கும் குரலில் பாடிவிட்டு அறியாதவன் போல், "நல்ல பாட்டு-ல லாலாவண்யா"

    லாவண்யா அவனை பார்த்து முறைத்தாள்.

    "நல்ல பாட்டெல்லாம் உனக்கு பிடிக்காதே"

    "கொஞ்சம் நேரம் உன் திரு வாயை முடிட்டு வரியா?"

    "முடியாது-னா என்ன செய்வ? ஜீப்-ல இருந்து குதிச்சுருவியா?"

    லாவண்யா இயல்பான குரலில், "இல்ல உன்ன தள்ளி விட்டுருவேன்"

    தினேஷ் 'செஞ்சாலும் செய்வாளோ!'என்று யோசித்துக் கொண்டிருக்க,

    லாவண்யா, "என்ன செய்வேனா-னு யோசிக்குறியா? சந்தேகமே வேண்டாம் கண்டிப்பா செய்வேன்"

    தினேஷ் மனதினுள், 'எதுக்கும் கொஞ்ச நேரம் அமைதியாவே வா.. அது தான் உன் உயிருக்கு உத்தரவாதம்'என்று கூறிஅமைதியாக இருந்தான்.
    லாவண்யா மனதினுள் சிரித்துக் கொண்டாள்.

    சிறிது நேரத்தில் ஜெயப்ரகாஷ் வீடு வந்தது.



    தங்களை வரவேற்ற 60 வயது மதிக்கத்தக்க வீட்டு நிர்வாகியிடம் விசாரணை பற்றி தினேஷ் கூறினான்.

    தியாகேஷ்வர் வீட்டு நிர்வாகியை அழைத்துக் கொண்டு சுபாஷினி அறையை பார்வையிட சென்றதும்,
    வீட்டை நோட்டமிட்டுக் கொண்டிருந்த லாவண்யா அருகே சென்ற தினேஷ்,
    "லா லா லாவண்யா.. சும்மாவே நின்னுட்டு இருந்தா எப்படி! விசாரணையை ஸ்டார்ட் பண்ற ஐடியா இல்லையா?"

    "நீ இங்க என்குவரி பண்ணு.. நான் வீட்டை சுத்தி பார்த்துட்டு தோட்டக்காரனை என்குவரி பண்ணிட்டு வரேன்" என்று கூறி அவனது பதிலை எதிர்பாராமல் வெளியேறினாள்.

    தினேஷ், "திமிர் பிடிச்சவ.." என்று முணுமுணுத்தான்.

    உங்கள் கருத்துக்களை கீழே உள்ள தளத்தில் மட்டும் கூறவும்..
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/239533-comments-2.html
    உங்கள் அன்புத் தோழி,
    கோம்ஸ்.
     
    3 people like this.
  9. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    சிந்தனை 5

    ஜெயப்ரகாஷின் வீட்டில், கீழே தினேஷ் ஒவ்வொரு வேலையாட்களையும் தனி தனியாக விசாரிக்க, லாவண்யா தோட்டத்தில் இருந்து வீட்டை சுற்றி பார்வையிட்டவாறே தோட்டக்காரனை விசாரித்துக் கொண்டிருக்க, தியாகேஷ்வர் மேலே சுபாஷினியின் அறையை பார்வையிட்டவாறே நிர்வாகியை விசாரித்துக் கொண்டிருந்தான்.
    தியாகேஷ்வர், "jp சார் எப்படிபட்டவர்?"

    நிர்வாகி, "தங்கமானவர் சார்.. கோபமே பட மாட்டார்"

    "ஒரு தடவ கூட கோபப்பட்டது இல்லையா!"

    "இல்லை சார்.. யாருக்கும் எந்த தீங்கும் செய்யாதவர்.. வேலைக்காரர்களை தாழ்வா பார்க்குற பணக்காரர்கள் மத்தியில் தாழ்வின்றி சக மனிதனா பார்ப்பார் சார்..
    என் வயதிற்கு மரியாதை கொடுத்து வாங்க போங்க னு மரியாதையா தான் பேசுவார்..அவரை மாதிரி தங்கமான ஒருவரை பார்ப்பது ரொம்ப கஷ்டம் சார்.."

    "மிசஸ்.jp எப்படி?"

    "அமைதியானவங்க சார்.. பிள்ளைங்க மேல் அதிக பாசம்.. அய்யா போனதும் பாதியாளா ஆனவங்க, சின்னமா போனதும் முழுசா உடைஞ்சு போய்ட்டாங்க.. சுரேந்தர் தம்பி மட்டும் இல்லை-னா தானும் மேல போய்டுவேன்-னு புலம்புறாங்க.. கடவுளுக்கு கண்ணே இல்லை சார்.."

    "உங்களுக்கு எந்த ஊர்?"

    "வல்லநாடு சார்"

    "jp சார் சொந்த ஊர் வீரவநல்லூர் தானே!"

    "ஆமா சார்"

    "நீங்க இங்க எப்படி வேலைக்கு சேர்ந்தீங்க?"

    "என் மச்சான் வக்கீல் அய்யா வீட்டுல டிரைவரா இருக்கான்.. வக்கீல் அய்யா மூலமா தான் இங்க வேலைக்கு சேர்ந்தேன்.."

    "வக்கீல் அய்யா-னா கார்த்திகேயன் சாரை சொல்றீங்களா?"

    "ஆமா சார்"

    "எப்போதிருந்து இங்க வேலை பார்க்குறீங்க?"

    "அஞ்சாறு வருஷம் இருக்கும் சார்.. அய்யா குடும்பத்தை கூட்டிட்டு வரதுக்கு முன்னாடி இருந்தே நான் வேலை பார்க்குறேன்.."

    "கூட்டிட்டு வரதுக்கு முன்னாடி-னா?"

    "முதல அய்யா மட்டும் தான் இருந்தாங்க.. தொழில்-ல காலூன்றி நின்ன பிறகு தான் குடுபத்தை கூட்டிட்டு வந்தாரு"

    "குடுபத்தை எப்போ கூட்டிட்டு வந்தார்?"

    "அது.. ஒரு.. நாலு நாலரை வருஷம் இருக்கும் சார்"

    "ஹ்ம்ம்.. சுபாஷினி எப்படி?"

    "நல்ல பொண்ணு சார்.. செல்லம் கொஞ்சம் ஜாஸ்தி.. அய்யா எப்பவாது திட்டினாலும் அம்மா திட்ட விடமாட்டாங்க அதனால கொஞ்சம் பிடிவாதம் உண்டு"

    "சுபாஷினிக்கு நண்பர்கள் அதிகம் உண்டா?"

    "எனக்கு தெரியாது சார்.. சின்னமா வீட்டுக்கு யாரையும் கூட்டிட்டு வந்ததில்லை.."

    "உங்க சின்னம்மா வீட்டுல இருக்கும் நேரத்தில் என்னலாம் செய்வாங்க"

    "எப்போதும் பாட்டு கேட்டுட்டு இருப்பாங்க.. தம்பி-னா உயிர்.. தம்பி கூட தோட்டத்துலவிளையாடுறது, ஆடுறது, பாடுறது, பாடம் சொல்லி குடுக்குறது.. அப்பறம் ஏதாவது படிச்சுட்டு இருப்பாங்க.."

    "வீட்டுக்கு அதிகமா யார் யார்லாம் வந்து போவாங்க"

    "விஜயன் அய்யா, வக்கீல் அய்யா, டாக்டரய்யா பொண்ணு"

    "ப்ரதாப் சார் வந்தது இல்லையா?"

    "விஜயன்அய்யா அண்ணனா? சொத்தை பார்த்துக்கணும்-னு பெரிய அய்யா சொன்னவுகளா?"

    "விஜயன் சார் அண்ணனா-னு தெரியாது பட் சொத்தை பார்த்துக்குறவர் தான்"

    "அய்யா இறந்த வீட்டுலயும் சின்னம்மா இறந்த வீட்டுலயும் தானுங்க பார்த்தேன்"

    "டாக்டர் அய்யா-னா டாக்டர் மூர்த்தி யா?"

    "ஹ்ம்ம்"

    "டாக்டர் சார் பொண்ணு யாரை பார்க்க வருவாங்க?" என்று கேட்டவாறே பால்கனியில் இருந்து தோட்டத்தை நோட்டமிட்டான். வெளியிருந்து யாருமறியாமல் பால்கனி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று ஒவ்வொரு கோணத்திலும் நின்று யோசித்து பார்த்தான்.
    மூளை ஒரு பக்கம் யோசனையில் இருக்க, நிர்வாகியிடம் விசாரணையையும் தொடர்ந்துக் கொண்டிருந்தான்.

    "சின்னம்மா-வ பார்க்க தான் வருவாங்க.. சின்ன அம்மாவை விட ஒன்னு ரெண்டு வயசு கூட இருக்கும்"

    "உங்க சின்னம்மா டாக்டர் சார் வீட்டுக்கு போக மாட்டாங்களா?"

    "எப்பவாது போவாங்க-னு நினைக்குறேன் சார் "

    "உங்க சின்னம்மா இறந்த அன்னைகோ இல்லை முந்தின நாளோ டாக்டர் சார் பொண்ணு வந்தாங்களா?"

    "நியாபகம் இல்லை சார்"

    "கொஞ்சம் யோசிச்சு பாருங்க"

    "ஹ்ம்ம்………...........ஹம்.. சின்னம்மா இறந்ததுக்கு ரெண்டு-மூணு நாள் முன்னாடி வந்தாங்க"

    "எவ்ளோ நேரம் இருந்தாங்க?"

    "நான் கவனிக்கலையே சார்"

    "வீட்டு நிர்வாகி இதையேல்லாம் கவனிக்க வேணாமா?"

    "தெரிஞ்சுவாங்க தானே சார்.. இப்படி எல்லாம் நடக்கும்-னு கனவுல கூட நினைச்சு பார்கலையே!" என்று சிறிது உடைந்த குரலில் கூறியவர்,
    "சின்னமா இறந்தது கொலை-னு சொல்றீங்களா சார்?"

    "கொலையா தற்கொலையா-னு கண்டு பிடிக்க தான் உங்களை கேள்விகள் கேட்டுட்டு இருக்கேன்"

    "நான் சொன்னதை வச்சு என்னத்தை சார் பெருசா கண்டுபிடிக்க முடியும்?"

    தியாகேஷ்வரின் இதழோரம் சிறு புன்னகை அரும்பியது.
    நிர்வாகி, "என்ன சார்?"

    நிர்வாகியின் கேள்வியை புறகணித்துவிட்டு அடுத்த கேள்வியை கேட்டான் தியாகேஷ்வர்."விஜயன் அய்யா யாரு?"

    "அய்யாவோட ஒன்னுவிட்ட தம்பி.. ஊர்ல இருக்குற அய்யாவோட சொத்துக்களை அவர் தான் பார்த்துக்குறார். இங்க அய்யா மட்டும் இருந்தப்ப அய்யா குடும்பத்துக்கு துணையா அவர் தான் இருந்தார்.."

    "ஓ.. அவர் குணம் எப்படி?"

    "நல்..லவர் தான்"

    மேஜைமேல்இருந்தபுத்தகங்களை பார்வையிட்டுக் கொண்டிருந்த தியாகேஷ்வர் திரும்பி அவர் கண்களை நேராக பார்த்து, "எதுவா இருந்தாலும் மறைக்காம சொல்லுங்க.. நீங்க சொல்ற ஒவ்வொரு விஷயமும் உங்க சின்னமா மரணத்தின் மர்மத்தை விளக்கலாம்.."

    "மர்மமா?"

    "எதிர் கேள்வி கேட்காம நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க"
    தியாகேஷ்வர் குரலை உயர்த்தாத போதும் அதில் அழுத்தம் இருக்கவே, நிர்வாகி கேள்விகளை விடுத்து பதிலை கூறினார்.
    "கறாரா தான் பேசுவார்.. எங்களை அதட்டுவார்.." என்று கூறி தயங்க,

    தியாகேஷ்வர், "தயங்காமஉங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்க.. நீங்க தான் சொன்னீங்க-னு வெளிய தெரியாது"

    "அது.. ஒரு தடவ.. அய்யாக்கு தெரியாம பொய் கணக்கு எழுத சொல்லி காசு கேட்டார்..எனக்கு ஒரு பங்கு தரேனும் சொன்னார்.."

    "நீங்க என்ன பண்ணீங்க?"

    "நான் மாட்டேன்-னு சொல்லிட்டேன்"

    "தைரியமான விஸ்வாசி தான்"

    "என்ன இருந்து என்ன ப்ரியோஜனம் சார்.. எங்க அய்யாவே போய்ட்டார்"

    "இந்த விஷயத்தை jp சார் கிட்ட சொன்னீங்களா?"

    "இல்லை சார்.. திரும்ப சொன்னா பார்த்துக்கலாம்-னு விட்டுட்டேன்.. அவரும் திரும்ப வந்து அப்படி கேட்கலை.."

    "ஹ்ம்ம்.. இப்போ கடையை யார் பார்த்துக்குறா?"

    "அதுலாம் எனக்கு தெரியாது சார்"

    "ஹ்ம்ம்.." என்று கூறியபடி மேஜை மேல் இருந்த 'வைரமுத்து கவிதைகள்'புத்தகத்தை கையிலெடுத்தான்.

    நிர்வாகி சிறிது கரகரத்த குரலில், "சின்னமா இந்த புத்தகத்தை படிக்குறதை நிறைய தடவ பார்த்துருக்கேன் சார்"

    தியாகேஷ்வர் அந்த புத்தகத்தின் பக்கங்களை புரட்டினான். பல பக்கங்களில் பல வரிகள் பென்சிலால் கோடிட பட்டிருந்தது. பக்கங்களின் நடுவில் கவிதை எழுதியஒருகாகிதம் இருந்தது.

    கவிதையின் கீழே எழுதிய நேரமும் தேதியும் இருந்தது ஆனால் எழுதியவர் பெயர் இல்லை. அந்த தேதி சுபாஷினி இறந்த தேதி.

    அந்த கவிதை -
    "கஷ்டங்கள் யாவும் வானில்
    கரையும் மேகமே..
    கஷ்டங்களில் புதைக்க படவில்லை
    விதைக்க படுகிறாய்!

    வாழ்க்கை வாழ்வதற்கே
    துவண்டு போகாதே..
    வீழ்வது தவறல்ல
    நதியாய் பெருக்கெடு!

    எந்த தருணத்திலும் வாழ்வின்
    மகிழ்ச்சியை தொலைக்காதே..
    தருணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு
    அனுபவம் தரும்!

    எந்த இருட்டிற்கும் இறுதி
    சூரிய ஒளி..
    இருட்டை கண்டு கலங்காதே
    பக்குவபடுவாய்!


    உன்னுள் சக்தி கோடி
    அதை உணரு..
    சக்தியெல்லாம் ஒன்றுக் கூட்டி
    முளைத்து உயர்ந்திடு!

    உன்னால் முடியாதது உண்டோ?
    நம்பிக்கையோடு போராடு
    வென்றிடுவாய்!"

    இதன் கீழே தேதியும் நேரமும் எழுதியிருந்தது. அதன் கீழே ஒரு கோடிட்டுவிட்டு,
    "சக்தியெல்லாம் ஒன்று கூட்டி
    முளைத்து உயர்ந்திடுவேன்..
    வீழ்த்த நினைக்கும் துரோகியை
    வீழ்த்தி வென்றிடுவேன்!"


    என்று எழுதியிருக்க அதன் கீழே மீண்டும் தேதியும் நேரமும் எழுதபட்டிருந்தது. இரண்டு தேதியும் ஒன்றாக தான் இருந்தது, ஆனால் நேரம் வேறுபட்டது, பத்து நிமிடங்கள் இடைவெளி இருந்தது.



    தியாகேஷ்வர், "சரி நீங்க போகலாம்.. மிசஸ் jp கிட்ட சில கேள்விகள் கேட்கவேண்டியது இருக்கு.. அவங்ககிட்ட போய் சொல்லுங்க"

    "சரி சார்" என்று கூறி நிர்வாகி அறையை விட்டு வெளியேறியதும், தியாகேஷ்வர் தன் கைபேசியில் லாவண்யாவை அழைத்தான்.
    லாவண்யா, "எஸ் சார்"

    "தோட்டக்காரனிடம் விசாரணை முடிந்ததா?"

    "ஜஸ்ட் நவ் ஓவர் சார்.. எனக்கு ஒரு தடையம் கிடைச்சுருக்கு சார்"

    "என்ன?"

    "ஒரு ஜென்ட்ஸ் ப்ரேஸ்லெட்.. சுபாஷினி ரூம் பால்கனி கீழ இருந்த குரோடன்ஸ் செடிகளுக்கு நடுவிலிருந்து கிடைச்சுது"

    "செடில இருந்ததா.. மண்ணுல கிடந்ததா?"

    "மண்ணுக்குள்ள முக்கால்வாசி புதைஞ்சு இருந்ததுசார்"

    "சுபாஷினி ரூம்-னு எப்படி சொன்னீங்க?"


    "தோட்டக்காரனிடம் விஷாரித்தேன் சார்"

    "ஓகே.. எனக்கும் ஒரு தடையம் கிடைச்சுருக்கு.. கவிதை எழுதிய பேப்பர்.. நீங்க தோட்டத்தில் இருந்ததை பார்த்தேன், இந்த பேப்பர்-அ வைக்க ஜீப்-ல இருந்து சீல்டுகவர் எடுத்துட்டு வர சொல்ல தான் காள் பண்ணேன்"

    "ஓகே சார்.. ஐ வில் பீ பக் இன் 5 மினிட்ஸ்" என்று கூறி அழைப்பை துண்டித்தாள்.

    ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    சேகர் கீர்தன்யாவிற்கு தனது பள்ளியை சுற்றிக் காட்டிக் கொண்டிருந்தான்.

    கீர்தன்யா, "கலக்குற டா.. லாஸ்ட் டைம் பார்த்ததுக்கு நல்லவே டெவலப் ஆகிருக்கு.. நல்ல ரன் பண்ற.."

    "லாஸ்ட் டைம் இல்ல.. லாலாலாஸ்ட் டைம்-னு சொல்லு.. ஸ்கூல் ஆரம்பிச்ச புதுசுல வந்தது தான்.."

    "ஹ்ம்ம்.."

    "10த் கொண்டு வர தான் போராடிட்டு இருக்கேன்.. எப்படியும் நெக்ஸ்ட் இயர் கொண்டு வந்துருவேன்"

    "குட்.. ஆல் தி வெரி பெஸ்ட்"

    "தன்க் யூ"

    "எப்படி டா இந்த ஐடியா வந்தது?"

    சேகர் சிறு புன்னகையுடன், "நம்ம ஸ்கூல்-ல கொடுமை படுத்தினத்தில் தோன்றியிருக்கலாம்.. தெரியலை"

    "பிரின்சிபால் சாரை கேட்டா நாம தான் கொடுமை படுத்துனோம்-னு சொல்வார்"

    "சுரேஷ் சார் காலத்தை நினைச்சு சொல்ற.. நீ விஜி மம் பிரியட்-ல இங்க இல்லையே!"

    "விஜி மம்-னா சுரேஷ் சார் வைப் தானே! அவங்க நீ 12த் படிச்சப்ப தானே வந்தாங்க?"

    "ஆமா ஆமா.. அந்த ஒரு வருஷமே போதுமே!"

    "அவ்ளோ படுத்துனாங்களா?"

    "ஹ்ம்ம்"

    "அப்படி என்ன பண்ணாங்க?"

    "ஒன்னா ரெண்டா.. விடு அதை பத்தி இப்ப என்ன பேசிட்டு!"

    "நீ என்ன கஷ்ட பட்டனு தெரிஞ்சுக்க தான்"

    "நான் கஷ்ட பட்டதை கேட்க என்ன ஒரு ஆர்வம்.. என்ன ஒரு சந்தோசம்!"

    "பின்ன!" என்று கூறி சேகரை திரும்பி பார்க்க, அவனோ கண்களை மூடி சிறு தலையசைவுடன் மெய்மறந்து நின்றுக் கொண்டிருந்தான்.
    அவன் முகம் மென்னகையில் மலர்ந்திருக்க, அவனது காதுகள் லேசாக கேட்டுக் கொண்டிருந்த பஜனையில் லயித்துப்போயிருந்தன.

    பஜனை நின்றதும் கண்களை திருந்தவன் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த கீர்தன்யாவிடம், "என்ன?"என்றான்.

    "என்ன ஒரு பாவம்! என்ன ஒரு ரசனை! புல்லரிக்குது பா" என்று கூறி கையை தேய்த்துக் கொள்ள, சேகர் கண்கள் மின்ன, "நீயும் உணர்ந்தியா! செம வாய்ஸ் ல.."

    "நான் உன்னை பற்றி சொன்னேன்"

    "ஓ! அந்த வாய்ஸ் தான் என் முகத்தில் ரசனையையும் பாவாத்தையும் கொண்டு வந்துது"

    கீர்தன்யா சேகரின் கண்களை கூர்ந்து பார்க்க, சேகர், "என்ன?"

    "இல்ல நான் கிண்டல் பண்ணது உண்மையாவே உனக்கு புரியலையா இல்ல புரியாத மாதிரி நடிக்குறியா னு பார்த்தேன்"

    "நீ வைஷ்ணவி ய பார்த்து, நேரில் அவங்க பாட்டை கேட்டா இப்படி சொல்ல மாட்ட.." என்றவன் கைகடிகாரத்தை பார்த்துவிட்டு,"இப்போ க்ளாஸ் முடிற நேரம் தான்.. வா இன்ட்ரோ குடுக்குறேன்.." என்று கூறி கீர்தன்யாவின் பதிலை எதிர் பாராமல் முன்னாள் நடக்க கீர்தன்யா அவனை தொடர்ந்தாள்.
     
    3 people like this.
  10. devivbs

    devivbs Platinum IL'ite

    Messages:
    1,572
    Likes Received:
    1,073
    Trophy Points:
    283
    Gender:
    Female
    சிந்தனை 6

    தியாகேஷ்வரும் லாவண்யாவும் கீழே வந்த போது தினேஷ் நிர்வாகியுடன் பேசிக்கொண்டிருக்க, சோர்ந்த முகத்துடன் தளர்ந்தநடையுடன்ஒருசிறுவனைஅழைத்துக் கொண்டு வந்தார் ஜெயப்ரகாஷின் மனைவி கல்யாணி.

    ஹாலை சுற்றிப் பார்த்தப் படி சோபாவில் அமர்ந்த தியாகேஷ்வர், அங்கங்கே நின்றுக் கொண்டிருந்த வேலையாட்கள் வேலை செய்யும் பாவனையுடன்இங்கே கவனமாக இருப்பதை உணர்ந்துக் கொண்டான்.

    கல்யாணி சிறுவனுடன் அமர்ந்ததும் தியாகேஷ்வர் புன்னகையுடன், செய்கையில் 'வா'என்று சிறுவனை அழைத்ததும், அவன் கல்யாணியை பார்த்து சம்மதம் பெற்றுக் கொண்டு தியாகேஸ்வரிடம் சென்றான்.

    தியாகேஷ்வர் சிறுவனை அருகில் அமரவைத்து, தோளை சுற்றி கைபோட்டு, "உன் பெயரென்ன?"

    "சுரேந்தர்"

    "என்ன படிக்குற?"

    "செகண்ட் A"

    "உனக்கு வெளிய விளையாடுறது பிடிக்குமா வீட்டுக்குள்ள விளையாடுறது பிடிக்குமா?"

    "எப்போதும் நானும் அக்காவும் தோட்டத்துல தான் விளையாடுவோம்.." என்று உற்சாகத்துடன் கூறியவன் சோர்வுடன்,"ஆனா கொஞ்ச நாளா விளையாடுறதே இல்லை.. அக்கா ஊர்ல இருந்து வந்ததும் விளையாடலாம்-னு அம்மா சொன்னாங்க"

    "ஓ.. இப்போ சோமு அங்கிள் கூட போய் விளையாடுறியா?"

    "அங்கிள்-ஆ.. சோமு தாத்தா"

    "ஓகே.. சோமு தாத்தா கூட போய் விளையாடுறியா?"

    "ஓ.. விளையாடுறேனே"

    தியாகேஷ்வர் நிர்வாகியை பார்க்க, அவர் கல்யாணியிடம் கண்ணசைவில் அனுமதி பெற்று சிறுவனை அழைத்துக் கொண்டு வெளியே சென்றார்.

    தியாகேஷ்வர், "கண்ணசைவில் எல்லோரையும் செயல் படுத்துறீங்களே!"

    "எனக்கு இதுலாம் புதுசுங்க.. அவர் இருந்தவரை அவர் பார்த்துக்கிட்டார், அப்பறம் சுபா.. இப்ப..." என்று கூறி கண்கலங்க தலை குனிந்தார்.

    தியாகேஷ்வர் லாவண்யாவை பார்க்க, அவள் கல்யாணி அருகே அமர்ந்து அவர் கைகளை ஆதரவாக தட்டி, "கண்ட்ரோல் யுவர் ஸெல்ப் மேடம்"

    சில நொடிகளில் தன்னை கட்டுப் படுத்திக் கொண்ட கல்யாணி,
    "எனக்கு இங்கலிஷ்-லாம் தெரியாதுங்க.. நீங்க தமிழ்-லேயே பேசுங்க"

    தியாகேஷ்வர், "நாம கொஞ்சம் தனியா பேசலாம் மேடம்"

    "இங்க தனியா தானே இருக்கோம்"

    "வேலையாட்கள் கவனம் இங்கே தான் இருக்கிறது"

    "அவங்க எல்லோரும் நல்லவங்க தான்.. நீங்..............."

    "எல்லோரையும் எளிதாக நம்பிறாதீங்க மேடம்"

    "எல்லோரும் விசுவாசமானவங்க.."

    தியாகேஷ்வர் சிறு புன்னகையுடன், "அவர்கள் நல்லவர்களாக இருப்பதில் எனக்கும் மகிழ்ச்சி தான் ஆனால் உங்கள் மகளின் மரணம் தற்கொலை அல்லாமல் கொலையாக இருந்தால் கண்டிப்பாக வீட்டிற்குள் இருக்கும் யாரோ தான் உதவியிருக்க வேண்டும்"

    கல்யாணி கண்களை விரித்துப் பார்த்தார். அதில் ஆச்சரியம் கலந்த சிறு அச்சம் தெரிந்தது. பிறகு,"அவருடைய அலுவலக அறைக்கு போய் பேசலாமா?"

    "ஹ்ம்ம்.."

    நால்வரும் ஜெயப்ரகாஷின் அலுவலக அறைக்கு சென்றனர்.

    ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    சேகரும் கீர்தன்யாவும் பஜனை மண்டபம் வாசலருகே செல்லவும், மாணவர்கள் வரிசையாக வெளியே சென்ற பின் இறுதியாக வெளியே வந்த வைஷ்ணவி புன்னகையுடன், "குட் மார்னிங் சார்"என்றாள்.

    சேகர் மென்னகையுடன், "குட் அப்ட்டர் நூன்" என்றான்.

    மணியை பார்த்த வைஷ்ணவி மணி 12.10 என்றதும்,"ஓ சாரி.. குட் அப்ட்டர் நூன் சார்" என்றாள்.

    சேகர், "இவங்க கீர்தன்யா.. என் க்ளோஸ் பிரெண்ட்.. உங்க வாய்ஸ் கேட்டுட்டு உங்களை பார்க்கணும்-னு சொன்னாங்க" என்றதும்



    கீர்தன்யா அவனை பார்த்து கண்களால், 'அட பாவி' என்று கூற, அதை கண்டுக் கொள்ளாத சேகர்,"கீர்த்தி.. இவங்க வைஷ்ணவி.. மியூசிக் டீச்சர்.. கொஞ்ச நேரத்துக்கு முன் இவங்க பாட்டை தான் கேட்டோம்..ரொம்ப அருமையா,நல்ல பாடுவாங்க"

    வைஷ்ணவி, "சார் சொல்ற அளவுக்குலாம் இல்லை மேடம்" என்று சிறு கூச்சத்துடன் கூற,

    கீர்தன்யா புன்னகையுடன்,"உங்க சார் அதிகமா எதுவும் சொல்லலை.. ரியல்லி ரொம்ப நல்லா பாடுறீங்க அண்ட் யுவர் வாய்ஸ் இஸ் ஸோ நைஸ்"

    வைஷ்ணவி மீண்டும் சிறு கூச்சத்துடன், "தன்க் யூ மேடம்" என்றாள்.

    "சார்" என்று அழைத்தபடி வந்த PT மாஸ்டர், "ஸ்போர்ட்ஸ் மெடிரியல்ஸ் வந்துருக்கு.. நான் சரி பார்த்துட்டேன்.. நீங்களும் ஒரு முறை செக் பண்ணிட்டா பில் செட்டில் பண்ணிடலாம்"

    "இதோ வரேன்" என்றவன் கீர்தன்யா பக்கம் திரும்பி, "பேசிட்டு இருங்க.. நான் வந்துறேன்" என்று கூறி சென்றான்.

    வைஷ்ணவியிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டு மீண்டும் பள்ளியை சுற்றிப் பார்க்க தொடங்கிய கீர்தன்யா விளையாட்டு மைதானத்தில் சிறுவர்-சிறுமிகள் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்ததும் அங்கே சென்றாள்.

    அவள் விளையாட்டை பார்த்துக் கொண்டிருந்த போது, ஒரு சிறுமி,"ஏய் சந்துரு.. ஓடாத.. நில்லுடா" என்று கூறிக் கொண்டு அந்த சிறுவனை துரத்த, கீர்தன்யாவின் விழிகள் சந்துரு என்ற அந்த சிறுவனை ஆசையுடன் தழுவின.

    அந்த சிறுவன் கல் தடுக்கி, 'அம்மா'என்ற சத்தத்துடன் கீழே விழ, கீர்தன்யா அவசரமாக ஓடிச் சென்று அந்த சிறுவனை தூக்கினாள்.

    கீர்தன்யாவை ஆசிரியர் என்று நினைத்த அந்த சிறுமி அவசரமாக,"நான் எதுவும் பண்ணலை மிஸ்.. அவன் தான் விழுந்தான்"

    சிறுவன், "இல்ல மிஸ்.. அவ துரத்துனதுல தான் விழுந்தேன்.. ஸ்ஸ்.. ஆ.. வலிக்குது மிஸ்" என்று கண்ணீருடன் கூறவும் கீர்தன்யாவின் கண்கள் சிறிது கலங்க, சிரமத்துடன் தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு,"சரி வா.. மருந்து போடலாம்" என்று கூறி அலுவலக அறையை நோக்கி சிறுவனுடன் சென்றவள், தானே சிறுவனின் காயத்தை சுத்தம் செய்து மருந்திட்டு அனுப்பினாள்.

    ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    தியாகேஷ்வர், "சுபாஷினி மரணம் தற்கொலை தான்-னு நீங்க நினைக்குறீங்களா?"

    "என்ன நினைக்குறதுனே தெரியலை.. அவ இல்லை-னு இன்னமும் என்னால் நம்ப முடியலை.. பாவி மக.. இப்படி பண்ணிட்டாளே.. அவர் போனதையே என்னால் தாங்க முடியலை.. இதுல.." என்று அழத்தொடங்கினார்.

    லாவண்யா வெளியே சென்று வேலையாளிடம் தண்ணீர் வாங்கி வந்து கல்யாணியை பருக செய்தாள்.

    கல்யாணி நிதானத்திற்கு வந்ததும் தியாகேஷ்வர் கேள்விகளை தொடர்ந்தான்.
    "உங்க மகளுக்கு கவிதை எழுதும் பழக்கம் இருந்ததா?"

    "ஹ்ம்ம்.."

    (ட்ரான்ஸ்பரென்ட்) சீல்ட் கவரில் இருந்த காகிதத்தைக் காட்டி,"இது சுபாஷினி கையெழுத்து தானா?"

    கல்யாணி கண்களை விரித்து பார்த்து, அவசரமாக அதை வாங்கவும், தியாகேஷ்வர்,
    "வெளியே எடுக்காம பாருங்க"

    "இது….எப்படி உங்களுக்கு கிடைச்சது?"

    "அவங்க ரூம்-ல இருந்தது"

    "ஓ"

    "இது சுபாஷினி கையெழுத்து தானே!"

    கல்யாணி 'ஆம்' என்பது போல் தலையை ஆட்டினார். பிறகு,"இதை நான் வச்சுக்கலாமா?"

    "சாரி மேடம்.. இது எவிடன்ஸ்.. ஸோ தர..முடியாது.. "

    கல்யாணி சோகமாக தாழ்ந்த குரலில், "ஓ" என்றார்.
    "மிஸ்டர் ஜெயப்ரகாஷ் ப்ரேஸ்லட் போட்டதுண்டா?"

    "ப்ரேஸ்லட்-னா கைல போடுறது தானே!"

    "ஹ்ம்ம்.."

    "இல்ல"

    "சுரேந்தர்?"

    கல்யாணி மறுப்பாக தலையை ஆட்டி, "ஹுஹும்.." என்றவர், "எதுக்கு கேட்குறீங்க?"

    "சும்மா தெரிஞ்சுக்க தான் கேட்டேன்.. அதை விடுங்க..
    மிஸ்டர் ஜெயப்ரகாஷ் ஏன் சொத்துக்களை சுபாஷினி பெயரில் எழுதினார்?"

    "புரியல"

    "நீங்க இருக்கீங்க, சுரேந்தர் இருக்கான்.. அப்படி இருக்கும் போது, சொத்துக்கள் அனைத்தையும் சுபாஷினி பெயரில் மட்டும் ஏன் எழுதினார்?"

    "எனக்கு எப்படிங்க தெரியும்?"

    தியாகேஷ்வர் கல்யாணியை கூர்ந்துப் பார்த்தான்.
    கல்யாணி, "அவர் எப்போதும் என்னை வெகுளி.. வெளுத்ததெல்லாம் பால்-னு எல்லோரையும் நம்பாத னு சொல்லிட்டே இருப்பார்.. என் மகள் அவரை மாதிரி புத்திசாலி, தைரியசாலி.. அதனால் அப்படி எழுதி இருக்கலாம்"

    "அதாவது..உங்க பெயரில் இருந்தா உங்களை சுலபமா ஏமாத்தி வாங்கிடலாம்-னு சொல்றீங்க"

    "ம்.... ஆமாம்"

    "அப்படியே யோசிச்சாலும்.. சுபாஷினி மற்றும் சுரேந்தர் பெயரில் சேர்த்து எழுதி இருக்கலாமே!"

    "அது எனக்கு தெரியாது.."

    "சரி.. விஜயன் சார் தான் உங்களுக்கு நெருக்கமா(கல்யாணி நிமிர்ந்து பார்க்கவும்) ஐமீன் உங்க குடுபத்திற்கு நெருக்கமா உதவியா இருந்திருக்கார்.. அப்படி இருக்கும் போது அவரை கார்டியனா..காப்பாளரா சொல்லாம ஏன் ப்ரதாப் சாரை நியமித்தார்?"

    "இந்த சொத்து விவகாரம்-லாம் எனக்கு தெரியாதுங்க.. நீங்க கார்த்திகேயன் அண்ணா-வ கேட்டுக்கோங்க"

    "நீங்களே உங்க மகள் புத்திசாலி, தைரியசாலி னு சொல்றீங்க.. அப்படிப் பட்டவங்க தலை வலி, மன-சோர்வு னு தற்கொலை செஞ்சுருப்பாங்களா?"

    கல்யாணி கண்கலங்க, "தெரிலைங்க.. எனக்கு தெரியலை..
    என்னை கொஞ்சம் தனியா நிம்மதியா இருக்க விடுங்க.. அவர் இறந்தப்ப இப்படி தான் என்னையும் என் மகளையும் கேள்வி மேல கேள்வியா கேட்டு படுத்துனீங்க, இப்போ என் மக போய்ட்டா.. கொஞ்ச நாள் முன்னாடி தான் என் மக மரணத்தை பத்தி ஒரு போலீஸ்காரர் கேட்டுட்டு போனார்.. இப்போ திரும்பவும்....
    ஐயோ எங்களை விட்டுருங்க..
    இந்த சொத்து தான் காரணம்-னா அதை அனாதை ஆசரமத்துக்கு குடுக்க சொல்லிடுங்க.. நானும் என் மகனும் எங்க சொந்த ஊருக்கே போய்டுறோம்" என்று ஆவேசமாக பேசி குலுங்கி குலுங்கி அழத் தொடங்கினார்.

    தியாகேஷ்வர், "உங்க நிலைமையும் கஷ்டமும் எங்களுக்கு புரிது.. பட் இது எங்க கடமை.. உங்க மன நிலை கொஞ்சம் திடமான பிறகு மீண்டும் வரோம்" என்று கூறி வெளியே சென்று நிர்வாகியிடம் சொல்லிவிட்டு சென்றான்.

    தியாகேஷ்வர் பின்னே சென்ற லாவண்யா தினேஷிற்கு மட்டும் கேட்கும் குரலில்,
    "சிலர் என்குவரி பண்றதா வெட்டி சீன் போடுவாங்க பட் நாங்கலாம் சைலென்ட்-ஆ இருந்தாலும் பக்காவா எவிடன்ஸ் கொண்டு வருவோம்"

    தினேஷ் அலட்டிக் கொள்ளாமல் நக்கலாக, "யார் கண்டா! நீயே அதை செட் பண்ணி கொண்டு வந்துருக்கலாம்"

    லாவண்யா முறைக்கவும், தினேஷ், "ஆமா நாங்கலாம் னு சொன்னியே! அப்போ நீ தனியா இன்வெஸ்டிகேட் பண்ணலையா? உன் கூட யார் இருக்கா? எங்க...................." என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகவும், லாவண்யா அவனை முறைத்துவிட்டு முன்னே சென்றுவிட,அவளது முறைப்பை ரசித்தபடி புன்னகையுடன் தினேஷ் சென்றான்.

    ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    கீர்தன்யா சந்துருவை பற்றி நினைக்கக் கூடாது என்று தன் மனதிற்கு கடிவாலமிட்டாலும் அவளையும் மீறி அவளது சிந்தனை பின்னோக்கி சென்றது..

    பரவசத்துடன் பஞ்சு போன்ற பிறந்த குழந்தையை கீர்தன்யா கையில் ஏந்தியதும், சில நொடிகள்குழந்தை தன் குட்டி கண்களை திறந்து திறந்து மூடியது, பிறகு மெல்ல திறந்து அவளது முகத்தை பார்த்து அழகாக சிரித்ததும், கீர்தன்யா,
    "என்ன ஒரு குளுமையான சிரிப்பு.. இவனுக்கு சந்திரன் னு பேர் வைக்க போறேன் பா" என்றதும் குழந்தைக்கு என்ன புரிந்ததோ, தனது போக்கை வாய் விரிய சத்தமாக சிரித்தது.

    கீர்தன்யா பெரும் மகிழ்ச்சியுடன் குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டாள்.குழந்தை மீண்டும் சிரித்தது.

    இப்பொழுது நினைக்கும் போது கூட தன் இதழில் அந்தமுத்தத்தின்ஈரத்தை உணர்தவளின் கண்கள் கலங்கியது.அவள் கண்களை இறுக மூட, கண்ணீர் வடிந்தது.

    கீர்தன்யாவின் தோளில் சேகர் கைவைக்கவும் திடுக்கிட்டு திரும்பியவள், அவனை பார்த்ததும் அவசரமாக கண்களை துடைத்தாள்.

    சேகர் கண்ணசைவில் 'என்னவென்று' கேட்க, கீர்தன்யா 'ஒன்றுமில்லை' என்று சிறு தலையசைவில் பதில் கூற, சேகர் அவளது கண்களையே பார்க்கவும், கீர்தன்யா,
    "சந்துரு-னு ஒரு சின்ன பையனை பார்த்தேன்" என்று கூறி தரையை பார்த்தாள்.

    சேகர் அவளின் தோளை ஆதரவாக தட்டிக் கொண்டுத்தான்.

    கீர்தன்யா, "நான் வீட்டுக்கு கிளம்புறேன்" என்று தாழ்ந்த குரலில் கூற, சேகர்,
    "ட்ராயிங் க்ளாஸ் எடுக்குறியா?"

    கீர்தன்யா இயலாமையுடன் சேகரை பார்க்க, சேகர்,"உன்னால் முடியும் கீர்த்தி.. உனக்கு பிடிச்ச விஷயத்தில் மைண்ட் டைவர்ட் பண்ணி சந்துரு நினைவுகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமா வெளிய வர முயற்சி பண்ணு"

    "இந்த ரெண்டு வருஷமா அதை தானே செஞ்சுட்டு இருக்கேன்"

    சில நொடிகள் மௌனத்தில் கழிய, கீர்தன்யாவே பேசினாள்,
    "ஓகே.. கொஞ்ச நேரம் என்னை தனியா இருக்க விடு.. லன்ச்-க்கு அப்பறம் க்ளாஸ் எடுக்குறேன்"

    சேகர் முகம் மலர, "குட்.. எந்த ஸ்டாண்டர்ட் எடுக்குற?"

    "நீயே டிசைட் பண்ணு"

    "ஓகே.. இப்ப எனக்கு கொஞ்ச வேலை இருக்கு.. நீ அவசரமா வரதை பார்த்துட்டு வந்தேன்…………………"

    "ஓகே.. நீ போயிட்டு வா"

    "கீர்த்தி நீயும் என் கூட வாயேன்.. ஸ்போர்ட்ஸ் மெடிரியல்ஸ் தான் செக் பண்ணிட்டு இருக்கேன்.. கர்ள்ஸ்(girls) குள்ள ஐடெம்ஸ் நீ செக் பண்ணா வேலை சீக்கிரம் முடியுமே!"

    கீர்தன்யா சிறு புன்னகையுடன், "அம் பைன்.. யூ கரீ ஆன் யுவர் வொர்க்"

    "அதுக்கில்லை.. நிஜமாவே வேலை சீக்கிரம் முடியும்"



    "ஓகே.. நானும் வரேன்.. அங்க போய் நீ நிம்மதியா வேலையை பார்க்க மாட்ட" என்று கூறியபடி கீர்தன்யா எழவும் சேகர் புன்னகைத்தான்.

    ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

    தியாகேஷ்வர்,"லெட்டர் அண்ட் கவிதை பேப்பர்-ல இருக்குற ஹண்ட்-ரைடிங் சேம்-ஆ இருந்தாலும் ஒன்னு தான் ஒரிஜினல்"

    தினேஷ்,"கவிதை பேப்பர் தான் ஒரிஜினல்"

    "ஸோ இது தற்கொலை இல்லை கொலை-னு ஒத்துக்குற?"

    "இப்போ அப்படி தான் சார் தோணுது.. சுபாஷினி இறந்த டைம் 9.55
    முதல் கவிதை எழுதியிருக்க டைம் 9.10 ரெண்டாவது கவிதை 9.20
    நம்பிக்கை பற்றி எழுதி 'உயர்ந்திடுவேன்.. வீழ்த்த நினைக்கும் துரோகியை வீழ்த்தி வென்றிடுவேன்'னு எழுதினவ அரைமணி நேரத்தில் சாகனும்-னு முடிவெடுக்க வாய்ப்பில்லை"

    லாவண்யா, "சார்.. ஒருவேளை அந்த லெட்டர் உண்மையா இருந்து கவிதை போலியா கூட இருக்கலாமே.."

    தியாகேஷ்வர், "சான்ஸஸ் ஆர் தர்.. பட் மை intuition சேய்ஸ்(says) கவிதை தான் ஒரிஜினல்.."

    தினேஷ்,"பட் சார்.. forensic ரிப்போர்ட் வச்சு ரெண்டும் வேற வேற னு தானே ப்ரூவ் பண்ண முடியும்.. எது சுபாஷினி ஹண்ட் ரைடிங்-னு ப்ரூவ் பண்ண முடியாதே!"

    "ஹ்ம்ம்.. லெட்ஸ் ஸீ..
    ரெண்டையும் forensic லப்-க்கு அனுப்பு, அண்ட் ப்ரேஸ்லட்-யும் அனுப்பி பிங்கர் ப்ரிண்ட் டிடெக்ட் பண்ண சொல்லு.. பேப்பர்ஸ்-லயும் பிங்கர் ப்ரிண்ட் டிடெக்ட் பண்ண சொல்லு"

    தினேஷ்,"ஓகே சார்" என்று கூறி தடையங்களுடன் வெளியே சென்றான்.

    லாவண்யா,"நெக்ஸ்ட் ஸ்டெப் என்ன சார்?"

    "கவிதை சுபாஷினி எழுதினது-னா அதில் மென்ஷன் பண்ண துரோகி யாராஇருக்கலாம்?"

    "பிரெண்ட், லவர், ரிலேடிவ் னு யாரா வேணும்னாலும் இருக்கலாமே சார்"

    "யா.. அண்ட் ஒன் மோர் திங்.. அந்த துரோகி தான் கொலை செஞ்சுருக்கணும்-னு அவசியம் இல்லை.. வேற யாராவது செஞ்சுருக்க கூட சான்ஸஸ் இருக்கு"

    "ஒரே குழப்பமா இருக்கு சார்"

    தியாகேஷ்வர் சிறு புன்னகையுடன், "இன்னும் கேஸ் ஸ்டார்ட்யே ஆகலை.. இதுக்கே இப்படி சொன்னா எப்படி?"

    "உங்க அளவுக்கு எக்ஸ்பிரியன்ஸ் இல்லையே சார்"

    "இது எத்தனாவது கேஸ்?"

    "நிறைய மர்டர் கேஸஸ் ஹன்டில் பண்ணியிருக்கேன் சார் பட் இந்தளவிற்கு மர்மமான மர்டர் கேஸ் ஹன்டில் பண்ணது இல்லை"

    தியாகேஷ்வர் இதழோரம் லேசாக புன்னகை அரும்பியது.

    சில நொடிகள் கழித்துதியாகேஷ்வர், "கேட்க நினைக்குறதை கேட்டுருங்க லாவண்யா"

    "சார்!! நீங்க செம ஷார்ப்"

    "என்ன கேட்க நினைச்சீங்க?"

    "அது..கேஸ் விஷயமா இல்லை சார்"

    "நீங்க தயங்குறதில் இருந்தே அது கேஸ் சம்பந்தப்பட்டது இல்லை-னு தெரிது.. கேளுங்க"

    "என் பிரெண்டோட அண்ணன் உங்க கூட ஒன்னா தான் ட்ரெயினிங் பிரியட்-ல இருந்தாங்கலாம்.. நீங்க சிரிக்கவே மாட்டீங்க-னு சொன்னாங்க.... பட் நீங்க.... அப்படி இல்லை"

    தியாகேஷ்வர் மனதினுள், 'அவளை மட்டும் சந்திக்காமல் இருந்திருந்தா இப்பவும் அப்படி தான் இருந்துருப்பேன்.. மென்மையை என்னுள் புகுத்தினாள்.. இயற்கையை ரசிக்க கற்று தந்தாள்.. காதலை விதைத்தாள், விதை முளைத்து மரமாகி எல்லாம் கூடிவந்த நேரம்............................'

    லாவண்யாவின் "சார்" என்ற அழைப்பில் தன் சிந்தனையை விட்டு வெளியேறியவன்,
    "சாரி.. உங்க பிரெண்டோட அண்ணன் நேம் என்ன?"

    "செந்தில்-குமார்"

    "ஹ்ம்ம்......... தூத்துக்குடி-ல இருக்குறவரா!"

    "எஸ் சார்"

    "பெர்சனலி ரொம்ப பழக்கம் கிடையாது பட் நைஸ் மன்..
    ஓகே கமிங் பாக் டு தி கேஸ்.............."

    "மே ஐ கம் இன் சார்"

    "எஸ்"

    உள்ளே வந்த தினேஷ், "எவிடன்ஸ் சீல் பண்ணி ஹெட் கான்ஸ்டபில்-ட குடுத்துவிட்டுருகேன் சார்..
    டாரிக்{மொஹமத் டாரிக் - தடயவியல்(forensic) நிபுணர்} கிட்ட போன்-ல டிடேல்ஸ் சொல்லிட்டேன் அண்ட் நானே நேர்ல வந்து ரிப்போர்ட்ஸ் வாங்கிக்குறேன் சொல்லியிருக்கேன் சார்"

    "பைன்.. சுபாஷினியோட காலேஜ் அண்ட் ஸ்கூல் பிரெண்ட்ஸ் விசாரிக்கிறது தான் நெக்ஸ்ட் ஸ்டெப்.."

    உங்கள் கருத்துக்களை கீழே உள்ள தளத்தில் மட்டும் கூறவும்..
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/239533-comments-2.html#post3078018
    உங்கள் அன்புத் தோழி,
    கோம்ஸ்.
     
    2 people like this.

Share This Page