1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இ(ரு)தயம் -13:

Discussion in 'Stories in Regional Languages' started by yams, May 5, 2013.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    மழையினில் தன் நெஞ்சோடு கோழி குஞ்சினை போல ஒண்டி கொண்டவளை பிரித்தெடுக்க மனமில்லாமல் வெற்றியும் அப்படியே இருந்தான்.

    ஆனால் மழை பலமாய் பெய்யவும் தன்னவள் நனைவது மனதை ஏதோ செய்ய..

    "ஹே குட்டி மா...மழை பலமா பெய்யுது டி ..." என்று அக்கறையாய் கூறியவனை பொருட்படுத்தாது அவனோடு இன்னும் பலமாய் ஒன்றி கொண்டாள்.

    மெல்ல புன்னகைத்து கொண்டவனுக்கு இதழோரம் ஓர் குறும்பு புன்னகை மலர்ந்தது.
    மெல்ல அவளது காதோரம் குனிந்தவன் அவள் கழுத்தோரம் ஈரத்தில் ஒட்டி இருந்த தலை முடியை மெல்ல ஒதுக்கி அங்கே மென்மையாக முத்தமிட்டான்.

    அந்த குளிரிலும் அவனது முத்தத்திலும் சிலிர்த்த அவளது உடலின் அந்த சிலிர்ப்பை அணைப்பில் வைத்திருந்த அவனது கரங்கள் நன்கு உணர்ந்தது.

    "ஹே...நீ இப்படி முழுக்க நனைஞ்சு இப்ப தான் டி... பாக்குறேன்...எப்படி இருக்க தெரியுமா?"

    என்றவனின் கேள்விக்கு அவனது நெஞ்சில் இருந்து தலையை நிமிர்த்தாமலே
    "எப்படி ??" என்று முனங்கினாள் வானதி.

    "ஹ்ம்ம்...தண்ணீர்ல நனைஞ்ச தாமரை பூ மாதிரி..." என்ற அவனது பதிலுக்கு சின்னதாய் ஒரு வெட்க புன்னகை பூத்தாள்.

    தன் கை வளைவிலேயே அவளை அழைத்து சென்றவன் ஹாஸ்டல் கேட் வந்ததும்
    "சரி மா...நேரம் ஆகுது...நீ உள்ள போ..." என கூற

    "அப்ப நீங்க?" என்று வந்தது வானதியில் கேள்வி

    "நான்...அதான் உன்ன பார்த்துட்டேனே இனி பெங்களூர் போய் என் வேலைய பாக்க வேண்டியது தான்..." என்று பரிதாபமாய் முகத்தை வைத்து கொண்டு சொன்னான்.

    "உடனே கிளம்புறீங்களா?" என்று பதிலுக்கு அவளது முகமும் சோகமானது.

    அவள் முகத்தை மெல்ல கரங்களில் தாங்கியவன்
    "இல்ல டா...நாளைக்கு தான் ரிடர்ன் பிளைட் அதனால காலைல உன்ன பார்க்க மறுபடி வரேன் போதுமா?" என்று அவன் கூறியதும் துள்ளி குதித்து அவனை அணைத்து கொண்டாள் .

    அதுவும் சில நொடிகளே அதே வேகத்தில் அவனிடம் இருந்து பிரிந்து உள்ளே ஓடியவள்
    திரும்ப வந்து அவன் கரங்களை பிடித்து

    "வாங்க போகலாம்..." எனவும் ஒன்றும் புரியாமல் விழித்தான் வெற்றி.

    "ஹே எங்க மா...?"

    "நீங்க எங்க இருக்கீங்களோ அங்க தான்...."

    "நான்......நான்........" என்று அவன் விழிக்கவும் பேசுவதற்கு சற்றும் இடமளிக்காமல் அதற்குள் ஒரு ஆட்டோவை கை காட்டி ஏறி விட்டாள்.

    வெற்றிக்கு தான் ஒன்றும் விளங்கவில்லை.

    அங்கே தமிழ்நாட்டில் ஒரே வீட்டில் இருக்க மாமன் மருமகள் என்ற உறவு போதுமானதாக இருந்தது. அது மட்டும் இல்லாமல் அவனையே இவள் மனக்கவிருப்பதால் யாரும் கை நீட்டி ஒரு வார்த்தை தவறாய் பேசியதில்லை. ஆனால் இங்கே?
    இந்த ஊரை பொருத்தவரை இவர்கள் இரு இளைஞர்கள் ஒரே அறையில் தங்கினால் பார்பவர்கள் தவறாய் பார்க்க கூடும்,பேச கூடும். இவ்வளவு படித்த இவளுக்கு இது ஏன் புரியவில்லை? என்று வெற்றி அனல் மேல் புழுவை போல் தவித்து கொண்டிருந்தான்.

    அதை விட அவனுக்கு முக்கிய காரணம் வேறாக இருந்தது. அது அவளை விலக்கி வைப்பது.
    இத்தனை நாள் பிரிவுக்கு பிறகு சந்தித்தது அவனுக்கு அவளது மீது இருந்த நேசத்தை பன் மடங்காய் ஆக்கி இருந்தது.
    அது மட்டும் இல்லாமல் சென்னையில் இருந்தாலும் ஒரே வீட்டில் தான் இருந்தார்களே ஒழிய தனி தனி அறைகளே கொடுக்கபட்டிருந்தது. ஆனால் இங்கே? ஒரே அரை அதுவும் படுக்கையறை!
    ஒரே ஹோட்டல் அறையை அவளோடு பகிர்வது ஒரு பக்கம் சந்தோஷமாய் இருந்தாலும் கூட ஒரு விதத்தில் அவஸ்த்தையாய் தான் இருந்தது.

    ஹோட்டலுக்குள் நுழையும்போதே வரவேற்பறையில் இருந்தவன் அவர்களை விசித்திரமாய் பார்த்தான். கண்ணால் அவன் வெற்றிக்கு ஜாடை காட்ட அறை என்னை வானதிக்கு சொல்லி அவளை முன்பு செல்ல சொன்னவன் அந்த நபரிடம் வந்து என்னவென்று விசாரிக்க...

    "சாப்...திடீர்னு போலீஸ் வந்துட்டா ஹுஸ்பண்ட் அண்ட் வைப் ன்னு சொல்லுது..." என்று தமிழை கொலை செய்து அவன் சொல்ல இளித்த அவனுக்கு ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை வெட்டியவன்

    "யோவ்...நீ நினைக்கற மாதிரி எல்லாம் ஒன்னும் இல்ல நீ சொன்னாலும் சொல்லாட்டியும்...நாங்க புருஷன் பொண்டாட்டி தான்..வேலைய பாரு..." என்று தன் அறைக்கு விரைந்தான்.

    சற்றே கோபத்துடன் அறைக்கு வந்தவனுக்கு கதவை திறந்ததும் அவனது கோபம் எல்லாம் எங்கே போனது என்றே தெரியாத வண்ணம் ஒரே நொடியில் மனதை தடுமாற வைத்தாள் வானதி.

    மழையில் நனைந்திருந்தவள் கட்டி இருந்த அவளது கூந்தலை உலரவிட்டு அதை அந்த அறையில் இருந்த துவாலையால் துடைத்து கொண்டிருந்தாள். பத்தாத குறைக்கு அவளது மேலாடை வேறு நீங்கி கட்டிலில் கிடந்தது.
    உடலோடு சேர்ந்து ஒட்டி இருந்த அவளது சுடிதாரும்...தேனில் ஊறிய கனியாய் பளபளத்த அவளது ஆதாரங்களும் வெற்றியை அவன் வாய் மொழி மறக்க செய்தது.

    சத்தம் கேட்டு திரும்பியவள் அங்கே வெற்றியை கண்டு எந்த வித சலனமும் இல்லாமல்..

    "ஏன் மாமா அங்கேயே நின்னுட்ட? உள்ள வா...." என்று இயல்பாய் அழைக்கவும் மிடறு விழுங்கியபடியே உள்ளே நுழைந்தவன் அறைகதவை சாத்தி தாழிட்டான்.
     
    1 person likes this.
    Loading...

  2. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi yams..
    nice update...

    vetri ah partha udaney vanathy ku ghushi airuchu..
    sogathla irundhu veliya vandhutta...
     
  3. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    hmm nice update yamini.........
     
  4. helennixy

    helennixy Silver IL'ite

    Messages:
    94
    Likes Received:
    60
    Trophy Points:
    58
    Gender:
    Female
    Haiyoo.........yams..........ore romance than ponga......

    Update is very impressive........so nice...good narration....

    vanathi is very affectionate to vettri......avaloda santhosathilayae theriyudhu........so heart touching da....

    Hats off......

    expecting for the next update......
     
  5. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Ivalo affectionate ah irukurava eppdi Vishwa pakkam saayraa.... engaiyo idikudhey....
     
  6. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    very nice... :)

    adutha update epo madam?
     
  7. pvnsamy

    pvnsamy New IL'ite

    Messages:
    3
    Likes Received:
    1
    Trophy Points:
    3
    Gender:
    Female
    Yams,
    waiting for next update. Seekkaram podunga

    Priya
     
  8. banujaga

    banujaga Gold IL'ite

    Messages:
    658
    Likes Received:
    356
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Yams,

    Eagerly waiting for the next update. Please ost it soon.

    Banu
     
  9. helennixy

    helennixy Silver IL'ite

    Messages:
    94
    Likes Received:
    60
    Trophy Points:
    58
    Gender:
    Female
    Yams..................

    Where are u dear.......?

    Waiting for the next update........so much of suspense...
     
  10. minjagan

    minjagan Gold IL'ite

    Messages:
    242
    Likes Received:
    392
    Trophy Points:
    123
    Gender:
    Female
    @Yams,

    Just now read till 13 episodes... very interesting...I cant find after episode 13...
    Can u pls help me if you have finished the story
     

Share This Page