1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இருதயம்-9:

Discussion in 'Stories in Regional Languages' started by yams, Apr 26, 2013.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    previous update

    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/196252-8.html

    "வேதா..வேதா...எழுந்திரு....காலேஜ் க்கு நேரம் ஆகுது....."

    "ப்ளீஸ் வானதி இன்னும் கொஞ்ச நேரம்....."

    "இதுக்கு மேல தூங்கினா கண்டிப்பா பர்ஸ்ட் ஹவர் லேட்டா தான் போகணும்...." என்று தோழியின் படுக்கை விரிப்பை களைத்த வண்ணம் எழுப்பினாள் வானதி.

    "அச்சோ...ஏன் டி இப்படி காலங்காத்தால உசுர எடுக்குற?" என்று தலையை சொறிந்தபடி பாதி கண்ணில் பார்த்தவளுக்கு கைகளை இடுப்பில் வைத்தவண்ணம் நின்ற தோழியின் உருவம் மங்கலாகவே தெரிந்தது.

    "என்னது காலங்காத்தாலயா ? மேடம் கொஞ்சம் மணிய பாக்குறீங்களா?" என்று அவளின் தலையை திருப்பி அருகே இருந்த கடிகாரத்தை காட்ட அவள் அதிர்ந்ததில் வானதியும் சேர்ந்தே அதிர்ச்சியடைந்தாள் அப்படி ஒரு கூச்சல்!

    அதன் பிறகு சொல்ல வேண்டுமா? எல்லாம் ரோபோ ஸ்டைலில் கடகடவென தயாராகி கல்லூரியில் இருவரும் காலெடுத்து வைக்க அவசரத்தில் எதிரே வந்தவனின் மீது மோதியது தான் பாக்கி.

    இடித்த வேகத்தில் அவனது இடது தோள் பக்கம் விண்ணென்ற வலி எழும்பினாலும் அதை பொருத்தவாறே எதிராளியை எதிர்கொண்டான் விஷ்வா.

    சுடிதாரின் மேல் தாவணி இல்லாமல் வலியில் முகத்தை சுளித்தவண்ணம் இருந்த அந்த பெண்ணின் முகம் ஏனோ முதல் பார்வையிலேயே அவன் மனதில் பதிந்து போனது.

    தாவணியை எடுத்து அவன் தருவதற்குள் அருகில் இருந்தவள் அதை பிடுங்காத குறையாய் பிடுங்கி கொண்டு தோழியை இழுத்து கொண்டு ஓடினாள் .

    சற்றே தூரத்தில் இருந்து வரும் குயில் ஓசை போல் அந்த பெண்ணின் 'சாரி' கேட்க அவன் திரும்பிய நொடி இருவருமே கண் பார்வையில் இருந்து காணாமல் போயிருந்தார்கள்.

    அவனுக்கே உரிய அந்த புன்னகையை முகத்தில் பூசியபடி அங்கிருந்து சென்றான்.

    இங்கே முதல் ஹெர் கிளாஸ் முடிந்து கேண்டீனில் அமர்ந்திருந்த தோழியை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் குழம்பி கொண்டிருந்தாள் வேதா..!

    "ஹே சாரி டி....இனி இப்படி நடக்காது..." என்று கெஞ்சி கொண்டிருந்த தோழிக்கு முகம் கொடுக்காமல் மறுபக்கம் முகத்தை திருப்பிய வானதிக்கு அப்போது தான் உள்ளே நுழைந்து கொண்டிருந்த அந்த இளைஞன் கண்ணில் பட்டான்.

    தோழியின் கெஞ்சல்களை ஒதுக்கி அவன் அருகில் சென்றவளுக்கு எப்படி ஆரம்பிப்பது அவனை எப்படி அழைப்பது என்றே தெரியவில்லை.

    கைகளை பிசைந்தபடி நின்றிருந்தவளை கவனித்தாலும்.. தெரியாததை போலவே அவன் நகர்ந்து செல்லவும் என்ன செய்வது என்றே தெரியாமல் திணறி போனாள் வானதி.

    "ஹலோ..எக்ஸ்க்யுஸ் மீ...."

    என்று கத்தி கொண்டிருந்தவளை பொருட்படுத்தாமல் புன்னகைத்தவண்ணம் சென்று வேதா அமர்ந்திருந்த டேபிளில் அவன் அமரவும் ஒன்றும் புரியாமல் விழித்தாள்.

    அவளது திகைத்த பார்வையை கண்ட இருவருக்கும் சிரிப்பு பொங்கியது.

    "ஹே ஏண்டி பேய் முழி முழிக்கிற இவன் என் பிரெண்டு தான்...வா வந்து உட்காரு" என்ற தோழியின் சொற்களில் அசடுவழிந்த வண்ணம் வந்தமர்ந்தவளிடன் தன் கரங்களை நீட்டினான் விஷ்வா.

    "என் பேரு விஷ்வா...நானும் சென்னை தான்" என்று தன்னையே அறிமுகபடுத்தி கொண்டவனுக்கு அறிமுகமாய் புன்னகை செய்தவள் மெல்ல அவன் கரம் பற்ற ஏனோ அவள் கரங்களில் அவளையும் அறியாமல் ஈரம் படர்ந்தது.

    "ஏன் உங்க கை இவ்ளோ சில்லுனு இருக்கு? உடம்புக்கு எதுவும் முடியலையா?" என்று அக்கறைக்கு தாவியது அவன் பார்வை.

    அதெல்லாம் ஒன்னும் இல்ல! என்ற அவளது கண்களுக்கு முன் நின்றது வெற்றியின் உருவம்

    அவனும் இப்படி தான் சொல்லாமலே தன்னுடைய கண் பார்வையிலிருந்தும், தொடுதல்களிலுமே மாற்றங்களை உணர்ந்து அக்கறையாய் நடந்து கொள்வான்.

    மெய் மறந்து தன்னையே பார்த்து கொண்டிருந்தவளை கண்டு விஷ்வாவிற்கு ஒன்றுமே விளங்கவில்லை

    "ஹலோ...உங்களை தான்....மிஸ்..." என்று அவள் முன் சொடுகிட அவள் நினைப்பெல்லாம் எதிரில் இருந்த வெற்றியின் உருவத்தில் தான் இருந்தது.

    எப்போதும் கோட் சூட்டில் பார்ப்பவன் இன்று கண்ணாடி போட்டு கொண்டு டீ ஷர்ட்டில் அழகாய் காட்சி அளித்தான்..!

    மெய் மறந்து இருந்தவளை பார்த்து புன்னகைத்தபடியே..

    "என்ன வேதா உன் பிரெண்டுக்கு உண்மையாவே உடம்புக்கு முடியலையா? இப்படி என்னை வெச்ச கண் எடுக்காம பார்த்துகிட்டு இருக்காங்க..." என்று கிண்டலாய் சொல்லியபடி டீ அருந்தி கொண்டிருந்தான்.

    "யார் கண்டா அம்மணி பார்த்ததும் உன் அழகு திருமுகத்துல விழுந்துட்டாங்களோ என்னமோ? நீ தான் அழகனாச்சே..."

    "நீ வேற ஏன் பா இன்னைக்கு காலங்காத்தாலேயே ஆரம்பிச்சுட்டியா?"

    "ஹே என்ன உண்மைய சொன்னா கூட நம்ப மாட்டேன்ற..? நான் சொன்னா தான் நம்பல இவளையே கேட்டு பாரு..."

    "வானதி..நீ சொல்லு இவன் பாக்க எப்படி இருக்கான்?" என்ற தோழியின் குரல் அவள் காதினில் விழவே இல்லை இன்னும் வெற்றி என்னும் உலகத்தில் இருந்தவளை அவனின் குரல் மட்டும் தான் கலைத்தது.

    "சொல்லு டா...மாமா இந்த டிரஸ் ல பாக்க எப்படி இருக்கேன்?" என்ற அவன் வார்த்தைகளும் அவன் குரலும் உள்ளே ஊடுருவ ...தன்னையும் மறந்து...

    "அழகான ரோஜா பூவுக்கு கண்ணாடி போட்ட மாதிரி இருக்கீங்க..." என்ற வார்த்தைகளை மொழிந்தாள்.

    இதை சற்றும் எதிர்பாராத வேதா திகைத்தாள் என்றால் விஷ்வா குடித்துகொண்டிருந்த டீ யால் வாயை சுட்டே கொண்டான்.
     
    1 person likes this.
  2. helennixy

    helennixy Silver IL'ite

    Messages:
    94
    Likes Received:
    60
    Trophy Points:
    58
    Gender:
    Female
    hi yams,
    welcome back...........y long time no c.?thedikitae irrundhaen pa

    Thanks for the update....as usual superb.........

    whn is the next update?..........
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    Thanks helen will give updates regularly daily...keep reading dear
     
  4. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi yams..
    nice update..

    vetri nu ninachu vanathi vishwa ta rose ku kannadhi potta madhiri irukkenganu sollita..
     
    1 person likes this.
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    Thanks suganya
    Happy to see u back :)
     
  6. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    amma thaaye... nee thaana... yams thaana...

    enga ma pona ithana naalaa... :rant

    kathaiya marupadiyum muthala irunthu padicha than theriyuthu...

    nalla kondu pora... :) vettri ena aanan...
     

Share This Page