1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

என் மனம் அறிவாயோ?-9

Discussion in 'Stories in Regional Languages' started by devikamurugan, Jun 19, 2012.

  1. devikamurugan

    devikamurugan Silver IL'ite

    Messages:
    25
    Likes Received:
    61
    Trophy Points:
    58
    Gender:
    Female
    அந்த விஷயத்தை கேள்வி பட்டதிலிருந்து தேவி எப்படி அதிலிருந்து தப்பிப்பது என்றே யோசித்துக் கொண்டிருந்தாள்.

    ஆனால் அவளுக்கு தெரியாது காலம் கடந்துவிட்டதென்று.

    இங்கு தேவி யோசித்து கொண்டிருக்க ராம் அதை செயலாக்க தொடங்கினான்.

    திங்கள் காலையில் மல்லிகா போன் செய்தார்.

    ஹலோ அம்மா எப்படி இருக்கீங்க?

    நான் நல்லாருகேன் நீ எப்படிமா இருக்க?

    நல்லாருக்கேன்மா.

    என்னடி ராம்க்கு டிரான்ஸ்பர் ஆகியிருக்காமே?

    அதுக்குள்ள ஆயிடுச்ச? என்று மனதில் நினைத்தவாறு ஆமாம்மா என்றாள்.

    மல்லிகா வேறேதாவது கேட்பதருக்குள் அம்மா வித்யா போன் பண்ணாளா?
    என்று பேச்சை மாற்றினாள்.

    மல்லிகாவும் பேச்சு சுவாரயஸ்யத்தில் வேறு எதுவும் கேட்கவில்லை.

    இரவு வீட்டுக்கு வந்த ராம் சாப்பிடும்போது அம்மா,

    நான் வீடு பார்த்துட்டேன். ஆபீஸ் போகறதுக்கு அங்கிருந்து ஒரு ஒன்னவர் ஆகும்.

    என்னடா பக்கத்தில எதுவும் வீடு கிடைக்கலையா?

    நீ போய்ட்டு வரவரைக்கும் தேவி தனியா இருப்பாளே?

    அவ என்ன சின்ன பப்பாவா?தனியா இருந்தா யாரும் கடத்திட்டு போய்டமாட்டாங்க.

    தேவியும் ராமை முறைத்துவிட்டு அத்தை, நான் ஒன்னும் தனியா வீட்ல சும்மா உட்காரமாட்டேன்.

    நான் ஆந்திராவிலிருந்து வரும்போதே டிரான்ஸ்பர் வாங்கிட்டு தான் வந்தேன்.

    நானும் வேளைக்கு போய்டுவேன் என்று ஓரக்கண்ணால் ராமை பார்த்தாள்.

    ராமோ எதுவும் சொல்லாமல் கைகழுவிவிட்டு எழுந்து சென்றான்.

    ச்சே இங்க எல்லாரும் இருக்குற தைரியத்துல ராம்கிட்ட ரொம்ப வம்பு பண்ணிட்டேனே.

    இரண்டு நாளுக்கு முன்னாடிதானே டிரான்ஸ்பர்னு அத்தைட்ட பேசிகிட்டு இருந்தான்.அதுக்குள்ள எப்படி வீடு பார்த்திருப்பான்.

    ஐயோ கடவுளே எப்படி இனிமே இவன்கூட எப்படி தனியா இருக்கபோரேன் என்று மூளையை கசக்கி கொண்டிருந்தாள்.

    மறுநாள் காலை தன் ஆபிஸ்க்கு போன் செய்து தன்னுடைய டிரான்ஸ்பரை உறுதி செய்துகொண்டாள்.

    புதன் கிழமை நல்ல நேரம் பார்த்து புது வீட்டில் தேவி பால் காய்ச்சினாள்.

    தேவியின் வீட்டிலிருந்து அவளுடைய அம்மாவும், அப்பாவும் வந்திருந்தனர்.

    ராமின் வீட்டிலிருந்து லீலாவும்,வேலுவும் வந்திருந்தனர்.
    அனைவரும் மதியம் சாப்பாட்டை முடித்துவிட்டு பேசிக்கொண்டிருந்தனர்.

    மல்லிகா கிளம்பு நேரமாச்சு என்று கணேசன் சொல்ல என்னப்பா அதுக்குள்ள கிளம்புரிங்க?

    ஒரு வாரம் இருந்திட்டு போங்கப்பா.

    இல்ல தேவி வேளைக்கு போகனும்.எல்லா வேளையும் பென்டிங்ல இருக்குமா என்றார் கணேசன்.

    சரி அம்மா நீங்கலாவது இருங்கலேன்மா.

    நா இங்க இருந்துட்டா உங்க அப்பாக்கு யாரு மருந்து மாத்திரை கொடுக்கிறது? என்று மல்லிகாவும் மறுத்துவிட்டார்.

    அருகில் இருந்த ராம் அனைத்தையும் பார்த்து சிரித்துக் கொண்டிருக்க தேவி அவனை முறைத்துவிட்டு தன் அத்தையிடம் சென்றாள்.

    வேலுவும்,லீலாவையும் இருக்க சொல்லி பார்த்தாள் தேவி.

    அவர்களும் வேளை இருப்பதாய் மறுத்துவிட வேறு வழியில்லாமல் அனைவரையும் வழி அனுப்பிவைத்தாள்.

    இரவு இருவரும் ஒன்றும் பேசாமல் படுக்க சென்றனர்.

    ராம் கட்டிலில் படுத்திருப்பதை பார்த்துவிட்டு தேவி கீழே படுத்துக்கொண்டாள்.

    மறுநாள் காலை வழக்கம்போல விடிந்தது.
    சமையலை முடித்துவிட்டு ராமிற்காக காத்துக்கொண்டிருந்தாள்.

    உள்ளே போன் அடிக்க அதை எடுத்து பேசிக்கொண்டிருந்தாள்.

    ராமின் பைக் சத்தம் கேட்டு வெளியே வந்தவள் அவன் போவதை பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள்.

    ஒரு வார்த்தை பொய்ட்டுவரேன் சொன்னா குறைஞ்சா போய்டுவான் என்று அவனை அர்ச்சனை செய்தாள்.

    மாலை வேளைகலை முடித்துவிட்டு வீட்டில் உட்கார்ந்து கொண்டிருந்தவள் கோவிலுக்கு செல்லலாம் என்று பக்கத்தில் உள்ள கோவிலுக்கு சென்றாள்.

    அங்கே தன் கல்லூரி தோழி சக்தியை பார்த்தள்.
     
    4 people like this.
    Loading...

  2. Ramkumar1989

    Ramkumar1989 Senior IL'ite

    Messages:
    50
    Likes Received:
    17
    Trophy Points:
    23
    Gender:
    Male
    கடைசி இரண்டு பதிவையும் இப்போதான் படித்தேன் சூப்பர் தோழி பிளாஸ்பேக் எப்போது
     
  3. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi ma...
    nice update...
    devi oda vambu ku bayandhu ram transfer vangi thani veedu ellam parthrukkan...
    ini rendu perum enna panranganu parka waiting ma...
    very interesting...
     
  4. veenashankar15

    veenashankar15 Junior IL'ite

    Messages:
    45
    Likes Received:
    7
    Trophy Points:
    13
    Gender:
    Female
  5. nnarmadha

    nnarmadha Platinum IL'ite

    Messages:
    2,476
    Likes Received:
    1,868
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Ore suspense ah irukku .. Good going..
     
  6. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    nalla kondu poreenga... y ram s silent...???
     
  7. IndhuRamesh

    IndhuRamesh Platinum IL'ite

    Messages:
    1,624
    Likes Received:
    767
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Hi Devika.. flashback varuma varatha.. enna than nadanthuchu avangalukulla..
     

Share This Page