1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

எங்கிருக்கிறாயடா நீ?...

Discussion in 'Regional Poetry' started by pavithram, May 8, 2012.

  1. pavithram

    pavithram Bronze IL'ite

    Messages:
    42
    Likes Received:
    30
    Trophy Points:
    38
    Gender:
    Female
    என் துணைவனாக
    வரப்போகும்
    முகமறியா நண்பனே...

    இது உனக்காக நான்
    எழுதும் கவிதை அல்ல
    உனக்கான என் கனவுகள்....

    பூப்போல் சிதறும் மழையில்
    உன் கைகோர்த்து
    என் தலை சாய்த்து
    நடக்க ஆசை..

    சமையலறையில்
    நீ செய்யும் குறும்புகளை
    உள்ளே ரசித்து வெளியே
    பொய்க்கோபம் கொள்ள ஆசை...

    சின்ன சின்ன ஊடல்களுக்கு
    பின் வரும் கூடல்களுக்கு
    கொள்ளை ஆசை...

    தாமதமாய் வரும்
    உனக்காக காத்திருந்து
    ஊடல் கொள்ள ஆசை....

    யாருமில்லா தனிமையில்
    உன் கையணைப்பில்
    இயற்கையின் அழகை
    ரசிக்க ஆசை....

    பௌர்ணமி இரவில்
    உன் தோள்சாய்ந்து
    கால்நனைய கடற்கரையில்
    நடைபயில ஆசை...

    மொட்டைமாடியில்
    உன் மடிசாய்ந்து
    கதை பேச ஆசை...

    நாமிருவர் மட்டும்
    செல்லும் தொலைதூர
    பயணங்கள் ஆசை...

    எல்லோரும் உடனிருக்க
    நீ செய்யும் கண்சிமிட்டல்களும்
    சின்ன சின்ன
    சில்மிஷங்களும் ஆசை...

    பொய்யென அறிந்தும்
    நீ சொல்லும் பொய்களை
    ரசிக்க ஆசை...

    நீ உண்ணும் போது
    ஊட்டும் ஓர் வாய்
    சோற்றிக்கு ஆசை...

    தாயாய் நானான
    போதும் நீ
    எந்தாய் ஆகிட ஆசை....

    எத்தனையோ பேர்
    எத்தனை விதமாக
    என் பெயரை உச்சரித்த போதும்
    உன் வாய்மொழியாக
    அது ஒலித்து கேட்க ஆசை...

    தினம் காலையில்
    அவசரகதியில்
    கிளம்பும் போதும்
    நீ தரும் நெற்றி
    முத்தத்திற்கு ஆசை...

    நானும் நீயும்
    உன் தாய் மடிசாய
    போடும் செல்லச்
    சண்டைகள் ஆசை...

    நாட்கள் சில பிரிந்து
    மீண்டும் சேரும் போது
    கிட்டும் மௌனமான
    தனிமைகள் ஆசை...

    அத்தனிமைகளில்
    உன் விழியோடு விழி
    கலக்க ஆசை...

    இப்படி உனக்கான
    கனவுகளின் பட்டியல்
    நாளுக்கு நாள் நீண்டு
    கொண்டே போக
    வாழ்நாள் முழுமைக்கும்
    நீ வேண்டும் என்னோடு
    என் துணையாக....

    கனவுகளுடன்
    காத்திருக்கிறேன்
    நண்பனே...

    உனையறியும் நாளுக்காக ....
     
    3 people like this.
    Loading...

  2. papuu

    papuu New IL'ite

    Messages:
    22
    Likes Received:
    1
    Trophy Points:
    3
    Gender:
    Female
    Nice kavidhai... Hope he comes to you soon :) All the Best!!
     
  3. shambu

    shambu Silver IL'ite

    Messages:
    348
    Likes Received:
    93
    Trophy Points:
    68
    Gender:
    Female
    wow.. excellent Pavithram :thumbsup... good work :cheers..

    May GOD fulfill all your desires soon.....
     
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பவித்ரம் மிக இனிமையான கனவுகள் .

    விரைவில் நனவாக வாழ்த்துக்கள்
     
  5. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,880
    Trophy Points:
    470
    Gender:
    Female
    சின்ன சின்ன ஆசை, சிறகடிக்கும் ஆசை...
    பவி தோழி,...உங்கள் ஆசை நிறைவேற எங்களது வாழ்த்துக்கள்!!
     
  6. AnithAnand

    AnithAnand New IL'ite

    Messages:
    55
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Pavi,
    It's tooo good..... this has been dedicated to every girl who is waiting for their better half desparately..... :)
    well narration...
    all the best.... soon he will come.. :)

    Regards
    AA.
     
  7. MadhuSharmila

    MadhuSharmila IL Hall of Fame

    Messages:
    2,717
    Likes Received:
    2,529
    Trophy Points:
    310
    Gender:
    Female
    Hi Pavithra,

    Very nice.... Loved reading it.... Let dreams come true.. Best Wishes...

    Best Regards,
    Sharmila
     
  8. Viswamitra

    Viswamitra Finest Post Winner

    Messages:
    13,410
    Likes Received:
    24,174
    Trophy Points:
    538
    Gender:
    Male
    Very nice poem. My best wishes for a wonderful married life. Honestly, the married life is full of such wonderful moments as well as hard work of running a family. But after marriage sometimes, married women feel overwhelmed or burdened by daily chores failing to recognize most of those wonderful moments. While your heart relishes those wonderful moments, let the strain of hard work needed to run a family remain a pleasure as well.

    Viswa
     
  9. sadhu72

    sadhu72 Gold IL'ite

    Messages:
    1,721
    Likes Received:
    364
    Trophy Points:
    165
    Gender:
    Female
    அழகான கவிதை !
    ஆசைகள் நிறைவேற என் வாழ்த்துக்கள் !
     
    1 person likes this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Pavithram,

    கவிதையில் இருந்த ரொமான்ஸ் தூக்கல். ;-):thumbsup:thumbsup

    இந்த நிதர்சனத்தை பக்குவமாக புரிந்துக் கொள்ள வேண்டும் என்பது எனது தனிப்பட்ட எண்ணம்: வாழ்க்கை என்பது பெரும்பாலும் "PROSE", அதில் "POETRY" கண்டுப்பிடிப்பது அரிது. "POETRY" மட்டும் எதிர்ப்பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும். வாழ்க்கை "PROSE" என்று மனதை திடப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் வாழ்க்கையில் நிகழும் "HAIKU" கூட நம்மை சந்தோசத்தின் உச்சிக்கு அழைத்துச் செல்லும். ;-)

    உங்களது கனவுகள் அனைத்தும் நிறைவேற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். :)
     

Share This Page