1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வா வா கண்ணா வா

Discussion in 'Regional Poetry' started by periamma, Aug 21, 2011.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    காராம்பசு கழுத்து மணியே
    கண்டாயோ என் கண்ணனை
    துள்ளி ஓடும் கன்று குட்டியே
    என் குட்டி கண்ணனை கண்டாயோ

    ஏன் இந்த கண்ணாமூச்சி
    என் குல தோன்றலே
    என் வீட்டு உறியில் உள்ள
    தயிர் வெண்ணை வேண்டாமா

    முறுக்கு சீடை அதிரசமும்
    அவல் வெல்லம் பாயசமும்
    அள்ளி தின்ன ஓடி வா
    என் ஆசை கண்ணா

    பட்டு பீதாம்பரமும்
    மயில்பீலி கொண்டையும்
    கையில் புல்லாங்குழலும்
    காலில் தண்டை கொலுசும்
    வாய் நிறைந்த சிரிப்பும் கொண்டு

    சின்னஞ்சிறு கால் எடுத்து
    சீரான நடை நடந்து
    ஓடோடி வா கண்ணா
    என் ஒய்யார மாய கண்ணா



    அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்.
     
    Loading...

  2. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    மாய கண்ணன்
    உங்கள் கவியில்
    லயித்த கண்ணன்

    சுபெர்சொனிக் வேகத்தில் வந்து சேருவார்.......அருமையான கிருஷ்ணா ஜெயந்தி கவிதை.........வாழ்த்துக்கள் மா
     
  3. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பேரக் குழந்தைகளுடன் - கிருஷ்ண அவதாரங்களுடன்
    கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடத் தான் அங்கு சென்று விட்டீர்களே மா...

    கிராமீய மனம் கமழும் - பசியைத் தூண்டும் கவிதை நன்று.
     
  4. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    வகை வகையாய்,பட்சணம் செய்து,
    வாசல் முதல் பாதம் தடம் பதித்து,
    பாங்காக அவனுருவை அலங்கரித்து,
    பாசமுடன் நாம் அழைக்கையில்,
    வாராமல் போவானோ அந்த மாயவன்,
    மாயமாய் உங்கள் வீட்டில் அமர்ந்து விட்டன,
    நன்றாக தேடுங்கள் அம்மா,அவன்,
    திரையின் பின் நிற்பான்.
     
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி ராம்.அவர் வரவில்லை என்றால் விடுவதாக இல்லை.
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி நட்ஸ்.பேர குழந்தைகள் மாதவன் ,ராகவனுடன் இந்த வருடம் கிருஷ்ண ஜெயந்தியை சந்தோஷமாக கொண்டாடினேன்.இன்னொரு பேரன் கிருஷ்நந்தனுடன் நேரில் கொண்டாடாமல் தொலை பேசி மூலம் பேசி மகிழ்ந்தேன்.
     
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி தீபா.உங்கள் வரவை ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருந்தேன்.கிருஷ்ணாவதாரம் பற்றி எழுதிய நீங்கள் சரியான நேரத்துக்கு வந்து விட்டீர்கள்.சந்தோஷமாக இருந்தது.
     
  8. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    nice to read ma. you have beautifully described Kannan. hope you enjoy Krishna jayanthi with your grand sons.
     
  9. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி உஷா.இந்த வருடம் மிக சிறப்பாக கொண்டாடினேன்.நீங்க எப்படி இருக்கீங்க.
     
  10. mmalik

    mmalik New IL'ite

    Messages:
    22
    Likes Received:
    2
    Trophy Points:
    3
    Gender:
    Female
    Ahahaha! arumaiyana descriptions.
     
    Last edited: Apr 17, 2012

Share This Page