1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

வெண்பனி மகள்-14 :

Discussion in 'Stories in Regional Languages' started by yams, Sep 23, 2011.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    கடிதத்தை கையில் எடுத்தான் என்று தான் பெயர். ஆனால் அதை படிக்க வேண்டாம் சஞ்சய் என்று புத்தி தலைபாடாக அடித்து கொண்டது.

    ஆனால் மனமோ...
    "மடையா இதை எழுதுபவள் உன்னை நேசிப்பவள். இதில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தும் அவளின் காதலின் வெளிபாடு. அது உனக்காகவே எழுதபடுவது அதை ஏற்காவிட்டாலும் படிக்கவாவது செய்யலாம் இல்லையா?"
    என்று மனம் உந்தி தள்ள மெல்ல நடுங்கும் கரங்களுடன் அதை பிரித்தான்.

    அதில் இருந்ததென்னவோ ஓர் கவிதை

    "என் முகத்தை மறைத்தேன்.
    கண்டு பிடிப்பீர்கள் என்ற நம்பிக்கையில்!
    என் காதலை சொன்னேன்
    அதனை ஏற்பீர்கள் என்ற நம்பிக்கையில்!
    என்னையே நான் ஏமாற்றி கொண்டேன்
    நீங்கள் தான் என்னவர் என்ற நம்பிக்கையில்!
    காதலோடு சேர்ந்து
    இன்று என் நம்பிக்கைக்கும் இறந்த நாள்
    இன்று காயப்பட்டு நிற்கிறேன் நான்!
    நாளை மடியபோகும் என் காதல்!
    இருந்தும் வாழட்டும் இனி வாழ்வில்
    உங்கள் நம்பிக்கையாவது!"


    கடிதத்தை தாங்கியவனின் கண்கள் இரண்டும் கலங்கி போயின. அதை நெஞ்சோடு தாங்கியவனின் இதயத்தில் ஏதோ பாரம் ஏறி அமர்ந்து கொண்டது.

    மனசாட்சியோ
    "இப்படி ஒரு தூய்மையான காதலை நிராகரித்தால் உனக்கு எந்த பிறவியிலுமே மன்னிப்பு கிடையாது. எந்த அளவு காயபட்டிருந்தால் அவளின் மனவலியை இந்த கவிவரிகள் பிரதிபளிக்கும்?" என்று எண்ணியவனுக்கு இப்போதும் கூட தெளிவாய் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

    இன்னொரு மனமோ
    "சஞ்சய்..நீ தெரிந்தோ தெரியாமலோ வாக்களித்து விட்டாய் உன் அம்மாவால் வாழ்க்கை பாழான ஒரு அபலை பெண்ணிற்கு வாழ்வளிப்பதை பற்றி மட்டும் யோசி. இந்த கடிதங்களை கண்டதால் மட்டும் தானே இப்படி ஒருத்தி இருப்பது தெரிந்தது? பார்க்காமல் இருந்திருந்தால்? அப்படி நினைத்து கொள். நீ எந்த கடிதமும் காணவில்லை. உன்னை யாரும் காதலிக்கவும் இல்லை.இல்லை.
    இல்லை இல்லை என்று சொல்லி மனதை பொய்யாக ஏமாற்ற முடியுமா?

    அது வழக்கம் போல் குழம்பிய குட்டையாய் ஆனது.
    தூக்கம் வெகு தூரம் இருந்து சண்டித்தனம் செய்தது.
    வெகு நேரம் கழித்து துயிலில் ஆழ்ந்தவனுக்கு ஓர் கனவு

    ஓர் வெள்ளை தாவணி தேவதை இவனை அழைக்கிறாள்....தூர இருந்து அழைப்பதால் இவனால் முகத்தை பார்க்க முடியவில்லை. முயன்று அவள் பக்கத்தில் ஓடி செல்ல அவள் அந்த பனியில் எங்கோ ஓடி மறைகிறாள். பனி விலக அவள் நடந்த பாதை எல்லாம் ரத்தத்தின் தடங்கள். அதை தொடர்ந்து செல்லும் இவன். இறுதியில் அது முடிவடைவது ஒரு கல்லறையில். அதில் "உங்களுக்கான என் காதலுடன் நானும் இன்று சாமதியாய்!" என்ற வசனம்.

    அடித்து பிடித்து எழுந்தவனுக்கு முகமெல்லாம் வேர்த்திருந்தது. தண்ணீர் இருக்கிறதா? என்று எழுந்தவன் அன்று அதை எடுத்து வர மறந்து விட்டதை அப்போது தான் நினைவில் கொண்டான். சரி இனி கீழே சென்று தான் அதை எடுக்க வேண்டும் என்று போர்வையை விளக்கியவனின் கண்ணெதிரே ஓர் தண்ணீர் குவளை அதனடியில் கடிதம். ஓடி சென்று எடுத்தான். எதுவும் தவறான முடிவுக்கு வந்துவிட்டாளோ? அதனால் தான் இந்த கனவோ? என்ற பயம் தான்.

    "என்னை தான் மறந்தீர்கள்...தண்ணீரையுமா?" என்றிருந்தது.

    "சே! யார் இந்த ராட்சஷி? இப்படி அன்பால் கொள்பவள்? இப்படியே போனால் என்னால் கல்யாணத்திற்கு பிறகு கூட நிம்மதியாய் சங்கீதாவுடன் வாழ முடியாது போலிருக்கிறதே?! சந்தியாவை தான் இருக்கும்1 அன்று அவள் தானே காபியுடன் கடிதம் கொண்டு வந்தது. ஒரு வேலை வேறு ஒருவராய் இருந்தால்?
    மண்டை குழம்பியது. ஆனால் தாமதிக்காமல் இது பற்றி அவளிடம் பேச வேண்டும். என்று எண்ணியவனாய் படுத்து கொண்டான்.
    ஆனால் அதன் பிறகு அவனால் அது முடியாமல் போனது.
    கல்யாண ஏற்பாடுகள் எல்லாம் வேகமாய் நடக்க ஊரில் இருந்து அவனது தந்தையும் அழைத்துவர பட்டு உரிய மரியாதைகள் செய்யபட்டார்.

    மகனின் முகத்தை பார்த்ததுமே கண்டு பிடித்துவிட்டார்

    "என்ன டா இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையா?" என்ற அவரது அதிரடி கேள்வியில் திகைத்து போனான்.

    "சே! சே! அதெல்லாம் இல்ல பா சொல்ல போனா நான் தான் இந்த கல்யாணத்தை செய்ய சொல்லி கேட்டதே." என்று பொய்யாய் புன்னகைத்தவனை அவர் நம்பவில்லை.

    "என்னை ஏமாத்து டா உன்னையே ஏமாத்திக்காத!" என்றதற்கு மேல் அவர் எதையும் சொல்லவில்லை.

    கல்யாண ஏற்பாடுகள் தொடங்கிய பிறகு.
    மாமன் மகள்களை பார்ப்பது வெகு அபூர்வமானது!

    அப்படியே சந்தித்தாலும் பெரியவர்கள் முன்னிலையில் தான் பார்க்க முடிந்தது. தனியாய் இதில் எங்கிருந்து பேசுவது? அதுவும் குறிப்பாய் சந்தியாவை பார்க்க வேண்டும் என்று மனம் நினைத்தாலும் கண்கள் தவிர்த்தன. எங்கே அவள் கண்களில் இருக்கும் வேதனையை கண்டால் தான் மனம் இறங்கி விடுவோமோ? என்று. ஒரு வேலை முதலில் மாமா சொன்னதை போல் அவளையே திருமணம் செய்திருக்கலாமோ? என்று அப்போதப்போது ஆசை வந்தது.

    மீண்டும் அப்படி கேட்டு போய் நிற்கவும் பிடிக்கவில்லை. இவனுக்கு சரியான மனநிலை கூட இல்லை என்று கேவலமாய் நினைப்பார்கள். அது மட்டும் இன்றி கல்யாணம் என்று ஒரு பெண்ணிற்கு ஆசை காட்டி மோசம் செய்யவும் அவனுக்கு விருப்பம் இல்லை.

    எப்படியோ கடவுள் பாடு...நடப்பது நடக்கட்டும்! என்று விட்டுவிட்டான்.

    திருமணத்திற்கு முந்தின நாள் நிச்சயம் ஏற்பாடாக அந்த வீடே கலை கட்டியது.

    நிமிடத்திற்கொருமுறை அலங்காரத்தோடு சங்கீதா ஜொலித்தாள். மற்ற பெண்களும் கூட அப்படி தான். வானத்தில் இருந்து வந்த தேவதைகள் போல் தான் வலம் வந்தார்கள்.

    முதலில் பெரியவர்கள் எல்லாம் தட்டு மாற்றவும் சங்கீதாவின் அருகில் அவளை அலங்கரித்தை சரி செய்தபடி சிரித்து கொண்டிருந்த சந்தியாவை பார்க்க அவன் மனதை என்னவோ பிசைந்தது.

    முகம் மாறிய மகனை என்னவென்று கேட்க ஒன்னும் இல்லை பா. என்று மழுப்பினான். மீண்டும் மணமக்கள் உடை மாற்ற தங்கள் அறைக்கு செல்ல தன்னை தொடர்ந்த வேலையாட்களை வேண்டாம் என்று மறுத்தவன் தானே தயாராகி வருவதாய் கூறி உள்ளே சென்றான்.

    உள்ளே சென்று தன் வேட்டி சட்டையை கழட்டியவன் கட்டில் மேல் இருந்த குர்த்தாவை கையில் எடுத்தான். கண்ணாடி முன் சென்று நிற்க பின்னிருந்து ஏதோ வளை கரம் அவனை அணைப்பதாய் ஓர் பிரம்மை.
    ஒரு நிமிடம் தான்! கண்கள் மூடி தலையை உலுக்கி கொண்டு உடை மாற்றுவதில் இறங்கினான்.

    என்ன நியாபகத்தில் உடை மாற்றினானோ? மேலே போடும் குர்த்தாவை திருப்பி போட்டு விட்டான். கண்ணாடியில் பார்த்த பிறகு தான் அது உரைக்க தன்னையும் அறியாமல் தலையில் அடித்து கொண்டு சிரித்தான்

    எல்லாம் "தனியா சிரிகிறவங்களை எங்க ஊர்ல லூசுன்னு சொல்லுவாங்க!" என்று தன் பின்னே ஓர் குரல் கேட்கும் வரை தான்.
    அப்படியே மின்சாரம் தாக்கியதை போல் உடல் விறைத்து நின்று விட்டான்.
     
    4 people like this.
    Loading...

  2. dhivya312

    dhivya312 Senior IL'ite

    Messages:
    270
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    hi akka,
    now only read the story... kathai superb...:thumbsup kalakkiteenga ponga....:clap bayangara humorous ah irunthuthu...:rotfl atheh alavu mandaya pichukara maariyum irunthuthu....:spin
    My guess for the heroine is Sangavi.... :) because avalukku thaan oru kalyaana hall la ivan room ku vara alavukku dhairiyam irukku... and unga kathai la eppothumeh heroines romba possessive ah irupaanga.. sangaviyum romba possessive ah irukka sanjay mela... :idea
    Sathya romba chinna ponna irukka... avalukku sanjay ah pidikkavum ila... so Sathya ruled out... Sangeetha vum romba bayanthaanguli ya irukka... so ava letters ezhutha chance illa... avalum ruled out.... Sandhya romba amaithiyaana ponnu nu sonneenga... So ava intha alavukku dhairiyama vanthu pesa maataa... especially oru stranger ah thaniya paakumbothu...
    Saroja mela romba doubt irukku... ava heroine ah irukkumo nu... coz avalukum dhairiyam jaasthi... and nalla vera pazhaguva Sanjay oda... Bt avalukku intha maari kaathal possessiveness ethuvum irukkara maari theriyala.... :notthatway:
    Next episode seekiram podunga ka... waiting to know the heroine...:coffee :)
     
  3. jsuganya

    jsuganya Bronze IL'ite

    Messages:
    127
    Likes Received:
    22
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Yams suspense tanga mudiyala. seikram heroine yaru nu reveal panuga..
     
  4. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    yams just now read 13th and this episode....
    kalakkittenga!!!!!!!!!!!
    yaaru andha latter ezhudharanga nu therinjikka romba eager ah irukku!!!!!!!!
    indha kalyanam nadakkuma???????
    waiting for next
     
  5. sipanneer

    sipanneer Bronze IL'ite

    Messages:
    447
    Likes Received:
    43
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Hi.Yamini..........

    ithenna thideer thiruppam.....................kandippa antha letter sandhiyaa...illainu thonuthu...
    pinna sandhiya sirichikitte irukaale.........athuvum ava vittu kodukuren nu sollitaale....pinna yaaru.???
    athey dialogue....//"தனியா சிரிகிறவங்களை எங்க ஊர்ல லூசுன்னு சொல்லுவாங்க!"//
    intha kural..letter ellathukkum link irukka..................
    saroja....or sangavi............
    satya attathil illa...
    pesaama vijay tv...ku oru nigalchi nadathi pudunga...paa......shhh...kanna kattuthu....

    sanjaiyin nilai romba parithaabamaa irukku.....konjam kashtam thaan...
    antha kural yaar??????????????
     
  6. devirams

    devirams Silver IL'ite

    Messages:
    528
    Likes Received:
    90
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Hi Yams
    super da.....Dhool :2thumbsup:
    marriageil enn twist vaikkalam endru wait pannikittu irrukka....:drowning
    sangavi mela dhaan doubta irrukku....:hide:
    sanjayiku heart beat rise agudho illaiyo ennakku heart beat bayainkirama rise agudhu:shaking::bang....oluinga innaikkae next update koduikara illana pichu pichu:bangcomp::bangcomp:
     
  7. meenakshijanani

    meenakshijanani Silver IL'ite

    Messages:
    326
    Likes Received:
    90
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Hai Yams,
    Kalyana erpaadu ellaam vegamaa panniteenga.
    Mappilaikku thaan kalyana kalaiye varalai.
    Pathathukku kathalai noy vera thaakiduchu
    Oru velai manapen mariyavudan thaan antha kalai vanthu
    kathal noyai kunamaakidumo?
    Kadaisi nimishathil manamagal changing confirm,
    aanaal athu yaarunu neenga
    ezhuthaiyil padichu therinjukiren.
     
  8. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Acho yamini ena idhu ippdi kulapi vidureenga sanju ah romba pavam........ letter ku owner nichaiyama sandhiya ila nu thonudhu.... sangavi ya irukalam...... suspense thaanga mudilaiye :bowdown

    Akhilaa Saraswathy A
     
  9. umasankareswari

    umasankareswari Bronze IL'ite

    Messages:
    272
    Likes Received:
    19
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Hi Yams!!!
    Story is going on very well... next episode la Letter eluthira ponnu yarum nu therinchiduma? waiting for tat dear

    Regards,
    S.Uma
     
  10. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    Hi da so sweet of your guess with reason. thanks dear
     

Share This Page