1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

நாட்களின்/நம் - பிறப்பின் சிறப்பு அறிவிப&#3021

Discussion in 'Regional Poetry' started by natpudan, Dec 29, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    நாட்களின்/நம் - பிறப்பின் சிறப்பு அறிவிப்பு

    அறிவிப்பு,
    நாட்களின் சிறப்பு,
    ஆட்களின் கணிப்பு,
    இது கருத்துத் திணிப்பு,
    அதில் பலருக்கு பிணைப்பு,
    என்செய்வதென அறியாத் துடிப்பு,
    வருவதோ நம் மனதினில் வலிப்பு,
    ஆகையினால் ஆகுது நாளோ கருப்பு,
    வாழ்கையின் சுவை ஆகிடும் துவர்ப்பு,
    அப்படி ஆக்கின் கிடையாது - மன்னிப்பு,
    நாள் ஒன்று நமக்கு கிடைத்தது இணைப்பு,
    நன்று உழைத்திடத் தானே நமக்கு - உறுப்பு,
    அது மட்டும் தானே என்றும் நம் கை இருப்பு,
    அதை நன்கு பயனுற செய்வதே நம் உயிர்ப்பு,
    அதுவே நம் கையில் கிடைத்த சீட்டுத் துருப்பு,
    என்றென்றும் மனதினில் சுவைத்திடுவோம் இனிப்பு,
    உவகை கொண்டு உணர்ந்திட்டால் பெறுவோம் களிப்பு,
    அறிந்திடுவோம் மனிதனாய்ப் பிறந்த ரகசியத்தின் பிறப்பு,
    சொல்லிடும் எனை நினைக்காதீர் இவனென்ன பெரிய பருப்பு,
    இதை நினைத்து வரட்டும் அகமதைக் கொண்ட முகம்தனில் சிரிப்பு.
     
    Last edited: Dec 29, 2010
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    Re: நாட்களின் / நம் - பிறப்பின் சிறப்பு அறிவிப

    எப்படி நட்ஸ்...ஸ்டெப் ஸ்டெப்பா கவிதை எழுதிருக்கீங்க? பூ பூவா பூத்துருச்சு நட்ஸ்..உங்கள் நந்தவன கவிதை அழகு...ஒவ்வொரு வரியுமே ஒரு கவிதை மாதிரி தான் இருக்கு...
     
    Last edited: Dec 29, 2010
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Re: நாட்களின்/நம் - பிறப்பின் சிறப்பு அறிவிப&#

    அப்பு எம்பூட்டு நாளாச்சு
    இப்பிடி ஒரு கவித படிச்சு
    "பு" "பு" ன்னு "பு" வ புடிச்சு
    பொடச்சு சலிச்சு பொடம் போட்டு கொடுத்தாச்சு
    பூ பூவா ஒரு புது சேதி !!!!!!:)

    கொடையா கெடைச்சிருக்கும் நாள வச்சு
    கெட்டது எல்லாம் போக வச்சு
    சொயமா நீ உழைச்சு இருந்தா
    சொந்தம் எல்லாம் உறவாச்சு
    பயந்த காலம் எல்லாம் பறந்தாச்சு..பழசாச்சு
    வந்த பல வெற்றி எல்லாம் உனதாச்சு.பலவாச்சு
    அப்புறம் என்ன
    உலகமே உன் முதலாச்சு
    வரலாற்றிலும் உன்பெயர் வரலாச்சு

    அப்பூ!!!!!!!!!!
    நாட்களின் பிறப்பின் அறிவிப்பு
    பருப்புன்னு நா சொல்ல மாட்டேன்
    கருத்துத் திணிப்பு சிறப்புன்னு தான் சொல்வேன்:):):):):thumbsup


    நாளைக்கு நான் வருவேன்
    என்னோட தமிழ் வரி ஆச்சு.
    எல்லோரும் படிக்க போறீங்க
    மூக்கில் விரல் வச்சு :crazy
     
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Re: நாட்களின்/நம் - பிறப்பின் சிறப்பு அறிவிப&#

    பிறப்பின் சிறப்பை அறிவித்த நட்ஸ்க்கு நன்றி.
     
  5. gsaikripa

    gsaikripa Gold IL'ite

    Messages:
    4,933
    Likes Received:
    177
    Trophy Points:
    170
    Gender:
    Female
    Re: நாட்களின்/நம் - பிறப்பின் சிறப்பு அறிவிப&#


    arumaiyana kavithai paditha natsirkku nandrigal pala.
     
  6. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Re: நாட்களின்/நம் - பிறப்பின் சிறப்பு அறிவிப&#

    பூ, பூவா வரிகளில் பூத்து
    உளம் காயாகாது, கனிய
    நீங்கள் சொன்னது சிறப்பு
    அதிலே எமக்கு உவப்பு

    தெய்வமே... நீங்க எங்கயோ... போயிட்டீங்க... :bowdown:bowdown
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    Re: நாட்களின்/நம் - பிறப்பின் சிறப்பு அறிவிப&#

    அப்பு என்ன அப்பு?? எப்படி இப்படி t .r ஸ்டைல் வருதோ?? ஆனா அவ்வளவு மோசம் இல்ல!
    உட்காந்து யோசிபீங்களோ?? அடுத்து என்ன பூ போடறதுன்னு?? பொண்ணுங்க கூட இவ்வளவு பூ யோசிபாங்கலன்னு தெரியல !
    எப்படியும் இத்தன பூ வருதுனா உண்மையா நட்சுக்கு ஒரு பெரிய பூ மாலையா போடணும் பாராட்ட!
    பாராட்ட இங்க பல பேர் இருக்காங்க ஆனா உங்கள வார நானும் தேவாவும் மட்டும் தானே அதான் ஆரம்பத்துல கொஞ்சம் வாரினோம்!
    இருந்தும் முடியவில்லை பாராட்டாமல் இருக்க!
    அருமை அருமை அருமை!
     
  8. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    Re: நாட்களின்/நம் - பிறப்பின் சிறப்பு அறிவிப&#

    படித்ததும்,கடை இரண்டு வரிகளை படித்ததும் வந்ததே அகத்திலும்,முகத்திலும் சிரிப்பு!
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Re: நாட்களின்/நம் - பிறப்பின் சிறப்பு அறிவிப&#

    வரும் ஒவ்வொரு நாளும்
    தினம் பூக்கும் பூவைப் போலே..
    வாடினா.. திரும்ப வருமா?
    தெரிஞ்சாலும் பூக்காமலா
    இருக்குது பூவு??? இதிலே
    பல காலம் இருக்கப்போற
    மனசுக்கென்ன நோவு???

    நோவுக்கு நோ சொல்லி
    பூவுக்கு வா சொல்வோம்
    வாழ்வை வெல்வோம்

    அப்டீன்னு ரொம்ப சிறப்பா சொன்னீங்க :clap:clap

    (இதை படிச்சிட்டு நான் இப்படி எல்லாமா சொன்னேன்னு வெள்ளந்தியா கேக்கக் கூடாது... சரியா??? :rotfl)
     

Share This Page