1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இனிக்கும் முதுமை

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Dec 29, 2010.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    இளமைச் சாயம் மெல்லக் கரைய,
    முதுமை நரையில், தேய்வில் தெரிய,
    அனுபவத்தால் வாழ்க்கை நிறைய,
    கனிவும் தானே நமை வந்தடைய,

    தலை தூக்கிப் பார்க்கும் வெண்மேகமென,
    கண்டோர் எல்லாம் அண்ணாந்து இருக்க,
    தலை தாழ்ந்திருக்கும் கனத்த கதிரென,
    முதிர்ச்சியை அடைந்தே நாமும் இருக்க,

    பேரன், பேத்திகள் என ஒரு கூட்டம்,
    கதை கேட்டு நமை தினம் நச்சரிக்க,
    அவர்கள் அருகில் இல்லாவிடினும்,
    இணையத்தின் வழி நாம் உரையாட,

    மருந்துகள் மூலம் உயிர் வாழ்ந்தாலும்,
    பிறர் வருந்தாமல் அறிவுரை சொல்லி,
    ஏற்றால் மகிழ்ந்து, அவை தவிர்த்தாலும்,
    குன்றாமல் அவர் குறையைத் தள்ளி,

    நிறையை மட்டும் பார்க்கும் முதுமை,
    முழுதாய் என்றும் இனிக்கும் எவர்க்கும்.
    நிறைவாய் வாழ்ந்து அதிலே இனிமை,
    அடைந்த திருப்தியும் வருமே நமக்கும்.
    -ஸ்ரீ
     
    Last edited: Dec 29, 2010
    Loading...

  2. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,593
    Likes Received:
    28,761
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear RGS

    You have written superb poem on Mudhumai in which state I am also but young at heart.

    I have written your name as RGS and not Sri as I mentioned to you as it might mean Sriniketan also.
     
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் முதல் பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி விஜி மேடம்.
    வயது உடம்புக்கன்றி மனதுக்கில்லை தான். ஏற்றுக் கொள்கிறேன். -ஸ்ரீ
     
  4. Sanmithran

    Sanmithran Bronze IL'ite

    Messages:
    917
    Likes Received:
    4
    Trophy Points:
    33
    Gender:
    Female
    கனக்கும் முதுமையை
    இனிக்கச் சொன்ன வரிகள்
    தொனிக்கும் பொருள்
    அனைத்தும் இனிமை தான்

    நன்று உங்கள் வரிகள்..
     
  5. nityakalyani

    nityakalyani Gold IL'ite

    Messages:
    2,664
    Likes Received:
    96
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Sri
    When one attains mudumai - we feel more Ilaimai- true modern electronic revolution has changed our life styles and medicines have procratinated our age but still one has to face the realities . when we understand this "real" things happiness just starts to tick within our hearts. Thanks for sharing this lovely poem

    Happy New Year
     
  6. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி Sanmithran -ஸ்ரீ
     
  7. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் பின்னூட்டம் அர்த்தம் நிறைந்தது நித்யகல்யாணி. பாராட்டுக்கு நன்றி. உங்களுக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். -ஸ்ரீ
     
  8. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    முதுமை பற்றி நன்று உமது வரிகள் ஸ்ரீ, ஆனால் இப்போலாம் நரை முடியைக் காண இயலுவதில்லையே, பிசிராந்தையார் வாழ்ந்த காலத்தில் தானே நாமும் :biggrin2:
     
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி லதா.
    உடம்பிடை உயிராய் இருந்த நட்பால்,
    தலைமுடி வெளுக்காதிருந்தார் அன்று.
    இளமையில் வெளுக்க, சாயப் பூச்சால்
    நரைமுடி விரைந்தே மறைப்பார் இன்று.
    -ஸ்ரீ
     
  10. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    முதுமை இனிமையே!
    ஏன்னென்றால் அதுவே நன் வாழ்நாளை பற்றி நினைத்து மகிழ கடவும் தந்த வரம்!
    அருமை தங்கள் வரிகள்!
    மற்றவர்கள் வெறுக்கும் முதுமையே இனிமையாய் காட்டியது பிரமாதம்!:thumbsup
     

Share This Page