படித்ததில் பிடித்த ஹைகூ & கவிதைகள்

Discussion in 'Jokes' started by malarvizhi, Jul 28, 2010.

  1. malarvizhi

    malarvizhi New IL'ite

    Messages:
    4
    Likes Received:
    0
    Trophy Points:
    0
    Gender:
    Male
    சுதந்திரம்
    ---------------
    * சின்னஞ் சிறு
    விஷயத்தையெல்லாம்
    பெரிது படுத்துகிறாய்…


    * தாலி கட்டி விட்டால்
    அடிமையில்லை
    என்கிறாய்…


    * கூப்பாடு போட்டு
    ஊரைக் கூட்டுகிறாய்…
    சமத்துவம்… சம உரிமை
    பெண்ணீயம் பேசுகிறாய்…


    * பட்டம் வாங்கியவள்…
    சட்டம் தெரியும்
    என்கிறாய்…


    * நினைத்தால்
    குடும்பத்தார்
    அனைவரையும்
    கம்பி எண்ண
    வைப்பேன் என்கிறாய்…


    * பெருமையாகத் தான்
    இருக்கிறது எனக்கு…
    உனக்கு நான்
    கொடுத்திருக்கும்
    சுதந்திரம்!


    >சொல்கேளான் ஏ.வி.கிரி, தாம்பரம்.
     
    Loading...

  2. malarvizhi

    malarvizhi New IL'ite

    Messages:
    4
    Likes Received:
    0
    Trophy Points:
    0
    Gender:
    Male
    வண்ணங்கள்…!

    எங்கே
    வாங்கினாய்
    பட்டாம்பூச்சியே
    இந்த வண்ணங்களை…
    யார் தீட்டியது
    உனக்கு?
    தயவு செய்து
    எனக்கும் சொல்…
    புது வீட்டிற்கு
    வண்ணம் தீட்ட
    உன் ஆலோசனை வேண்டும்…

    >குமரன்,
    கொண்டையாங்குப்பம்.
     

    Attached Files:

    Last edited by a moderator: Jul 28, 2010
  3. kiruthikathir

    kiruthikathir New IL'ite

    Messages:
    41
    Likes Received:
    1
    Trophy Points:
    8
    Gender:
    Female
  4. malarvizhi

    malarvizhi New IL'ite

    Messages:
    4
    Likes Received:
    0
    Trophy Points:
    0
    Gender:
    Male
    சிறைக்குச் செல்ல வழி
    -
    எல்லாம் கிடைக்கிறதாம்
    சிறைச்சாலையில்
    கைபேசி முதல்
    கறிக்கோழி வரை
    ஆனாலும் தெரியவில்ல
    என்ன தவறு செய்து விட்டு
    உள்ளே செல்வது என்று!

    >கோ.மோகன்ராம்

    ====================

    யாருக்காக

    -
    எப்போது அழைத்தாலும்
    வந்து சாப்பிடத்
    தயாராக இருக்கும்
    பாட்டியை அழைக்காமல்
    எப்போதுமே வராத
    கடவுளுக்கே
    போடப்படுகிறது
    எப்போதும்
    படையல்!

    >வீ.விஷ்ணுகுமார்

    ======================

    முகவரி

    -
    ஜன்னலிலும் கதவு இடுக்கிலும்
    கத்திக் கத்தி ஓய்ந்த குருவிக்கு
    கடைசி வரை
    சொல்லப்படவேயில்லை
    நேற்று வரை அந்த வீட்டில்
    குடியிருந்த குழந்தைகளின்
    புதிய வீட்டு முகவரி!

    >எஸ்.ஏ.தாஹிர்

    ======================
    நன்றி; ஆனந்தவிகடன் 9-9-09
     

    Attached Files:

  5. malarvizhi

    malarvizhi New IL'ite

    Messages:
    4
    Likes Received:
    0
    Trophy Points:
    0
    Gender:
    Male
    இன்னமும்…
    --------
    யாரும் உணர்வதற்கு
    வழியேதுமில்லை.
    நாள்தோறும்
    என் பிரசவ வேதனைகள்.
    -
    தோட்டத்துச் செடிகள்
    பூப்பதிலும்
    காய்ப்பதிலும் கூட
    இப்போதிங்கு
    எல்லோர்க்கும்
    ஆச்சரியங்கள்
    அம்மாவிடம்
    விதை வாங்கி
    நட்டது நானென்பதால்…
    -
    குட்டி போட்ட
    வெளித்தெரு நாய்க்கும்
    கன்று ஈன்ற
    வீட்டுப் பசுவிற்கும்
    தெரிந்திருக்கிறது
    தீனி போடும் நேரத்தில்
    என்
    தாய்மையுணர்வு
    -
    குறைந்தபட்சம்
    முதிர் கன்னியாகவாவது
    இருந்திருக்கலாம்
    பெண்
    என்றாவது
    ஒத்துக்கொள்ளப்பட்டதிங்கு
    -

    சூட்டப்டம்
    பட்டங்களோடு,
    சபையில் நான்
    மெளனமாய்
    விம்மி அழுகையில்
    ஏதுமறியாதவளாய்
    வெளியேறிச் செல்லும்
    உன்னை…
    -

    முழுமையான
    கணவனாகவே
    அடையாளம்
    காட்டுகிறேன்
    உலகிற்கு
    இன்னமும்…
    இன்னமும்…

    >சூர்யா சுரேஷ்
    ===============
    நன்றி; குமுதம் சிநேகதி
    1-16 செப்டம்பர் 2009
     
  6. malarvizhi

    malarvizhi New IL'ite

    Messages:
    4
    Likes Received:
    0
    Trophy Points:
    0
    Gender:
    Male
    திருப்பிப் பார்க்கச் சொன்னது
    தலையில் ரோஜா
    உதடு சுழித்துப் போகிறாள்!


    ======================

    மூடு இல்லாததால்
    கவிதை வாங்கப் போனவன்
    காற்று வாங்கி வந்தான்


    =====================

    புத்தாண்டா, பிறந்த நாளா
    சிரிக்கும் பூமரம்
    தினசரி!


    ====================

    பிரசவ அறை
    அழும் குழந்தை
    சிரிக்கும் கடவுள்!


    ====================

    என் வீட்டில் போலவே
    பன்னீர் பூ மரம்
    எதிர்வீட்டிலும்!


    ====================
    >ஷங்கர நாராயாணன்
    நன்றி; கடவுளின் காலடிச்சத்தம்(ஹைகூ கவிதைகள்)
     

Share This Page