1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

தமிழ்(பழைய) திரைப்பட பாடல்...வரிகள்

Discussion in 'Music and Dance' started by Yashikushi, Jun 21, 2010.

  1. barkavee86

    barkavee86 New IL'ite

    Messages:
    5
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    Hi to All People who made a wonderful Contributions...
    Thanks for the Starter of this thread (Really nice thread mam..)
    Really toooooooo Goooooood.....
    My best wishes too all...
    Looking forward more songs(late 50's) pls....
     
  2. padija

    padija Senior IL'ite

    Messages:
    124
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    திரைப்படம்: வஞ்சி கோட்டை வாலிபன்

    வெண்ணிலவே, வெண்ணிலவே
    வெண்ணிலவே தன்மதிலே என்னுடனே வா வா
    நிலவே நிலவே வா வா
    வேறு துணை யாரும் இல்லை விதி வழியே வந்தேன்
    நிலவே நிலவே வா வா

    அந்ஞ்சேல் அந்ஞ்சேல் என்று அருகிலே வந்தானே
    அபயமே தந்தானே
    ஆதரித்தான் அன்புரைதான் யார் இவனோ அறியேனே
    நான் அறியேனே
    இன்ப நிலா, இன்ப நிலா ஓடத்திலே ஏற்றியே வைத்தானே
    இதயம் கோவில் கொண்டானே
    எந்த ஊரோ என்ன பேரோ எங்கிருந்தோ வந்தான்
    இதயம் கோவில் கொண்டானே (வெண்ணிலவே வெண்ணிலவே)

    link to the song http://www.youtube.com/watch?v=WW6uWw2wQkE&feature=related
     
    Last edited: Jul 3, 2010
  3. padija

    padija Senior IL'ite

    Messages:
    124
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Thank you so much janani, beautiful song, i listened to it after seeing your post, my heart just melted.............thank you so mcuh.....:bowdown
     
  4. padija

    padija Senior IL'ite

    Messages:
    124
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    hi ladies,

    can anyone please post the lyrics of the song "thullatha manamum thullum" from movie kalyana parisu.......i love that song......it's beautiful song sung by jikki amma..........
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    துள்ளாத மனமும் துள்ளும்..................

    படம் : கல்யாணப் பரிசு
    பாடியவர் : ஜிக்கி
    வரிகள் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
    இசை :


    துள்ளாத மனமும் துள்ளும்
    சொல்லாத கதைகள் சொல்லும்
    இல்லாத ஆசையைக் கிள்ளும்
    இன்பத் தேனையும் வெல்லும் - இசை
    இன்பத் தேனையும் வெல்லும்

    துன்பக் கடலைத் தாண்டும்போது
    தோணியாவது கீதம்
    அன்புக் குரலில் அமுதம் கலந்தே
    அருந்தத் தருவது கீதம்

    எங்கும் சிதறும் எண்ணங்களையும்
    இழுத்து வருவதும் கீதம்
    இணைத்து மகிழ்வதும் கீதம் - துயர்
    இருளை மறைப்பதும் கீதம்

    (துள்ளாத)

    சோர்ந்த பயிரும் நீரைக் கண்டால்
    தோகை விரித்தே வளர்ந்திடும்
    சாய்ந்த கொடியும் கிளையைக் கண்டால்
    தாவியணைத்தே படர்ந்திடும்

    மங்கை இதயம் நல்ல துணைவன்
    வரவு கண்டே மகிழ்ந்திடும்,
    உறவு கொண்டால் இணைந்திடும் - அதில்
    உண்மை இன்பம் விளைந்திடும்

    (துள்ளாத)
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ரஜனி படப் பாடல்கள்
    ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
    படம்:தர்ம யுத்தம்
    பாடியர்: மலேசியா வாசுதேவன்


    ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
    ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
    என் தெய்வம் தந்த..........
    என் தெய்வம் தந்த என் தங்கை


    ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
    ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு


    செம்மண்ணிலே தண்ணீரைப்போல் உண்டான சொந்தம் இது
    சிந்தாமணி ஜோதியைப்போல் ஒன்றான பந்தம் இது
    தங்கை அல்ல.....
    தங்கை அல்ல தாயானவள்
    கோடி பாடல் நான் பாட பொருளானாள்


    ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
    ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு


    கண்ணீரினால் நீராட்டினால் என் ஆசை தீராதம்மா
    முன்னூறு நாள் தாலாட்டினால் என் பாசம் போகாதம்மா
    என் ஆலயம் பொன் கோபுரம்
    ஏழேழு ஜென்மங்கள் ஆனாலும் மாறாதம்மா


    ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
    ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு


    ராஜாவை நான் ராஜாத்திக்கு துணையாக பார்ப்பேன் அம்மா
    தேவர்களின் பல்லாக்கிலே ஊர்கோலம் வைப்பேன் அம்மா
    மணமங்கலம் திருக்குங்குமம் வாழ்க என்று பல்லாண்டு நான் பாடுவேன்


    ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
    ஒரு தங்கரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
    என் தெய்வம் தந்த..........
    என் தெய்வம் தந்த என் தங்கை


    ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
    ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு
     
  7. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    hi saroj,
    i want these songs...

    குவா,குவா பாப்பா ...
    அவ குளிக்க காசு கேப்பா...
    .


    மியாவ்,மியாவ்...பூனைக்குட்டி...
    like m.s.rajeshwari songs.
    please upload.
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நீங்கள் கேட்ட பாடல் இப்போது தேடலில். கிடைத்தவுடன் அஞ்சல் செயப்படும் :spin:spin:spin
     
  9. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    thanks saroj!
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி
    படம் : தர்மயுத்தம்
    இசை: இளையராஜா
    பாடல்: வல்லபன்
    பாடியவர்: மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி


    ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி
    பொன்மான் விழி தேடி
    மேடை கட்டி மேளம் தட்டி
    பாடுதே மங்களம் நாடுதே சங்கமம்

    குங்குமத் தேரில் நான் தேடிய தேவன்
    சீதா புகழ் ராமன்
    தாளம் தொட்டு ராகம் தொட்டு
    பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்

    காதல் நெஞ்சில்..ஹே ஹே ஹே ஹே
    மேள தாளம்..ஓஓஒஒ
    காதல் நெஞ்சில்..ஹே ஹே ஹே ஹே
    மேள தாளம்..ஓஓஒஒ
    காலை வேளை பாடும் பூபாளம்
    மன்னா இனி... உன் தோளிலே...
    படரும் கொடி நானே
    பருவப் பூ தானே
    பூ மஞ்சம் உன் மேனி எந்நாளில் அரங்கேறுமோ

    குங்குமத் தேரில் நான் தேடிய தேவன்
    சீதா புகழ் ராமன்
    மேடை கட்டி மேளம் தட்டி
    பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்

    தேவை யாவும் ஹே ஹே ஹே ஹே
    தீர்ந்த பின்னும் ஓஓஒஒ
    தேவை யாவும் ஹே ஹே ஹே
    தீர்ந்த பின்னும் ஓஓஒஒ
    பூவை நெஞ்சில் நாணம் போராடும்

    ஊர்கூடியே உறவானதும்
    தருவேன் பலநூறு
    பருகக் கனிச்சாறு
    தளிராடும் என் மேனி தாங்காது உன் மோகம்

    ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி
    பொன்மான் விழி தேடி
    தாளம் தொட்டு ராகம் தொட்டு
    பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்
     

Share This Page