1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இனியவனே

Discussion in 'Stories in Regional Languages' started by ramachandran, May 21, 2010.

  1. kayal89

    kayal89 Senior IL'ite

    Messages:
    116
    Likes Received:
    0
    Trophy Points:
    16
    Gender:
    Female
    story is going vey good... eagerly waiting for the next post......:)
     
  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    well going.... as dhivya told, pls.. pls.. dont give a sad ending...
     
    Last edited: May 23, 2010
  3. ramachandran

    ramachandran New IL'ite

    Messages:
    56
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Hi Kayal,
    Thanks so much.:)
     
  4. ramachandran

    ramachandran New IL'ite

    Messages:
    56
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Hi Dhivya,
    Thanks for your comments and encouragement.
    Its so nice to read.
    It's a happy ending.
    :)
     
  5. ramachandran

    ramachandran New IL'ite

    Messages:
    56
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Hi Devapriya,
    Thanks.
    It's a happy ending only.:)
     
  6. ramachandran

    ramachandran New IL'ite

    Messages:
    56
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Part-4

    வீட்டிற்க்கு சென்றவள் அங்கே இருந்த அஜயிடம் ஒன்றும் பேசாமல் ,"அஜ்ஜு எனக்கு தலை வலி ,நான் மேலே ரெஸ்ட் எடுக்குறேன்" என்று சென்று விட்டாள்.

    இஷு... ,என்று அவள் ரூமிற்கு அவன் செல்லவும் ,அவள் கதவை சாற்றவும் சரியாக இருந்தது.

    உள்ளே சென்றவள் ,தனது ரிபோர்டை முதலில் தன் கப் போர்டில் அடியில் வைத்தாள்.பின்னர் தன் நிலையை நினைத்து அழ ஆரம்பித்தவள்,சிறிது நேரத்தில் தென்னவனின் குரலை கேட்டு சுதாரித்துக் கொண்டாள்.

    நன்றாக முகத்தை குளிர்ந்த நீரில் கழுவியவள் கீழே ஹாலிர்க்குச் சென்றாள்.

    "ஹாய் ,அப்பா" என்று வந்தவள்,அவர் தோளில் சாய்ந்து கொண்டாள். "என்னடா ,தலை வலி எப்படி இருக்கு?".
    டாக்டர் என்ன சொன்னார் ?என்று கேட்டார்.

    "ஐ ஆம் ஒ.கே.,அப்பா".டாக்டர் எல்லாம் நல்லா இருக்கு என்று சொல்லிவிட்டார்.

    அஜயும் அவசரமாக ,"இஷு ,ஆர் யு ஒ.கே" என்று கேட்டான்?

    "ஒ.கே." உங்க ரெண்டு பேர்கிட்டயும் ஒரு விஷயம் பேசணும் என்று தென்னவன் ஆரம்பித்தார் ,"அன்று உன் பிறந்த நாள் அன்றே பேச வேண்டியது ,ஆனால் அன்று பேச முடியாமல் போய் விட்டது" என்றார்.

    "அஜய்,இஷு ..நான் நேராக விஷயத்துக்கு வரேன்.உங்க ரெண்டு பேருக்கும் திருமணம் செய்து வைக்கலாம்ன்னு நினைக்கிறேன்.
    உங்க சம்மதம் எனக்கு வேண்டும்" ,என்று கேட்டார்.

    இதை கேட்டு ரிதி அதிர...அஜயோ வானத்தில் பறந்தான்.

    தன் மனதில் அஜையின் மேல் இருந்த காதலை மூலையில் போட்டு விட்டு..."நோ ...அப்பா,நான் அஜய் கூட அந்த மாதிரி நினைத்து பழகவில்லை "என்று கூறினாள் .

    இதை கேட்டு அதிர்வது இப்பொழுது தென்னவனின் முறை என்றால்,பறந்து கொண்டிருந்த அஜயோ,கீழே விழுந்து பாதாளத்திற்குச் சென்றான்.

    அடுத்து அவரோ, அஜயோ அவளிடம் ஏதாவது கேட்டு விட்டால் என்ன செய்வது ?என்று நினைத்து , அவசரமாக "ப்ளீஸ் ,அப்பா இதுல என்ன சமாதனம் செய்ய நினைகாதீங்க".இது என்னோட லைப் .

    அதற்குமேல் தென்னவனால் ஒன்றும் பேச முடியவில்லை .அஜயின் முகத்தில் வலியை பார்த்த அவர்க்கு, அவனை எப்படி தேற்றுவது என்றும் தெரியவில்லை.

    "நான் மேலே என் அறைக்குச் செல்கிறேன்", என்றவள் விடு, விடு என்று சென்றுவிட்டாள் உள்ளே சென்றவள் ,அதற்கு மேல் கட்டுப்படுத்தா முடியாமல் தன் கட்டிலில் விழுந்து அழுது கரைந்தாள்.

    அஜயும் வெளியே சென்றுவிட,தென்னவன் செய்வது அறியாமல் அமர்ந்து இருந்தார்.

    மணி எட்டு அடிக்க ரிதியை உணவு உண்ண அழைக்கச் சென்றார்.அங்கே ரிதியோ உடல் அனல் கொதிக்க முனகிக் கொண்டு இருந்தாள் .

    இதை கண்டு அதிர்ந்த ,தென்னவன் உடனே டாக்டருக்கும் ,அஜய்க்கும் போன் செய்தார்.

    சிறிது நேரத்தில் டாக்டர் வந்து பார்த்து விட்டு ஊசி போட்டு விட்டு ,மருந்து எழுதிக் கொடுத்து விட்டுச் சென்றார்.

    அஜயும்வந்து விட அவளின் நிலையை கண்டு மேலும் கவலை அடைந்தான்.

    பாலை பருக வைத்து ,தர வேண்டிய மருந்துகளையும் தந்து விட்டு தென்னவன் அவள் அருகிலேயே இருந்து கவனித்துக் கொடுத்தார்.

    மணி பதினொன்று ஆகி விட, ரிதி நன்றாக ஊசியின் மயக்கத்தில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.

    அஜய், "அங்கிள் ,நான் இஷுவை ,இன்று பார்த்துக் கொள்கிறேன்.நீங்கள் சென்று ரெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள்", என்றான்.

    அவரும் அன்று முழுவதும் நடந்த விஷயங்களில் மிகுந்த சோர்வில் இருந்ததால் தன் அறைக்குச் சென்று விட ,அஜயோ,இஷுவை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.

    "டேய் புஜ்ஜு மா ,என்னாச்சு நீ என்ன காதலிக்கிறேன்னு எனக்கு தெரியும்.ஆனால் நீ இன்று என் இப்படி கூறினாய் என்பது தான் புதிராக இருக்கு ,உனக்கு உடம்பு சரியாகட்டும் அப்புறம் வெச்சுக்குறேன் கச்சேரியை ",என்று நினைத்துக் கொண்டான்.

    சிறிது நேரத்தில் ,அவளுக்கு மருந்து தர ,அவளை மெல்ல எழுப்பினான்.ஆனால் அவள் ஆழ்ந்த மயக்கத்தில் இருக்க ,அவள் வாயை பிரித்து மருந்தை போட்டவன் ,அப்படியே அவன் மேலேயே சாய்த்துக் கொண்டான்.

    அவனிடம் அந்த மயக்கத்திலும் ஒன்றிய இஷு,"அஜ்ஜு,டேய் சாரி டா.நான் என்ன செய்வது எனக்கு கடவுள் இப்படி ஒரு வியாதியை கொடுத்து விட்டாரே ,அதனால் தான், சாரி டா,அஜ்ஜு,அஜ்ஜு .".என்று மயக்கத்திலே பிதற்ற ஆரம்பித்தாள்.

    மெல்லிய முனகலாக வந்தாலும் ,அவள் கூறிய வார்த்தைகள் அவன் மனதில் பதிந்தது.

    அந்த நொடியில்,உனக்கு என்ன விதியாக இருந்தாலும் நான் உன்னை ஏற்றுக் கொள்வேன் புஜ்ஜு.நீ என்னை பற்றி கணித்தது இது தானா,என் அன்பை உனக்கு புரிய வைப்பேன் என்று நினைத்தவன்.அவளை இதமாக வருட மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்தாள்.

    அவளை படுக்க வைத்துவிட்டு அன்று அவள் வாங்கி வந்து இருந்த ரிபோர்டை தேட ஒரு வழியாக அதுவும் அவன் கண்ணில் மாட்டியது.

    திறந்து பார்த்தவன் ,முதல் பக்கத்தில் அவள் பெயர் இருக்க ,அதன் கீழே இருந்த அட்ரஸ் மாறி இருப்பதை கவனித்தான்.

    அடுத்த பக்கத்தில் ப்ளட் டெஸ்ட் ரிபோர்டில் HIV பாசிடிவ் என்று இருப்பதை பார்த்தான்.

    அட்ரஸ் மாறியதை நினைத்தவன்,அப்பாடா என்று பெருமூச்சு விட்டான் .புஜ்ஜு, ஒரு மாலையில் ரிபோர்டை சரியாக பார்க்காமல் என்ன ஆட்டம் போட்டுட்டே.இரு முதலில் உன் ரிபோர்டை வாங்கிக் கொண்டு வந்து பேசிக் கொள்கிறேன் என்றவன். நேராக தென்னவன் அறைக்குச் சென்றான், அவரிடம் சுருக்கமாக விஷயத்தை கூறியவன் ,அவளை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு மருத்துவ மனைக்குச் சென்றான்.

    அங்கே இருந்த வரவேற்பாளரிடம் நடந்த வற்றை கூறியவன் ,அவளுடைய ரிபோர்டை வாங்கி சரி பார்த்தான்.

    தவறு ,சரியாக பார்க்காத இஷு மேலும் இருப்பதால் ,அமைதியாக வந்துவிட்டான்.

    ஆனந்தம்மாக அவன் வீட்டிற்குள் செல்ல ,அங்கே இஷு ,எழுந்து அமர்ந்து இருந்தாள் .தென்னவனும் விஷயத்தை கூறியிருக்க ,அவள் அஜ்ஜுவின் வரவை ஆவலுடன் பார்த்து இருந்தாள் .

    உள்ளே நுழைந்த அஜய் ,அங்கிள் ,இஷுவிர்க்கு எல்லாமே நார்மல் .ரிப்போர்ட் மாறி இருக்கு என்று கூறினான் .

    தென்னவன் ,ரொம்ப சந்தோசம் எனக்கு , என்றவர். அவர்கள் இருவரும் தனியாக பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்பதை உணர்ந்து, "என் ரூமில் ரெஸ்ட் எடுக்கிறேன்" என்று சென்று விட்டார்.

    இஷுவின் அருகில் அமர்ந்த அஜய் கோவமாக ,"இஷு,ஏன் இப்படி பண்ண ?உனக்கு உண்மையாவே அப்படி ஒரு வியாதி இருந்து இருந்தாலும் நான் உன்னை திருமணம் செய்து இருப்பேன்.என்னை போய் ,ச்சே நான் உன்னிடம் இதை எதிர்ப் பார்கவில்லை என்றான்.

    இதைக் கேட்ட இஷுவிர்க்கு ,அவனுடைய ஆழ்ந்த காதல் புரிய ,அவன் தன் வாழ்வில் என்றுமே மகிழ்ச்சியை கொடுக்கும் இனியவனாக இருப்பதை உணர்ந்தாள்.இருப்பினும் தானும் அவனுக்காக இந்த முடிவை எடுத்ததை சொல்ல எண்ணி ,
    "இல்லே ,அஜ்ஜு ,உன் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று தான் நான் அப்படி செய்தேன் .என் இடத்தில நீ இருந்து இருந்தாலும் இந்த முடிவு தான் சொல்லி இருப்பே "என்று கூற அவள் செயலை ஒத்துக் கொள்ள முடியாவிட்டாலும் ,அவன் மேல் அவளுக்கு இருந்த அன்பை புரிந்துக் கொண்டவன் ,அவளை காக்க வைக்காமல் ,புஜ்ஜு ,"வில் யு மேரி மீ "என்று கேட்டான் .

    இதை கேட்ட இஷு ,வெட்கத்தில் "எஸ் ,அஜ்ஜு" என்று கூறி தலைக் குனிந்தாள்.

    "ஏய் ,புஜ்ஜு ,அட்ரஸ் மாறியதை பார்க்காமல் .எல்லோரையும் படுத்தி விட்டாயே.ஒரே ஒரு முறை மீட்டிங் இருக்கு என்று உன்னை தனியாக அனுப்பியதில் அப்பா ....இனிமேல் உன்னை நான் எதற்கும் தனியாகவே அனுப்ப போவதில்லை ,உன்னுடைய அனைத்துச் செயல்களிலும் உன்னுடனேயே இருப்பேன் என்றான்.

    அங்கே விடியல் விடிய ,இருவர் வாழ்விலும் இனி விடியலே.
    இனியவன் துணையிருக்க இனி புஜ்ஜு வாழ்வில் என்றும் ஆனந்தமே.
     
  7. ramachandran

    ramachandran New IL'ite

    Messages:
    56
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Hi Friends,
    Here we go with the final update of INNIYAVANE.

    Thanks so much for all your comments.

    Please do pen your comments for the last part too.

    thanks:)
     
  8. Kalasen

    Kalasen New IL'ite

    Messages:
    89
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    Hi,

    Nice short and sweet story.

    :hiya
     
  9. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    :wowyou ve finished the story well......
     
  10. dhivya312

    dhivya312 Senior IL'ite

    Messages:
    270
    Likes Received:
    5
    Trophy Points:
    23
    Gender:
    Female
    :wow:wow:wowso nice story......:clap keep writing more ram.....what a conversation yaar??.....:bowdown superb.....:):thumbsupwaiting eagerly for your next story......
     

Share This Page