கைகளிலே உன்னை வைத்தால் காற்றிலே கலந்து விடுவாய், கண்ணிலே உன்னை வைத்தால் கண்ணீரில் வெளியேறி விடுவாய், என்றே இதயத்தில் வைத்தேன் என் இதயத்தின் துடிப்பு நீ என் உதிரத்தின் ஒவ்வொரு துளியிலும் நீ நான் சுவாசிக்கும் மூச்சு நீ நான் பேசும் பேச்செல்லாம் நீ பூமி சூரியனை சுற்றுகிறதாம், நான் உன்னை அன்றோ சுற்றி சுற்றி வருகிறேன். என்ன செய்தாய் நீ? என்னவோ செய்தாய் நீ. என் உயிரே கண்ணம்மா, நீ எனது கண் அம்மா. என்னுடனே இருந்தால் நீ நல்ல பெண் அம்மா
வேணி, அழகான கவிதை வேணி......... ஆசை, பாசம், காதல்னு பல சுவையோட இனிமையான கவிதை........ என் வீட்டில என்ன கண்ணம்மா தான் செல்லமா கூப்பிடுவாங்க. எனக்கு பிடிச்ச கவிதை எனக்கு பிடிச்ச பேர்ல படிச்சது சந்தோஷமா இருக்கு......... ரொம்ப நல்ல இருந்துச்சு. அன்புடன், எழில்.
அன்புள்ள எழில், அருமையான பின்னூட்டம் தந்த அன்பான தோழிக்கு என் நன்றிகள் பல. கண்ணம்மா என்பது எனது தோழிகள் என்னை அழைக்கும் பெயர். எனக்கு அந்த பெயரின் மீது உள்ள காதல் அவர்கள் அறிந்ததே. என்னை போலவே இன்னொரு பெண்ணையும் கண்டேன். கண்டத்தில் மகிழ்ச்சி மிக கொண்டேன்.
Bharathi kadhal konda Kannamma Veniyin sirungara Kavidhaiyil Kannamma Neeyenadhuir Kannamma enran mahakavi Avan adi thottu Veniyum varaindhal kavin migu pa onru Anbhudan pad
அன்புள்ள பத்மினி மா, பாரதி கவிதையில் நான் கொண்டது காதல் எனது கண்ணம்மாவுடன் அடிக்கடி மோதல் அதனால் தான் வந்தது இந்த சாடல் தங்கள் பின்னூட்டம் தான் எனக்கு மாடல். எனது கவிதைக்கு பின்னூட்டம் தந்த பத்மினி அம்மாவுக்கு என் நன்றிகள் பல.
Inimel..."kannamma' veni enre koopidalaamaa.. Innoru kannammavaiyum..yezhilaiyum inge sandhiththadhil magizhchi.. sriniketan
வேணி, என்னமா சொல்லிட்டீங்க, கண்ணம்மா - கலக்குறீங்க. கொஞ்சம் சிரிக்கலாமா? கைகளிலே உன்னை வைத்தால் காற்றிலே கலந்து விடுவாய் கற்பூரமா? கண்ணிலே உன்னை வைத்தால் கண்ணீரில் வெளியேறி விடுவாய் கண் மையா? என்றே இதயத்தில் வைத்தேன் பேஸ் மேக்கரோ?
"Inimel..."kannamma' veni enre koopidalaamaa.." "தங்கள் சித்தம் என் பாக்கியம் ஸ்ரீனி " பல விஷயங்கள் எனக்கும் எழிலுக்கும் ஒத்து போகிறது, சில ரசனைகளையும் சேர்த்து. எனது கவிதை ரசித்து கருத்து சொன்ன இனிய தோழிக்கு இனிமையான நன்றிகள் பல
அன்புள்ள நட்புக்கு, கற்பூரம்தான் - கரைந்தும் மனம் வீசும் எனது நேசம் கண் மை அல்ல - என்னை காக்கும் இமை பேஸ் மேக்கர் அல்ல - பீஸ் (peace ) மேக்கர் தங்கள் பின்னூட்டம் படித்தேன், ரசித்தேன், சிரித்தேன். நன்றிகள் பல உங்களுக்கு.
Indus veliyidai kannamma undan kavidhayai padithu rasikkinren. Amudootum matru FB kkalum padithu padithu ingu rasikkiren. ganges